Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துக் கவிஞர் இருவருக்கு ‘கவிஞர்கள் திருநாள்’ விருதுடன் 1 இலட்சம் இந்தியரூபா பணப்பரிசு – கவிப்பேரரசு வைரமுத்து

Featured Replies

வைரமுத்துவின் பிறந்த தினமான யூலை 13ந்திகதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ‘கவிஞர்கள் திருநாள்’ நிகழ்வில் ஈழத்துக் கவிஞர்கள் இருவருக்கு விருதுடன் 1 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசும் வழங்கி கொளரவிக்கப்படும் என கவிப்பேரரசு வைரமுத்து அறிவித்துள்ளார்.

இன்று (24-01-2016 ) காலை 10.30 மணியளவில் யாழ். நூலக வளாக கேட்போர் கூடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாண இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார்.

எழுகலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இச்சந்திப்பில் ஏற்புரை வழங்கிய கவிஞர் வைரமுத்து பாராபட்சம் பார்க்காமல் ஈழத்திலிருந்து இரு திறமையான கவிஞர்களைத் தேர்வு செய்து தரும்படி ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார். பரிசுத் தொகையுடன் விருது பெற வரும் இரு கவிஞர்களுக்கான பயணச் செலவையும் தானே ஏற்பதாக கூட்டத்தினரின் கரகோசத்துக்கு மத்தியில்  கவிஞர் அறிவித்தார்.

கவிஞர் கை.சரவணனின் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வரவேற்பு கவியினை திருமதி சித்திரா பிரசன்னா வழங்கினார்.வாழ்த்துக் கவியினை வேலணையூர் சுரேஸ் வழங்கினார். தொடர்து யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேஸ்வரன் , அரசறிவியல் பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாள் தினத்தன்று சிறந்த கவிஞராக ஒருவரை தேர்வு செய்து அவருக்கு “கவிஞர்கள் திருநாள்” விருதினை கவிஞர் வைரமுத்து வழங்கி வருகிறார். இதுவரையில் இந்த விருதினை கவிஞர்கள் இன்குலாப், காசி ஆனந்தன்,சுரதா, நா.காமராசன், முத்துலிங்கம், தமிழச்சி தங்கபாண்டியன், வெண்ணிலா, கலாப்ரியா, ஈரோடு தமிழன்பன், இளையபாரதி, சல்மா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

அந்த வகையில் 2016 ஆம் ஆண்டுக்கான “கவிஞர்கள் திருநாள்” விருது இரு ஈழத்துக் கவிஞர்களுக்கும் வழங்கப்படும் என கவிஞர் அறிவித்துள்ளார்.  தெரிவு செய்யப்படும் இரு ஈழத்துக் கவிஞர்களுக்கும் தலா 1 இலட்சம் இந்தியரூபா பணமுடிப்பையும், பட்டயத்தையும் கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாள் விழாவில் வழங்க உள்ளார். இவ்வருடம் இந்தியாவிலிருந்து தெரிவு செய்யப்படும் சிறந்த கவிஞருக்கு 50 இலட்சம் இந்தியரூபா பணப்பரிசுதான் வழங்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

http://thuliyam.com/?p=12067

நிகழ்வில்  திருமதி சித்திரா பிரசன்னா வழங்கிய வரவேற்பு கவிதை

IMG_8057.jpg

 

நான் கண்விழிக்கும்போது
என் ஜன்னலின் வழியயே
உள்ளே வந்த காற்று
என்னைக் கட்டியணைத்து
கவிமுத்தம் பொழிந்தது
அதன் தலை கோதி
காதுவழி மெதுவாய்
காரணம் கேட்டேன்
கள்ளிக் காட்டின் காதலன்
எங்கள் பீனிக்ஸ் முற்றத்தில்
முதல்(ற்) தடம் பதித்திருக்கிறான்
என்றது

வருகப்பட்டி முதல் வோல்கா வரை சென்ற
அந்த வைகறை மேகம்
தண்ணீர் தேசத்தின்
கண்ணீர் கொஞ்சம்
அக்கினிச் சிறகுகளால்
காய்ந்த வேளை (நேரம்)
தமிழுக்கு நிறம் கொடுத்த - நம்
கொடி மரத்தின் வேர்கள்
வெளித் தெரியா வேளை ஒன்றில்
இங்கு பொய்யென பெய்கிறது கவிமழை.

கேள்விகளால் வேள்வி செய்த
அவனுக்கு மேலே ஓர் அழகிய வானம்
அதில் வில்லோடு ஒரு நிலவு
ஆயிரம் பாடல்களாய் விண்மீன்கள்
சிகரங்களை நோக்கிய
சிற்பிகளை செதுக்குகின்ற
கவிராஜன்
எங்கள் குளத்திலும் கல்லெறிந்திருக்கிறார் இன்று.

அவர் ஓடங்கள் செல்வதற்கு
நதிகள் போட்டி போட்டு
ஊற்றெடுக்கும் பொழுது இது
விற்பனைக்கு இல்லாத
பூக்கள் தூவி
இன்று போட்ட கோலத்தில்
எல்லா உதடுகளுக்கும்
தெரிந்த விசேடமாய்
உங்கள் உதடுகளில்
எப்போதும் இரக்கின்ற புன்னகை என்ற
உலகம் பொது மொழியோடு
வரவேற்கிறோம்
உன்னை...
வருக, வருக.
பிரபஞ்சம் பிய்த்தெறிந்த
பொன்னையாத் தேவரின் 
வைர வாரிசே...

ஒரு போர்க்களத்தில்
ஆயிரமாம் மலர்களோடும்
திருத்தி எழுதிய தீர்ப்புக்களோடும்
இரத்த தானம் செய்த
பழைய பனை ஓலைகளோடும் 
தொட்டு விடும் தூரத்தில்
உள்ள வானத்தில்
மௌனத்தின் சப்தங்களால்
இன்னுமொரு தேசிய கீதத்துடன்
காத்திருப்போம்.
அப்போதும் வா
மீண்டும் எம் தொட்டிலுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளிலும் கொழும்பிலும் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர்கள் செய்ய முடியாததை.. வைரமுத்து செய்யுறான்டா.. விடாத ஆளை.. என்று கிளம்பப் போகுது ஒரு கூட்டம். tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து  ஒரு புஸ்வா  என்று ஒரு கூட்டம் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.