Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தியா வெற்றி

12308610_1102042216521234_64812523627595

12592579_571755959654400_241733512389442

943805_1086267548102573_6866148380079131

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இரண்டாவது அரைஇறுதி போட்டி மார்ச் 31  மும்பையில்

இந்தியா vs மேற்கு இந்தியதீவுகள்

மத்திய ஐரோப்பிய நேரம் 15.30

 

  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு இந்தியா தகுதி

 

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

160317102546_dhoni_trp_story_image_512x2
 வெற்றிக் களிப்பில் இந்திய வீரர்கள்

மொஹாலியில் நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி தமது அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து மும்பையில் விளையாடவுள்ளது.

இந்திய அணியின் விராட் கோலி அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தமது 20 ஓவர்களில் 6 விக்கெடுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்தனர். ஆஸி அணியின் சார்பில் ஆரோன் ஃபின்ச் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை எடுத்தார்.

அவரும் துவக்க ஆட்டக்காரரான உமர் கவாஜாவும் ஆஸி அணிக்கு ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலும், அதன் பின்னர் ஆடிய வீரர்கள் அதை முழுமையாக சாதகமாக்கிக்கொள்ள முடியவில்லை.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறுமா எனும் கேள்விகளும் எழுந்தன. எனினும் கடைசி நான்கு ஓவர்களில் தோனியும், கோலியும் அதிரடியாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

அரையிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160327_t20_india_aus?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கொஞ்சப் பேர் இருக்கினம் எப்படா மட்ச் முடியும் நக்கலடிப்போம் என்று.அவர்களுக்கு மட்ச் தொடங்குவதற்கு முன்னாலே யார் வெல்லுவினம் என்று சொல்ல மாட்டினம் சரியான கோழைகள் அவர்கள்.

நான் இலங்கையைப் பற்றிச் சொன்னால் அவர் பாக்கிஸ்தானைப் பற்றிக் கதைக்கிறார்.அந்தணியில் யாராவது திறமையான வீரர்கள் அண்மையில் ரிட்டயட் பண்ணிணார்களா அல்லது யாராவது நோய் காரணமாக விளையாடமல் விட்டார்களா?...ஓப்பிடுவதற்கும் ஒரு அறிவு வேணாம்.

இன்னொருத்தரும் இருக்கார்.அவர் அவுஸ் வென்டவுடன் இந்தியாவையும்,இலங்கையையும் சேர்ந்து நக்கலடிப்பம் என்று பார்த்திட்டு இருந்திருக்கார். பாவம் அடுத்த கோழை அவர்...இப்படியானவர்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு தான் வந்து நான் அப்பவே சொன்னேன் இப்படித்தான் நடக்கும் என்று கருத்து சொல்பவர்கள்.அது அரசியலாக இருந்தால் சரி,விளையாட்டாக இருந்தால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது எப்போதும் செய்து காட்டிவிட்டுத் தான் கதைப்போம், வளர்ப்பு அப்படி. 

விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர் இருந்தால் வென்றிருக்கலாம் என்ற சுய இன்பம் உங்களுக்கு. எல்லா அணிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறார்கள் ஆனால் அதற்காக இப்படி சுய இன்பம் கூடாது. 

நன்றி வணக்கம்.

 

  • தொடங்கியவர்

விராட் கோலி அசத்தல்: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி

 
 
கோப்புப் படம்
கோப்புப் படம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மொஹாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 ஆட்டத்தில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸி. நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை இந்தியா 19.1 ஒவர்களில் விரட்டியது.

 

இந்திய அணி வழக்கம் போல துவக்க வீரர் ஷிகர் தவானை 13 ரன்களுக்கு இழந்தது. அடுத்து களமிறங்கிய கோலி, தான் சந்தித்த 2-வது மற்றும் 3-வது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரெய்னாவும் 10 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி 8 ஓவர்களில் 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

யுவராஜ் சிங் - கோலி இணை சிறிது நம்பிக்கை அளித்தாலும் தேவைக்கேற்ப ரன் சேர்க்க இருவரும் போராடினர். சிறப்பாக ஆடி வந்த யுவராஜ் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 36 பந்துகளில் 67 ரன்கள், ஓவருக்கு சராசரி 11 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் தோனியும் கோலியும் களத்தில் இணைந்தனர்.

15, 16 மற்றும் 17-வது ஓவர்களில், ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்தாலும் தேவைப்படும் ரன்ரேட் இறங்குமுகம் காட்டவில்லை. ஃபால்க்னர் வீசிய 18-வது ஓவர் ஆட்டத்தின் தலைவிதியை மாற்றும்படி அமைந்தது.

18-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கும், மூன்றாவது பந்தை சிக்ஸருக்கும் விளாசிய கோலி அடுத்த 2 பந்துகளில் மேலும் 3 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் தோனி 2 ரன் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர, 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. இந்திய அணியின் மீது இருந்த அழுத்தமும் குறைந்தது.

ஆனால் கோலியின் விளாசல் நின்றபாடில்லை. கோல்டர் நீல் வீசிய அடுத்த ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து மேலும் 16 ரன்கள் தேடித்தர, கடைசி ஓவரில் இந்திய அணிக்கு வெறும் 4 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாயிருந்தது.

20-வது ஓவரின் முதல் பந்தை தோனி பவுண்டரிக்கு விரட்ட, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸி. அணி டி20 உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது.

முடிவில் விராட் கோலி 51 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்திருந்தார், தோனி 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article8402506.ece?homepage=true&relartwiz=true

10628148_1172390519447580_16470820094187

  • தொடங்கியவர்

ஆப்கான் வெற்றி பெறவில்லை; நாங்கள் தோற்றோம்: டேரன் சமி

டேரன் சமி விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கான் அணி பவுலர் குல்பதின் நயீப். | படம்: ஏ.எஃப்.பி.
டேரன் சமி விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கான் அணி பவுலர் குல்பதின் நயீப். | படம்: ஏ.எஃப்.பி.

உலகக் கோப்பை டி20 போட்டியில் மே.இ.தீவுகளை ஆப்கன் அணி வீழ்த்தியது குறித்து மே.இ.தீவுகள் கேப்டன் டேரன் சமி தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மெதுவாக, பந்துகள் நின்று வரும் பிட்சில் ஆப்கன் ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கடினமல்ல என்றே கருதுகிறேன். நாங்கள் சாமர்த்தியமாக விளையாடவில்லை, ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் பொறுப்பெடுத்துக் கொண்டனர், இங்கிலாந்துக்கு எதிராக கெய்ல், 2-வது போட்டியில் பிளெட்சர், 3-வது போட்டியில் மர்லன் சாமுவேல்ஸ். ஆனால் இந்தப் போட்டியில் அப்படி எந்த வீரரும் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்த வீரர் முடித்துக் கொடுப்பார் என்று அனைவரும் கோட்டை விட்டோம். சரி. இந்தப் போட்டியை மறக்க விரும்புகிறோம் இப்போது கவனம் அரையிறுதியில்தான்.

124 ரன்கள் என்பது எளிதான இலக்குதான், நாங்கள் அதனை எட்டி வென்றிருக்க வேண்டும், ஆனால் நாங்கள்தான் தோல்வியடைந்தோம், அவர்கள் வெற்றி பெறவில்லை.

ஆப்கன் வீழ்த்தப்பட வேண்டிய அணியே, எங்களால் இன்று அதனைச் செய்ய முடியவில்லை. ஆனால் சூப்பர் 10-ன் குறிக்கோள் என்னவெனில் அரையிறுதிக்கு முன்னேறுவது, நாங்கள் அதனை செய்துள்ளோம்” என்றார் டேரன் சமி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF/article8405923.ece?homepage=true

  • தொடங்கியவர்

943839_572510562912273_90429435615919702

  • தொடங்கியவர்
இலங்கை அணியை 8 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வென்றது
2016-03-28 23:14:59

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரின் கடைசி சுப்பர் 10 சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை தென் ஆபிரிக்க அணி 8 விக்கெட்களால் வென்றது.

 

டில்லியில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்களில் 120 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

15791south-africa-lanka.jpg

 

திலகரட்ன தில்ஷான் 36 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 21 ஓட்டங்களையும் தசுன் சானக்க 18 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களில் அபோட் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெஹார்தீன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

ஹஷிம் அம்லா 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைக் குவித்தார். பப் டூ பிளேசிஸ் 36 பந்துகளில் 31 ஓட்டங்களையும் டி வில்லியர் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல்  20 ஓட்டங்களையும் குவித்தனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15791#sthash.pVmnuAaz.dpuf
  • தொடங்கியவர்
தென் ஆபிரிக்க மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி வென்றது
2016-03-28 21:13:30

மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி 10 ஓட்டங்களால் வென்றது.

 

பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களைப் பெற்றது. சமரி அத்தபத்து 49 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்ட்றிகள் உட்பட 52 ஓட்டங்களைக் குவித்தார்.

 

15788lankan-women.jpg


தென் ஆபிரிக்க மகளிர் அணியின் பந்துவீச்சாளர்களில் மேரிஸான்னே கெப் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்களையே பெற்றது. த்ரிஷா ஷெட்டி 25 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றார்.


இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சாளர்களில் உதேஷிகா பிரபோதினி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுகந்திகா குமாரி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15788#sthash.BCGmSzBb.dpuf
  • தொடங்கியவர்
இந்திய – பங்களாதேஷ் போட்டி முடிவு குறித்து ஐ.சி.சி விசாரணை நடத்த வேண்டும்-பாக். முன்னாள் வீரர் தௌஃபீக் அஹ்மத்
2016-03-29 10:20:09

இந்­தி­யா­வுக்கும் பங்­க­ளா­தே­ஷுக்கும் இடை­யி­லான உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்டி முடிவு அமைந்த விதம் சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளதால் அது குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் மோசடி தடுப்புப் பிரிவு விசா­ரணை நடத்த வேண்டும் என பாகிஸ்­தானின் முன்னாள் சுழல்­பந்­து­வீச்­சாளர் தௌஃபீக் அஹ்­மத் தெரி­வித்­துள்ளார்.

 

15803bangaladesh.jpg

 

‘‘பங்­க­ளாதேஷ் தோற்ற விதத்தைப் பார்க்­கும்­போது கிரிக்கெட் விளை­யாட்டில் இப்­ப­டியும் ஒரு தோல்வி அமை­யுமா? என தன்னை எண்­ண­வைத்­த­தாக 57 வய­தான தௌஃபீக் அஹ்மத் குறிப்­பிட்­டுள்ளார்.

 

போட்டி முடி­வ­டைந்த வித­மா­னது எனக்கு சரி­யெ­னப்­ப­ட­வில்லை. சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உட்­பட சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களால் இது குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­வேண்டும் என நான் கரு­து­கின்றேன்’’ என ஊட­க­மொன்­றுக்கு அவர் தெரி­வித்­துள்ளார்.

 

போட்­டியில் வெற்றி பெறு­வ­தற்கு கடைசி மூன்று பந்­து­களில் இரண்டு ஓட்­டங்­களை மாத்­திரம் பெற­வேண்­டி­யி­ருந்த பங்­க­ளாதேஷ், மூன்று பந்­து­களில் மூன்று விக்­கெட்­டுகளை இழந்து ஒரு ஓட்­டத்தால் தோல்வியடைந்­தது.

 

இப்­போது பங்­க­ளாதேஷ் அனு­பவ­மற்ற அணி என்று சொல்­ல­மு­டி­யாது. வெற்றி ஓட்­டங்கள் தேவைப்­பட்­ட­போது ஆடு­க­ளத்தில் அனு­ப­வ­சா­லி­களே இருந்­தனர்.

 

ஓர் ஓட்டம் எடுத்து போட்­டியை சமப்படுத்திய பின்னர் அவர்கள் ஓங்கி அடிப்பதற்கு சென்றிருக்கக்கூடாது என என்னை கூற வைக்கின்றது’’ என்றார் அவர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15803#sthash.7oS33t1b.dpuf
  • தொடங்கியவர்

தாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள் அசிங்கப்பட்டனர் (காணொளி இணைப்பு )

 

இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து வெளியேறிய தாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு லாகூர் விமான நிலையத்தில் வைத்து ரசிகர்கள் மேசமான வரவேற்பளித்துள்ளார்.

 

pakistan.gif

இருபதுக்கு - 20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குழு -2 இல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ்  அணிகள் இடம் பிடித்திருந்தன. 

இதில் இந்தியாவும், நியூசிலாந்தும், அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

 

சூப்பர்-10 லீக் ஆட்டங்களில், இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான், பங்களாதேஷ் அணியிடம் மாத்திரமே வெற்றி கண்டது.

 

இந்நிலையில், பாகிஸ்தான் அணி, நேற்று தாயகம் திரும்பியது. அணி வீரர்கள் வரவேற்க, லாகூர், அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

 

வழக்கமாக வீரர்களை வாழ்த்தி வரவேற்கவே ரசிகர்கள் திரளுவார்கள்.  ஆனால், பாகிஸ்தான் வீரர்களை திட்டித் தீர்க்கவே ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதையறிந்த,  பொலிஸார் விமானநிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

வீரர்கள் தமது லக்கேஜ்களுடன் வெளியே வந்தபோது, இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள், அவர்களை பார்த்து, ஷேம்.. ஷேம்.. (அசிங்கம்) என கோஷமிட்டனர். 

இது வீரர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/4646

 

  • தொடங்கியவர்

அரையிறுதியில் யுவராஜ் இல்லை

March 29, 2016

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது. உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

yuvicjb-1459178904-800

எதிர்வரும் 31ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யுவராஜ் சிங் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யுவராஜ் சிங் காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், அவருக்கு பதிலாக கர்நாடாகவை சேர்ந்த மணிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=11496&cat=2

  • தொடங்கியவர்
இன்று முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து - நியூஸிலாந்து மோதல்
2016-03-30 10:01:27

(டெல்லியிலிருந்து நெவில் அன்தனி)

 

15830Untitled-1.jpgஆறாவது உலக இருபது 20 கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதி ஆட்டத்தில் விளையாடப் போகும் முதலாவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் நியூஸிலாந்துக்கும் முன்னாள் சம்பியன் இங்கிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரை இறுதி ஆட்டம் டெல்லி ஃபெரோஸ் ஷா கொட்லா விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

 

நடந்து முடிந்த சுப்பர் 10 போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரை தோல்வியடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான நியூஸிலாந்து, இறுதி ஆட்டத்தில் விளையாடும் தகுதியைப் பெறும் என நம்பப்படுகின்றது.

 

எனினும் எதிர்பாராத முடிவை தரவல்ல அணியாக இங்கிலாந்து தென்படுவதை மறுப்பதற்கில்லை.

 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இம் முறை சுப்பர் 10 குழு 2 இல் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதி வாய்ப்பைப் பெற்றது.

 

மார்ட்டின் கப்டில், கென் வில்லியம்சன், கொலின் முன்ரோ, கோரி அண்டர்சன், ரொஸ் டெய்லர், கிரான்ட் எலி யட், லூக் ரொன்ச்சி ஆகிய அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறுவதுடன் இவர்களில் கோரி அண்டர்சன், கேன் வில்லியம்சன், கிரான்ட் எலியட் ஆகியோர் சகலதுறை வீரர்களாவர். 

 

15830_14.jpgபந்துவீச்சில் அடம் மில்னே, மிச்செல் மெக்லநகான், மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி ஆகி யோர் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள்.

 

அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், ஜேசன் ரோய், அடம் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி ஆகியோர் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசைக்கு வலு சேர்க்கின்றனர்.

 

இவர்களில் மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் சகலதுறை வீரர்களாகத் திகழ்கின்றனர். பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன், ஆதில் ரஷித், டேவிட் வில்லி, ரீஸ் டொப்லே ஆகியோர் பந்துவீச்சில் பிரதான பங்கு வகிக்கின்றனர்.

 

இரண்டு அணிகளும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஒன்றையொன்று 13 தடவைகள் சந்தித்துள்ளன. இங்கிலாந்து 8 க்கு 4 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

 

இந்த சுற்றுப்போட்டியில் மும்பையிலும் டெல்லியிலும் மாத்திரமே இங்கிலாந்து விளையாடியுள்ளது. 

 

ஆனால், நியூஸிலாந்து நான்கு இடங்களில் (நாக்பூர், தரம்சாலா, மொஹாலி, கொல்கத்தா) விளையாடியதுடன் இப்போது டெல்லியில் அரை இறுதியை எதிர்கொள்ளவுள்ளது.

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15830#sthash.b7ZHNo1W.dpuf
  • தொடங்கியவர்
முதலாவது மகளிர் அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதல்
2016-03-30 09:51:14

(டெல்லியிலிருந்து நெவில் அன்தனி)

 

உலக இருபது 20 கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஆடவர் அணி விளையா­ட­வுள்ள அதே விளை­யாட்­ட­ரங்கில் மகளிர் உலக இரு­பது 20 அரை இறுதி ஆட்­டத்தில் அந் நாட்டின் மகளிர் அணி, நடப்பு சம்­பி­ய­னான அவுஸ்­தி­ரே­லி­யாவை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

 

15829_238793.jpg

அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் எலிஸா ஹீலி பயிற்சியில் ஈடுபட்டபோது...                                                                   


 

அங்­கு­ரார்ப்­பண மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் தனது சொந்த மண்ணில் சம்­பி­ய­னான இங்­கி­லாந்து, கடந்த இரண்டு உலக இரு­பது 20 இறுதிப் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தோல்வி அடைந்­தி­ருந்­தது.

 

துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக இம் முறை இரண்டு அணி­களும் அரை இறுதியில் சந்­திக்­க­வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

 

இரண்டு அணி­யி­னரும் சம்பவம் கொண்­டதால் இந்தப் போட்டி விறு­வி­றுப்பை ஏற்­ப­டுத்தும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

மகளிர் குழு ஏ யில் இடம்­பெற்ற அவுஸ்­தி­ரே­லியா தனது நான்கு போட்­டி­களில் இலங்கை, தென் ஆபி­ரிக்கா, அயர்­லாந்து ஆகிய நாடு­களை வெற்­றி­ கொண்­ட­துடன் நியூஸிலாந்­திடம் தோல்வி அடைந்­தது.

 

மகளிர் குழு பி யில் இங்­கி­லாந்து தான் விளை­யா­டிய நான்கு போட்­டி­க­ளிலும் மேற்­கிந்­தியத் தீவுகள், பாகிஸ்தான், இந்­தியா, பங்­க­ளாதேஷ் ஆகி­ய­வற்றை வெற்­றி­ கொண்­டி­ருந்­தது.

 

அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணி

மெக் லனிங் (தலைவி), அலெக்ஸ் பிளக்வெல் (உதவித் தலைவி), கிறிஸ்டென் பீம்ஸ், நிக்­கலா கேரி, லோரென் சீட்ல், சாரா கொய்ல், ரெனி ஃபரெல், ஹொலி ஃபேர்லிங், அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனாசென், பெத் மூனி, எரின் ஒஸ்போர்ன், எலிஸ் பெரி, மெகான் ஷுட், எல்சி வில்­லானி.

 

இங்­கி­லாந்து மகளிர் அணி

சார்லட் எட்வேர்ட்ஸ் (தலைவி), டமி போமன்ட், கெத்­தரின் பிரன்ட், ஜோர்­ஜியா எல்விஸ், டாஷ் ஃபரன்ட், லிடியா கிறீன்வே, ரெபெக்கா க்றண்டி, ஜெனி கன், அமி ஜோன்ஸ், ஹீதர் நைட், லோரா மார்ஷ், நட்டாலி சிவர், அனியா ஷ்ரப்சோப், சாரா டெய்லர், டேனியெல் வைட்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15829#sthash.69bKFzaf.dpuf
  • தொடங்கியவர்

உலகக்கோப்பை டி20 தோல்வி: வக்கார் யூனிஸ் மீது பாயும் ரமீஸ் ராஜா, யூசுஃப்

 
வக்கார் யூனிஸ் - ரமீஸ் ராஜா | கோப்புப் படம்
வக்கார் யூனிஸ் - ரமீஸ் ராஜா | கோப்புப் படம்

உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து, அதன் பயிற்சியாளரும், முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் கேட்டுள்ள மன்னிப்பு காலம் கடந்த ஒன்று என முன்னாள் பாக். கேப்டன்கள் ரமீஸ் ராஜா, முகமது யூசுஃப் ஆகியோர் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், ஊடகங்களுக்கு முன் வக்கார் யூனிஸ் கேட்ட மன்னிப்பு தனக்கு வலித்ததாக ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

"வக்கார் மிக உயர்ந்த வீரர்களில் ஒருவர். அவர் மன்னிப்பு கேட்டதை பார்க்கும்போது வலித்தது. தனி ஒருவர் கேட்கும் மன்னிப்பால் எதுவும் மாறிவிடாது என நினைக்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இதைத் தாண்டி சரி செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது" என ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் ஷோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதே தொலைக்காட்சியில், ரமீஸ் ராஜா பேசுகையில், கடந்த காலத்திலும் மோசமான ஆட்டங்களுக்கு பலர் மன்னிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும், "ஒருவர் விமர்சனங்களை எதிர்கொண்டு தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறார். அணி சிறப்பாக செயல்பட்டிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். அணியின் ஆட்டத்திலும் சரி, வீரர்களின் மனப்போக்கிலும் சரி எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. எனவே இப்போது மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது.

சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே நிறைய சுதந்திரம் தந்தாகிவிட்டது. இப்போது கடுமையான முடிவுகள் எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. அணியில் இருப்பவர்களின் திறமை போதவில்லை என்றால் அது யார் குற்றம்? சில வீரர்களின் திறமை மேம்படுவதைப் போலத் தெரியவில்லை. சிலருக்கு ஓய்வளித்துவிட்டு புதியவர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

இதே போல என்னைப் பற்றிய விமர்சனம் வந்த போது நான் ராஜினாமா செய்து விலகிவிட்டேன். ஒருவர் தன்னை நிரூபித்துக்கொள்ள 2 வருடஙக்ள் போதும் என நினைக்கிறேன். முடியவில்லை என்றால் அவராகவே விலகிவிடுவது நல்லது" என ரமீஸ் ராஜா கூறினார்.

முகமது யூசுஃப் பேசுகையில், "வக்கார் யூனிஸ் நமக்கு கிடைத்த சிறந்த வீரர்களில் ஒருவர். இந்தியாவில் ராகுல் டிராவிட், ஜூனியர்களுக்கு பயிற்சி அளிப்பதைப் போல இவருக்கும் ஜூனியர் அணி பயிற்சியாளர் பொறுப்பை தரலாம். அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என நினைக்கிறேன்.

தீவிரமான, கடுமையான முடிவுகளை இப்போது எடுக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் தனது நேரத்தை தந்து நேர்மையாக வேலை செய்ய விரும்புபவர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும்" என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/article8413334.ece?homepage=true

  • தொடங்கியவர்

டி20 உலகக்கோப்பை தோல்விக்கு அப்ரிடியும் மன்னிப்பு கோருகிறார்

 
அஃப்ரிடி | கோப்புப் படம்
அஃப்ரிடி | கோப்புப் படம்

பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், டி20 உலகக்கோப்பையில் அணியின் மோசமான ஆட்டத்துக்காக மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, அணியின் கேப்டன் ஷாயித் அஃப்ரிடியும் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் ஊடகங்கள் மூலம் மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ராஜினாமா செய்யவும் முன்வந்துள்ளார்.

தற்போது பாக். அணியின் கேப்டன் அஃப்ரிடியும் தன் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் பேசியுள்ள அஃப்ரிடி கூறியதாவது:

"20 வருடங்களாக, என் நாட்டின் சின்னத்தை என் ஆடையில் தாங்கிக்கொண்டு விளையாடி வருகிறேன். நான் களத்தில் நுழையும்போது ஒட்டுமொத்த தேசத்தின் உணர்ச்சிகளையும் என்னுடன் வைத்துக்கொண்டே நுழைகிறேன். இது வெறும் 11 வீரர்கள் கொண்ட அணி அல்ல. என் ஒட்டு மொத்த தேசத்தின் அணி.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை. ஆனால் நான் உங்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டிருக்கிறேன். இன்று, அஃப்ரிதியாகிய நான், பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் என் மீதும், அணியின் மீதும் வைத்திருந்த எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்யவில்லை" இவ்வாறு அஃப்ரிடி பேசியுள்ளார்.

தற்போது துபாயில் இருக்கும் அஃப்ரிடி, நாட்டுக்குத் திரும்பியவுடன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article8413570.ece

  • தொடங்கியவர்
நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தெரிவானது இங்கிலாந்து
2016-03-30 22:28:32

உலக இருபது20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.


இன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட்களால் இங்கிலாந்து  வென்றது.

 

15841england.jpg

 

டில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில்  8 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைக் குவித்தது. கொலின் முன்ரோ 32 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  ஆரம்பத்திலிருந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியனார். 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 78 ஓட்டங்களை அவர் குவித்தார். 

 

ஜோஸ் பட்லர் 17 பந்துகளில் 32 ஓட்டங்களைக் குவித்தார். இதனால் 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது இங்கிலாந்து அணி.


இத்தொடரில் தோல்வியைத் தழுவாமல் அரையிறுதிக்குத் தெரிவான ஒரே அணியான நியூஸிலாந்து, அரை இறுதியில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஜேஸன் ரோய் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவானார். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15841#sthash.KDjiVqxO.dpuf
  • தொடங்கியவர்
இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்திய -மேற்கிந்திய அணிகள் இன்று மோதல்; உபாதைக்குள்ளான யுவராஜுக்குப் பதிலாக மனிஷ் பாண்டே
2016-03-31 11:05:46

15852VRA-20160330-M01-MED.jpgஇந்­தி­யா­வுக்கும் மேற்­கி­ந்­தியத் தீவு­க­ளுக்கும் இடை­யி­லான உலக இரு­பது 20 இரண்­டா­வது அரை இறுதி ஆட்டம் மும்பை வான்­கடே விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு நடை­பெ­ற­வுள்­ளது.

 

ஆறா­வது உலக இரு­பது 20 கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் இறுதி ஆட்­டத்தில் விளை­யா­டு­வ­தற்­கான தகு­தியைப் பெறும் பொருட்டு முன்னாள் உலக சம்­பி­யன்­க­ளான இந்த இரண்டு அணி­களும் கடு­மை­யாக முயற்­சிக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

 

இதே­வேளை, இந்­திய அணி வீரர் யுவராஜ் சிங்கின் தொடைப் பகுதி சதையில் பிடிப்பு ஏற்­பட்­டதால் அவ­ருக்குப் பதி­லாக மனிஷ் பாண்டே இந்­திய கிரிக்கெட் குழாமில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்ளார்.

 

இதற்­கான அனு­ம­தியை ஐ.சி.சியின் போட்டி நுட்­ப­வியல் குழு வழங்­கி­யுள்­ளது. சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தர­வ­ரி­சையில் இந்­தியா முதலாம் இடத்­திலும் மேற்­கிந்­தியத் தீவுகள் மூன்றாம் இடத்­திலும் இருக்­கின்­றன.

 

இன்­றைய போட்­டிக்­கென தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆடு­களம் துடுப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு சாத­க­மாக அமை­யாது என தெரி­ய­வ­ரு­கின்­றது. இதற்கு முன்னர் நடை­பெற்ற போட்­டி­களில் போன்­றல்­லாமல் இந்த ஆடு­களம் மந்­த­மான வேகத்தைக் கொண்­டி­ருக்கும் என ஆடு­களம் தொடர்­பான தகவல் அறிந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

 

இந்த மைதா­னத்தில் இதற்கு முன்னர் விளை­யா­டப்­பட்ட போட்­டி­களில் ஒன்றில் இங்­கி­லாந்து 182 ஓட்­டங்­களை பெற, கிறிஸ் கெய்லின் அதி­ரடி சதத்தின் உத­வி­யுடன் மேற்­கிந்­தியத் தீவுகள் 183 ஓட்­டங்­களைக் குவித்து வெற்­றி­ பெற்­றி­ருந்­தது.

 

இதே மைதா­னத்தில் தென் ஆபி­ரிக்கா குவித்த 229 ஓட்­டங்­கைள இங்­கி­லாந்து (230) கடந்து வெற்­றி­பெற்­றி­ருந்­தது. மற்­றொரு போட்­டியில் தென் ஆபி­ரிக்கா குவித்த 209 ஓட்­டங்­க­ளுக்கு பதி­ல­ளித்து துடுப்­பெ­டுத்­தாடிய ஆப்­கா­னிஸ்தான் 172 ஓட்­டங்­களைப் பெற்று தோல்வி அடைந்­தது. 

 

இந்நிலையில் அஷ்வின் உட்­பட அனைத்துப் பந்­து­வீச்­சா­ளர்­க­ளையும் பதம்­பார்க்க தயா­ராக இருப்­ப­தாக கிறிஸ் கெய்ல் எச்­ச­ரித்­துள்ளார். ஆனால், எத்­த­கைய ஆடு­க­ளத்­திலும் எத்­தகைய பந்­து­வீச்­சா­ளர்­க­ளையும் பதம்­பார்க்கும் ஆற்றல் இந்­திய துடுப்­பாட்­டக்­கா­ரர்­க­ளிடம் இருப்­பதால் பெரும்­பாலும் இன்­றைய அரை இறு­தியில் இந்­தி­யா­வுக்கு சாத­க­மான முடிவு கிட்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

15852Untitled-1.jpg

 

ஆப்­கா­னிஸ்­தா­னிடம் மேற்­கிந்­தி­யர்கள் தோற்ற விதமும் இந்­தி­யா­வுக்கு சாத­க­மான முடிவு கிட்­டு­வ­தற்கு  அதிக வாய்ப்­புள்ளதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

 

மேலும், இந்த ஆட்டம் கிறிஸ் கெய்­லுக்கும் அஷ்­வி­னுக்கும் இடை­யி­லான போட்­டி­யாக அமைந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அத்­துடன், விராத் கோஹ்­லியும் இந்­தி­யாவின் வெற்­றிக்­காக கடும் பிர­யத்­தனம் எடுப்பார் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

இதே­வேளை, மேற்­கித்­தியத் தீவுகள் அணி ஆரம்ப வீரர் அண்ட்றே பிளெச்சர் உபா­தைக்­குள்­ளா­கி­யுள்­ளதால் அவ­ருக்குப் பதி­லாக லெண்ட்ல் சிமன்ஸ் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். இதற்­கான அனு­ம­தியை போட்டி நுட்­ப­வியல் குழு­வினர் வழங்­கி­யுள்­ளனர்.

 

இந்­தி­யாவும் மேற்­கிந்­தியத் தீவு­களும் சுப்பர் 10 சுற்றில் தலா மூன்று போட்­டி­களில் வெற்­றி­பெற்­ற­துடன், தலா ஒரு போட்­டியில் தோல்வி அடைந்­தன. நியூஸிலாந்­திடம் இந்­தியா தனது ஆரம்பப் போட்­டி­யிலும் ஆப்­கா­னிஸ்­தா­னிடம் மேற்­கிந்­தியத் தீவுகள் தனது கடைசிப் போட்­டி­யிலும் தோல்வி அடைந்­தி­ருந்­தன.

 

இந்­திய கிரிக்கெட் குழாம்:


எம். எஸ். தோனி (தலைவர்), ரவிச்­சந்­திரன் அஷ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஷிக்கர் தவான், ஹர்­பஜன் சிங், ரவீந்த்ர ஜடேஜா, விராத் கோஹ்லி, மொஹமத் ஷமி, பவன் நெகி, அஷிஷ் நெஹ்ரா, ஹர்திக் பாண்­டியா, அஜின்­கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, யுவராஜ் சிங். தயார்நிலை வீரர் மனிஷ் பாண்டே.

 

மேற்கிந்தியத் தீவுகள் குழாம்:


டரன் சமி (தலைவர்), சமுவெல் பட்றி, சுலைமான் பென், கார்லொஸ் பிரத்வெய்ட், ட்வேன் ப்ராவோ, ஜோன்சன் சார்ள்ஸ், க்றிஸ் கேல், ஜேசன் ஹோல்டர், எவின் லூயிஸ், அஷ்லி நேர்ஸ், தினேஷ் ராம்டின், அண்ட்றே ரசல், மார்லன் சமுவெல்ஸ், லெண்டல் சமுவெல்ஸ், ஜெரோம் டெய்லர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15852#sthash.1ersY0HO.dpuf
  • தொடங்கியவர்
இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் நியூஸிலாந்து – மே.இ. தீவுகள் மோதல்
2016-03-31 10:38:21

15850_VRA-20160330-m02-MED2.jpgநியூஸிலாந்து மகளிர் அணிக்கும் மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணிக்கும் இடை­யி­லான இரண்­டா­வது மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் அரை இறுதிப் போட்டி மும்பை வான்­கடே விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

 

இவ்­ வ­ரு­டத்­திற்­கான போட்­டியில் இரண்டு அணி­யி­ன­ரி­னதும் பெறு­பே­று­களை ஒப்­பி­டும்­போது நியூஸிலாந்து வெற்­றி­பெ­று­வ­தற்கு அனு­கூ­ல­மான அணி­யாகத் தென்­ப­டு­கின்­றது.

 

நியூ­ஸி­லாந்து சார்­பாக சுசி பேட்ஸ் (ஒரு அரைச் சதத்­துடன் 182 ஓட்­டங்கள்), ரச்செல் ப்ரீஸ்ட் (102) ஆகியோர் துடுப்­பாட்­டத்­திலும் லெய் கஸ்ப்­பெரெக் (9 விக்கெட்கள்), எரின் பேர்­மிங்ஹாம் (6 விக்கெட்கள்), சொஃபி டிவைன் (5 விக்கெட்கள்) ஆகியோர் பந்­து­வீச்­சிலும் பிர­கா­சித்­துள்­ளனர்.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் சார்பில் ஸ்டெஃபானி டெய்லர் (162 ஓட்­டங்கள், 5 விக்­கெட்கள்) சகல துறை­க­ளிலும், டியேந்த்ரா டொட்டின் (7 விக்கெட்கள்), அஃபி ஃபிளெச்சர் (6 விக்­கெட்கள்), ஷக்­கு­வானா குவின்டைன் (5 விக்­கெட்கள்) ஆகியோர் பந்­து­வீச்­சிலும் சிறப்­பாக செயற்­பட்­டுள்­ளனர்.

 

15850Untitled-3.jpg

 

இங்கு குறிப்­பி­டப்­பட்டுள்­ள வீராங்க­னைகள் இரண்டு அணி­க­ளி­னதும் வெற்­றிக்­காக முயற்­சிப்பர் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

நியூஸிலாந்து மகளிர் குழாம்


சுசி பேட்ஸ் (தலைவி), சொஃபி டிவைன், எரின் பேர்­மிங்ஹாம், லெய் கஸ்­பெரெக், ஃபெலி­சிட்டி லெடொன் டேவிஸ், சாரா மெக்­லஷான், கேட்டி மார்ட்டின், தம்சின் நியூட்டன், மோர்னா நீல்சன், கேட்டி பேர்க்கின்ஸ், அனா பீட்­டர்சன், ரச்செல் பிரீஸ்ட், ஹன்னா ரோவ், அமி சட்­டர்த்வெய்ட், லீ தாஹுஹு.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் குழாம்


ஸ்டெஃபானி டெய்லர் (தலைவி), ஷக்­கிரா செல்மான், மெரிஸ்ஸா அகெய்­லீரா, ஷெமெய்ன் கெம்பெல், ஷமி­லியா கொனெல், ப்ரிட்னி கூப்பர், டியேண்ட்ரா டொட்டின், அஃபி ஃபிளெச்சர், ஸ்டேவி ஆன் கிங், கைசியா நைட், கிஷோனா நைட், ஹேலி மெத்யூஸ், அனிசா மொஹமத், ஷக்­க­வானா குவின்டைன், ட்ரீமேன் ஸ்மார்ட்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15850#sthash.g9IMlMtr.dpuf
  • தொடங்கியவர்

“இந்தியாவை மிரட்டுவேன்” கிறிஸ் கெயிலின் சபதம்

March 31, 2016

இந்தியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் அரையி றுதி ஆட்டத்தில் அதிரடியில் கலக்கத் தயாராக இருப் பதாக மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் தொடர்பாக கெயில் மேலும் தெரிவிக்கையில்:-

இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர். இங்கு அவர்களை தோற்கடிப்பது கடினமான காரியம். எங்களது இலக்கு விராட் கோக்லி மட்டும் இல்லை. குறிப்பிட்ட நாள் சாதகமாக அமைந்தால், எந்த ஒரு வீரராலும் அதிரடியில் கலக்க முடியும். இந்தத் தருணத்தில் விராட் கோக்லிதான் கவனிக்கத்தக்க வீரராக இருக்கிறார்.

எங்களுக்கு எதிராக அவரை ஓட்டங்கள் குவிக்க விடாமல் தடுப்போம். மேலும், எனக்கு எதிராக அஸ்வினையோ அல்லது வேறு யாரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அணித் தலைவர் டோனி என்ன செய்வார் என்பதைக் கணிக்க முடியாது. அதே சமயம் கெயிலால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட நான் தயாராக உள்ளேன். யார் பந்து வீசினாலும் நான் அவர்களின் பந்துகளை விளாசித் தள்ள முயற்சிப்பேன் – என்றார்.

 

 

தவான், ரோகித் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய மாட்டோம் : சமியின் வேடிக்கைக் கருத்து

March 31, 2016

 

ரி – 20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவதற்கும், கோக் லியைக் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி வைத்துள்ள திட்டம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித், தவான் இருவரதும் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. ரி – 20 உலகக்கிண்ணத் தொடருக்கு முன் அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த தொடக்க வீரர்கள் தற்பொழுது தடுமாறி வருகிறார்கள். அனைத்து ஆட்டங்களையும் கோக்லி, யுவராஜ், டோனிதான் கடைசியில் போராடி வெற்றி பெற வைக்கின்றனர்.

இதனாலேயே டோனி, கோக்லி மட்டுமே எல்லா ஆட்டங்களையும் வென்று கொடுக்க மாட்டார் என்று ரோகித், தவானுக்கு மறைமுகமாகக் குட்டு வைத்தார். இந்நிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமியும் தன் பங்கிற்கு ரோகித், தவானைக் கலாய்த்துத் தள்ளியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோக்லியைத் தடுக்க ஏதும் திட்டம் வைத்திருக்கிறீர்களா என்று சமியிடம் கேட்டபோது, தொடக்க வீரர்கள் ரோகித், தவான் இலக்கை வீழ்த்த மாட்டோம். இதுதான் எங்கள் திட்டம். அவர்களில் ஒருவரை வீழ்த்தினால்தானே கோக்லி களமிறங்க வேண்டிவரும் என்று கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்த தோனியிடம் பவுலர்கள் உள்ளனர்: சங்கக்காரா

 
sanga_2795539f.jpg
 

இன்றைய உலகக்கோப்பை டி20 அரையிறுதியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை நிறுத்த தோனியின் கைவசம் பவுலர்கள் உள்ளனர் என்று இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சங்கக்காரா கூறியதவாது:

கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்த இந்திய அணியில் பவுலர்கள் உள்ளனர். ஜஸ்ப்ரீத் பும்ரா, இவர் ஓரளவுக்கு நல்ல வேகத்துடன், வழக்கத்துக்கு மாறான பந்து வீச்சு ஆக்சனையும் கொண்டிருப்பதால் இவர் ஒரு அச்சுறுத்தலே.

ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார், தோனி, அஸ்வினை கிறிஸ் கெய்லுக்கு எதிராக தொடக்கத்தில் கொண்டு வருவார் என்று நான் நினைக்கிறேன்.

மேலும், கிறிஸ் கெய்ல் இடது கை பவுலர்களுக்கு எதிராக தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா இருக்கிறார். இவர் இந்தத் தொடரில் சிறப்பாக வீசி வருவதால் இந்திய அணியிடம் போதிய பவுலர்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இந்தத் தொடரில் கோலிக்கு எதிராக அணிகள் பல்வேறு உத்திகளை முயற்சி செய்து தோல்வியே அடைந்தனர். ஆஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால் கோலிக்கு அவர்கள் கொஞ்சம் நேரான திசையிலேயே வீசினர். அவர் அதனை மிட்விக்கெட்டில் பிளிக் செய்து பவுண்டரிக்கு விரட்டினார்.

பிறகு கொஞ்சம் தள்ளி வைடாக வீசினர் அதனை கோலி பாயிண்டில் பவுண்டரி அடித்தார். எனவே விராட் கோலிக்கு வீசுவது பற்றி பவுலர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் மே.இ.தீவுகளின் பந்துவீச்சு வலுவானதல்ல. ஆனால் விராட் கோலிக்கு எதிராக அவர்களும் ஏதாவது திட்டம் வைத்திருப்பார்கள்.

இவ்வாறு கூறினார் சங்கக்காரா.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/article8417782.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரோஹித் அபாரம்! கோலியை கோட்டை விட்ட பிராவோ! பொறி பறக்கும் அரையிறுதி!

 

10 ஓவர்களின் முடிவில்  இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் இந்தியாவின் துவக்க பார்ட்னர்ஷிப் முதல் முறையாக 50 ரன்னை கடந்தது. துவக்க வீரர் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 43 ரன்களை குவித்தார். நட்சத்திர வீரர் கோலியை 1 ரன்னில் இருந்தபோது இரண்டுமுறை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தவறவிட்டனர். இந்தியா 200 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணியை முடிவு செய்யும் அரையிறுதியில், டாஸ் வென்ற மே.இ தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் யுவராஜ் சிங்குக்கு பதிலாக மனிஷ் பாண்டேவும், தவானுக்கு பதில் ரஹானேவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

indwi.jpg


இந்திய அணியில் கோலியை தவிர யாரும் சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்று கெயில் கூறியிருக்கிறார். கெயிலை வீழ்த்த அஸ்வின் ஆயுதமாக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது

http://www.vikatan.com/news/sports/61606-will-india-beat-west-indies.art

  • தொடங்கியவர்

டி 20 உலகக் கோப்பை: அரையிறுதி கெயில் vs கோலியா?
---------------------------------------------------------------------
மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தை கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலிக்கு இடையேயான ஒரு மோதல் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் இதுவரை 48 சர்வதேச டி 20 ஆட்டங்களில் பங்கேற்று இதுவரை 1510 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அதிகபட்சமாக அவர் ஒரு ஆட்டத்தில் எடுத்துள்ள ஓட்டம் 117. சராசரி ஓட்டவீதம் 36.82.

இந்தியாவின் விராட் கோலி 42 சர்வதேச டி 20 ஆட்டங்களில் ஆடி 1552 ஓட்டங்களை இதுவரை பெற்றுள்ளார்.

அவரது சராசரி ஓட்டவீதம் 55.42 ஓட்டங்கள். ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாக எடுத்துள்ள ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் 90.

இந்தியாவில் இந்த இரு வீரர்களுக்குமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ராஞ்சியிலுள்ள தோனியின் வீட்டுக்கு முன்னர் ரசிகர்கள் இசை நிகழ்ச்சி, பிரார்த்தனைகள் ஆகியவற்றையும் நடத்தியுள்ளனர்.

12593533_10153363717090163_2445244646899

12891623_10153363717095163_9067097101578

12890909_10153363717085163_3790291659060

12916246_10153363717180163_3260959516985

12525280_10153363717200163_6599881158530

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.