Jump to content

சப்ஜி பிரியாணி : செய்முறைகளுடன்...!


Recommended Posts

பதியப்பட்டது

 

சப்ஜி பிரியாணி : செய்முறைகளுடன்...!

biriyani.jpg



தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ

வெங்காயம் - 300 கிராம்

தக்காளி - 300 கிராம்

எண்ணெய் - சிறிதளவு

க.பட்டை - 1 இஞ்ச்

லவங்கம், ஏலக்காய் - தலா -2

இஞ்சி - வெ. பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி, புதினா - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைப்பழம் (சிறியது) - பாதியளவு

உப்பு - தேவைக்கேற்ப

மிளகாய் தூள் - 1  டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கேசரி கலர் - சிறிது

 

காய்கள்...
உருளைக்கிழங்கு - 100 கிராம்

கெரட் - 50 கிராம்

பீட்ரூட் - 50 கிராம்

பட்டாணி - 50 கிராம்

கோலிஃப்ளவர் - 25 கிராம்

பீன்ஸ் - 25 கிராம்

 

 

செய்முறை : 
காய்களைக் கழுவி, அரிந்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் அரியவும். கொத்தமல்லி, புதினாவை ஆய்ந்து, கழுவி வைக்கவும்.

அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வாயகன்ற நொன்-ஸ்டிக் பாத்திரத்தை காய வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி க.பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக  வதக்கவும். இஞ்சி - வெ.பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி தணலைக் குறைவாக வைக்கவும்.

பச்சை வாடை போனதும் உருளை, கெரட், பீட்ரூட் சேர்த்து வதக்கவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளி, பச்சை  மிளகாய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.

தக்காளியைக் குழைவாகும் வரை கிண்டி மீதி கோலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி, தயிர் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு வதக்கவும். அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, 1/2 எலுமிச்சை பிழிந்து சேர்த்து நன்கு வதக்கி சிம்மில் 10  நிமிடங்கள் வைக்கவும்.

வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பு போட்டு முக்கால் வேக்காடாக வேக விடவும். அரிசி ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் இருக்க ஒரு டீஸ்பூன் எண்ணெய், 1/2  எலுமிச்சைச்சாறு சேர்த்து வடிக்கவும். வடித்த அரிசியை காய்கறி வைத்திருக்கும் பாத்திரத்தில் தட்டி மேலே கேசரி கலரை கரைத்து தெளித்து, புதினா மற்றும் கொத்தமல்லி தூவி சிறிது நெய் ஊற்றி 20 நிமிடங்கள் தம் போட்டு இறக்கவும்.

*பீட்ரூட் சேர்த்தால் நிறம் மாறிவிடும். அதனால் பீட்ரூட்டை ஒரு நாள் முன்பே அரிந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அப்படி அதிகமாக நிறம் மாறாமல் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்...ம்...ம்..... சுப்பர்  வெஜ் பிரியாணி ....!  :)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.