Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணை அவசியமற்றது என்கிறார் மல்வத்தை பீடாதிபதி

Featured Replies

சர்வதேச விசாரணை அவசியமற்றது என்கிறார் மல்வத்தை பீடாதிபதி

 

இலங்கையில் இறுதிப்போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என மல்வத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

160208151647_kandy_un_512x288_bbc_nocred

 

 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் ஆணையர் செயித் ராத் அல் ஹுசைன் மல்வத்து மஹநாயக்க தேரருடன் கலந்துரையாடும்போது

ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன் அவரைக் கண்டியில் சந்தித்தபோதே திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கை அரசு சகல இன மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவற்காக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என மல்வத்தை பீடாதிபதி ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையரிடம் தெரிவித்துள்ளார்.

160208151624_kandy_un_512x288_bbc_nocredஆணையர் செயித் ராத் அல் ஹுசைனை பஸ்நாயக்க நிலமே நிலங்க தேல பண்டார வரவேற்றபோது

புதிய அரசாங்கம் அனைத்து இன மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் ஐ நா ஆணையரிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனிடையே மனித உரிமைகள் விஷயத்தில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையின் முக்கியத்துவம் பற்றி, ஐ.நா. ஆணையாளருக்கு தாம் விரிவான விளக்கம் கொடுத்துள்ளதாக அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியது, முக்கியமானதொன்றாக இருந்தது என ஊடகவியலாளர்களிடம் சயீத் ரா அத் அல் ஹுசைன் தெரிவித்தார்.

நாட்டில் சமாதானம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு மற்றைய தரப்பினர்களுடனும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160208_kandy_un?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

சர்வதேச விசாரணை அவசியமற்றது என்கிறார் மல்வத்தை பீடாதிபதி

உண்மைதான்........புலிப்பயங்கரவாதிகளை அழித்ததிற்கு எதற்காக சர்வதேச விசாரணை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

செப் 11 தாக்குதலில் 2000 மக்கள் இறந்த உடன ஒருத்தற்ற கருத்தும் கேட்காமல் அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்கிச்சுது.. குண்டு போட்டிச்சுது.. நாடுகளை ஆக்கிரமிச்சிச்சு. இந்த ஐ நா வாய் பார்த்திட்டு இருந்திச்சு

இங்க என்னடான்னா.. சிங்களவர்களால் பல ஆயிரக்கணக்கில்... கொலை செய்யப்பட்ட.. காணாமல் போகடிக்கப்பட்ட.. தமிழ் மக்கள் சார்ப்பில் சிங்களவனட்டையே உங்களை விசாரிக்கிறதா இல்லையா.. நீங்களே உங்களை விசாரிக்கிறீங்களா.. அல்லது நாங்க வாறதான்னு கருத்துக் கேட்கும் வேடிக்கையை கடந்த 6 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறது ஐ நா.

காரணம்.. தமிழன் உலகில் பலவீனமாக அதிகாரம் இன்றி இருக்கிறான் என்ற ஒற்றைக்காரணம் தானே தவிர வேறில்லை. :rolleyes:tw_angry:

Zeid_Nalloor_visit_01.jpg

மைத்திரி வரேக்க நின்ற.. சிங்கள இராணுவ அதிரடிப்படை ஆட்களை இப்ப காணேல்ல. இல்ல.. காக்கியில வந்து நிற்கினம்.

இப்படித்தான் இவைட விசாரணையும் இருக்கும்... :rolleyes:

உலகத்தை ஏய்ச்சு தமிழனையும் ஏய்ச்சு.. சிங்களவன் என்னமா காய் நகர்த்திறான். கொலைகாரச் சிங்களவன். அவனுக்கு எங்கட சிலது எதிர்க்கட்சி தலைவர்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38127

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் பின்வரும் காரணத்துக்காக வழக்குப் பதிவு செய்ய முடியாதா?

 

Perverting the cause of justice.

 

 ஆராவது தமிழ் படுத்திவிட்டால், மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.