Jump to content

ரஷ்யா மீது ஜோன் கெர்ரி கண்டனம்


Recommended Posts

ரஷ்யா மீது ஜோன் கெர்ரி கண்டனம்

 

சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடன்படிக்கையை நிலை நிறுத்த, சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் தமது கொள்கையை ரஷ்யா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோன் கெரி கூறியுள்ளார்.

ரஷ்யா மீது ஜோன் கெர்ரி கண்டனம்

 ரஷ்யா மீது ஜோன் கெர்ரி கண்டனம்

சட்டப்படியான எதிரணிக்குழுக்கள் மீதும், பொதுமக்கள் மீதுமே ரஷ்யா முக்கியமாக குண்டுவீசுவதாக மியூனிக்கில் நடக்கும் ஒரு பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் அவர் பேசினார்.

சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களை ஓரங்கட்டினாலும் அவர்கள் சரணடையப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

மிதவாத கிளர்ச்சிக்காரர்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் அவர்கள் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் பிலிப் ஹமண்டும் எச்சரித்துள்ளார்.

தாம் பயங்கரவாத குழுக்களையே இலக்குவைப்பதாக ரஷ்யா கூறுகின்றது.

http://www.bbc.com/tamil/global/2016/02/160213_syria

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியா அமெரிக்காவின்ட ஆட்டத்தை சிரியாவில முடிக்கப் போகுது. அதுதான் இந்தத் துள்ளல். சிரிய அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஆயுதமும்.. பயிற்சியும்.. பணமும் கொடுத்து தூண்டி விடும் அமெரிக்கா.. அவர்களை சிரிய விடுதலைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறதே. அதே அமெரிக்கா.. சொந்த இனவிடுதலைக்காகப் போராடிய புலிகளை பயங்கரவாதி என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

அமெரிக்காவின் இரட்டை வேடத்தை தகர்க்கக் கூடிய ஒரே சக்தி ரஷ்சியா மட்டும் தான். tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.