Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தினாலும் விசாரணைகளைத் தடுக்கமாட்டேன்!

Featured Replies

சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தினாலும் விசாரணைகளைத் தடுக்கமாட்டேன்!
 
 
சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தினாலும் விசாரணைகளைத் தடுக்கமாட்டேன்!
தமது குடும்பத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்ற விசாரணைகளை மூடிமறைத்து கொள்ளும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக உடைத்து புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக கூறி வருகிறார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
எனினும்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபட்டாலும் விசாரணைகளை நிறுத்த தான் இணங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
 
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக நடத்தப்படும் பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளை நிறுத்தினால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  அரசியலில் இருந்துகூட ஓய்வுபெற தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கூறியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
ராஜபக்ச ஆட்சியில் குற்றம் செய்தவர்களை சட்டத்திற்கு முன்கொண்டு வருவதாக கூறி ஆட்சிக்கு வந்த தான், அந்த செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்துவதை விட ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது பொருத்தமானது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டுக்கு அமைய கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள், கட்சி இரண்டாக பிளவுபட்டாலும் ஜனாதிபதியின் கொள்கைக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானித்துள்ளனர்.
 
அத்துடன் மகிந்தவின் இந்த செயற்பாடுகள் காரணமாக இறுதியில் உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு போவதற்கு இடமில்லாது போய்விடும் எனவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
கடந்த காலங்களில் கிராம மட்டத்தில் நட ந்த ஊழல், மோசடிகளில் தொடர்புடையவர்கள் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி வரும் உள்ளுராட்சி சபை பிரதிநிதிகள் குழுவில் முன்னிலையில் இருப்பதாகவும் அவர் ளுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமையானது கவலைக்குரியதாக இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.  
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பிளவு காட்டினால் தானே 

தமிழர் தீர்வை தள்ளிப்போடலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

அப்படி பிளவு காட்டினால் தானே 

தமிழர் தீர்வை தள்ளிப்போடலாம்...

சிங்களத்தின் கொள்கை ஒன்று. போகும் பாதைகள் தான் வித்தியாசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.