Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் தேசிய கீதம்: எதிர்த்து வழக்கு

Featured Replies

தமிழில் தேசிய கீதம்: எதிர்த்து வழக்கு
 
 

article_1456546143-aa.jpgசுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடப்பட்டமையானது  அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

களனி கல்பொருள்ளயை வதிவிடமாகக்கொண்ட சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையை வதிவிடமாகக் கொண்ட பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனியை வதிவிடமாகக்கொண்ட தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/167009/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-#sthash.NPHbknU7.dpuf
  • தொடங்கியவர்

தமிழில் தேசிய கீதம் அரசியல் சாசன மீறலா?

 

இலங்கையில், இந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது, இலங்கை அரசியல் சாசனத்தை மீறும் செயல் என குற்றஞ்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

150204084505_sri_lanka_independence_day_
 

மனுவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் சாசனத்தின்படி, தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாட முடியும் என குறிப்பிட்டு, வழக்கினை தாக்கல் செய்துள்ள கெலனிய பிரதேசவாசிகள் மூவர், தமிழில் பாடுவதற்கு அரசியல் சாசனத்தில் அனுமதி இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசியல் சாசனத்தின் தமிழ் பிரதியில், தேசிய கீதம் தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது சட்டபூர்வமானது என கூறிய அவர், இலங்கை சுதந்திரம் பெற்ற போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டுவருவதாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும், முன்னர் மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இம்முறை, சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதை அவர் வரவேற்றுள்ளார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160227_srilanka_national

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா வெளங்கிடும் டா உங்க நாடு

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sasi_varnam said:

நல்லா வெளங்கிடும் டா உங்க நாடு

ஏன்  எதையாவது எதிர் பார்த்தீர்களா சசி?

அரசியல்தீர்வை எதிர்பார்த்தேன் என்று சொல்லமாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.