Jump to content

மிளகு சிக்கன் குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

12742154_966461923400864_178667593204175

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 250 கிராம்,
வெங்காயம் – 2
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

1 சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

2.கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

3. சிக்கனில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

4.குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், மிளகு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

5.வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன், சீரகம் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. பின்னர் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

7.கொதி வந்ததும் குக்கரை மூடி 2 விசில் போடவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து மிதமான தீயில் வைக்கவும்.

8.சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

9.சுவையான மிளகு சிக்கன் குழம்பு ரெடி

 

https://www.facebook.com/TASTYSAMAYAL/?fref=nf

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிளகு கலந்த சாப்பாடு எப்பவும் உடம்புக்கு நல்லதாம். கொஞ்சம் வித்தியாசமான செய்முறையாயிருக்கு.........நன்றி தமிழரசு tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் காரத்தைத் தருவது மிளகும், காய்ந்த மிளகாயும் ...!

நன்றி தமிழரசு...!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.