Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கக்காராவின் உதவியை நாடும் இலங்கை அணி

Featured Replies

சங்கக்காராவின் உதவியை நாடும் இலங்கை அணி

March 07, 2016

உலகக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட, கிரிக்கெட் வாரியம் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது. ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது.

Portrait of a boy with the flag of Sri Lanka painted on his face

வங்கதேசத்திடம் தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை, கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோற்றது. இலங்கை அணியின் இந்த மோசமான நிலைமை எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் கவலையளிக்கும் விதமாக உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியை மறு மதிப்பீடு செய்யும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் களமிறங்கியுள்ளது. இதற்காக முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=10266&cat=2

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாரவுக்கும் ஜெயவர்த்தனாவுக்கு உரிய பிரதியீடு இடப்படவில்லை.

  • தொடங்கியவர்

Selection Committee for Sri Lanka Cricket for the year 2016/2017

000_Del437486-250x158.jpgMedia Release

Honorable Dayasiri Jayasekara Minister of Sports has appointed a new National Cricket Selection Committee with immediate effect. The appointment of the National Selection Committee was carried out by the Honorable Minister citing recent failures encountered by the National Team in their Tours to New Zealand, India, Asia Cup in Bangladesh and the inconsistency of selection criteria. The members of the newly appointed National Selection Committee are as follows.

1.     Mr. Aravinda De Silva – Chairman
2.     Mr. Kumar Sangakkara – Member
3.     Mr. Romesh Kaluwitharana -Member
4.     Mr. Lalith Kaluperuma -Member
5.     Mr. Ranjith Madurasinghe – Member

12832577_1070518333010828_11107648029892

  • தொடங்கியவர்

அரவிந்த, சங்கக்கார, களுவித்தாரன புதிய தெரிவுக்குழுவில்

160307183457_aravinda_sangakkara_512x288

அரவிந்த டி சில்வாவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியமான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, முன்னாள் வீரர்களான ரொமேஷ் களுவித்தாரன, ரஞ்சித் மதுருசிங்க மற்றும் லலித் களுபெரும ஆகியோரும் இந்தத் தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

2016-/2017 ஆண்டுக்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sport/2016/03/160307_lanka_cricket

  • தொடங்கியவர்
இலங்கையணியின் தேர்வுக் குழுவில் சங்கக்காரா
 
 

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக குமார்சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுக் குழுவின் தலைவராக அரவிந்த டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, ஏனைய தேர்வுக் குழு உறுப்பினர்களாக ரொமேஷ் களுவித்தாரண, லலித் களுப்பெரும, ரஞ்சித் மதுரிசிங்கே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனங்கள் அனைத்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

உலக இருபதுக்கு-20இல் பங்கேற்பதற்காக, இன்று இரவு இந்தியாவுக்கு, பயணிக்கவுள்ள இலங்கைக் குழாம், இன்று காலை, இப்புதிய தேர்வுக் குழுவால்,அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

- See more at: http://www.tamilmirror.lk/167654/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-#sthash.YhA1ve5f.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

25 வயதிற்கு  இற்கு குறைந்த இலங்கை அணிக்கு இரு தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட சங்காவே முக்கிய காரணம் என்று கேள்விப்பட்டேன்
அதிலும் விக்கெட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் வீரர் திறமை அடிப்படையில்  சங்காவின் தனிப்பட்ட தேர்வு என்றும் கேள்விப்பட்டேன்
செய்திகள் உண்மையா என்று தெரியாது ஆனால் மேலுள்ள செய்திகளை பார்க்கும் போது உண்மையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் ...
உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில் சங்கா  ஒரு ஜென்டில்மேன் தான்   

  • தொடங்கியவர்
உலக இருபது 20 சுற்றுப்போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸ் நியமனம்
2016-03-08 10:11:35

15391angelow.jpgஉலக இருபது 20 சுற்றுப்போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

உபதலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க விளங்கியமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை இச் சுற்றுப்போட்டிக்கான குழாமில் சுரங்க லக்மால், லஹிரு திரிமான்ன ஆகியோரும் மீள சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெவ்ரி வன்டர்ஸே, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15391#sthash.64hK3rtn.dpuf
  • தொடங்கியவர்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

25 வயதிற்கு  இற்கு குறைந்த இலங்கை அணிக்கு இரு தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட சங்காவே முக்கிய காரணம் என்று கேள்விப்பட்டேன்
அதிலும் விக்கெட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் வீரர் திறமை அடிப்படையில்  சங்காவின் தனிப்பட்ட தேர்வு என்றும் கேள்விப்பட்டேன்
செய்திகள் உண்மையா என்று தெரியாது ஆனால் மேலுள்ள செய்திகளை பார்க்கும் போது உண்மையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் ...
உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில் சங்கா  ஒரு ஜென்டில்மேன் தான்   

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் றிஷாந் ரியூடர் மற்றும் சஞ்சீவன்


போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும், 2 ரி-20 போட்டியிலும் விளையாட ரியூடர், சஞ்சீவன் ஆகிய இருவரும் மலேசியா பயணமாகின்றனர்.

யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்காக விளையாடிய ரியூடர் மற்றும் மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரிக்காக விளையாடிய சஞ்ஜீவன் ஆகியோர் கடந்த காலங்களில் சிங்கப்பூர் சென்ற யுனிற்றி அணியில் விளையாட தெரிவு செய்யப்பட்டனர்.


இதனால் முன்னணி கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் கவனத்திற்கு வந்தனர். இவர்கள் உண்மையில் திறன் வாய்ந்தவர்கள். இவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என வட பிராந்திய பயிற்றுவிப்பாளர் ரவீந்திர புஷ்பகுமார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாம் சிங்கப்பூர் சென்றபோது விக்கெட் காப்பாளராக றிஷாந் ரியூடர் இருந்தபோது முரளி பந்து வீசினார். முரளியின் தூஸ்றாக்களை அவர் இலகுவாக பிடித்த விதத்தினை முரளியும் சங்கக்காரவும் பாராட்டினர் என அவர் குறிப்பிட்டார்.

முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கதக்க மாற்றம்...இலங்கையணி வெற்றிப் பாதையினை நோக்கி அடி எடுத்து வைக்க வாழ்த்துக்கள்...அதே நேரத்தில் ரி 20 உலக கிண்ணப் போட்டியில் மலினகாவின் பந்து வீச்சு இல்லாமல் இலங்கையணி வெற்றி பெறுமா?...நான் வேற நம்பி தொலைச்சிட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

"சங்கா  ஒரு ஜென்டில்மேன் தான்   ... " 
இவரை பற்றி பெரிய ஒரு விவாதமே இங்கு யாழ் களத்தில் நடந்து ..
இந்த கருத்தை சொன்னதற்காக எங்கள் மேல் நிறையவே தூற்றுதல்களும் நடந்தன... tw_glasses:

  • தொடங்கியவர்

சசி.. திரும்பவுமா...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.