Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கு இருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றி கொள்ளலாம் : அர்ஜீன ரணதுங்க

Featured Replies

இலக்கு இருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றி கொள்ளலாம் : அர்ஜீன ரணதுங்க
 
 
இலக்கு இருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றி கொள்ளலாம் : அர்ஜீன ரணதுங்க
உங்களுக்கென இலக்கொன்றிருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றிக்கொள்ளலாமென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார். எல்லா விளையாட்டு வீரர்களின் வெற்றியும் திறமையில் மாத்திரமின்றி அவர்களது ஒழுக்கத்திலும் தங்கியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
 
96 கொண்டாடுவோம் - சேவ் த ஸ்போர்ட் கிரிக்கெட் பயிற்ச்சி முகாமின் தலைமை பயிற்சியாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். இப்பயிற்சி முகாம் தெஹிவல கௌடானாந்த சாஸ்திரானந்த (நவோதயா) மகாவித்தியாலயத்தில் நடைப்பெற்றது. 
 
இவ்வாரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, 
“விளையாட்டு வீரர்களாகிய நாங்கள் துடுப்பெடுத்தாடும் மட்டை நாங்கள் பயணிக்கும் வாகனம் பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை. எம் வாழ்வில் இலட்சியம் இருக்குமாயின் அதற்கான தேவையொன்று இருக்குமாயின் விளையாட்டில் மாத்திரமல்ல தங்களுடைய வாழ்விலும் வெற்றியீட்டலாம். 
 
இவ்வெற்றியை இலகுவில் ஈட்டமுடியாது. நான் கொழும்பு SSC விளையாட்டு நிறுவனத்திற்கு சென்ற பொழுது அது ஓர் புதிய இடமாக தென்பட்டது. அச்சமயம் நான் 11 வயது சிறுவன். அங்கிருந்த அனைவரும் ஆங்கில மொழியில் உரையாற்றினார்கள். எனக்கு ஆங்கில மொழி விளங்கினாலும் பேச முடியவில்லை. எனவே இயலுமானவரையில் ஒதுங்கியிருந்து அம்மொழியை கேட்டுக்கொண்டிருப்பேன். எனக்கு வெட்கமாக இருக்கும். ஒரு சில மாதங்கள் கடந்துச் செல்கையில் எங்கள் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. 
 
நான் விளையாடும் காலத்தில் SSC விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பொழுது என்னிடம் துடுப்பாட்ட மட்டையொன்று இருக்கவில்லையென்பதை மிகவு பெருமையுடன் கூறவிரும்புகின்றேன். ரோய் டயஸ் தான் எனக்கு முதன் முறையாக துடுப்பாட்ட மட்டையொன்றை பரிசளித்தார். இவ்வாறான பல பிரச்சினைகளிற்கு முகங்கொடுத்தே நான் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுப்பட்டேன்” என அமைச்சர் குறிப்பிட்டார்.
 
மிகவும் குறைந்த வசதிகளைக் கொண்ட தெஹிவலை கவுடானந்த மகா வித்தியாலயம் மிகவும் சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாட்டில் தங்களுடைய திறமையை வெளிக்காட்டுகின்ற ஒரு பாடசாலையாகும். 96 கொண்டாடும் பொருட்டு சேவ்த ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் விளையாட்டுத்துறை ஆகியன ஒன்றிணைந்து இப்பாடசாலையில் பயிற்சி முகாமை ஒழுங்கு செய்தது. தேசிய ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் யாழ்.மாவட்டத்திலிருந்து  சகோதரத்துவ கிரிக்கெட் குழுவொன்றும் மற்றும் மீரிகமை பஸ்யால நாம்புழுவ பாபுசலாம் முஸ்லீம் வித்தியாலயத்தின் கிரிக்கெட் அணியும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டது.
 
இப்பயிற்சி முகாமின் பொழுது சாஸ்திரானந்த மகா வித்தியாலயத்திற்கு கயிற்று பாயினை அமைச்சர் பரிசளித்தார். மேலும் யாழ் சகோதரத்துவ கிரிக்கெட் அணியிற்கு மற்றும் வீரர்களிற்கு கிரிக்கெட் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.  
 
IMG_9432---Copy---Copy.jpg
 
IMG_9448---Copy---Copy.jpg
 
IMG_9508---Copy.jpg
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

23 hours ago, நவீனன் said:
இலக்கு இருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றி கொள்ளலாம் : அர்ஜீன ரணதுங்க
 
 
இலக்கு இருந்தால் விளையாட்டில் மாத்திரமல்ல வாழ்விலும் வெற்றி கொள்ளலாம் : அர்ஜீன ரணதுங்க
 
 
 
 

உவருக்கு ரன்னர் வைத்துதான்  ஒட்டம் எடுப்பேன் என்று ஒரு இலக்கு இருந்தபடியால், தான் கடைசி காலங்களில் ரன்னர் வைத்து ஒட்டங்கள் எடுத்தவர் போலும்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

மலிங்க.. முரளி இருவரின் பந்து வீச்சிலும்.. பல சர்ச்சைகள் உள்ளன. கை வளைவுகள் இவர்கள் தப்பிப்பிழைக்க உதவின. ஆனாலும்  முரளியின் கைவளைவு இல்லையேல்.. இவரால்.. 1996 இல் ஒரு உலகக் கோப்பையை வென்றிருக்கவே முடியாது. ஆனாலும் இறுதி வரை முரளிக்கு அணியின் தலைமைப் பதவியை வழங்காது இருக்கப் பார்த்துக் கொண்ட இலக்கை இவர் பூர்த்தி செய்துவிட்டுத்தான் அணியை விட்டே போனார். அப்படியான உன்னத இலக்குகளை வகுத்த பெரிய மனிதர் இவர். வந்திட்டார்...!!! இவர் எல்லாம் இப்ப யாழ்ப்பாணக் கிரிக்கெட்டு வட்டகையில்.. பிரதம அதிதி. tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச காலத்திற்கு முன்பு உங்க கொஞ்சப் பேர் முரளியை துரோகி என்டிச்சினம்.இப்ப முரளிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ரணதுங்காவை குற்றம் பிடிக்கினம்...எங்க போய் முட்ட

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வக்காளத்துக்கும் கருத்துக்கும் வித்தியாசம் புரிவதே இல்லை. இதில..

முரளி தனிப்பட்ட முறையில் தமிழ் மக்கள் குறித்துப் பேச ஒரு அருகதையும் அற்றவர்.

சொறீலங்கா விசுவாச வளைஞ்ச கை வீரராக அவர் சொறீலங்காவுக்காக உழைச்சு கண்டது.. தலைமைப் பதவி கூட இல்லாத வீரர் என்பது தான்.

இருந்தும்.. முரளி அதோடு திருப்திப்பட்ட ஒருவர்.

இது எல்லா இடமும் எங்களால் பதியப்பட்டுள்ளது.

இவை வக்காளத்து அல்ல. சொறீலங்கா விசுவாசியான முரளிக்கே தலைமைப் பதவி கொடுக்க வழிவிடாதவர் தான் இந்த அர்ஜூனா என்ற சிங்கள இனவாதி என்ற அடையாளப்படுத்தல்.

உங்களுக்கு தமிழ் புரிவதில் சிரமம் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அதனால் தான் இந்த விளக்கம். மற்றும்படி.. நீங்கள் எல்லாம்.. இதுகளை விளங்கி ஊருக்கு என்ன பயன்.. எதுவுமில்லை என்பதும் எமக்குத் தெரியும். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.