Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரங்களை பகிர்ந்தளிக்க தயாராக இருக்கின்றேன்!

Featured Replies

அதிகாரங்களை பகிர்ந்தளிக்க தயாராக இருக்கின்றேன்!
 
 
அதிகாரங்களை பகிர்ந்தளிக்க தயாராக இருக்கின்றேன்!
ஜனாதிபதி என்ற வகையில், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கும் முன்னதாக, அமைச்சர் என்ற வகையிலும் அந்த முன்னுதாரணத்தை தாம் நாட்டுக்கு வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
 
ஹிக்கடுவையில் இன்று முற்பகல் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்களின் 32வது மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
சுகாதார அமைச்சராகவும் விவசாய அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் மாகாணத்தின் கண்காணிப்பு அதிகாரங்களை மாகாணங்களின் அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் வழங்கியிருந்தேன்.
 
நாட்டுக்கு பணிகளை செய்வதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் அதிகாரங்களை பகிர்ந்து வழங்க தயாராக இருக்கின்றேன்.
 
உலக அரசியலில் தற்போது அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்காது, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்தே படித்தவர், புத்திஜீவிகள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
 
இந்த எண்ணக்கருவானது வலுவானது. இதற்கு எதிராக ஏதேனும் நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுமாயின் அது முன்னேற்றமடையாத சமூகத்தின் அடையாளமாகும்.
 
உலகில் தற்போது உயர்ந்த அபிவிருத்தியை நோக்கி பயணித்துள்ள சகல நாடுகளும்,அதிகாரத்தை பரவலாக்கியும் பிரதேச அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டுமே அந்த உயர்ந்த அபிவிருத்தியை அடைந்துள்ளன.
 
ஒரு நாடு என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட்டு மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் புரிந்துணர்வுடன் செயற்படுவது முக்கியமானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீடுகளுக்கு நுளம்பெண்ணை அடிக்கவும் தோட்டங்களுக்கு பொலிடோல் அடிக்கவும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண பைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிக்கடுவையில் இன்று மாகாண முதலமைச்சர்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண பைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிக்கடுவையில் இன்று மாகாண முதலமைச்சர்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

   

மாகாண சபைகளை பலப்படுத்துவதன் ஊடாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். நவீனகாலத்தில் குறிப்பிட்ட ஒரு பிராந்தியம் குறித்து மாத்திரம் கவனம் செலுத்தாது, அதிகாரத்தை சிறைந்த முறையில் எவ்வாறு பகிரலாம் என்பது குறித்தே நிபுணர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதிகார பகிர்விற்கு எவராவது எதிர்ப்பு வெளியிடுவார்கள் ஆயின், அவர்கள் மாற்றங்களுடன் பயணிக்க முடியாதவர்கள். இந்த விடயத்தில் அரசாங்கமும் மாகாண சபைகளும் இணக்கப்பாட்டை எட்டுவது முக்கியமானது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில், எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

cm-confrence-210316-seithy%20(1).jpg

 

 

cm-confrence-210316-seithy%20(2).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=153884&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்ன அதிகாரம் என்றும் ஒருக்காச் சொன்னால் நல்லாட்சி சனாதிபதி குறைஞ்சே போயிடுவார். அதுசரி வந்து 100 நாளுக்குள் சனாதிபதி முறைமையை நீக்கிறன் என்றது எப்ப நடைமுறையாகும்..??! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.