Jump to content

சென்னை ராயப்பேட்டை மட்டன் பிரியாணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

   12321339_989518841095172_315517881831843

தேவையான பொருட்கள் :
மட்டன் கலவை:
மட்டன் – 400 கிராம்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லி தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்

* மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பாசுமதி அரிசி – 2 கப்
பாசுமதி அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, அலசி பிறகு வடிகட்டவும்.
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி மற்றும் புதினா – கையளவு

தாளிக்க:
பட்டை – 1
கிராம்பு – 3
அன்னாசிபூ- 1
பிரியாணி இலை – 1
கல்பசி – கொஞ்சம்

செய்முறை:

1.குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் கலந்து அடுப்பில் வைக்கவும்.

2.தாளிக்க கொடுக்கபட்டுள்ள பொருட்களை 30 முதல் 40 நொடிகள் குக்கரில் தாளிக்கவும்.

3.இஞ்சி பூண்டு விழுதை வாசனை போகும் வரை வதக்கவும்.

4.பிறகு, வெங்காயம் போட்டு வதக்கவும்.

5.மிளகாய், மல்லி, கரம் மசாலா பொருட்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

7. இப்பொழுது கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும்

8.பிரியாணி வாசனை கூட்டுவதற்காக தயிர் சேர்க்கவும்.

9.எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். இக்கலவையை அடி பிடிகாமல் அடிகடி கிளறவும்.

10.இப்பொழுது மூன்று முக்கால் கப் தண்ணீர் ஊற்றவும்

11.இக்கலவையை 2 நிமிடம் சமைக்கவும்.

12.இப்பொழுது தனியாக ஒரு வானலி வைத்து அதில் எண்ணெய் போடவும்.

13.எண்ணெய் சூடான பிறகு, மட்டன் போட்டு 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

14.இந்த மட்டன் குக்கரில் சேர்க்கவும்.இத்துடன், பாசுமதி அரிசி சேர்த்து 15 நொடிகள் கிளறி குக்கரில் 3 விசில் வரும் வரை சமைக்கவும்.சூடாக பரிமாறவும்.

 

https://www.facebook.com/TASTYSAMAYAL/?fref=nf

Posted

உண்மையிலேயே நல்லா இருக்கும். ராயபேட்டை பாய் கடையில் ஒரே ஒருமுறை சென்று சாப்பிட்டு பாருங்கள் சமீபத்தில் சென்னைக்கு செல்பவர்கள். அதுக்கு ஒரு தனி ருசி இருக்கு.

தலைப்பாகட்டு பிரியாணி 

ஆம்பூர் பிரியாணி 

ராயபேட்டை பிரியாணி 

இவை மூன்றும் சாப்பிட்டால் தான் சென்னைக்கு சென்றதுக்கே ஒரு பலன் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் வீட்டில் கிட்ட தட்ட இதே முறையில் சிக்கன் பிரியாணி செய்வேன் ...நல்லாவே வரும். சாப்பிட்டு போவோரும் லைக் பண்ணிட்டு தான் போறாங்க.

இதுக்கு வேணும்னா சாம்பூர் புரியாணீ ண்ணு  பேரு வச்சிக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்பசி ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

கல்பசி ???

இப்படி இருக்கும் இந்திய கடைகளில் கிடைக்கும். நான் இந்தியா சென்றிருந்த போது  கல் பாசி, கடல் பாசி வாங்கிவந்து வைத்திருக்கின்றேன் சால்னா செய்யும்போது தாளிக்கும் எண்ணையில் போட்டு தாளித்தால் வாசனை ம்ம் ..... அந்தமாதிரி இருக்கும்.  

Kalpasi-500x500-800x500.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழரசு said:

 

இப்படி இருக்கும் இந்திய கடைகளில் கிடைக்கும். நான் இந்தியா சென்றிருந்த போது  கல் பாசி, கடல் பாசி வாங்கிவந்து வைத்திருக்கின்றேன் சால்னா செய்யும்போது தாளிக்கும் எண்ணையில் போட்டு தாளித்தால் வாசனை ம்ம் ..... அந்தமாதிரி இருக்கும்.  

 

Kalpasi-500x500-800x500.jpg

ஆங்கிலப் பெயர் தெரியுமா, தமிழ்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Nathamuni said:

ஆங்கிலப் பெயர் தெரியுமா, தமிழ்?

கூகுளில் தேடியபோது Stone moss என வருகின்றது ...... மன்னிக்கவும் நாதமுனி. எனக்கும் மிக சரியாக தெரியவில்லை. யாருக்காவது சரியாக தெரிகின்றத என்று பார்ப்போம்.   

  • 8 months later...
Posted

மட்டன் பிரியாணி

mutton_3112027f.jpg
 
 
 

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 2 கப

ஆட்டுக் கறி – அரை கில

வெங்காயம் – 3

தக்காளி – 1

இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் – சிறிதளவ

தயிர் - 2 ஸ்பூன

உப்பு – தேவையான அளவ

பிரியாணி மசாலா செய்ய:

காய்ந்த மிளகாய் – 10

தனியா – 2 டீஸ்பூன

பட்டை, ஏலக்காய் – தலா 1 துண்ட

கிராம்பு, ஜாதி பத்திரி – தலா 2

அன்னாசிப் பூ – 2

சீரகம், சோம்பு – அரை டீஸ்பூன

தாளிக்

பட்டை, பிரியாணி இலை, புதினா, மல்லித்தழை - சிறிதளவ

நெய் – 3 குழிக்கரண்ட

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியைக் கழுவி பத்து நிமிடம் ஊறவையுங்கள். ஆட்டுக்கறியைச் சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து கழுவி, கறியோடு தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கிவையுங்கள். பிரியாணி மசாலாவுக்குக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் பொடித்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் நெய் விட்டு பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளியுங்கள். வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி அதனோடு மீதமுள்ள இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், தக்காளி, புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள பிரயாணி மசாலா, தயிர், வேகவைத்த கறியைச் சேர்த்து நன்றாக வாசனை வரும்வரை வதக்குங்கள். அதில் அரிசியைப் போட்டு ஒரு கிளறு கிளறி மூன்றே முக்கால் கப் தண்ணீர் விட்டு, உப்பு சரிபார்த்து குக்கரில் போடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடிவைத்து, ஒரு விசில் வந்ததும் பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கிவையுங்கள். சுடச் சுட பரிமாறினால் மதிய விருந்து களைகட்டும்.

 

http://tamil.thehindu.com/society/recipes/புத்தாண்டு-புது-விருந்து-மட்டன்-பிரியாணி/article9454824.ece?widget-art=four-rel

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.