Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கிபிர் விமான தாக்குதலில் 15 பொதுமக்கள் பலி 30பேர் படுகாயம் 25வீடுகள் எரிந்து நாசம்

Featured Replies

ஸ்ரீலங்கா விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று செவ்வாய் காலை 09:15 மணியளவில் மன்னார் இலுப்பைகடவையில் படகுத்துறை கிராமத்தின் மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இதில் 15 பொதுமக்கள் வரை பலியானதுடன் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மன்னாரில் விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதியான கிராமத்தின் மீது விமானப்படையின் 4 கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.எனினும் இத் தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பு இது வரை எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடட்தக்கது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

கொலை வெறி பிடித்து திரிகிறார்கள். இப்படி அப்பாவி மக்களை கொன்று என்னத்தை தான் சாதிக்க போகின்றான்? ஈனப்பிறவிகள்!

வான்படையின் கோரக்குண்டு வீச்சில் 15பேர் பலி - 30பேர் படுகாயம் - மன்னார் படகுத்துறை கிராமம் முற்றாக அழிப்பு

- பண்டார வன்னியன் வுரநளனயலஇ 02 துயரெயசல 2007 11:36

மன்னார் மாவட்டத்திலுள்ள படகுத்துறை கிராமம் மீது இன்று காலை சிங்கள வான்படையின் கிபிர் குண்டு வீச்சு வானூர்திகள் மேற்கொண்ட கோரக்குண்டு வீச்சில் அக்கிராமமே முற்றாக அழிந்துள்ளது. சிங்களப் படைகளின் இந்த கோரக்கொலைவெறித் தாக்குதலில் 15பேர் வரை கொல்லப்பட்டும் 30 பேர்வரை படுகாயமடைந்துமுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலுப்பைக்கடவையில் உள்ள கரையோரக்கிராமமான படகுத்துறை கிராமத்தில் உள்ள 30 வீடுகளில் 25 வீடுகள் இந்த குண்டு வீச்சுத் தாக்குதலில் தரை மட்டமாகியுள்ளன. மீதமுள்ள ஐந்து வீடுகளும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி நான்கு சிறுவர்கள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் 26பேர் முழங்காவில் மருத்துவமனையிலும், நால்வர் பள்ளமடு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2007ம் ஆண்டு பிறந்து முப்பத்து முன்றரை மணிநேரத்தினுள் தமிழ் மக்கள் மீதான தனது கொலை வெறியாட்டத்தை இத்தாக்குதல் மூலம் ஆரம்பித்துள்ளது.

http://www.sankathi.org/news/index.php?opt...58&Itemid=1

தமிழர்களுக்கு சிங்களத்தின் புதுவருடப் பரிசா ? வெறியர்கள்.

சிங்களவன் சொல்லித்தான் கொல்கிறான்!!! இதில் ஒழிவு மறைவு ஒன்றுமில்லை!!

நாங்கள் என்ன செய்கிறோம்??? நெடுக தலையில் அடித்து கொய்யோ, முறையோ என்று அழுகிறோம்!!! ஒப்பாரி வைக்கிறோம்!!! ...... இதன் முடிபு என்ன???????????????

எம்மினம் இப்படியே அழிய வேண்டுமா???????????????????

மக்கள் அழிவை சர்வதேசமே கண்டு கொள்ளாமலிருக்கும் போது, நாம் மட்டும் மக்கள் அழிவில் ஓலமிட்டு அரசியல் நடத்துவதில் என்ன பலன்????????????????

விடிவு, விடுதலை என்பது மக்களழிவின் பின்பா????????

......................

ஓலங்களோ, கூக்குரல்களோ, வீர வசனங்களை விடுத்து உறுதியான நடவடிக்கை தேவை!!!!

எம்மக்கள் கொலைக் கரங்களிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும்!!!!!

................ இன்றைய தேவை சொல்லல்ல ..... செயலே!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

படகுத்துறை கிராமத்தில் கிபீர் விமானத்தாக்குதல்

· 15பொதுமக்கள் பலி, 30பேர் படுகாயம்

ஸ்ரீலங்கா வான்படைக்கு சொந்தமான நான்கு கிபிர் விமானங்கள் மன்னார்மாவட்டம் இலுப்பை கடவையிலுள்ள படகுத்துறை கடற்கரையோரகிராமம் மீது இன்று காலை 9.30 மணியளவில் மேற்கொண்ட கோரமான தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் உடல்சிதறி பலியாகியுள்ளனர். 3மாத குழந்தை உட்பட குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என 30பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முளங்காவில் பள்ளமடு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட இவர்களுக்கு மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக அவசரமாக நோயாளர் காவு வண்டிகளில் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது ஸ்ரீலங்கா இராணுவத்தின் உயிலங்குளம் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காயமடைந்தவர்கள் உயிராபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்களை வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல அனுமதிக்குமாறு கோரியபோதிலும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் எந்த வித ஈவிரக்கமும் இன்றி நடந்து கொண்டனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு விடுதலைப்புலிகளின் கடற்படை தளங்களை தாக்கியளித்ததாக பொய்பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறது.

www.tamilwebradio.com

(2 ஆவது இணைப்பு) மன்னாரில் கொடூர வான் தாக்குதல்: 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை- 40 பேர் படுகாயம்.

மன்னார் மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான இலுப்பைக்கடவையில் இன்று காலை சிறிலங்கா வான்படையினர் நடத்திய கோர வான் குண்டுவீச்சுத் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை செய்யயப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னார் நகருக்கு 24 கிலோ மீற்றர் தொலையில் உள்ள இலுப்பைக்கடவை படகுத்துறை கிராமத்தில் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் கிபீர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின.

4 கிபீர் விமானங்கள் இந்த வான் தாக்குதலை நடத்தின.

இதில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த சிறுவர்களில் நால்வர் முழங்காவில் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

பள்ளமடு மருத்துவமனையில் மேலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த பொதுமக்கள் முழங்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

கிளிநொச்சிக்கும் மன்னாருக்கும் இடையேயான வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு காயமடைந்தோரைக் கொண்டு செல்வதில் நேர தாமதம் ஏற்பட்டது.

மன்னார் நகரின் பொது மருத்துவமனையானது இலுப்பைக்கடவைக்கு அண்மையில் இயங்குகின்ற போதிலும் அதற்கான போக்குவரத்துப் பாதைகளான உயிலங்குளம், மடு ஆகியவற்றினூடே செல்ல சிறிலங்கா இராணுவத்தினர் தடை விதித்துள்ளமையால் 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு காயமடைந்தோர் கொண்டு செல்லப்பட்டனர்.

கிபீர் விமானங்கள் வீசிய குண்டுகளால் படகுத்துறையில் இருந்த 35 வீடுகளில் 34 வீடுகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டுள்ளன.

இன்றைய கொடூரத்தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

படுகொலை செய்யப்பட்டோரில் 7 வயதுக்கும் குறைந்த சிறார்கள் மூவர்.

மேலும் கர்ப்பிணி மனைவி அவரது கணவருடன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தம்பதியினரின் குழந்தையான விதூசாவுக்கு மேலதிக சிகிச்சை அளிக்கப்பட அனுப்பப்பட வேண்டியிருப்பதாக கிளிநொச்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விவரம்:

துரைராசா சாரதா (வயது 45)

உதயகுமார் (வயது 30)

உதயகுமார் மாலினி (வயது 27)

உதயகுமார் பானுசன் (வயது 03)

விதுசா (வயது 5)

தவச்செல்வன் அனுசன் (வயது 04)

சகாயராசா லூதுமேரி (வயது 28)

ஜெக்சலா (வயது 06)

பிரிதன் (வயது 03)

யெனிசா (வயது 05)

உதயகுமார் (வயது 30)

அன்ரனி குளாஸ் உசா (வயது 18)

அந்தோனிப்பிள்ளை ஜெகன் (வயது 24)

சுமணன் இந்துமதி (வயது 25)

சகாயதர்சன் கிஸ்ரின் (வயது 15)

யோசப் வத்சலா (வயது 22).

சம்பவ இடத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவு மருத்துவர்குழு அனுப்பப்பட்டு முதல்நிலை சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் கிளிநொச்சிக்கு அனுப்பப்பட்டனர்.

இதனிடையே மன்னாரில் இருந்து உயிலங்குளம் வழியாக இலுப்பைக்கடவைக்கு செல்ல முயன்ற நோயாளர் காவுவண்டிகளை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ள கொடூரமும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது மருத்துவமனைக்கு காயமடைந்த மக்களை கொண்டு செல்வதற்கு மன்னாரில் இருந்து நோயாளர் காவு வண்டிகள் அப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட போது உயிலங்குளம் சோதனைச் சாவடியில் சிறிலங்காப் இராணுவத்தினர் அவற்றை திருப்பி அனுப்பி உள்ளனர்.

www.puthinam.com

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் நிலைகள் இல்லை: மன்னார் ஆயர்.

மன்னாரில் சிறிலங்கா வான்படை நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் ஏதும் இல்லை என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் இலுப்பைக்கடவை அருகே உள்ள சிறிலங்கா வான்படையின் தாக்குதலுக்குள்ளான படகுத்துறை கிராமத்தை இன்று செவ்வாய்க்கிழமை இராயப்பு யோசப் அடிகளார் நேரில் சென்று பார்வையிட்டார்.

"இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். சிறிலங்கா வான்படையின் தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் எதுவும் இல்லை" என்று ஊடகவியலாளர்களிடம் இராயப்பு யோசப்பு அடிகளார் தெரிவித்தார்.

யாழ். கடலோர கிராமங்கள் மற்றும் நாவாந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த 1995 ஆம் ஆண்டு இடம்யெர்ந்த மக்கள் படகுத்துறை கிராமத்தில் வசித்து வந்தனர். மொத்தம் 46 குடும்பங்களைச் சேர்ந்த 231 பேர் 35 வீடுகளில் அங்கு வசித்து வந்தனர்.

அந்த கிராம மக்களின் ஒவ்வொரு விட்டின் மீதும் தலா இரு குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் அம்மக்களின் வீடுகள் முற்றாக நாசமடைந்துவிட்டதாக இலுப்பைக்கடவை கிராம சேவையாளர் சின்னத்துரை விஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

www.puthinam.com

கடற்புலிகளின் தளத்தை அழித்ததாக சிறிலங்கா அரசு பொய்ப்பிரச்சாரம்.

சிறிலங்கா விமானப்படையினரின் குண்டுவீச்சுத் தாக்குதலில் 15மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது மேலும் மேலதிக சிகிச்சைக்காக படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்

தமிழ் மக்கள் குடியிருப்புக்களைத் தாக்கி பெருமளவான உயிர்களைப் பலியெடுத்தும் சிறுவர்கள் வயோதிபர்கள் என வயது வேறுபாடு இன்றிப் படுகொலை செய்தும் காயப்படுத்தியும் அக்கிராமத்திலுள்ள அனைத்துவீடுகளுமே குண்டுத் தாக்குதலில் அழிக்கப்பட்டு பெரும் தமிழினஅழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அரச ஊடகங்கள் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோக பூர்வ இணையதளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

www.sankathi.com

என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சினமா போன்று ஒப்பாரி வைப்பது கவிதை கறப்பது அக்சன் படம் பாணியில் போராட்டத்தை சித்தரிப்பதை நிறுத்தி தமது கடமையை உணர்கிறார்களோ அன்று தான் விடிவின் ஆரம்பம். சர்வதேசம் சிறீலங்காவை கேக்கவில்லை என்றால் கேக்க வைக்க வேண்டியது எமது கடமை. அங்கீகாரம் வேண்டி நிப்பது நாங்களே அன்றி சர்வதேசமோ சிறீலங்காவே இந்தியாவே யப்பானோ திமுகாவே ஜேவிபியோ ரணிலோ ராஜபக்சவோ அல்ல.

சிங்களவன் சொல்லி சொல்லித்தான் அடிக்கிறான் இனியும் மூர்க்கமாக அடிப்பான். ஆனால் எமது அழிவுகளை இழப்புகளை சரியாக அறுவடை செய்து சிறீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை இழப்புகள் தொடரும். எமது இனத்தின் அழிவைப்பற்றி நாமே அக்கறை செலுத்தாவிடில் மற்றவர்கள் ஏன் செலுத்த வேண்டும்?

சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்க வேண்டிய வக்கீல்களாக இருப்பது புலம்பெயர்ந்துள்ள தமிழர். நாம் எமது கடமையை செய்யும்வரை இழப்புகள் தொடரும். இது சினிமா அல்ல சரிவராட்டி cutசொல்லி காட்சியை திருப்பி எமக்கு ஏற்ற மாதிரி எடுக்கிறதுக்கு. நாம் எமது கடமையை செய்து சிறீலங்கா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் தான் நீங்கள் எல்லோரும் இன்று அங்கலாய்க்கும் அந்த "உறுதியான நடவடிக்கை" நடக்கும். அதுவரை பின்னடைவுகள் அழிவுகள் இழப்புகள் தொடரும்.

அந்த "உறுதியான நடவடிக்கைக்கும்" வேண்டிய பொருளாதார தொழிநுட்ப பலத்தை வழங்க வேண்டியது எமது கடமை. காபொத உயர்தரப் பரீட்சையில் 280 புள்ளிகள் பெற்றால் தான் பொறியல் பீடம் கிடைக்கும் என்றால் 279 புள்ளி எடுத்தவருக்கும் 281 எடுத்தவருக்கும் உழைப்பிலும் கெட்டித்தனத்திலும் அதிக வித்தியாசம் இல்லை ஆனால் அதற்கா 279 புள்ளி எடுத்தவர் பொறியல் பீடம் சென்றுவிட முடியாது. அதேபோல் சுதந்திரமும் விடுதலையும் தனிநாடும் வேண்டி நிற்பது நாங்களே. அதற்கு உழைக்க வேண்டியதும் நாங்களே. ஆனால் கலைப் பீடத்திற்கு போவது போல் எஜமானை மாத்திக் கொள்ள கடுமையாக உழைக்கத் தேவையில்லை. கற்பனையில் மிதப்பதை விட்டு உண்மையை உணர்ந்து முதலில் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்தில் புலம்பெயர்ந்த நாம் எல்லோரும் உள்ளோம்.

எமது இனம் எந்தளவு அழிவுகளை இழப்புகளை சந்திக்கிறது என்பதை உலகில் நடக்கும் ஏனை அழிவுகள் அவலங்கள் மத்தியில் உரக் நம்பகத்தனமான முறையில் சொல்லித் தான் எங்கள் அங்கீகாரத்தை வெல்ல வேண்டும். இன்று அண்ணளவாக மதிக்கப்படும் 65000 உயிர்ப் பலி எதிர்காலத்தில் இரட்டிப்பாகி 130000 ஆகிவிட்டது என்று கூட ஒருவரும் அங்கீகாரம் தரப்போவது இல்லை. நாம் எமது கடமையை சரிவர காலம் தாள்த்தாது உணர்ந்து கொண்டால் 100000 உள்ளேயே விடிவை பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் 200000 ஆனாலும் கிடைக்கப் போவது இல்லை!

இது படித்து முடித்து வேலைக்குரிய நேர்முகத்துக் போய் உங்களை நீங்கள் அந்த வேலைக்கு எந்தளவு பொருத்தமான ஆள் என்று பிரச்சாரப்படுத்தி வேலையை வெல்லுவது போன்றே.

நேர்முகத்தில் உங்களை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தாது மாறி மாறி படிச்சு சான்றிதள்களை அடுக்கிக் கொண்டு உம்மாண்டியாக இருந்தால் வேலையை பெற முடியாது. அதேபோலவே அழிவுகளும் இழப்புகளும் தனியே அங்கீகாரத்தை வென்று தராது அவை பற்றி சரியான முறையில் சாதுரியமாக பிரச்சாரம் செய்யப்படாது.

அதுவரை அறிக்கை வேண்டாம் அடிப்பம் பிடிப்பம் கொடி ஏத்துவம் பாச்சல் அதிர்ச்சி வைத்தியம் ஓடவைப்பம் தலைகீழாக மாத்துவம் பொறுப்பம் அடுத்த மாவீரர் தின உரையில் எல்லாத்துக்கும் பதில் இருக்கு என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியான்.

கடந்த நிலவரத்தில் சொல்லப்பட்டது போல் 2007 ஆனது 2006 களநிலமையின் நீட்சியாக நடந்த அழிவுகள் இழப்புகள் தொடர்வது மாத்திரமல்ல உக்கிரமாகும். அது 2010... 2015 என்று தொடர்ந்து நீழுமா இல்லையா என்பது புலம்பெயர்ந்துள்ளவர்களின் கைகளில் தான் முற்று முழுக்க உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து குறுக்காலபோவன் வெறுமனே கொல்லப்படுகின்ற மக்களுக்கு கண்ணீர் வடிப்பதோடு நம் பணி முடிந்து விடாது. எனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவங்களில் இருந்து எம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையை மறக்க கூடாது,

  • கருத்துக்கள உறவுகள்

மின் அஞ்சல் மூலம் சர்வதேச ஊடகங்கள், அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்சம்பவத்தினை தெரியப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. ஆங்கிலத்தில்

Sri Lanka: UN calls for warring parties to resume talks after at least 14 more are killed

2 January 2007 – Following the killing of at least 14 civilians in Sri Lanka today, the United Nations called on the Government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to stop fighting, protect the innocent and resume talks.

“Sri Lankans continue to suffer deeply due to this conflict, and today’s loss of life is a source of deepest concern,” said Margareta Wahlström, UN Assistant Secretary-General for Humanitarian Affairs and Acting Emergency Relief Coordinator.

“It is imperative that both sides to the conflict take all measures to fulfil their obligations under international law to protect civilians in this conflict; we have too often seen them fall short in this duty,” she said.

Today’s killings took place in north-western Sri Lanka during the aerial bombardment of the LTTE-controlled coastal village of Illupaikadavai in Mannar District by the Sri Lankan Air Force, according to the UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA). A number of children were reported killed and at least 35 other civilians injured.

Some 3,000 civilians have been killed in the conflict since the resumption of armed hostilities last year, bringing the total number killed to 67,000.

More than half a million Sri Lankans have been forced to flee their homes throughout the country, nearly 213,000 of them newly displaced since the resumption of armed conflict. Additionally, 120,000 to 140,000 people remain displaced after the devastating 2004 Indian Ocean tsunami, which ravaged the nation’s southern and eastern coastal areas, and nearly 315,000 remain displaced since previous stages of the conflict.

“The UN calls once more for a cessation of hostilities between the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and resumption of the peace process, and recalls the responsibility of all parties to the conflict to protect civilians and uphold international human rights and humanitarian law,” OCHA said in a statement.

The statement also spotlighted deteriorating conditions on the Jaffna Peninsula in northern Sri Lanka – home to more than 500,000 civilians – as well as all those who have been displaced in the country. Limited access by land to the peninsula has impeded the population from receiving sufficient food, medicine and other essential supplies since August, OCHA said, while noting that the Government has recently committed to improving the situation.

http://www.un.org/apps/news/story.asp?News...i&Cr1=lanka

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.ஸி ஆங்கிலச் சேவையில்

Sri Lanka raid 'kills civilians'

At least 15 civilians have been killed in an air force raid in north-west Sri Lanka, Tamil Tiger rebels say.

Another 25 civilians were wounded in the attack on a fishing village north of Mannar, the rebels say. The military says it bombed a rebel naval position.

Bishop of Mannar Rayappu Joseph visited the scene of the bombing and said he saw no evidence of rebel activity.

Fighting has risen over the past year, with more than 3,000 people killed. A 2002 truce exists now only on paper.

'Civilian houses'

Bishop Joseph spoke to the BBC Tamil service after touring the village of Padahuthurai, which is in rebel-held territory, and visiting some of the wounded in hospital.

"I could not find any Tamil Tiger base in that vicinity. It was a small fishing community. The injured and killed were civilians," he said.

Rebel spokesman Rasaiah Ilanthirayan said four fighter jets had destroyed dozens of civilian houses.

"There are 15 dead bodies and 25 wounded from the bombing," he told Reuters news agency. Four of those killed were children, he said.

The rebels said the wounded were taken to hospitals in Mannar district.

Photographs on the rebels' website also showed injured children arriving for treatment in the rebel-held town of Kilinochchi.

The Red Cross helped transport injured civilians from the scene of the attack to hospital, a spokesman told the BBC.

Sri Lanka's military says photographs proved the area attacked was a base of the Sea Tigers, the rebels' naval wing.

Air force spokesman Group Captain Ajantha Silva said military aircraft had also targeted rebel mortar positions in eastern Batticaloa district.

"Our air force took two known Tiger targets this morning," he told a news conference.

He said it was impossible to accurately assess the damage after the bombing run near Mannar but he said that shortly after the attack rebels were heard on radio airwaves calling for doctors and vehicles to treat and evacuate their wounded.

'Human shields'

Civilians have been increasingly caught up in Sri Lanka's worsening conflict.

The military accuses the rebels of using them as human shields, a charge the Tamil Tigers reject.

Neither side has formally declared an end to the four-year-old ceasefire.

At least 3,400 people have been killed in the conflict in the past year, many of them civilians, the government says. More than 65,000 lives have been lost since 1972.

The rebels want independence for the 2.5m-strong minority Tamil community in the north and east of the country, who they say are discriminated against by majority Sinhalese.

படுகாயமுற்றோருக்கு சிகிச்சையளிக்க சிறிலங்கா படையினர் அனுமதி மறுப்பு.

மன்னார் இலுப்பைக்கடவையில் நேற்று சிறிலங்கா விமானப்படையினரின் கொலை வெறித்தாக்குதலில் படுகாயமடைந்தோரை அவசர சிகிச்சைக்கு உட்படுத்த சிறிலங்காப் படையினர் நேற்று தடைவிதித்துள்ளனர்.

மன்னார் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு மன்னாரிலிருந்து நோயாளர் காவு வண்டிகள் அப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டபோது உயிலங்குளம் சோதனைச்சாவடியில் சிறிலங்காப் படையினர் அவற்றைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் மன்னார் மருத்துவமனைக்க படுகாயமுற்ற மக்களை கொண்டு செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டது.

-sankathi-

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் கொடூரத் தாக்குதலை சர்வதேசம்

இனியும் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது

மன்னார் தாக்குதலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வன்மையான கண்டனம்

மன்னார் படகுத்துறை மீது விமானப்படையின் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொலைசெய்தமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவத்தைச் சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிராமல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பாக நேற்று "உதயனு'க்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

மன்னார் படகுத்துறை மீது இலங்கை விமானப்படையினர் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவி மக்களைக் கொலைசெய்த செய்தி கேட்டு நாம் மிகவும் கவலையடைகின்றோம்.

இந்தச் சம்பவத்தில் 22பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், அவர்களுள் அதிகமாகப் பெண்களும் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

யாழ். நாவாந்துறைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து மன்னாரில் அகதிகளாகக் கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வந்த மக்களே இவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலை நடத்திவிட்டு இராணுவப் பேச்சாளர் வழமைபோல் புலிகளின் தளம் மீதே தாக்குதல் நடத்தினோம் என்றும் மக்கள் குடியிருப்பின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயரும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும் கூறியவற்றில் இருந்து இராணுவப் பேச்சாளர் கூறுவது பொய் என்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சர்வதேச சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டிராது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதுதொடர்பாக கூட்டமைப்பினர் சர்வதேச சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து உண்மை நிலையை விளக்கவுள்ளனர் என்றும் சந்திப்பது தொடர்பாக கூட்டமைப்பினர் ஒன்றுகூடி ஆராயவுள்ளனர் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

படுகாயமுற்றோருக்கு சிகிச்சையளிக்க சிறிலங்கா படையினர் அனுமதி மறுப்பு.

- பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 03 துயரெயசல 2007 07:57

மன்னார் இலுப்பைக்கடவையில் நேற்று சிறிலங்கா விமானப்படையினரின் கொலை வெறித்தாக்குதலில் படுகாயமடைந்தோரை அவசர சிகிச்சைக்கு உட்படுத்த சிறிலங்காப் படையினர் நேற்று தடைவிதித்துள்ளனர்.

மன்னார் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு மன்னாரிலிருந்து நோயாளர் காவு வண்டிகள் அப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டபோது உயிலங்குளம் சோதனைச்சாவடியில் சிறிலங்காப் படையினர் அவற்றைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் மன்னார் மருத்துவமனைக்க படுகாயமுற்ற மக்களை கொண்டு செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டது.

http://www.sankathi.org

  • தொடங்கியவர்

மன்னார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு. 9 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மன்னார் படகுத்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூவரை இன்று வவுனியா அல்லது அநுராதப்புர வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்திய அதிகாரி சதாநந்தன் தெரிவித்தார். வவுனியாவில் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் இல்லாமை காரணமாக பெரும்பாலும் அநுதரப்புரத்திற்கே குறித்தவர்களை மாற்றுவதற்கு ஆலொசிக்கப்படுகிறது. சிறுவர்களின் பெற்றோர் மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக காயமடைந்த சிறுவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதில் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் காயப்பட்டோரின் நிலைமைகளை கருத்திற்கொண்டு அவர்களை இன்று மாலைக்குள் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதாநந்தன் தெரிவித்தார். மன்னார் சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 மாதக்குழந்தை நேற்று மரணமானது. எனினும் அதன் பெற்றோர் வருகை தராமை காரணமாக குழந்தை அடையாளம் காணப்படவில்லை.இந்த மரணத்தையும் சேர்த்து சம்பவத்தில் பலியானவர்களின் தொகை 20 வரை உயர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 8 பேர் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் என்றும் ஒருவர் 13 வயது, மற்றையவர் 17 வயதானவர் என்றும், ஏனையவர்களில் ஒரு ஆணைத்தவிர மற்றையவர்கள் அனைவரும் பெண்கள் என்றும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலையில் உரிய மருந்துப்பொருட்களுககு தட்டுப்பாடு நிலவுவதுடன், பண்டஜ் என்படும் கட்டுத்துணிக்கு பதிலாக வேட்டிகளையே பயன்படுத்த வேண்டியுள்ளதாக வைத்திய அதிகாரி சதாநந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.athirvu.com/index.php?option=co...95&Itemid=9

விமானத் தாக்குதலில் சிறுவர்கள் கர்ப்பிணிகள் உட்பட 22 பேர் பலி.

மன்னாரில் படகுத்துறை கிராமம் முழுமையாக நாசம் கடற்புலித்தளத்தை தாக்கியதாக விமானப்படை தெரிவிப்பு

மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இலுப்பையடிக் கடவை படகுத்துறை கிராமம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை காலை விமானப் படை விமானங்கள் நடத்திய மிகக் கொடூரத் தாக்குதலில் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதுடன் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாருக்கு வடமேற்கே சுமார் 24 கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் இந்தப் படகுத்துறை கிராமமே நேற்றைய விமானத் தாக்குதலால் முற்றாக அழிந்து போயுள்ளது.

சுமார் 30 வீடுகளைக் கொண்ட இந்தக் கிராமத்தில் இந்த அகோரத் தாக்குதலால் 25 வீடுகள் நிர்மூலமாகி தரை மட்டமாகியுள்ளன.

நேற்றுக் காலை 9.30 மணியளவில் திடீரென இந்தப் பிரதேசத்தின் வான் பரப்பினுள் நுழைந்த நான்கு `கிபிர்' விமானங்களே இந்தக் கிராமத்தின் மீது அடுத்தடுத்து பல தடவைகள் கண்மூடித்தனமாக விமானக் குண்டு வீச்சை நடத்தியதாக இந்தத் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சிறிய வீடுகள் மற்றும் குடிசைகளைக் கொண்ட படகுத் துறை கிராமமே இந்தத் தாக்குதலால் அழிந்து சுடுகாடாகியுள்ளது.

குண்டுத் தாக்குதல்களால் வீடுகள் இடிந்து தரைமட்டமாகி கற்குவியல்களாயுள்ளதுடன் இந்த இடி பாடுகளுக்கிடையிலிருந்து மிகவும் மோசமாக சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 15 சடலங்கள் கடற்கரை ?#8220;ரத்தில் வைக்கப்பட்டிருப்பதாக மாந்தை மேற்கு பிரதேச செயலக அதிகாரிகள் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சடலங்கள் அடையாளம் காண முடியாதளவில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில்; ஏழு வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களதும் கர்ப்பிணித் தாயொருவரதும் அவரது கணவனதும் சடலங்களென ஐந்து சடலங்கள் முழங்காவில் ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த நிலையில் பள்ளமடு கிராமிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட போது அங்கு இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களை உடனடியாக மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக, மன்னார் ஆஸ்பத்திரியிலிருந்து அம்புலன்ஸ்கள் இலுப்பையடிக்கடவை நோக்கிச் சென்ற போதும், உயிலங்குளம் இராணுவ சோதனை நிலையத்தில் அவை தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

மீனவ கிராமமொன்றே இந்த விமானத் தாக்குதலுக்கிலக்கானதாகவும் பெருமளவு பொது மக்கள் படுகாயமடைந்திருப்பதால் அவர்களது உயிரைக் காப்பாற்ற மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர வேண்டுமென மன்னார் அரச அதிகாரிகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் படைத் தரப்பை கடுமையாக வலியுறுத்தியும் அதற்கு படைத் தரப்பு அனுமதி வழங்க மறுத்து விட்டது.

இந்த நிலையில், பள்ளமடு மற்றும் முழங்காவில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட 19 பேர் அவசர சிகிச்சைக்காக, சுமார் 50 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் நால்வரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாயிருப்பதாக கிளிநொச்சி ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் பத்து நிமிடங்கள் நடைபெற்ற விமானத் தாக்குதலில் முழுக் கிராமமும் அழிந்த நிலையில், மாந்தை மேற்கு பிரதேச செயலக அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் நடந்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்துக்கும் அறிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலால் இலுப்பையடிக்கடவை பகுதியில் பெரும் அச்சமும் பீதியும் நிலவுவதுடன் மக்கள் கடும் சினமடைந்துமுள்ளனர்.

விமானப் படை மறுப்பு

இதேநேரம், இலுப்பையடிக்கடவை பகுதியில் கடற்புலிகளின் தளம் மீதே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள விமானப் படையினர், பொது மக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

இது குறித்து விமானப் படை பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சில்வா கூறுகையில்;

மன்னாரில் கடற்புலிகளின் தளம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதை எம்மால் உறுதிப்படுத்த முடியும். அங்கேயே புலிகளின் பிரதான கடற்புலித் தளமிருந்தது.

எப்போதெல்லாம் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுகின்றதோ அப்போதெல்லாம் புலிகள் இவ்வாறான கட்டுக் கதைகளை கூறுவர். இவற்றில் உண்மையெதுவுமில்லையென்றார்.

http://www.thinakkural.com/news/2007/1/3/m...s_page18479.htm

Edited by YARLVINO

தமிழ்நெற் இல் 15 இல் இருந்து 16 ஆக அதிகரித்திருக்கு என்று தான் இருக்கு.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20799

20, 22 எல்லாம் எங்கிருந்து வந்தது?

மன்னார் கொடூர வான் தாக்குதல்: மகிந்தவுக்கு மன்னார் ஆயர் கடிதம்.

மன்னார் இலுப்பைக்கடவையில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய கொடூர வான் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை கடிதம் அனுப்பியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தின் முழு விவரம்:

உயர்திரு மகிந்த ராஜபக்கச,

அரச தலைவர், சிறிலங்கா குடியரசு

மன்னார் மாவடத்தில் மக்கள் வெளியேற்றப்படாத இடமான இலுப்பைக்கடவைக்கு அருகே படகுத்துறையில் ஜனவரி 2 ஆம் நாள் 2007 காலை 9.35 மணியளவில் வான்தாக்குதல் நடைபெற்றது.

யாழ்ப்பாணம், நாவாந்துறையிலிருந்து இடம்பெயர்ந்த 35 குடும்பங்கள் வசிக்கும் சிறு குடியிருப்பில் வேவுத் தகவல் தருவதாகச் சொல்லப்படும் ஒரு விமானத்தின் துணையுடன் மூன்று கிபிர் குண்டுவீசும் விமானங்கள் தாக்குதலை நடத்தின.

இன்று 2007, ஜனவரி 2 ஆம் நாள் காலை 9.35 மணிக்கு வான் தாக்குதல் நடைபெற்றது. குண்டுகள் வீழ்ந்த 12 இடங்களை நான் பார்வையிட்டேன். அங்கு இரண்டு குண்டுகள் வெடிக்காத நிலையில் இருந்தன.

தாக்குதல் நடந்த இடம் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் சுற்று வட்டாரத்துக்குள்ளேயே உள்ளது. இந்த குடியிருப்பில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 35 கத்தோலிக்க மீன்பிடிக் குடும்பங்கள் வசித்து வந்தன.அந்த இடத்தில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் இருந்தது மிகத் தெளிவாகத் தெரியும். அவர்கள் மிகச் சிறிய குடிசைகளில் வசித்து வந்தனர்.

இந்தப் பகுதியின் அருட்தந்தை பி.அருள்நாதன் மற்றும் இந்தப் பகுதியில் பணியாற்றும் பெரும்பாலான அருட்தந்தையர்களுக்கும் சமயத் தொண்டர்களுக்கும் இந்த இடமும் இங்கு வாழ்ந்த மக்களும் மிகவும் பரிச்சயமானவர்கள்.

இந்த இடத்தை நான் இன்று நண்பகல் 12.45 மணிக்கு சென்று பார்வையிட்டேன். சுமார் 15 நிமிடம் கழித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க ஊழியர்க்ள அங்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் காலை அதாவது ஜனவரி 3 ஆம் நாள் இந்த இடத்துக்கு இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வருவதாக உள்ளனர்.

இந்தப் பகுதி மக்கள், அருட்தந்தை, சமயத் தொண்டர்களிடம் பேசியதிலிருந்தும் எனது நேரடி அவதானிப்பிலிருந்தும் இந்தப் பகுதியிலோ அல்லது இதன் சுற்றுப்புறத்திலோ விடுதலைப் புலிகளின் இராணுவப் பதுங்கு குழிகளோ அல்லது அவர்களது முகாம்களோ அல்லது விடுதலைப் புலிகள் எனக் கருதக்கூடிய தனிப்பட்டவர் தங்கும் வசிப்பிடப்பிடங்கள் இல்லை என்பதை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பொதுமக்கள் வசிப்பிடத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மிகத் தெளிவாக உள்ளது. நான் பார்த்த வரையில் 13 அப்பாவிப் பொதுமக்கள் புத்தாண்டின் முதல் நாளில் துண்டு துண்டாகச் சிதறியுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களின் பலர் உயிரிழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த பகுதியின் கத்தோலிக்க அருட்தந்தையரின் முன்னிலையில் எட்டு பொதுமக்களின் உடல்களை பள்ளமடு மருத்துவமனையில் பார்வையிட்டேன். இதில் மூவர் 2, 6, 11 வயதுடைய சிறார்கள். அவர்கள் அனைவரது உடல்களும் சிதைந்திருந்தன. மூவரது தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

முழங்காவில் மருத்துவமனையில் தனக்குத் தெரிந்த ஐந்து பொதுமக்களின் உடல்களை இந்த பகுதியின் அருட்தந்தை இன்று காலை பார்வையிட்டார். 35-க்கும் அதிகமான காயமடைந்த மக்கள் முழங்காவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த 25 பேர் அங்கிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களின் பெரும்பாலானோர் சிறார்களும் பெண்களும் என்று பள்ளமடு மருத்துவமனையின் மருத்துவர் என்னிடம் கூறினார். அங்குள்ள மருத்துவர் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது இவர்களில் பெரும்பாலானோர் உயிர்பிழைக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

எனக்குத் தெரிந்தவரையில் தனது மாமியாரைப் பார்க்க விடுமுறையில் சாதாரண உடையில் வந்திருந்த ஒரு விடுதலைப் புலி வீரரைத் தவிர வேறு எவரும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்படவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-puthinam-

Edited by YARLVINO

சிறீலங்கா அரசால் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னான சிறு ஒளிப்பதிவு

http://www.yarl.com/videoclips/view_video....fa748ab6d9af3fd

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் வான் குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் மரணம்

மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறை கிராமத்தில் சிறிலங்கா வான் படையினர் நடத்திய கொடூர குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்த தாயும் அவரது 18 மாதக் குழந்தையும் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் திருமதி.மாலினி உதயகுமார் (வயது 27), அவரது பெண் குழந்தையான தர்சிகா உதயகுமார் (18 மாதம்) ஆகியோர் என்று கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குண்டுவீச்சுத் தாக்குதலில் காயமடைந்த அவரது கணவர் உதயகுமாரும் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

-புதினம்

விடுதலைப் புலிகளுக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: கேகலிய.

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வடக்கு - கிழக்கில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விடுதலைப் புலிகளுக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சிறிலங்கா வான் படையினர் நடத்திய குண்டுவீச்சில் 17 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பில் கேகலிய ரம்புக்வெல கருத்து தெரிவிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:

விடுதலைப் புலிகள் தம்மை தவறாக வழிநடத்துவதை அனைத்துலக சமூகமும் மதத்தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஆனால் விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்துள்ளனர். மன்னாரில் குண்டுவீச்சு நடைபெறப் போவதை அறிந்த பின்னர் அனைத்துலக சமூகத்தின் அனுதாபத்தை பெறுவதற்கு அந்த இடத்திற்கு பொதுமக்களை விடுதலைப் புலிகள் இழுத்து வந்திருக்கலாம்.

இலுப்பைக்கடவை பொதுமக்கள் வசிப்பதற்கு தடை செய்யப்பட்ட பிரதேசம். நாம் விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளத்திற்குத் தான் குண்டுகளை வீசினோம். விடுதலைப் புலிகள் தவறான தகவல்களை தருகின்றனர்.

காயமடைந்தவர்களை இலுப்பக்கடவையிலிருந்து 112 கி.மீ தூரத்தில் உள்ள அனுராதபுர மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் 140 கி.மீ தூரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதானது சந்தேகத்தை தருகின்றது என்றார் அவர்.

-puthinam-

இறுதி வணக்க நிகழ்வும் உடல்களை தாங்கியவாறான கண்டனப் பேரணியும்.

இலுப்பைக்கடவை படகுத்துறைக் குடியிருப்புத் தொகுதி மீது சிறிலங்கா வான்படை நடத்திய கோரத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் 16பேரின் இறுதி வணக்க நிகழ்வும், இப்படுகொலைகளைக் கண்டித்து அவர்களின் உடல்களைத் தாங்கியவாறான கண்டனப் பேரணியும் நேற்று முழங்காவிலில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுர்ச்சியுடன் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் இலுப்பைக்கடவை படகுத்துறைக் மக்கள் குடியிருப்புக்கள் சிறிலங்கா வான்படையினால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆறு சிறுவர்கள் உட்பட 16அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். இவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதே வேளை இப்படுகொலையைக் கண்டித்து முழங்காவில் மாபெரும் கண்டனப் பேரணியும் இறுதி வணக்க ஊர்வலமும் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் வணக்கத்துடன் உடல்கள் மன்னார் இலுப்பைக்கடவை அ.த.க.பாடசாலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டன. நேற்றுக்காலை 9.00மணியளவில் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் உடலங்கள் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பமான பேரணியில் சுமந்து செல்லப்பட்டன. நாச்சிக்குடா சந்திவரை பேரணி நகர்ந்து சென்று பின் அங்கிருந்து ஊர்திகளில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள் நாச்சிக்குடா அன்னை வேளாங்கன்னி தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இரங்கல் பூஜைகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க தமது இறுதி வணக்கத்தைச் செலுத்தினர்.

Photos:-

http://www.sankathi.org/news/index.php?opt...80&Itemid=1

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.