Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா தீர்மானம்

[ Tuesday,19 April 2016, 03:43:39 ]   
Tamil_News_large_1504803.jpg

உலகின் மிகவும் இலகு ரக போர் விமானமும், இந்தியாவின் சொந்தத் தயாரிப்புமான ‛தேஜஸ்' விமானங்களைக் கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்திய ஊடகமொன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா, எகிப்து ஆகிய நாடுகள் இந்த போர் விமானத்தைக் கொள்வனவு செய்ய விருப்பம் காண்பித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தயாரிப்பு விமானத்தை (ஜே.எப்-17) ஸ்ரீலங்கா அரசாங்கமும், பிரான்ஸ் தயாரிப்பு (24 ரபேல்) விமானத்தை எகிப்தும் கொள்வனவு செய்ய தீர்மானித்திருந்தன.

எனினும் இறுதிநேரத்தில் இந்தத் தீர்மானத்தை குறித்த நாடுகள் மாற்றிக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களைத் தற்போதைய வடிவத்திலேயே பெறுவதற்கு ஸ்ரீலங்காவும், எகிப்தும் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் மேலும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானிலிருந்து ஜே.எப்-17 ரக போர் விமானத்தை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா தீர்மானித்திருந்த போதிலும், இந்திய அரசின் உயர்மட்டத்திலிருந்து விடுத்த அழுத்தங்களுக்கு மத்தியில் தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் மாற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்தத் தகவல்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/22311

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு என்னத்துக்குப் போர் விமானங்கள் அவசர தேவையாக உள்ளன?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

சிறிலங்காவுக்கு என்னத்துக்குப் போர் விமானங்கள் அவசர தேவையாக உள்ளன?:unsure:

அதுதான் இந்தியாவிடமிருந்து வாங்குகின்றனர்......போர் நடந்து கொண்டிருந்தால் அமேரிக்கா,ஐரோப்பா தயாரிப்பை  வாங்கியிருப்பார்கள்...tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

அதுதான் இந்தியாவிடமிருந்து வாங்குகின்றனர்......போர் நடந்து கொண்டிருந்தால் அமேரிக்கா,ஐரோப்பா தயாரிப்பை  வாங்கியிருப்பார்கள்...tw_tounge_wink:

போர் நடந்து கொண்டிருந்த போது, புலிகளின் விமானங்களை கண்டறிய... இந்திய "சற்றலைட்" கொடுத்தும்,
புலிகளின் விமானம் சுழிச்சுக் கொண்டு போய் தாக்குதல் நடத்தியதைப்  பார்த்த, 
சிங்களவன்... கடுப்பாகி, இந்த சற்றலைட்டை  வைத்து... மண்வெட்டி தான் தயாரிக்கலாம் என்று சொன்னவன்.
இப்ப... இந்தியாவிடம், e39stxdx9ll.gif போர் விமானம் வாங்குகின்றான். hexen-smilies-0061.gif

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாட்ட எங்க சொந்தப் போர் விமானம் இருக்குது. ரஷ்சியாட பழசுகள் தான் இருக்குது. இந்தியா தான் போரின் இறுதிக் கட்டத்தில் மிக் தரைத்தாக்குதல் விமானங்களை விமானிகளோடு அனுப்பி வைச்சது. அதில் ஒன்று வன்னிக்குள் விழுந்து போனது. சொறீலங்கா இலவசப் பயிற்சிக்காக உதுகளை வாங்கும். அப்புறம் பிரச்சனைப்படுவது போல பட்டுக் கொண்டு போய் சீனாட்ட.. இல்ல பாக்கிட்ட நல்லதை வாங்கும். சிங்களவனா கொக்கா. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இந்தியாட்ட எங்க சொந்தப் போர் விமானம் இருக்குது. ரஷ்சியாட பழசுகள் தான் இருக்குது. இந்தியா தான் போரின் இறுதிக் கட்டத்தில் மிக் தரைத்தாக்குதல் விமானங்களை விமானிகளோடு அனுப்பி வைச்சது. அதில் ஒன்று வன்னிக்குள் விழுந்து போனது. சொறீலங்கா இலவசப் பயிற்சிக்காக உதுகளை வாங்கும். அப்புறம் பிரச்சனைப்படுவது போல பட்டுக் கொண்டு போய் சீனாட்ட.. இல்ல பாக்கிட்ட நல்லதை வாங்கும். சிங்களவனா கொக்கா. tw_blush:

சும்மா  ப‌கிடி விடாதையுங்கோ.......ராமர் சீதையை மீட்க பாவித்தது "ராம் சீத் " போர்விமானங்களைதானே  ....உலக‌த்திலயே மிகவும் சக்திவாய்ந்த போர்விமானம் அதுதான் என்று எங்கன்ட கொழும்பு ஏஜன்ட் பிரசங்கம் செய்யிறார்....

17 minutes ago, putthan said:

சும்மா  ப‌கிடி விடாதையுங்கோ.......ராமர் சீதையை மீட்க பாவித்தது "ராம் சீத் " போர்விமானங்களைதானே  ....உலக‌த்திலயே மிகவும் சக்திவாய்ந்த போர்விமானம் அதுதான் என்று எங்கன்ட கொழும்பு ஏஜன்ட் பிரசங்கம் செய்யிறார்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.