Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டினத்தார் : உடற்கூற்று அறிவியலும் வாழ்வியலும்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பட்டினத்தார் : உடற்கூற்று அறிவியலும் வாழ்வியலும்.....

 

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

மகளிர்கள் சேனை தராணை ஆடை
மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து

ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழழை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர் தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து

மயிர் முடி கோதி அறுபத நீல
வண்டு இமிர் தண்தொடை கொண்ட புனைந்து
மணிபொன் இலக்கு பணிகள் அணிந்து
மாகதர் போகதர் கூடிவணங்க

மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு கழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேர வழங்கி

ஒருமுதல் ஆகி முதுபொருளாய்
இருந்த தனங்களும் வம்பில் இழந்து
மதன சுகந்த வதனம் இது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே

வருவது போவது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து

துயில் வரும் நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு
துகிலும் இழந்து கணையும் அழிந்து
தோகையர் பாலகர்கள் ஓரணி கொண்டு

கலியுகம் மீதில் இவர் மரியாதை
கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து

தெளிவும் இராமல் உரைதடுமாறி
சிந்தையும் நெஞ்சும் உலைந்து மருண்டு
திடமும் அழிந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏது என நொந்து

மறையவன் வேதன் எழுதியவாறு
வந்தது கண்டமும் என்று தெளிந்து
இனியென கண்டம் இனி என தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற

கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளர்பிறை போல எயிரும் உரோமம்
உச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு
மகதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து

வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவ காலம் அறிந்து

பழையவர் காணும் எனும் அயலார்கள்
பஞ்சு பறந்திட என்றவர் பந்தர்
இடும் எனவந்து பறையிடமுந்தவே
பிணம்வேக விசாரியும் என்று

பலரையும் ஏவி முதியவர்தாம்
இருந்த சவம்கழு வுஞ்சிலர் என்று
பணிதுகில் தொஞ்கல் களபம் அணிந்து
பாவமே செய்து நாறும் உடம்பை

வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென நொந்து

விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே. 

4 minutes ago, குமாரசாமி said:

விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே. 

சூப்பர் அண்ணை 

இதுதான் வாழ்க்கை - இதற்குள் எத்தனை கூத்து 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாத்தா சவக்காலை அருகே அடிக்கடி ஒலிக்கும் இந்த பாடல் உன்மையை சொல்லும் பாடலும் கூட 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

சூப்பர் அண்ணை 

இதுதான் வாழ்க்கை - இதற்குள் எத்தனை கூத்து 

பட்டினத்தார்ரை தத்துவங்கள் அத்தனையும் சிந்தித்தால் எரிச்சல் பொறாமை கொலை கொள்ளை எதுவுமே இந்த உலகில் இருக்காது.

35 minutes ago, முனிவர் ஜீ said:

நன்றி தாத்தா சவக்காலை அருகே அடிக்கடி ஒலிக்கும் இந்த பாடல் உன்மையை சொல்லும் பாடலும் கூட 

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து ...
..

இப்ப சனம் இதோடையே மினைக்கடுதுகள்  :(

  • கருத்துக்கள உறவுகள்

பிணத்தோட சுடுகாட்டுக்கை போய்வந்த மாதிரிக் கிடக்கு...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, suvy said:

பிணத்தோட சுடுகாட்டுக்கை போய்வந்த மாதிரிக் கிடக்கு...!

எனக்கும் அதேதான் சுவியர்......

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பட்டினத்தார்ரை தத்துவங்கள் அத்தனையும் சிந்தித்தால் எரிச்சல் பொறாமை கொலை கொள்ளை எதுவுமே இந்த உலகில் இருக்காது.

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து ...
..

இப்ப சனம் இதோடையே மினைக்கடுதுகள்  :(

ஓம் ஓம்  என்னத்தைசொல்ல ??

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடிய மாமுதல் சேர வழங்கி

ஒருமுதல் ஆகி முதுபொருளாய்
இருந்த தனங்களும் வம்பில் இழந்து
மதன சுகந்த வதனம் இது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து

பட்டினத்தார் எங்கேயோ போட்டார் !:cool:

அண்மையில் என்னை ஒருவர் கேட்டார்!

அண்ணை, இதழ் கடிக்கிற விளையாட்டு..எங்கட காலசாரத்திலை இருக்கா எண்டு!

பட்டினத்தார் இதழ் மட்டுமல்ல..வேறு என்னத்தையெல்லாம் கடிக்கலாம் என்று மேலுக்க வரிகளில் சொல்லியிருக்கிறார்!

கரை கண்ட...மனுஷன் எண்டு கேள்விப்பட்டதுண்டு!

 

இவருடைய இன்னுமொரு 'வாழ்வியல்' பாடல் உள்ளது!

அதை இங்கு இணைக்க விருப்பம் !

ஆனால் அது நீக்கப்பட்டு விடும்!

 

நன்றி..குமாரசாமி அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினத்தார் சும்மா ஆளில்லை.. எல்லாம் ஆடி அடங்கி கட்டையில போற வயசில தான் உதுகளைப் பாடியதாகக் கேள்வி. ஆனால் நாங்க எப்பவும் இதைத் தான் சொல்லுறம்.. எங்க கருத்தை எவன் மதிக்கிறான்.

எல்லாம் ஆடிஅடங்கிற நேரத்தில தான்.. பலருக்கு மூளை வேலை செய்ய ஆரம்பிக்குது. சாவுப் பயம். tw_blush:tw_tounge:

சாவுக்குப் பயந்துதான் சித்தார்த்தனும் (புத்தர்) துறவியானார். ஆனால்.. உண்மையான மெய்யியல் என்பது.. பிறப்புடன் ஆரம்பிக்கிற ஒரு அறிவு நிலை. அது படிப்பறிவோடு பகுத்தறிவோடு கலந்து பெருகனும். ஆனால் அதை எங்க பெருக்கினம்.... சிற்றின்ப அறிவை தான்.. பெருக்கி.. மனித சனத்தொகையை பெருக்கிட்டு.. அப்புறம் ஆடி அடங்கிற நேரத்தில்....ஆசுவாசமாக படிக்கிறது தான் பட்டினத்தார் பாடல்கள்.  பயன் என்ன..?????! :rolleyes:

பட்டினத்தார் பாடல்கள் பாடசாலைகளில் படிப்பிக்கப்படனும். சிறுவயதிலேயே எதிர்கால வாழ்க்கை என்றால் என்ன.. அதன் எல்லை என்ன... என்பதை குழந்தைகள் சிந்திக்கக் கற்றுக் கொடுத்தால்.. அவர்கள் பேராசைகளுக்கு உட்பட்டு தம்மை தாம் சார்ந்த மனித சமூகத்தை சிதைக்கும் வழிகளைப் பின்பற்றுவதைக் குறைக்க முடியும். குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும்.

வாழ்க்கையை.. இன்னும் இன்னும் மேம்பட்ட மெய்யியல் அறிவோடு அறிவியல் கலந்து.. கூடிய மனித நேயத்தை வளர்த்து அமைத்துக் கொள்ள உதவ முடியும். 

எங்கட அம்மாம்மா... நான் குட்டிப் பையனாக இருக்கும் போதே... பட்டினத்தார் பாடல்களில் வரும் வாழ்வியல் நிலையாமை பற்றிச் சொல்லுவா... அதை எல்லாம் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ.. பூமியில் மனித வாழ்வை.. வெகு சாதாரணமாக கருதிட ஒரு சிந்தனை வெளி ஏற்பட்டது. பிற உயிரினங்களின் வாழ்வியலை அவதானிக்கும் அவற்றில் அக்கறை செய்யும் பண்பு வளர்ந்தது. வாழ்க்கை என்பது ஒன்னும் சாதனை அல்ல சாதாரணம் என்று புலப்பட்டது. இது.. மனித சிந்தனையில்.. மெய்யியல் அளவைக் கூட்டி இருக்கு என்று சொன்னால் மிகையல்ல. மெய்யியல் அறிவுக்காக அறிவியல் அறிவுப் பெருக்கத்தை.. இந்தப் பிரபஞ்சத்தின் ஆக்கம் இயக்கம் பற்றிய நுட்பமான அறிதலை.. அதனை மனித வாழ்வியல் மேம்பாட்டுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திப்பதை தடுக்கனுன்னு அவசியமில்லை. மனிதன் ஆக்க முடியாத.. இயற்கைக்கு பாதிப்பில்லாத அறிவியலும் ஒரு மெய்யியலே.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினத்தார் துறவு பூண முடிவெடுத்து தாயிடம் போறார்....

தாய்: என்ன...

மகன்: நான் துறவு பூணப் போறேன்....

தாய்: சரி போய்வா...

அங்கேயே தனது உடைகளைக் களைந்து  கோவணத்துடன் நின்று கொண்டு மாத்திக் கட்ட இன்னொரு கோவணத்தை எடுக்கிறார்...

தாய்: துறவிக்கு எதுக்கு இரண்டு கோவணம்...

மகன்: அதைத் தூக்கி அப்பால் போடுகிறார்....

தாய்: பறவாயில்லை அதையும் கொண்டு போ.... ஆனால் அதில் ஆசை வைக்காதே... அது காணாமல் போனால் கவலைப் படாதே விட்டுடு...

(இப்ப இங்கு யார் துறவி.)

 

இப்படித்தான் இன்னொருவர் இரண்டு கோவணத்துடன் துறவறம் போய் காட்டில் இருந்தார். தினமும் அவர் காயப் போடும் கோவணத்தை ஒரு எலி கடித்துவிட்டுப் போய் விடும். இதைக் கவணித்த ஒரு ஊரவர் இந்தக் காற் ரை வைத்திருங்கோ றாற்  றன்னாயிடும் என்று பூணையைக் குடுத்தார். துறவியும் அதை வாங்கி வைத்துக் கொண்டார். 

பூணைக்கு பால் வாங்க துறவி ஊருக்குள் போனார். துறவியின் சிரமத்தைப் பார்த்த ஊரார் அவற்ர ஆசிரமத்தில ஒரு பசுவையும் கன்றையும் கொண்டுவந்து விட்டிட்டுப் போட்டினம். றாற் ரைப் பிடிக்க காற், காற்ருக்கு மில்க் குடுக்க கவ்வும் கவ் கன்றும் வந்திட்டுது.

அறத்துப்பால் பொருட்பால் கறந்த துறவிக்கு பசும்பால் கறக்கத் தெரியவில்லை. விறகு பொறுக்கும் விடலையொருத்தி அவர் விதியென வந்து  எதிர் நின்றாள். தள்ளு சாமி தினமும் நானே வந்து கறந்து விடுகிறன் என்றாள். கறந்தும் உதவினாள். சிலநாளில் கருவுற்றாள், ஒரு பௌர்ணமியில் சிசுவும் பெற்றாள். துறவி இப்ப வலு பிஸி. பசுவில் பால் கறந்து, பூணைக்கும் குட்டிகளுக்கும் பால் வைத்து  காமத்துப் பாலை கன்னியுடன் ஆய்வு செய்வதில் ஈடுபட்டு கோவணத்தையும் கோவணம் கட்டுறதையும் மறந்திட்டுது...!

எலியும் சிக்ஸ்டீனும் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறது....!  tw_blush:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.