Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது போராட்டம் மிக விரைவில் கெளரவ நிலையை எட்டும்; சம்பந்தன்

Featured Replies

10994_content_sampanthan_thinakkural_03-

எமது விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டுமென நினைப்பதாக   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்
சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 


சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுதினம் நேற்று  திங்கட்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இங்கு அவர் மேலும் கூறியதாவது; 


2005 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருந்தது. அதனை எவரும் மறுக்க முடியாது. தேர்தல்கள் நடந்துவிட்டால், ஜனநாயகம் மலர்ந்து விட்டது என எவரும் கருத முடியாது. தேர்தல்கள் நடைபெறுவது, ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஆனால், அது முடிவல்ல. 


குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற படுகொலைகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. தமது கடமையினை சுதந்திரமாக செய்ததன்  காரணத்தால் 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 


ஜனநாயகம் இந்த நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும். 
பத்திரிகை சுதந்திரம் அத்தியாவசியம். உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பு பாரிய பங்களிப்பாக இருந்துள்ளது.

அவற்றினை அழிக்க முடியாது. எனவே, எமது விடுதலைப் போராட்டம் விரைவில் கௌரவமான நிலைக்கு வரும் என நினைக்கின்றோம். அதனை  நம்புகின்றோம். அவ்வாறான நிலமை ஏற்படும்  போது, உயிரிழந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும். 


உயிரிழந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பினை மறந்துவிட முடியாது. அவ்விதமான சூழலில், அவர்களுக்குரிய கௌரவத்தினையும் மரியாதையினையும் செலுத்த வேண்டியது எம் எல்லோரினதும் கடமை. 


இந்த நிகழ்வினை நடத்தும் இந்த கட்டிடமும் ஒரு சரித்திரம் மிக்க கட்டிடம். ஆசியாவிலேயே சிறந்த நூலகமாக விளங்கிய ஒரு நூலகம். இது அழிக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம். இவை  அனைத்திற்கும் மத்தியில் எமது மக்கள் சலிக்காமல் உறுதியுடன் தமது உரிமைப் போராட்டத்தினை தொடர்ந்து  வந்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும் என்றார். 

http://www.thinakkural.lk/article.php?local/uokvdnmtwp3587aba53da2f618168ow8vy340a8b89dc96d09d0d0430pjclv#sthash.hxeAtFSi.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Athavan CH said:

10994_content_sampanthan_thinakkural_03-

எமது விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டுமென நினைப்பதாக   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

 

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பதை ஐயா 93 வயதிலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. :shocked: :(

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஏதாவது வருகிறதா??

2016 போய்

விரைவில் என ஒரு பதம் தொங்க தொடங்குகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழ் மக்கள் ஏன் போராட போனவை  ...? என்ற உங்கடை  கேள்விக்கு பதிலை கண்டுபிடித்துவிட்டீர்களா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பதை ஐயா 93 வயதிலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. :shocked: :(

அது கறுப்புக் கண்ணாடிக்கிழவருக்கு தான் 93.. இவருக்கு 83. 

உலகத்தில இந்திய உபகண்டத்தில் தான் கிழடுங்க.. அரசாட்சி செய்வது. அதிலும் எம் தமிழர் இனத்தில்... அரசியலுக்கு வந்திட்டா.. அதுங்க அங்கேயே பாய் போட்டு படுத்திடுங்கள். ஒரு கட்சி சனநாயகமும் கிடையாது. ஆனால் சனநாயகம் என்று வாய் கிழியக் கத்துவது நடக்கும். tw_blush:tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.