Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

EURO 2016 உதைபந்தாட்ட போட்டி செய்திகள், கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நிலைமைகனள அவதானித்துக் கொண்டு இருக்கிறோம்....!  :unsure:

  • Replies 163
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
போர்த்துக்கல் Vs வேல்ஸ்: ரொனால்ட்டோ Vs பேல்
 
05-07-2016 08:50 PM
Comments - 0       Views - 77

article_1467728451-LEADPreCrujsgfhdlka.jபிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் போர்த்துக்கல்லும் வேல்ஸும் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் பலப்பரீட்சை நடாத்துகின்றன.

இதில், 2004ஆம் ஆண்டு யூரோ இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போர்த்துக்கல்லுக்கு, இவ்வரையிறுதிப்போட்டி, மூன்றாவது யூரோ அரையிறுதிப் போட்டி என்பதுடன், மறுபக்கம், வேல்ஸூக்கு இவ்வரையிறுதிப் போட்டியே அவ்வணி பெரிய தொடரொன்றில் அரையிறுதிப் போட்டிக்குச் சென்ற முதலாவது சந்தர்ப்பமாக அமைகின்றது.

போர்த்துக்கல் Vs வேல்ஸ் என்ற அரையிறுதிப் போட்டிக்கு மேலதிகமாக, உலகின் பணக்கார கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரித் பேல் ஆகியோருக்கிடையிலான மோதலாகவே இப்போட்டி பார்க்கப்படுகிறது. இரண்டு வீரர்களிடையேயும் அவ்வளவு நல்ல உறவு இல்லை என்று கூறப்படுகின்றபோதும் இரண்டு வீரர்களும் தமக்கிடையே எந்தப் பிரச்சினையும் என்று தெரிவித்து வருகின்றனர்.

வேல்ஸின் ஆரம்பப் போட்டிகளில், ‘பிறீ கிக்’ மூலம் மிரட்டிய பேல், காலிறுதிப் போட்டிகளில் கோலினைப் பெற்றிருக்காத போதும் அரையிறுதிப் போட்டியில் வேல்ஸின் முக்கிய வீரராக பேலே விளங்குகிறார். அதுவும், வேல்ஸின் மற்றைய முன்கள வீரரான ஆரோன் ராம்ஸி, வேல்ஸின் இறுதி இரண்டு போட்டிகளிலும் மஞ்சள் அட்டை காட்டப் பெற்றதால், இப்போட்டியில் விளையாட முடியாத நிலையில் முன்களத்தில் பேலின் பிரசன்னம் வேல்ஸுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. காலிறுதிப் போட்டியில் வேல்ஸ் சார்பாக அபார கோலினைப் பெற்ற றொப்சன் காணு, பேலுக்கு உதவியாக இருப்பார் என்று நம்பலாம்.

மறுபக்கம், தீர்க்கமான குழுநிலைப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்ற ரொனால்டோ, இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் வெற்றிக் கோலைப் பெற உதவியுடதுடன், காலிறுதிப் போட்டியில் கோல் பெறும் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தாலும், பெனால்டியில் முதலாமவராகச் சென்று கோலினைப் பெற்று அணிக்கு நம்பிக்கையை வழங்கியிருந்தார். இந்நிலையில், ரொனால்டோவுடன் நானி, இளம் வீரர் ரெனாட்டோ சந்தேஸ் ஆகியோரின் கூட்டணி போர்த்துக்கல்லுக்கு வெற்றியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/176332/ப-ர-த-த-க-கல-Vs-வ-ல-ஸ-ர-ன-ல-ட-ட-Vs-ப-ல-#sthash.4DVAtGVb.dpuf
  • தொடங்கியவர்
2 hours ago, suvy said:

நாங்கள் நிலைமைகனள அவதானித்துக் கொண்டு இருக்கிறோம்....!  :unsure:

இம்முறை பிரான்ஸ்க்கு சந்தர்ப்பம் இருக்கு ஜெர்மனியை வெல்ல..:)

ஜெர்மனியின் முன்ணனி வீரர்கள் இருவர் ( sami khedira,  Mario Gómez )  காயம் காரணமாக விளையாடமுடியாதநிலை. இன்னுமொருவர் ( Bastian Schweinsteiger)  இன்னும் சந்தேகம் விளையாட முடியுமா என்று.

ஒரு வீரர்  (Mats Hummels) 2 மஞ்சள் அட்டையால் இந்த போட்டியில் தடை.

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை எடுத்ததின் பின்னால் பிரான்சின் விளயாட்டுகள் அவ்வளவாய் சோபிக்கவில்லை. அதனால் நானும் பெரிசாய் அக்கறப் படவில்லை. இப்ப பார்க்கும்போது டீம் நல்ல ஃப்ர்ம்மாக இருக்கு. (வெற்றீ தோல்விகளூக்கு அப்பால்.). அதிகமானவர்களீன் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாம் இளம் பொடியள் நன்றாக விளயாடுகினம்....! எப்படியோ திறமையுடன் அதிர்ஸ்டமும் இருப்பவர்கள் வெல்லட்டும்....!  tw_blush:

  • தொடங்கியவர்

யூரோ கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் நுழைவது யார்?- போர்ச்சுக்கல் - வேல்ஸ் இன்று பலப்பரீட்சை

pale_2921808f.jpg
 

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லயன் நகரில் போர்ச்சுக்கல் - வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆஷ்லே வில்லியம்ஸ் தலைமையிலான வேல்ஸ் அணி யூரோ தொடரில் முதன்முறையாக களமிறங்கிய போதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் சுலோவேக்கியாவை 2-1 என்ற கணக்கிலும், ரஷ்யாவை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து பி பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. நாக் அவுட் சுற்றில் வடக்கு அயர்லாந்தை 1-0 எனவும், காலிறுதியில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை 3-1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்தது.

போர்ச்சுக்கல் அதிர்ஷ்டத் தால் அரையிறுதி வரை முன்னேறி யுள்ளதாக அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய 5 யூரோ தொடரில் 4-வது முறை யாக அரையிறுதிக்கு தகுதி பெற் றுள்ளது. அந்த அணியின் அதிக பட்ச செயல்பாடாக 2004-ல் இறுதிப்போட்டி வரை முன்னேறி யிருந்தது.

இம்முறை போர்ச்சுக்கல் அணி லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் 3 போட்டியையும் டிரா செய்தே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சுற்றில் கூடுதல் நேரத்தில் 1 கோல் அடித்து குரோஷியாவை வீழ்த்தியது.

காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தை வென்றது. இந்த தொடரில் போர்ச்சுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல் அடித்து வெற்றி பெறவில்லை என்ற விமர்சனத் துக்கும் ஆளாகி உள்ளது.

போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், வேல்ஸ் நட்சத்திர வீரர் கரேத் பாலேவும் ரியல் மாட்ரிட் கிளப்பில் ஒன்றாக விளையாடி வருகின்றனர். இதனால் இவர்கள் இருவர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

பாலே இந்த தொடரில் 3 கோல்களும், ரொனால்டோ இரு கோல்களும் அடித்துள்ளனர். ரொனால்டோ இன்று மேலும் ஒரு கோல் அடித்தால் யூரோ தொடர்களில் அதிக கோல்கள் அடித்த பிரான்சின் பிளாட்டினியின் சாதனையை முறியடிப்பார். பிளாட்டினி 8 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் அணியின் நட்சத்தி வீரர் கரேத் பாலே கூறும்போது, “இந்த போட்டி இரு வீரர்களுக்கு இடையிலானது அல்ல. இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் அரையிறுதி ஆட்டம். ரொனால்டோ அற்புதமான வீரர். அவரது செயல்பாடு அனைவரும் அறிந்ததே. ஒரு குழுவாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். தனிப்பட்ட வீரர் மீது எங்களது கவனம் இல்லை.

போர்ச்சுக்கல் அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியின் ஆட்டங்களை டிவி-யில் பார்த்துள்ளோம். போர்ச்சுக்கல் ஆபத்தான அணி. தரவரிசையில் உயர் இடத்தில் உள்ள ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறியதை விமர்சிப்பது சரியாக இருக்காது. இன்று இரவு நாங்கள் மேலும் ஒரு சிறந்த ஆட்டத்தை கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் வரலாறு படைப்போம்’’ என்றார்.

ரொனால்டோ இந்த தொடரில் அதிக நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். லீக் சுற்றில் முதல் இரு ஆட்டத்திலும் கோல் அடிக்கும் பல்வேறு வாய்ப்புகளை அவர் கோட்டை விட்டார். ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை அவர் வீண் செய்தார். எனினும் ஹங்கேரிக்கு எதிராக இரு கோல்கள் அடித்து அணியை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்து சென்றார்.

இந்த ஆட்டத்தில் கோல் அடித்ததால் 4 யூரோ தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். 3 முறை உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற அவர் நாக் அவுட்சுற்றில் சோபிக்கவில்லை. காலிறுதியிலும் ரொனால்டோ தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறினார்.

எனினும் அரையிறுதியில் அவர் நம்பிக்கை அளிப்பார் என கருதப்படுகிறது. 31 வயதாகும் ரொனால்டோ, போர்ச்சுக்கல் அணிக்கு கோப்பை வென்று கொடுக்க இதைவிட வேறு ஒரு நல்ல தருணம் கிடைக்காது என்றே நிபுணர்களும் கருதுகின்றனர்.

தடை காரணமாக போர்ச்சுக்கல் அணியின் பென் டேவிஸ், வேல்ஸ் அணியின் ஆரோன் ராம்சே ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராம்சே-வுக்கு பதிலாக ஜானி வில்லியம்ஸூம், பென் டேவிஸூக்கு பதிலாக புல்ஹாம் ஜாஸ் ரிச்சர்ட்ஸூம் களமிறங்கக்கூடும் என தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பை-கால்பந்து-இறுதிப்போட்டியில்-நுழைவது-யார்-போர்ச்சுக்கல்-வேல்ஸ்-இன்று-பலப்பரீட்சை/article8815044.ece

  • தொடங்கியவர்

13599879_1176578992394945_13603001396090

 

Stat of the Day: Cristiano Ronaldo joins Michel Platini on 9 EURO final goals - the tournament record!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

போர்த்துகல்  2 - 0  என்ற கோல் அடிப்படையில் வேல்ஸ் அணியை வென்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது..:)

13631576_1176587922394052_43906719426257

13584777_1176588835727294_19987873615168

13557909_1176619259057585_58718604468690

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றது 

 

 


FB_IMG_1467838390274

யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றது.

யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடாத்திய மாபெரும் அரை இறுதிப்போட்டி இன்று அதிகாலை நிறைவுக்கு வந்தது.

யூரோ கிண்ண முதலாவது அரை இறுதி போட்டியில் போர்த்துக்கல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

சுவாரஸ்யமாக நடைபெற்ற இப்போட்டியில் சாதனைகள் பல நிகழ்த்தப்படடன.

போர்த்துக்கல்லின் நட்சத்தர வீரர் ரொனால்டோ இப்போட்டியில் விளையாடி 3 வெவ்வேறு அரை இறுதி போட்டிகளை விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இப் போட்டியில் ரொனால்டோ அடித்த கோல் யூரோ கிண்ண போட்டிகளில் அவரது 9 ஆவது கோல் ஆகும். இதன் மூலம் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை சமன் செய்தார். ஆனால் பிளாட்டினி தனது 9 கோல்களையும் ஒரே ஆண்டில்(1984) அடித்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் ரொனால்டோ 2004 அரை இறுதி போட்டியிலும் 2016 அரை இறுதி போட்டியிலும் கோல் அடித்து 1964 ஆம் ஆண்டிற்கு பின் 2 வெவ்வேறு அரை இறுதி போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் சாதனை படித்துள்ளார். 

போர்த்துக்கல் அணி 2 ஆவது முறையாக யூரோ இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இறுதி போட்டிவரை முன்னேறிய போர்த்துக்கல் வெளிநாட்டு மண்ணில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

யூரோ 2016 இல் இதுவரை போர்த்துக்கல் அணி 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இவ் அரையிறுதி போட்டியில் மாத்திரமே அவ் அணி 90 நிமிடங்களுக்கு முன் வெற்றியை சுவைத்துள்ளது. போர்த்துக்கல்லின் லீக் போட்டிகள் 3 உம் சமநிலையில் முடிவடைந்தநிலையில் ரௌண்ட் ஒப் 16 இல் மேலதிக நேரத்திலும் காலிறுதியில் பெனல்ட்டி உதை மூலமும் வெற்றி பெற்றது போர்த்துக்கல்.

அறிமுக அணியாக யூரோ 2016 இல் களமிறங்கிய வேல்ஸ் அரை இறுதியுடன் விடை பெற்றுள்ளது. 1992 ஆம் ஆண்டிற்கு (ஸ்வீடன்) பிறகு அரை இறுதி வரை தகுதி பெற்ற அறிமுக அணியாக வேல்ஸ் விளங்குகின்றது.

 முதலாவது அரைஇறுதிப்போட்டியில் ரொனால்டோ பல சாதனைக ளை படைத்திருந்தாலும் 2 யாராவது அரை இறுதி போட்டியில் ஜெர்மனியின் ஒஸில் ஸ்வின்ஸ்டைகர் ஆகியோர் ரொனால்டோவின் இறை இறுதி சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு யூரோ இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போர்த்துக்கல்லுக்கு, இறுதியாக இடம்பெற்றுள்ள 5 யூரோ கிண்ண தொடர்களில் 4 வது அரை இறுதியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது.

வேல்ஸூக்கு இவ்வரையிறுதிப் போட்டியே அவ்வணி பெரிய தொடரொன்றில் அரையிறுதிப் போட்டிக்குச் சென்ற முதலாவது சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில்,முதல் பகுதி ஆட்டம் கோல்கள் இல்லாது நிறைவடைந்தாலும்,இரண்டாம் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய போர்த்துக்கல் அணி 2-0 என்று வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்து சாதனை படைத்தது.

 

FB_IMG_1467838288568 FB_IMG_1467838390274 FB_IMG_1467838313550 FB_IMG_1467838321461 FB_IMG_1467838328679 FB_IMG_1467838328679

w1w2w3

w4

http://vilaiyattu.com/யூரோ-கிண்ண-இறுதிப்-போடிக/

  • தொடங்கியவர்

2-வது அரையிறுதியில் இன்று மோதல்: ஜெர்மனியை பழிதீர்க்குமா பிரான்ஸ்?

 

 
கிரிஸ்மான் | தாமஸ் முல்லர்
கிரிஸ்மான் | தாமஸ் முல்லர்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மார்செலி நகரில் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. உலக சாம்பியன் அணியும் யூரோ தொடரில் இருமுறை பட்டம் வென்ற அணியும் மோதும் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் அணியில் கிரிஸ்மான், ஆலிவியர் கிரவுடு, டிமிட்ரி பயேட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கிரிஸ்மான் 4 கோல்கள் அடித்து இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பயேட், கிரவுடு ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளனர்.

காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் இத்தாலியை பந்தாடிய ஜெர்மனி அணியும் இன்றைய ஆட்டத்தை அதிக நம்பிக்கையுடன் சந்திக்கிறது. ஜெர்மனி அணியின் முன்கள வீரர் தாமஸ் முல்லர் கூறும்போது, “எங்களை பொறுத்தவரை எந்த அச்சமும் இல்லை. பிரான்ஸ் அணி தனிப்பட்ட முறையில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்களை கொண்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

போட்டியை நடத்தும் அவர் களுக்குதான் நெருக்கடி உள்ளது. சில வீரர்கள் காயமடைந்தாலும் எங்கள் அணியின் தரம் குறையா மல்தான் உள்ளது” என்றார்.

தடை, காயம் காரணமாக ஜெர்மனி அணியின் நடுகள வீரர் ஹம்மெல்ஸ், ஸ்டிரைக்கர் மரியோ கோம்ஸ், நடுகள வீரர் ஷமி ஹெதிரா ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோம்ஸ் களமிறங்காததால் அவரது இடத்தில் மரியோ கோட்ஸி விளையாடக்கூடும். ஹம்மெல் ஸூக்கு பதிலாக முஸ்டாபி அல்லது பெனிடிக்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.

ஜெர்மனிக்கு எதிரான கடைசி 3 ஆட்டங்களிலும் பிரான்ஸ் ஸ்டிரைக்கர் ஆலிவியர் கிரவுடு கோல் அடித்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.

பிரான்ஸ் அணியில் தடை காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத தடுப்பாட்ட வீரர் அடில் ராமி, நடுகள வீரர் கோலோ ஹன்டி ஆகியோர் இன்று களமிறக்கப்படக்கூடும்.

பிரான்ஸ் அணி கடந்த 2014 உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத் திலும், 1982 உலகக் கோப்பை அரையிறுதியிலும் ஜெர்மனியிடம் தோல்வியடைந்திருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் பிரான்ஸ் வீரர்கள் உள்ளனர்.

பிரான்ஸ் நட்சத்திர வீரர் ஆலிவியர் கிரவுடு கூறும்போது, “பிரான்ஸ் கால்பந்து வரலாற்றில் மேலும் ஒரு அத்தியாயத்தை எழுத விரும்புகிறோம்” என்றார்.

பிரான்ஸ் அணி மோதிய கடைசி 9 ஆட்டங்களில் தோல் வியை சந்திக்கவில்லை. அதே வேளையில் ஜெர்மனி தனது கடைசி 6 ஆட்டங்களிலும் வெற் றியை தாரை வார்க்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/2வது-அரையிறுதியில்-இன்று-மோதல்-ஜெர்மனியை-பழிதீர்க்குமா-பிரான்ஸ்/article8818389.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது அரையிறுதியில் ‘உலக சாம்பியன்’ ஜெர்மனி, பிரான்ஸ் அணி மோதல்

germany_200_199.jpg

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய இரண்டாவதுஅரையிறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனி, பிரான்ஸ்அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம்வாய்ந்தது என்பதால் ஆக்ரோஷமான ஆட்டத்தைஎதிர்பார்க்கலாம்.   

               

பிரான்சில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது.இன்று மார்செல்லியில் நடக்கவுள்ள இரண்டாவதுஅரையிறுதியில் ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள்மோதவுள்ளன.                  

அனுபவ ஜெர்மனி அணி, உலக சாம்பியன் அந்தஸ்துடன் இத்தொடரில் களமிறங்கியது. ஆனால்,ஒரு முறை கூட கோல் மழை பொழிந்து வெற்றியை பெறவில்லை. லீக் போட்டியில் போலந்துஅணியுடன் டிரா மட்டுமே செய்ய முடிந்தது இத்தாலிக்கு எதிரான காலிறுதியில் முல்லர், ஆசில்பெனால்டி ஷூட் அவுட்டில் சொதப்பினர். இப்படி முக்கியமான வீரர்கள் எழுச்சி பெறாதகாரணத்தால்தான் வெற்றிக்கு போராட வேண்டியுள்ளது.                                    

காயம் தந்த சோகம் சமி கேதிரா (தசை நார்), மரியோ கோமஸ் (தொடை) காயத்தால் விலகியதுபின்னடைவு. கேப்டன் ஸ்டீவன்ஸ்டீகர் (முழங்கால்) பங்கேற்பதும் சந்தேகமே. இப்படி பலபிரச்னைகளில் ஜெர்மனி சிக்கித்தவிக்கிறது. இருப்பினும், ஜோனாஸ் ஹெக்டர், போய்ட்டங்உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை தர காத்திருக்கின்றனர். அணியின் மிகப்பெரும் பலமாககோல்கீப்பர் மானுவல் நுாயர் திகழ்கிறார். கடந்த காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில்இத்தாலியின் டார்மியான் வாய்ப்பை தடுத்து திருப்பம் தந்தார். இன்றும் இவர் அசத்தினால்,எளிதாக பைனலுக்கு முன்னேறலாம்.                                    

இளம் படை: பிரான்ஸ் அணி துவக்கம் முதலே அசத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 5 (3லீக் போட்டி, ‘ரவுண்டு16’, காலிறுதி) போட்டிகளில் ஒரே ஒரு டிரா மட்டுமே செய்துள்ளது.காலிறுதியில் ஐஸ்லாந்து அணியை 5–2 என அபாரமாக வென்றது. இம்முறை சொந்த மண்ணில்களமிறங்கியுள்ளது கூடுதல் உற்சாகம். இளம் வீரர்கள் அடங்கிய பட்டாளம் அணியை ஒவ்வொருமுறையும் கரை சேர்க்கிறது. இத்தொடரில் இதுவரை அதிக கோல் (4) அடித்துள்ள கிரீஸ்மன்மிரட்டுகிறார். தலா 3 கோல் அடித்துள்ள ஆலிவர், டிமிட்ரி பாயட் தங்கள் பங்கிற்குஅசத்துகின்றனர். போக்பா ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 3வது முறையாகபைனலுக்கு முன்னேறலாம். கைதேர்ந்த ஜெர்மனி அணியின் கோல் வாய்ப்பை துடிப்பாக தடுக்ககேப்டனும், கோல்கீப்பருமான ஹுகோ லிலாரிஸ் சுதாரிப்புடன் இருப்பது அவசியம்.

கடந்த வந்த பாதை           

ஜெர்மனி           

லீக் சுற்று           

* உக்ரனை வீழ்த்தியது (2–0)           

* போலந்துடன் டிரா (0–0)           

* வடக்கு அயர்லாந்தை வென்றது (1–0)           

ரவுண்டு16’           

* சுலோவாகியாவை தோற்கடித்தது (3–0)           

காலிறுதி           

* இத்தாலியை வீழ்த்தியது (‘பெனால்டி ஷூட் அவுட் 6–5)            

பிரான்ஸ்           

* ருமேனியாவை வீழ்த்தியது (2–1)           

* அல்பேனியாவை வென்றது (2–0)           

* சுவிட்சர்லாந்துடன் டிரா (0–0)           

ரவுண்டு16’           

* அயர்லாந்தை வீழ்த்தியது (2–1)           

காலிறுதி           

* ஐஸ்லாந்தை வென்றது (5–2)           

இதுவரை.....     

கால்பந்து அரங்கில் இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பிரான்ஸ்12, ஜெர்மனி 9 வெற்றி பெற்றுள்ளன. 6 போட்டி டிரா ஆனது.     

பலம் வாய்ந்த அணி      

இத்தொடரில் இதுவரை அதிக கோல் அடித்துள்ள (11) அணியாக பிரான்ஸ் வலம் வருகிறது.இதனால், ஜெர்மனிக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.     

வீழ்த்த முடியுமா     

கடந்த 1958ல் நடந்த பிபா உலக கோப்பை தொடரின் 3வது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ்அணி 6–3 என அப்போதைய மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது. இதன் பின் ஜெர்மனிக்கு எதிராகநடந்த பிபா போன்ற எந்தவொரு முக்கியமான போட்டியிலும் பிரான்ஸ் வெற்றி பெற்றதுஇல்லை.      

யாருக்கு சாதகம்     

இன்று ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் மார்செல்லியில் உள்ள ஸ்டேடி வெலோடிரோம்மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கு பிரான்ஸ் அணி விளையாடிய கடந்த 12போட்டிகளில் ஒன்றில் (எதிர் அர்ஜென்டினா, 2009) மட்டும்தான் வீழ்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக8 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி பெற்றுள்ளது

http://www.nilavaram.com/index.php/sport-news/special-news-gerenal/general-sports-news/21702-இரண்டாவது-அரையிறுதியில்-‘உலக-சாம்பியன்’-ஜெர்மனி,-பிரான்ஸ்-அணி-மோதல்

  • தொடங்கியவர்

ரொனால்டோ, நானி அபாரம்; யூரோ இறுதியில் போர்ச்சுக்கல்

 
2-வது கோலை கொண்டாடும் போர்ச்சுகல் அணி. | படம்: ஏ.பி.
2-வது கோலை கொண்டாடும் போர்ச்சுகல் அணி. | படம்: ஏ.பி.

யூரோ 2016 கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டம் முழுதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 3 நிமிடங்களில் 2 கோல்கள் வேல்ஸ் அணியின் இறுதிக் கனவைத் தகர்த்தது. போர்ச்சுக்கல் முழுதும் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது.

ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஷார்ட் கார்னர் கிடைக்க போர்ச்சுகல் வீரர் ரஃபேல் குரேரியோ அருமையாக அதனை கிராஸ் செய்ய கிறிஸ்டியானோ ரொனால்டொ மிக அருமையாக தலையால் கோலுக்குள் முட்டித் தள்ளினார். இத்தனைக்கும் வேல்ஸ் அணியின் தடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் செஸ்டர் தடுப்பதற்காக உயரே எழும்பினார் ஆனால் அவருக்கு மேலே எழும்பி ரொனல்டோ கோல் அடித்து வேல்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கோல் கீப்பர் ஹெனெசேவுக்கு வாய்ப்பேயில்லாமல் போனது.

2-வது கோலிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பங்கு அதிகம். இவர் கொடுத்த பந்தைத்தான் நானி கோலாக மாற்றினார்.

மற்ற ஆட்டங்களைப் போல் அல்லாமல் இந்த அரையிறுதியில் ரொனால்டோ அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கக் கணங்களிலேயே வேல்ஸ் அணியின் தடுப்பாட்ட அணையை உடைக்க முயற்சி செய்தார், ஆனால் ரொனால்டோவை மிக நன்றாக வேல்ஸ் வீரர் ஆஷ்லி வில்லியம்ஸ் மேலே செல்ல விடாமல் தடுத்தார்.

வேல்ஸ் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் ஏரோன் ராம்சே சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இந்தப் போட்டியில் இல்லாதது சற்றே பின்னடைவை ஏற்படுத்தினாலும் அபாய வீரர் காரெத் பேல் அருமையான சவால் அளித்தார். கார்னர் ஷாட் ஒன்றை பேல் அடிக்க பந்து மேலே சென்றது.

இதற்கு சில நிமிடங்கள் கழித்து காரெத் பேல் மேலும் அபாயகரமான ஒரு தாழ்வான கிராஸ் செய்ய போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ரிசியோ நன்றாக அதனைத் தடுத்தார். 23 நிமிடங்கள் சென்ற பிறகு காரெத் பேல் தனது பகுதியிலிருந்தே ஒரு தாக்குதல் முயற்சியைத் தொடுத்து முன்னேறிச் சென்று 25 யார்டிலிருந்து அடித்தார் ஆனால் இதுவும் தடுக்கப்பட்டது.

முதல் பாதி ஆட்டம் முடியும் தருணங்களில் இருந்த போது அட்ரியன் சில்வாவின் கிராஸை ரொனால்டோ தலையால் முட்ட அது பாருக்கு வெளியே சென்றது.

முதல் பாதியில் வேல்ஸ் அணிக்கு பந்துகள் கிடைத்ததே அரிதாக இருந்தது, போர்ச்சுகல் முயற்சிகள் கோலாக மாறவில்லை.

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியவுடன் 48-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் செஸ்டர் இடது புறம் அருமையாக பேலுக்கு பந்தை அனுப்ப அவர் ஆல்வேஸுடன் ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் இறங்கினார் ஆனால் பந்தைத் தாண்டிச் சென்றார் பேல்.

இந்நிலையில்தான் 50-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆச்சரியகரமான கோல் விழுந்தது. குரெய்ரோ மிக அருமையாக பந்தை தூக்கி அடிக்க ரொனால்டோ எழும்பிய செஸ்டரை ஆட்கொண்டு மேலே எழும்பி சக்திவாய்ந்த தலைமுட்டலால் கோலில் செலுத்தினார், வேல்ஸ் கோல் கீப்பருக்கு வாய்ப்பேயில்லை. இந்த கோல் மூலம் யூரோ 2016-ல் ஒரு தொடரில் அதிக கோல்களை அடித்த பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ. ஆம்! இருவரும் 9 கோல்கள்.

53-வது நிமிடத்தில் நீண்ட தூர ஷாட் ஒன்றை ரொனால்டோ துல்லியமாக அடிக்க அங்கு நானிக்கு தடுப்பாட்ட வீரர்களுக்கு இடையே இடைவெளி கிடைக்க அருமையாக ஸ்லைட் செய்து கோலாக மாற்றினார். 63-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது, அதனை ரொனால்டோ அருமையாக கோல் நோக்கி அடிக்க கோலுக்கு மேலே வலையில் போய் விழுந்தது.

83-வது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. பேலை போர்ச்சுகல் வீரர் ஜோ மரியோ ஃபவுல் செய்தார். ஃப்ரீகிக் கிடைத்தது ஆனால் பேல் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. நேராக போர்ச்சுக்கல் அமைத்த சுவரால் தடுக்கப்பட்டு திரும்பிய பந்தையும் பேல் எடுத்தார், ஆனால் நானி அவர் கோல் வாய்ப்பை முறியடித்தார்.

கடைசியில் போர்ச்சுக்கல் 2-0 என்று வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முக்கிய சர்வதேச கால்பந்து தொடர்களில் போர்ச்சுகல் 5 முறை அரையிறுதியில் தோல்வி தழுவி வெளியேறியுள்ளது. இம்முறை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இறுதியில் ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அணியைச் சந்திக்கிறது போர்ச்சுகல் அணி.

http://tamil.thehindu.com/sports/ரொனால்டோ-நானி-அபாரம்-யூரோ-இறுதியில்-போர்ச்சுக்கல்/article8819173.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிரான்ஸ் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது

ஜெர்மனியை 2 -0  கோல் அடிப்படையில் வென்று

13612116_1177692742283570_64802636163164

13576779_1177692902283554_25906307263168

13603348_1177692532283591_70628290822858

  • தொடங்கியவர்

13599790_1177724452280399_40952609590689

13614954_1177705005615677_77687194199021

  • தொடங்கியவர்

உலக சம்பியனை வெளியேற்றிய பிரான்ஸ் இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்லை சந்திக்கிறது

Published by Priyatharshan on 2016-07-08 10:06:28

 

யூரோ கிண்ணம் 2016 கால்பந்து தொடரின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் உலக சம்பியன் ஜேர்மனியை 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்ற பிரான்ஸ் இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்லுடன் மோதுகின்றது.

2918.jpg

யூரோ 2016 இன் 2 ஆவது அரையிறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்றது.

3000.jpg

இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. பிரான்ஸ் 12 வெற்றிகளையும் ஜேர்மனி 10 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனினும் யூரோ கிண்ண போட்டிகளில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

3022.jpg

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணி வீரர்களும் ஒன்றுக்கொன்று சளைக்காதவர்கள் போன்று மிக சிறப்பாக விளையாடினர்.

4374.jpg

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பாக தடுத்து விளையாடினர்.

3660.jpg

இந்நிலையில் முதல் பாதி முடிவடையும் நேரத்தில் பிரான்சிற்கு பெனல்ட்டி உதை கிடைத்தது. 

3090.jpg

பெனல்ட்டி உதையை மிக அருமையாக கோலாக்கினால் பிரான்ஸின் கிரெய்ஸ்மன். பெனல்ட்டி உடன் முடிவடைந்த முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது.

5472.jpg

இந்நிலையில் இரண்டாம் பாதியில் ஆட்டத்தில் ஜேர்மன் பதில் கோல் போடுவதற்கு மிகவும்  கடுமையாக முயற்சித்தது. 

5516.jpg

எனினும் பிரான்ஸின் சிறப்பான தடுப்பாட்டம் ஜேர்மனியின் கோல் போடும் வாய்ப்புக்களை முடக்கியது. 

3052.jpg

ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் பின்னிலை தடுப்பாட்ட வீரர்களின் தவறான பந்து பரிமாற்றத்தால் மீண்டும் கிரெய்ஸ்மன் கோல் அடித்து ஜேர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

5070.jpg

இறுதிவரை போராடிய உலக சம்பியன் ஜேர்மனிக்கு கோல் எதுவும் போடமுடியாது போக போட்டியின் முடிவில் பிரான்ஸ் 2-0 என ஜேர்மனியை வீழ்த்தி 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

4791.jpg

இப்போட்டியில் ஜேர்மனியை வீழ்த்தியதன் மூலம் போட்டியை நடத்தும் நாட்டிற்கெதிராக வெற்றிபெறும் ஜேர்மனியின் ஆதிக்கத்தை அடக்கியது பிரான்ஸ்.

2200.jpg

இதற்கு முன் ஜெர்மனி போட்டியை நடத்தும் நாட்டை 4 முறை அரை இறுதிப்போட்டியில் வீழ்த்தியிருந்தது.

2090.jpg

இப்போட்டியில் ஜேர்மனி தோற்றிருந்தாலும் ஜேர்மன் வீரர் சுவின்ஷ்டைகர் இப்போட்டியில் விளையாடியதன்மூலம் 3 அரைஇறுதிப்போட்டியில் விளையாடிய வீரர் என்ற ரொனால்டோவின் சாதனையை சமப்படுத்தினார்.

 

உலக சம்பியனை வீழ்த்திய பிரான்ஸ் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறும் இறுதிப்போட்டியில் போர்த்துக்கல் அணியுடன் மோதவுள்ளது.

http://www.virakesari.lk/article/8668

  • தொடங்கியவர்

ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து யூரோ 2016 இறுதியில் பிரான்ஸ்!

 
 
படம்: ஏபி
படம்: ஏபி

ரசிகர்களுக்கு விறுவிறுப்பு விருந்து

யூரோ 2016 கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிக்குள் நுழைந்தது.

ஆண்டாய்ன் கிரீய்ஸ்மேனின் 2 கோல்கள் மட்டுமே ஜெர்மனிக்கு எதிராக அமைந்தது. மற்றபடி ஜெர்மனி அணியினர் இன்னொரு முறை இப்படியொரு வெற்றி நமக்குத் தேவையில்லை என்று பிரான்ஸ் அணி நினைக்குமளவுக்கு படுத்தி எடுத்தனர். மொத்தத்தில் உயர்ரக கால்பந்தாட்டத்தின் முழு விறுவிறுப்பையும் ரசிகர்களுக்கு விருந்தாக அளித்த போட்டி இது என்றால் அது மிகையல்ல.

மற்ற ஆட்டங்களுக்கும் கால்பந்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவெனில் ஒரு அணி அன்றைய தினத்தில் ஆதிக்கம் செலுத்துகிறதா அல்லது ஆதிக்கத்துக்கு உட்படுகிறதா என்பதல்ல விஷயம், வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது பிற காரணிகளே.

அதிர்ஷ்டம் அல்லது தனிநபர் சாதனை என்று எப்படி வேண்டுமானாலும் அது அமையலாம். பிரான்ஸுக்கு இந்த ஆட்டத்தில் இரண்டின் கலவையே ஜெர்மனிக்கு எதிரான ஓர் அரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. அதாவது அதிர்ஷ்டமோ திடீர் திறமையோ பளிச்சிடும் போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஒரு அணி எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதுதான் ஸ்போர்ட்ஸில் 'ஸ்பிரிட் - உத்வேகம்' என்று கருதப்படுகிறது. அந்த ஸ்பிரிட் பிரான்ஸிடம் காணப்பட்டது.

எதிரணி எவ்வளவு திறமையான அணியாக இருந்தாலும் எவ்வளவு அச்சுறுத்தல் அணியாக இருந்தாலும் நேரம், காலம் கூடி வரும் போது கடவுளின் புன்னகை எந்த அணியினரை நோக்கி வீசுகிறதோ அந்த அணிக்கு வெற்றி கைகூடும். பிரான்ஸுக்கு அத்தகைய தருணமாகும் இது.

18 ஆண்டுகளுக்கு முன்னதாக பிரேசிலின் அதிரடி 'மொட்டை' ரொனால்டோவை சந்தித்த பிரான்ஸ் அணி தற்போது இறுதியில் இன்னொரு (கிறிஸ்டியானோ) ரொனால்டோவை எதிர்கொள்கிறது.

இதனால், தற்போது தங்கள் சொந்த மண்ணில் யூரோ 1984, உலகக்கோப்பை 1998-க்குப் பிறகு கோப்பையை வெல்ல பிரான்ஸுக்கு வாய்ப்பு கிட்டியது.

ஜெர்மனி அணியில் போடெங், ஹெக்டர், ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர், முல்லர், பொடோல்ஸ்கி போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். பிரான்சில் போக்பா, மட்டூய்டி, கிரீய்ஸ்மேன், லோரிஸ், கிரவுட் என்று நம்பிக்கை நட்சத்திரங்கள் இருந்தனர். இதில் ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் போடெங் காயமடைந்ததும் ஜெர்மனிக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடக்க நிமிடங்களிலேயே இரு அணிகளின் ஆட்டத்திலும் தீப்பொறி பறந்தது. 3-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு இடது புறம் கார்னர் கிடைத்தது. அந்த ஷாட் பெனால்டி பகுதி வரை பயேட்டினால் வந்தது அங்கு ஜெர்மனி அதனை தடுத்தது.

ஆனால் மட்டூய்டி, கிரீய்ஸ்மேன் சேர்க்கை ஜெர்மனிக்கு தொல்லைகளை கொடுக்கத் தொடங்கியது. இடது புறம் இருவரும் பந்தை மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் அனுப்பி வேகமாக முன்னேறினர். பிறகு அருமையாக பந்தை பாக்ஸின் ஓரத்துக்கு தள்ளி பிறகு அவரே மின்னல் வேகத்தில் பந்தை வலதுகாலுக்கு மாற்றி ஒரு உதை உதைத்தார், ஜெர்மனி கோல் கீப்பர் நியூயருக்கு இடது புறம் குறிவைத்தார் கிரீய்ஸ்மேன் ஆனால் நியூயர் என்றால் சும்மாவா, ஃபுல் டைவ் அடித்து கோலை முறியடித்தார். இது உண்மையில் கிரீய்ஸ்மேன் ஏற்படுத்திய அச்சுறுத்தல் மூவ் ஆகும்.

11-வது நிமிடத்தில் ஜெர்மனி வலது புறம் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டது கிம்மிஸ் அடித்த கிராஸ் தடுக்கப்பட்டது, ஆனால் ஜெர்மனியும் தங்கள் வேலைகளைக் காட்டத் தொடங்கியது. இதற்கு அடுத்த கணத்திலும் கிம்மிச், முல்லர் சேர்க்கையில் ஜெர்மனி பிரான்ஸ் கோல் அருகே அச்சுறுத்தியது. 14-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கேன் அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் ஹியூகோ லோரிஸ் வலது புறம் பாய்ந்து தடுத்தார். இதற்கு அடுத்து 15-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா, ஒரு மரடோனா வேலையைச் செய்தார், ஜெர்மனி வீரர் கேனைக் கடந்து தனிப்பட்ட முறையில் 50 அடிகள் பந்தை வேகமாக எடுத்து வந்தார், ஆனால் கடைசியில் கிம்மிச்சினால் எதிர்கொள்ளப்பட்டார்.

இப்படியே ஆட்டம் விறுவிறுப்பின் உச்சகட்டத்தில் இருந்தது. 19-வது நிமிடத்தில் மட்டூய்டியை ஏமாற்றி குரூஸ் பந்தை பிரான்ஸின் கோல் பகுதிக்குள் சென்று கோல் நோக்கி அடித்த ஷாட் அடிக்க முற்பட்டபோது போக்பா அவரை முறையற்ற விதத்தில் தடுத்தார், ஜெர்மனி பெனால்டி கேட்டது, ஆனால் பாக்சிற்கு வெளியே ப்ரீ கிக் அளித்திருக்க வேண்டும், ஆனால் நடுவர் அசரவில்லை.

20,25 நிமிடங்களில் ஆட்டம் பிரான்ஸுக்கு கடும் நெருக்கடியாக அமைந்தது. 25-வது நிமிடத்தில் 25 அடியிலிருந்து ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர்களுக்கு மேல் தூக்கி அடித்தார் ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அதனை பாருக்கு மேலே தள்ளி விட்டார். 32-வது நிமிடத்திலும் ஜெர்மனி அணியினர் பிரான்ஸின் கோல்பகுதிக்குள் பல குழப்பங்களை விளைவித்தனர், ஆனாலும் பிரான்ஸ் மீண்டது, இதைத்தான் அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம்.

முதல் கோல் வந்த அதிர்ஷ்ட கணம்:

45-வது நிமிடத்தில் பிரான்ஸ் பெற்ற கார்னர் ஷாட் ஜெர்மனி கோல் அருகே இருந்த ஈவ்ராவுக்கு உயரமாக வர அவர் பந்தை தலையால் முட்டினார், அங்குதான் அதிர்ஷ்ட தேவதை பிரான்ஸை நோக்கி புன்னகைத்தாள். கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைக்க பிரான்ஸ் வீரர் ஈவ்ராவை கவர் செய்யும் முயற்சியில் ஜெர்மனி கேப்டன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருந்தார், ஆனால் ஈவ்ரா, ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருவரும் கார்னர் ஷாட்டை தங்கள் வசம் கொண்டு வர எம்பினர் அப்போது ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் கையில் பந்து பட்டது. ஆனால் இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை, பிரான்ஸ் வீரரும் கையில் அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை, முழுக்க முழுக்க அந்தக் கணத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஆட்டத்தின் விதியானது. பெனால்டி ஏரியாவில் கையில் வாங்கியதால் பெனால்டி கிக் பிரான்ஸுக்கு அளிக்கப்பட்டது. கிரீய்ஸ்மேன் அதனை நியூயருக்கு வலது புறம் பக்கவாட்டு பாத உதையினால் கோலுக்குள் செலுத்தினார். அவ்வளவு நெருக்கடிக்குப் பிறகு பிரான்ஸுக்கு அதிர்ஷ்ட கோல் வாய்ப்பு முதல் கோலாக அமைந்தது.

இதுதான் கால்பந்தின் எதேச்சைத் தன்மை. 10-வது நிமிடம் முதல் 43-வது நிமிடம் வரை ஜெர்மனி முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது, ஆதிக்கம் செலுத்தியது, அச்சுறுத்தியது ஆனால் கடைசியில் ஒரேயொரு அறியாப்பிழை பிரான்ஸ் முதல் கோலை அடித்தது. கால்பந்துக்கேயுரிய விநோதம்!

இடைவேளைக்குப் பிறகு பிரான்ஸுக்கு தொடக்கத்தில் கார்னர் வாய்ப்பு கிடைத்தது பயேட் அடித்தார், ஆனால் வர்ணனையாளர்கள் நகைச்சுவையாக ஷ்வெய்ன்ஸ்டெய்ஜரின் கைகள் பந்திலிருந்து பத்தடி தள்ளியிருந்தது என்று கூறினர்.

இரண்டாவது பாதியும் முதல் பாதியின் நகல் என்றே கூற வேண்டும் ஜெர்மனி வசம் பந்து இருந்தது கடும் முயற்சிகள், அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. 72-வது நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் பக்கம் அதிர்ஷ்ட தேவதை. கொஞ்சம் ஜெர்மனி வீரர்கள் பக்கமும் தவறு இருந்தது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்கள் 3, 4 பேர் அருகில் இருக்கும்போதே ஜெர்மனி தங்கள் பகுதியில் தங்கள் கோல் கீப்பருக்கு அருகிலேயே பந்தை வைத்திருந்தனர், வெளியே அனுப்பியிருந்தால் இந்த கோல் வந்திருக்காது, ஆனால் முஸ்டபியும் ஜோஷுவா கிம்மிச்சும் தங்கள் கோலுக்கு அருகிலேயே பந்தை தங்களுக்கு இடையே ஆடிக் கொண்டிருக்க அருகிலிருந்த பிரான்ஸ் வீரர் போக்பா இருவருக்கிடையே தன் காலை விட்டு பந்தை தன் வசம் கொண்டு வந்தார், கோலுக்கு அருகே இடது புறம் அவர் ஜெர்மனி வீரர்களுக்கு போக்குக் காட்டினார், பிறகு கிரவ்திடம் பந்தை அனுப்ப அவரது முயற்சியை ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் சரியாக முறியடிக்கவில்லை, அப்போது கிரீய்ஸ்மேன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்து 2-வது கோலை அடித்தார்.

இது பற்றி கிரீய்ஸ்மேன் கூறும்போது, "பால் போக்பா அருமையாக கடைந்தெடுத்தார், பந்து எனக்குத்தான் வரும் என்று நான் காத்திருந்தேன். பந்து வந்தது" என்றார்.

2-வது கோலை பிரான்ஸ் அடிக்க ஜெர்மனியின் ரத்தம் சூடேறியது. தூரத்திலிருந்து ஜெர்மனியின் கிம்மிஸ் அடித்த ஷாட் நூலிழையில் கோல் போஸ்டில் பட்டுச் சென்றது.. டிராக்ஸ்லரின் ஃப்ரீ கிக் பிரான்ஸ் கோல் அருகே வந்தது. குரூஸ் ஒரு அருமையான நகர்வை தலைமையேற்க பந்து ஹவீடஸிடம் வர அவர் தலையால் முட்டியது மேலே சென்றது. பிறகு இஞ்ஜுரி நேரத்தில் கிம்மிச் தலையால் முட்டிய பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் மிக அருமையாகத் தடுத்தார். இது ஆட்டத்தின் சிறந்த தடுப்பாகக் கருதப்படுகிறது. லாங் விசில் ஊதப்பட்டது, ஜெர்மனி கடுமையான சவால் அளித்து, இரண்டே தவறினால் வெளியேறியது. ஒன்று பெனால்டி பகுதியில் பந்தை எம்பித் தடுக்கும் முயற்சியில் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் கையை உயர்த்தி பந்தை கையில் வாங்கியது, 2-வது பந்தை வெளியே அடித்து விரட்டாமல் தங்கள் கோல் அருகிலேயே பந்துடன் விளையாடியது. இந்த இரண்டு தருணங்களையும் பிரான்ஸ் அருமையாக பயன்படுத்திக் கொண்டது.

ஆட்டம் முடிந்தவுடன் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லோவிடம் ஜெர்மனி செய்த தவறென்ன என்று கேட்டபோது, "நத்திங்" என்று கூறியதன் அர்த்தம் என்னவென்று நமக்குப் புரிகிறது.

http://tamil.thehindu.com/sports/ஜெர்மனிக்கு-அதிர்ச்சி-அளித்து-யூரோ-2016-இறுதியில்-பிரான்ஸ்/article8823183.ece

  • கருத்துக்கள உறவுகள்

எந்நேரமும் ஜெர்மனி வீரர்களீன் கால்களூக்கிடையில்தான் பந்து இருந்தது.இருமுனற அவர்களீன் கோலுக்குள்ளூம்....!

முல்லர் வினளயாடுவதை விட பெனால்டி லைனுக்குள் விழுவதையே லட்சியமாகக் கொண்டு இருந்தார். ஆனால் அருமையான வினளயாட்டு. பார்வையாளருக்கு நல்ல விருந்தாக அமைந்தது....! tw_blush:

  • தொடங்கியவர்

நேற்றைய போட்டியில் முதல் 5 அல்லது 6 நிமிடம் பிரான்ஸ் பாரிய நெருக்கடியை கொடுத்தது ஜேர்மனிக்கு.. அதன் பிறகு முதல் பாதி ஆட்டம் முழுக்க ஜேர்மனின் ஆதிக்கம்தான். இடைவேளைக்கு ஒரு நிமிடத்திற்கு முதல் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெனால்டி உதை மூலம் ஒரு கோலை போட்டாலும் ஏனோ பிரான்ஸ் அணியால் ஒரு திறமையான ஆட்டத்தை வெளிபடுத்த முடியவில்லை.

அடுத்த 45 நிமிட நேரத்தில் மீண்டும் பிரான்ஸ் அணி முதல் 5  நிமிடங்களை மாத்திரமே தனது  கட்டுபாட்டில் வைத்து இருந்தது. மீண்டும் ஜேர்மன் வீரர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுதினார்கள்.

2 வது கோலை போட்டு பிரான்ஸ் முன்னிலையில் இருந்தபோதும் ஜெர்மனி வீரர்கள் அடித்த பல பந்துகள் கோல் கம்பத்தில் பட்டு தெறித்தது.

நேற்றைய போட்டியில் பிரான்ஸ் அணி பக்கமே அதிஸ்டம் இருந்தது.

எது எப்படியோ இந்த ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் மிக நல்ல ஆட்டத்தை ஜேர்மன் அணி நேற்று விளையாடியது. பல முன்னனி வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாதபோதும்.

உண்மையை சொன்னால் ஜெர்மனி  தோல்வி அடைந்தபோதும், அவர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிகொணர்ந்ததால் கோபமோ வெறுப்போ ஏற்படவில்லை..tw_blush: அதிஸ்டம் நம் பக்கம் இல்லையே என்ற ஏமாற்றம்தான் இருந்தது..:(

 

இறுதி போட்டியில் விளையாடபோகும் போர்த்துக்கல், பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்..:)

 

ஒரு செய்தி

நேற்றைய போட்டியை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பிய ZDF தொலைகாட்சி, போட்டி தொடக்கிய பொழுது போட்டி தொடக்கத்தை காட்டாமல்  Hyundai , Turkish Airlines விளம்பரங்களை ஒளிபரப்பியதால் இங்கு பலத்த எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது...tw_angry:

 

  • கருத்துக்கள உறவுகள்

Six goals for Griezmann, who is in line for the Golden Boot

 

Antoine Griezmann's two goals in tonight's semi-final against Germany make him the top goal scorer at Euro 2016. The Atlético striker has hit six goals for France at the tournament, and whatever happens in Sunday's final in Paris, he looks set to collect the Adidas Golden Boot award. The only players who can deny him the award are Portugal's Cristiano Ronaldo and Nani, and France team mates Payet andGiroud,- all of whom would need to score a hat trick in the final, without reply from 'the Little Prince' just to pull level with the French No.7.

Griezmann, opened his Euro 2016 account against Albania, in France's second outing of the group stage. He followed that up with a brace against the Republic of Ireland,and brought up his fourth of the tournament against Iceland in the quarter finals.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

ஒரு செய்தி

நேற்றைய போட்டியை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பிய ZDF தொலைகாட்சி, போட்டி தொடக்கிய பொழுது போட்டி தொடக்கத்தை காட்டாமல்  Hyundai , Turkish Airlines விளம்பரங்களை ஒளிபரப்பியதால் இங்கு பலத்த எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது...tw_angry:

 

கடைசி நேரத்திலையும் காசு பாத்திருக்கினம்tw_blush:

  • தொடங்கியவர்

இறுதிக் கட்டத்தை எட்டிய யூரோ கிண்ணப் போட்டிகள்-ஓர் அதிரடி அலசல் 

 

FB_IMG_1467925435355

இறுதிக் கட்டத்தை எட்டிய யூரோ கிண்ணப் போட்டிகள்-ஓர் அதிரடி அலசல்.

ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் கால்பந்து தொடரான யூரோ கிண்ண தொடரின் 15 ஆவது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இத்தொடர் எதிர்வரும் ஞாயிறு நடைபெறும் இறுதிப்போட்டியுடன் நிறைவு பெறவுள்ளது.

24 அணிகளுடன் ஆரம்பித்த போட்டியில் தற்பொழுது பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கல் ஆகிய அணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இரு அணிகளுக்கிடையிலான இறுதி போட்டி ஞாயிறு நள்ளிரவு 12.30 க்கு நடைபெறவுள்ளது.

இதில் போட்டியை நடத்தும் நாடான பிரான்ஸ் 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. முன்னைய இரு தடவைகளிலும்(1984,2000) பிரான்ஸ் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்திருந்தது. அதிலும் 1984 சொந்த மண்ணில் வெற்றியைச் சுவைத்திருந்தது.

இது வரை காலமும் யூரோ கிண்ண தொடர்களில் 4 முறை போட்டியை நடத்தும் நாடு இறுதி போட்டியில் விளையாடியுள்ளது. அதில் 3 முறை போட்டியை நடத்தும் நாடு வெற்றி பெற்றுள்ளது.( 1964- ஸ்பெய்ன் ,1968- இத்தாலி ,1984- பிரான்ஸ் ). ஒரு முறை போட்டியை நடத்தும் நாடு தோழ்வியைத் தழுவியுள்ளது.(2004- போர்த்துக்கல்)

போர்த்துக்கல் பொறுத்தவரை யூரோ கிண்ண தொடர்களில் இது அவ்வணியின் 2 ஆவது இறுதி போட்டியாகும். முன்னர் 2004 இல் சொந்தமண்ணில் இறுதி போட்டியில் தோற்று கிண்ணத்தை தவறவிட்டிருந்தது.

FB_IMG_1467926457642

2016 யூரோ தொடரைப்பொறுத்தவரையில் பிரான்ஸ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி தனது ஆதிக்கத்தை தொடர்கிறது. குறிப்பாக அவ்வணிக்கு அந்தோனியோ கிரெய்ஸ்மன் 6 போட்டிகளில் விளையாடி 6 கோல்கள் பெற்று அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக  திகழ்கிறார்.

அத்துடன்FB_IMG_1467838313550 ஒரு யூரோ  கிண்ண தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற வரிசையில் பிரான்ஸின் மைக்கல் பிளாட்டினிக்கு(9-1984) அடுத்த இடத்தில் உள்ளார். அத்துடன் ஜிரூட் மற்றும் பேயெட் 3 கோல்கள் அடித்து அடுத்தநிலையில் உள்ளனர்.

போர்த்துக்கல் ஆரம்பத்தில் தடுமாறி குழு நிலைப்போட்டிகளில் வெற்றி ஏதும் பெறாமல் அடுத்த சுற்றுக்கு நுழைந்து அடுத்தடுத்த சுற்றுக்களிலும்  அதிர்ஷ்டம் கைகொடுக்க அரை இறுதிக்கு முன்னேறி அரை இறுதியில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

அவ்வணிக்கு நட்சத்திர வீரர் ரொனால்டோ தொடரில் 3 கோல்கள்  அடித்து நம்பிக்கை அளித்துள்ளார்.  ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில் யூரோ கிண்ண போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பிளாட்டினியின்(9 கோல்கள் ) சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் நானியும் 3 கோல்கள்  அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

இரு அணியினரும் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்ற ஆவலாக உள்ளனர். இரு அணிகளும் சம பலம் கொண்டிருப்பினும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு பிரான்சிற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. எனினும் போர்த்துக்கல் சொந்த மண்ணில் பிரான்ஸை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது.

மொத்தத்தில் இப்போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

http://vilaiyattu.com/16170-2/

  • தொடங்கியவர்

13653078_1179180658801445_61919805769733

13652895_1179180902134754_37386070398898

13653080_1179180732134771_57247008614916

13603825_1179181335468044_66821201846317

13612275_1179180735468104_63211203859657

13584865_1179181338801377_51099730928579

13613268_1179180855468092_84109081338871

13580570_1179180718801439_11704683057388

13576638_1179180818801429_42034628991792

13584940_1179180845468093_75832498175650

13584761_1179180655468112_21680672813375

13580548_1179180692134775_71366533995547

நாடு திரும்பிய வேல்ஸ் அணிக்கு மகத்தான வரவேற்பு

  • தொடங்கியவர்

யூரோ கோப்பையை வெல்வது யார்?

 
 
 

 
  • ronaldo.jpg

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ்-போர்ச்சுகல் இடையிலான இறுதி ஆட்டம் பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது.

பிரான்ஸ் அணி மூன்றாவது முறையாக யூரோ கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணி இதற்கு முன்னர் 1984, 2000-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் இதுவரை தோற்றதில்லை என்பதால் இந்த முறையும் கோப்பையை வென்றுவிடலாம் என்ற உற்சாகத்தில் போர்ச்சுகலை சந்திக்கிறது பிரான்ஸ்.

அச்சுறுத்தும் கிரிஸ்மான்: பிரான்ஸ் அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார் ஸ்டிரைக்கர் ஆன்டைன் கிரிஸ்மான். இந்தத் தொடரில் இதுவரை 6 கோல்களை அடித்து அதிக கோலடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் கிரிஸ்மான், போர்ச்சுகல் அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு அடுத்தபடியாக ஆலிவர் ஜிரூவ்டு, டிமிட்ரி பேயட் ஆகியோர் மிரட்டி வருகின்றனர். இவர்கள் இருவருமே இதுவரை தலா 3 கோல்களை அடித்துள்ளனர்.

ஆனால் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியோ இதுவரை எந்தவொரு பெரிய போட்டியிலும் வென்றதில்லை என்ற நீண்ட நாள் குறையைத் தீர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது. உலகின் தலைசிறந்த வீரரான ரொனால்டோ, தனது தாய்நாட்டுக்கு கோப்பையை வென்று தருவதற்கு இதைவிட சிறந்த தருணம் அமையுமா என்பது சந்தேகம்தான். எனவே இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார்.

போர்ச்சுகலின் துருப்பு சீட்டாக ரொனால்டோ திகழ்கிறார். ஆரம்பத்தில் தடுமாறிய ரொனால்டோ, கடைசிக் கட்டத்தில் அபாரமாக ஆடி 3 கோல்களை அடித்து அபார ஃபார்முக்கு திரும்பியுள்ளார். வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தலையால் முட்டி கோலடித்ததோடு, நானிக்கும் கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் ரொனால்டோ. அவருடைய அபார ஆட்டம், பிரான்ஸýக்கு எதிராகவும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் பயிற்சியாளர்: இறுதி ஆட்டம் குறித்து பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்கேம்ப்ஸ் கூறுகையில், "பிரான்ஸ் மக்களின் அனைத்துவிதமான பிரச்னைகளையும் தீர்க்கும் ஆற்றல் எங்களிடம் இருக்கிறது என்று நாங்கள் சொல்ல முடியாது. ஆனால் அவர்களின் கவலையை மறக்கடிக்கும் ஆற்றல் எங்களிடம் இருக்கிறது' என்றார். அதாவது கோப்பையை வெல்லும்பட்சத்தில் பிரான்ஸ் மக்களை மகிழ்விக்க முடியும் என்பதையே அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்தார்.

1998-இல் நடைபெற்ற உலகக் கோப்பை, 2000-இல் நடைபெற்ற யூரோ கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணியின் கேப்டனாக டெஸ்கேம்ப்ஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை...

இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பிரான்ஸ் 18 வெற்றிகளையும், போர்ச்சுகல்

5 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. ஓர் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதில் பிரான்ஸ் 49 கோல்களையும், போர்ச்சுகல் 28 கோல்களையும் அடித்துள்ளன.

1975 முதல் தற்போது வரையில் பிரான்ஸýடன் 10 ஆட்டங்களில் மோதியுள்ள போர்ச்சுகல், அவையனைத்திலும் தோற்றுள்ளது. குறிப்பாக ரொனால்டோ இடம்பெற்றிருந்த போர்ச்சுகல் அணி, பிரான்ஸýக்கு எதிராக வெற்றி கண்டதில்லை.

பிரான்ஸ் அணி தனது சொந்த மண்ணில் 1984-இல் நடைபெற்ற யூரோ கோப்பை போட்டியிலும், 1998-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் வாகை சூடியுள்ளது. அதனால் இந்த ஆட்டத்திலும் அந்த அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

http://www.dinamani.com/sports/2016/07/10/யூரோ-கோப்பையை-வெல்வது-யார்/article3521772.ece

  • தொடங்கியவர்

யூரோ இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி ரொனால்டோ கோப்பையை வெல்வாரா?

பாரீஸ் என்ற சொல்லை சொல்லி முடிப்பதற்கு முன்பே நம் ஸ்மால் பிரெய்னில் ஸ்பார்க் ஆகும் விஷயம் ஈபிள் டவர்.  உலக அதிசயமான ஈபிள் கோபுரம் பிரான்சிற்கு மட்டுமல்ல, ஐரோப்பாவிற்கே அதுதான் அடையாளம். பிரான்சின் நடந்துவரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய திருவிழாவான யூரோ 2016 கால்பந்து தொடரால் தினமும் வண்ணங்கள் மாறி மாறி இப்போத மனசை மெர்சலுமாக்குகிறது.

ஆம்... ஒவ்வெரு நாளும் ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் அணியின் தேசியக் கொடியின் வர்ணங்கள் ஈபிள் டவரில் ஜொலித்துக்கொண்டிருந்தன. இன்று நள்ளிரவு நடக்கும் இறுதிப் போட்டிக்குப் பின்னர் அந்த உலக சின்னத்தை ஆக்கிரமிக்கபோவது எந்த தேசத்தின் கொடி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். ஐரோப்பிய கோப்பையின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

சொந்த மண்ணில், சொந்த மக்களுக்கு மத்தியில் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில் விளையாடும் பிரான்ஸ் அணி வெல்வதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை. தீவிரவாதத்தின் மொத்த அச்சுறுத்தல்களையும் மீறி மொத்த பிரஷரையும்  தாண்டி, உலக சாம்பியன் ஜெர்மனியையும் வீழ்த்தி ஈபிள் டவரின் டாப்பில் அமர்ந்திருக்கிறது பிரான்ஸ் அணி. போக்பா என்னும் இளம் நம்பிக்கை நட்சத்திரத்தை நம்பிக் களமிறங்கிய அணிக்கு பயட், கிரீஸ்மேன் என்னும் ரூபத்தில் இரு நாயகர்கள் முளைக்க ஒரு போட்டியில் கூடத் தோற்காமல் அசாத்தியமாக பைனலுக்குள் நுழைந்துள்ளனர்.

rons.jpg

பிளாக்மெயில் புகாரால் முன்னனி ஃபார்வேர்டு பென்சிமா நீக்கப்பட, ஊக்கமருந்து சர்ச்சையால் சகோ தடை பெற மனரீதியான  பிரச்சனைகளைத் தாண்டியே களம் கண்டது பிரான்ஸ் அணி. சாக்னா, எவ்ரா போன்ற அதிக வயது கொண்ட வீரர்களாக இருந்தனர். கோல் போஸ்டை கேப்டன் லோரிஸ், தனி ஒருவனாய் பாதுகாத்தார். இந்தத் தொடரில் இதுவரை 6 கோல்கள் அடித்து அசத்திய கிரீஸ்மேனின் எழுச்சி ‘கடைசி கட்டத்தில் ஜெயிப்பவர்கள்’ என்று பிரான்ஸ் மீது படிந்திருந்த கறையைத் துடைத்து எறிந்தது. 4 கோல்கள் அடித்துள்ள ஆலிவியர் ஜிரௌடும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். கிரீஸ்மேன் – ஜிரௌட் – பயட் மூன்று சிங்கங்கள்தான் பிரான்ஸ் அணியின் துருப்புச்சீட்டு.
 

fra.jpg

அதேசமயம் போர்ச்சுகல் பைனல் வரை முன்னேறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகளின் லீக் சுற்று சொதப்பலால் போர்ச்சுகல் அணியின் நாக் அவுட் போட்டிகள் அளிதாக அமைந்துவிட்டன. கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் ஒன்மேன் ஆர்மியை நம்பிக் களமிறங்கும் அணியாகத்தான் எல்லோரும் போர்ச்சுகலைப் பார்த்தனர்.

ஆனால் நானி, ரெனாடோ சான்சஸ் ஆகியோரும் கைகொடுக்க திக்கித் திணறி கடைசிப் படியில் வந்து நிற்கிறது போர்ச்சுகல். அரையிறுதியில் கோல் அடித்து ரொனால்டோவும் பார்முக்கு திரும்பியுள்ளார். ஆனால் தேசிய அணிக்காக ரொனால்டோ ஒரு கோப்பை கூட வென்றதில்லை. தன்னுடைய நீண்ட நாள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள ரொனால்டோவிற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்.

 

ஏன் கடைசி சந்தர்ப்பமாகக் கூட இருக்கலாம். அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வாரா? ஒரு டீமாக டெவலப்மென்ட் அடைந்துள்ள போர்ச்சுகல் அணி கண்டிப்பாக பிரான்சிற்கு சவால் விடும்.

இது வெறும் இரண்டு நாடுகளுக்கு மட்டும் நடக்கும் போட்டியல்ல. தன்மானத்திற்கு எதிரான போட்டி. சொந்த ஊரில் மானம் காக்க பிரான்சும், தங்கள் கேப்டன் மீதான உலகின் தூற்றலைத் துடைக்கப் போர்ச்சுகல் அணியும் நிச்சயம் போராடும். நள்ளிரவு முடிவு தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம் ஐரோப்பாவின் கிங் யாரென்று?

http://www.vikatan.com/news/sports/66001-ronaldos-date-with-destiny-as-portugal-face-france.art

  • தொடங்கியவர்

யூரோ கோப்பையில் பட்டம் வெல்வது யார்?

 
பிரான்ஸ் அரையிறுதி நாயகன் கிரீஸ்மான்.
பிரான்ஸ் அரையிறுதி நாயகன் கிரீஸ்மான்.

யூரோ கோப்பை கால்பந்து தொட ரின் இறுதிப்போட்டியில் இன்று நள்ளிரவு போட்டியை நடத்தும் பிரான்ஸ், போர்ச்சுக்கல் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

செயின்ட் டெனிஸ் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி இஎஸ்பிஎன் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய் கின்றன. பிரான்ஸ் அணி கடந்த 1984 மற்றும் 2000-ம் ஆண்டு நடை பெற்ற யூரோ தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தற்போது 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத் துடன் உள்ளது. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் பிரான்ஸ் கூடுதல் பலத்துடன் உள்ளது. போர்ச்சுக்கலுடன் ஒப்பிடுகையில் அந்த அணி கோப்பை வெல்ல சற்று அதிகமான வாய்ப்பு இருப் பதாக கருதப்படுகிறது.

பிரான்ஸ் அணி தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரராக கிரிஸ்மான் உள்ளார். அவர் இந்த தொடரில் 6 கோல்கள் அடித்து உள்ளார். அரையிறுதியில் உலக சாம்பியனான ஜெர்மனிக்கு எதிராக 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

பால் போக்பா, மட்டுய்டி, லோரிஸ், ஆலிவியர் கிரவுட், டிமிட்ரி பயேட் போன்ற துடிப்பான வீரர்களும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இதில் கிரவுட், பயேட் ஆகியோர் இந்த தொடரில் தலா 3 கோல்கள் அடித்துள்ளனர்.

போர்ச்சுக்கல் அணி லீக் சுற்றில் தட்டுத்தடுமாறியே 3 ஆட்டத்தையும் டிராவில் முடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் கூடுதல் நேரத்திலும் காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டிலும் வெற்றியை பெற்றது. ஆனால் அரையிறுதியில் சிறப்பாக விளையாடியது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த தொடரில் 3 கோல்கள் அடித் துள்ளார். அரையிறுதியில் அவர் தலையால் முட்டி அடுத்த கோல் சிறப்பம்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் 2-வது கோல் அடிக்க வும் அவர் உதவியாக இருந்தார்.

ரொனால்டோவை தவிர லூயிஸ் நானி, குரேஷ்மா ஆகியோரும் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். போர்ச்சுக்கல் இதுவரை யூரோ கோப்பையை வென்றது இல்லை. சொந்த நாட்டில் 2004-ல் நடைபெற்ற யூரோ தொடரில் 2-வது இடத்தை பிடித்தது. தற் போது முதல் முறையாக கோப் பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகிறது. சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள் ளன. இதில் பிரான்ஸ் 18 ஆட்டத் தில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த ஆட்டங் களில் பிரான்ஸ் அணி தரப்பில் 49 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. போர்ச்சுக்கல் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தரப்பில் 28 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தி ருந்தது.

பிரான்ஸ் அணி சொந்த மண் ணில் எப்போதுமே சிறப்பாக விளை யாடக்கூடிய அணி. அந்த அணி 1984 யூரோ தொடரையும், 1998 உலகக் கோப்பையையும் சொந்த மண்ணில் கைப்பற்றியுள் ளது. இம்முறையும் அதே உத்வேகத்து டன் களம் காண்கிறது. ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி பிரான்ஸ் அணிக்கு எதிராக இதுவரை வெற்றி பெற்றதில்லை. மாறாக 10 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. யூரோ தொடரில் இரு அணிகளும் இதற்கு முன்னர் இரு முறை சந்தித்துள்ளன.

1984 மற்றும் 2000-ம் ஆண்டு யூரோ தொடர்களின் அரை யிறுதியில் போர்ச்சுக்கல் அணியை பிரான்ஸ் வீழ்த்தியுள்ளது. இந்த இரு ஆட்டங்களிலும் முறையே மைக்கேல் பிளாட்டினி, ஜிடேன் ஆகியோர் முத்திரை பதித்தனர். 2006 உலகக் கோப்பை அரை யிறுதியிலும் பிரான்ஸ் அணியிடம் போர்ச்சுக்கல் தோல்வியை தழுவி யுள்ளது.

http://tamil.thehindu.com/sports/யூரோ-கோப்பையில்-பட்டம்-வெல்வது-யார்/article8831184.ece

  • தொடங்கியவர்

13620369_1180344555351722_82397920931473

13620799_1180344588685052_65664819689827

13576756_1180344622018382_24784376938262

13640758_1180344668685044_24951138423543

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.