Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) தயாரிப்பு முறை நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) இவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும் தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும்.

 

ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம். பயன்படுத்தும் முறை ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை. ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது? தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர் ,முளைகட்டிய தானியக் கலவை ,தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும் .இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் . ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான் அளவுகள் 4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் ) 15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர். 30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர். 60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். 90 -ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர். 6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் ) 30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர். 60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர். 90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். 120-ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர். 150 -ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். ஓர் ஆண்டு பயிர்களுக்கு 30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர். 60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர். 90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். 120-ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். 150 -ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர். 180 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். 210 -ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர். 240 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். 270 -ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் . பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும். ஜீவாமிர்தம் நன்மைகள் என்ன? ஜிவாமிர்தம் பாய்சசப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

 

ஜிவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது . ஜிவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது. ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது. ஜீவாமிர்தக் கரைசலுடன் மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா ஆகியவற்றை கலந்து பயன்படுத்தலாமா? ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அஸ்திரம் என்பது பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படும் பொருள். எனவே எதிர்மறையான இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. வேலை குறையட்டும் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யாதீர்கள்.

http://farmerflower.blogspot.com.au/2014/01/blog-post_8515.html

நன்றி உடையார், இப்படி வெகு இலகுவாகச் செய்யும் உணவு முறையை ஒரு நாளும் நான் கேள்விப் படவில்லை

உது சுடு தண்ணீர் வைப்பதை விட இலகுவாக இருக்கு

எப்பவாவது கனடா பக்கம் வந்தால் கண்டிப்பாக என் வீட்டுப் பக்கம் வரவும் (மவனே)

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சுமேக்காகத் தேடி எடுத்துப் போட்டீங்களா உடையார்.....! 

லன்டனுக்குப் போனால் தவறாமல் அவரைச் சந்திக்கவும்... ஒரு டின் பியர் ஃபிரீ... !!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎/‎05‎/‎2016 at 9:49 AM, நிழலி said:

நன்றி உடையார், இப்படி வெகு இலகுவாகச் செய்யும் உணவு முறையை ஒரு நாளும் நான் கேள்விப் படவில்லை

உது சுடு தண்ணீர் வைப்பதை விட இலகுவாக இருக்கு

எப்பவாவது கனடா பக்கம் வந்தால் கண்டிப்பாக என் வீட்டுப் பக்கம் வரவும் (மவனே)

 இது விவசாயத்திற்கு எழுதப்பட்டது நிழலி. இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்த.

இப்ப நான் வீட்டில் வரும் உணவுக்கழிவுகளை சிறு பாத்திரத்தில் சேமித்து கிறைட்டரில் அடித்துப்போட்டு கன்றுகளுக்கு அடியில் ஊற்றிவிடுவேன், நல்ல பலன், விரைவில் உக்கிவிடும்.  செயற்கை உரத்தைவிட நீண்ட காலத்திற்கு பயன் தரும், அத்துடன் அதிக மண்ணுண்ணி புழுக்கள் உயிர் வாழும்

 

கட்டாயம் அறிவிப்பேன், அப்பதான் உங்கள் சாப்பாட்டை ருசி பார்க்கலாம் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 20.5.2016 at 3:49 AM, நிழலி said:

நன்றி உடையார், இப்படி வெகு இலகுவாகச் செய்யும் உணவு முறையை ஒரு நாளும் நான் கேள்விப் படவில்லை

உது சுடு தண்ணீர் வைப்பதை விட இலகுவாக இருக்கு

எப்பவாவது கனடா பக்கம் வந்தால் கண்டிப்பாக என் வீட்டுப் பக்கம் வரவும் (மவனே)

இதென்ன கரைச்சலாய் கிடக்கு......
உடையார்.... உரத்தைப் பற்றி எழுதிறார்.
நிழலி.... உணவைப் பற்றி கருத்து எழுதுகிறார். சரியான சாப்பாட்டு ராமன். 28.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதென்ன கரைச்சலாய் கிடக்கு......
உடையார்.... உரத்தைப் பற்றி எழுதிறார்.
நிழலி.... உணவைப் பற்றி கருத்து எழுதுகிறார். சரியான சாப்பாட்டு ராமன். 28.gif

இரண்டு விதமான உடல் பசி சாப்பாட்டு ராமன் tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.