Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கைக்குண்டு தாக்குதல்

Featured Replies

Bomb-Grenade-640x480.jpg

யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்றால் கைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவுமில்லை.

இக் கைக்குண்டு தாக்குதலானது இன்றிரவு 8.30 மணியளவில் கந்தரோடை உடுவில் வீதி ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் வசித்து வருகின்ற முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத கும்பலொன்றால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இரவு மீண்டும் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் மூகத்தை முழுதாக மூடிய நிலையில் ஒன்பது பேர் வந்துள்ளனர்.

வந்தவர்கள் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்த முயற்சித்த போது குறித்த நபர் தப்பியோட முயன்றுள்ளார். இதன் போதே அவர் மீது கைக்குண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். எனினும் கைக்குண்டு வெடிக்கவில்லை.

http://www.virakesari.lk/article/6901

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா சேப்டி கிளிப்பை அவங்க அப்பனா வந்து கழட்டுவா?  tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, vanangaamudi said:

ஆமா சேப்டி கிளிப்பை அவங்க அப்பனா வந்து கழட்டுவா?  tw_confused:

வாள் வெட்டு கலாச்சாரத்திலிருந்து, இப்ப தான்.... கைக்குண்டுக்கு மாறி இருப்பதால்....
புதிய அனுபவமாக இருக்கும்...... போகப் போக.... "சேப்டி கிளிப்பை"  தாங்களே... கழட்டப் பழகி விடுவார்கள்.tw_blush:

யாழ்.கந்தரோடையில் "புலிகளின் தமிழன்" குண்டு வீசி தாக்குதல்

 

யாழ்.கந்தரோடையில் "புலிகளின் தமிழன்" குண்டு வீசி தாக்குதல்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:


விடுதலைப்புலிகளின் உள்ளூர் தயாரிப்பான கைக்குண்டு  வீசி யாழ்.கந்தரோடை பகுதியில் உள்ள  வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


யாழ்,கந்தரோடை மடத்தடி பகுதியில் உள்ள தேவராஜா முருகதாசன் என்வரின் வீட்டின் மீதே நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் குறித்த கைக்குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

வீசப்பட்ட குண்டானது வெடிக்காததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


குண்டு வீசப்பட்டதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் உடனடியாக சுன்னாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து அவர்கள் வந்து குண்டினை மீட்டு சென்றுள்ளனர்.


நேற்றிரவு வீட்டில் இருந்த வேளை வீட்டின் முன்பாக ஏதோ விழுந்தது போன்ற சத்தம் கேட்டு சென்று பார்த்த போது "சொப்பின்பை" யில் சுற்றப்பட்ட நிலையில் இக் குண்டு காணப்பட்டது அதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கினேன்.


சில மாதங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிலர் எங்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்கள். அது தொடர்பில் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் செய்யபப்ட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் மூவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர். நீதிமன்றினால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை த்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.


அது தவிர வேறு எதுவும் தற்போது என்னால் கூற முடியாது உள்ளது என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.


குறித்த குண்டானது விடுதலைப்புலிகளினால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குன்டாகும். இக் கைக்குண்டு விடுதலைப் புலிகள் "தமிழன் " குண்டு என பெயர் சூட்டி இருந்தனர். இக் குண்டை இறுதி யுத்தம் இடம்பெற்ற கால பகுதியில் விடுதலைப்புலிகள்  இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள பயன்படுத்தினர்.


குறித்த குண்டினை ஏனைய கைக்குண்டுகள் போன்று குண்டின் மீது உள்ள கிளிப்பை அகற்றி  வீசினால் வெடிக்காது. இக் குண்டின் கிளிப்பை அகற்றிய பின்னர் அதன் மேல் பகுதியை கைகளினால் அல்லது வேறு வகையில் குத்திய பின்னர் வீசினால் தான் குண்டு வெடிக்கும்.


இக் குண்டினை வீசியவர்களுக்கு அதனை வீசுவதற்கான பொறிமுறை தெரியாததாலையே அக் குண்டு வெடிக்கவில்லை.  உரிய முறையில் வீசி இருந்தால் அக் குண்டு வெடித்து சேதத்தை உருவாக்கி இருக்கும்.


இக் கைக்குண்டு தற்போது யாழ்ப்பணத்திற்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது ? . அது யாழில் உள்ள இளைஞர் குழுக்களின் கைகளில் எவ்வாறு கிடைத்தது ? இதனை வீசியவர்கள் யார் ? என்பது தொடர்பில் இதுவரை எதுவும் தெரிய வரவில்லை.


இதேவேளை கடந்த மாதம் யாழில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டுக்குழு ஒன்றிடம் இருந்து இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்து இருந்தனர். அதேவேளை கடந்த வருடம் யாழில் கைது செய்யப்பட்ட "ஆவா" குழு எனும் குழுவிடம் இருந்தும்  புதிய ரக கைக்குண்டுகள் இரண்டும் பொலிசாரினால் மீட்கப்பட்டு இருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132586/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.