Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியலில் றோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலில் றோ!

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பார்வை தமிழீழ மக்களின் அவல வாழ்வு குறித்து திரும்பியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியையும் ஒரு வித புத்துணர்ச்சியையும் ஈழத்தவருக்கு கொடுத்துள்ளது.

அதேவேளை, தமிழக அரசியலின் தற்போதைய நிகழ்வுகள் தமிழீழத்தின் உருவாக்கத்தைச் சிதைப்பதற்கான முன்னெடுப்புக்களாகவே தமிழீழத்தவரர்களால் சோக்கப்படுகின்றது.

ஆம், தழிழகத்தின் திராவிட அரசியல் கட்சிகளிடையே மிகவும் நுண்ணியமான முறையில் இந்திய மற்றும் வெளிநாட்டு; உளவு நிறுவனங்கள் இந்தக் கட்சிகளுக்குத் தெரியாமலேயே இவர்களுக்குள் வேரூன்றியிருக்கின்றனர்.

இந்த உளவு நிறுவனங்கள், தமிழகக் கட்சிகளுக்குள் சில உள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளமை நடந்துவரும் அரசியல் நடப்புக்களில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக தமிழீழம் தொடர்பாக தமிழகக் கட்சிகளும் அதன் தலைவர்களும்; காட்டிய அக்கறையை நாம் எடுத்து நோக்கினால், நெடுமாறன் மற்றும் வைகோவின் சேவைகளையும், முயற்சிகளையும் ஈழத்தவர் எளிதில் மறந்துவிட முடியாது. இதைவிட, பாட்டாளிக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாமளவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோரையும் தமிழீழத்தவர் நினைவில் வைத்திருத்தல் அவசியம.;

மேற்கூறிய அரசியல் தலைவர்களை இந்தப் பத்தியில் குறிப்பிடுவதற்கான காரணம், தமிழீழப்போராட்டம் மிகவும் இறுக்கமான நிலையினை அடைந்த வேளை, அதாவது 90களின் பின்பகுதியில், இந்தத் தலைவர்கள் வழங்கிய உதவிகள் மற்றும் அரசியல் பிணைப்புக்கள் எண்ணிலடங்காது என்பத குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தற்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், கலைஞர் அவர்கள் தனது இறுதிக்கால ஆட்சியில் தமிழீழத்திற்கான தனது வரம்பிற்குட்பட்ட விதத்தில் ஆதரவினை கொடுத்துவருவது வரவேற்கத்தக்கதுடன் இந்த ஆதரவானது தொடர்ந்து கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை தமிழீழ மக்களுக்கு உண்டு.

பெருகிவரும் தழிழீழ ஆதரவினைத் தடுத்தல்

கலைஞர் அவர்கள் தனது ஆட்சியினை ஆரம்பித்தது முதல், தழிழீழ ஆதரவுச் செயற்பாடுகள் பல்வேறுபட்ட தரப்பினரால் தமிழகத்தில் ஆரம்பமாகியது.

இந்த செயற்பாடுகள் இந்திய உளவு நிறுவனமான றோவிற்கு பாரிய சவாலையும் தலையிடியையும் கொடுக்கத்தொடங்கியதும் கொடுத்து வருவது இன்று நிதர்சனமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு கட்டுப்படுத்துவது?

தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவுவதைப் பொறுத்துக்கொள்ளாத றோவிற்குச் சில முக்கிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தமது நகர்வுகளை மேற்கொள்ளுவதற்கு றோ கணிப்பிட்டதும் குறிவைத்துள்ள இரண்டு தமிழகத் தலைவர்கள் கலைஞர் கருணாநிதியும், வைகோவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் கலைஞர் கருணாநிதியும், வைகோவும்?

இதற்கு விடை தேடுவது கடினமான ஒன்றல்ல.

ஏனெனில், கலைஞர் அவர்களது ஆட்சி இன்று பல்வேறுபட்ட கட்சிகளின் கூட்டாட்சி. இந்த கூட்டாட்சியில் இணைந்துள்ள கட்சிகள் சாதி, மத அடிப்படையிலான கட்சிகள். இவை எந்த நேரத்திலும் ஆட்சியதிகாரத்தினை விட்டு விலகுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

மறுபக்கத்தில், தனக்குப் பின்னர் தமிழகத்தில் திராவிட அரசியிலில் முன்னிலை வகிப்பவரை தோற்றுவித்தல் போன்ற எண்ணங்கள் குறிவைக்கப்படுவதற்கான காரணங்கள்.

மற்றையது, தமிழக அரசியலில் தனது விரிவான நுழைவினை எதிர்பார்த்து இருக்கும் வைகோ! இவரின் சொல்லாண்மையை எந்தநேரத்திலும் செவிமடுக்கும் வட இந்திய அரசியல் தலைமைகள்.

எனவே, பெருகி வரும் தமிழீழத்திற்கான ஆதரவினையும், அதற்கு வழிவகைகளைச் செய்துவரும் இந்த இரண்டு தலைவர்களையும் றோ குறிவைத்தது.

தமிழீழத்தின் முன்னேற்றத்தை தடுப்பதில் றோவின் நகர்வுகள்

இந்திய அரசியலின் அடிப்படையினை நிர்ணயிப்பது பணமும் பதவியும் என்பதை எவரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

இந்த இரண்டு காரணிகளையும் பயன்படுத்தி மறுமலர்ச்சித் திராவிடர் கழகத்தினை இரண்டு குழுக்களாகப் பிரிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழத்தினைப பயன்படுத்தியது றோ!

இதன் மூலம், தமது உளவியல் போரில் முதல் வெற்றியைப் பெற்றது.

மறுமலர்ச்சித் திராவிடர் கழகத்தினைப பிரிப்பதன் மூலம், வைகோவின் சிந்தனை மற்றும் அவரது செயற்பாடுகளை அவரது கட்சியின் வட்டத்திற்குள் மட்டும் மட்டுப்படுததியது.

இதன் மூலம் ஈழத்தமிழர்கள் குறித்து அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய மிக முக்கிய விடயமாகும்.

தமிழகத்தின் அடுத்த தலைமுறையின் தலைவராக விளங்கக்கூடிய வகையில் தனது மகன் ஸ்டாலினை உருவகப்படுத்துவதற்கு கலைஞர் பெரும் பிரயத்தனம் எடுத்து வரும்வேளையில், வைகோவைப் பலவீனப்படுத்த நடத்தப்பட்ட சதி வலைக்கு கலைஞர் தெரிந்தோ தெரியாமலோ றோவினால் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற

  • 1 month later...

எங்க சுட்டீங்கள் இதை :o

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்க வேண்டுமானால் இதுதான் ஒரு துரும்புச்சீட்டு கலைஞர் அரசை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு. வேறு ஒன்றும் இல்லை.

இதை தமிழக மற்றக்கட்சிகள் புறம் தள்ளி எங்களுக்கு ஆதரவான குரலை தொடர்ந்து கொடுத்தால் மத்திய அரசின் இந்த வேலை பலிக்காது

இவர் கடைசியாக என்ன சொல்ல வருகிறார் என்பதே தெறியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் ஒன்று, ஒன்று

ஈர் ஓன்று, இரண்டு

மூ ஒன்று, மூன்று.......

இதுவாவது புரியுதா ராசா?

:o:o:o :P :P :P :lol::lol::lol:

புரிகிறது உங்களுக்கு எதுவுமே புரியாது என்பது

ராசா இதை யாருக்குச் சொல்கிறீர்கள்..........?

மிகவும் தெளிவாக அலசி கட்டுரை வரைந்துள்ளிர்கள். இதைவிட சோ போன்ற ஈழத்திற்கு எதிரான பூச்சாண்டிகளை மறந்து விட்டிர்கள். புலிகளுக்கு(ஈழத் தமிழ்) தமிழ் நாட்டிலாதரவு வந்திருமோ பயத்தினாலும் சிங்கள அரசு உடனும் ரொவுடனும் இரகசிய தொடர்புகளை வைத்து தமிழக ஆட்சியை பயமுருத்திய படி இருப்பார்க்ள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் கடைசியாக என்ன சொல்ல வருகிறார் என்பதே தெறியவில்லை

தெரிஞ்சு வைச்சு என்ன கிளிக்கவா போறீங்க? இதுவரைக்கும் செய்தது எல்லாம் போதுமே..

Edited by snegi

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்க வேண்டுமானால் இதுதான் ஒரு துரும்புச்சீட்டு கலைஞர் அரசை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு. வேறு ஒன்றும் இல்லை.

இதை தமிழக மற்றக்கட்சிகள் புறம் தள்ளி எங்களுக்கு ஆதரவான குரலை தொடர்ந்து கொடுத்தால் மத்திய அரசின் இந்த வேலை பலிக்காது

Recent recent "arms boat capturing" drama on Tamil Nadu cost is a part of it.

View my posting ->undefined

The current Sri Lankan government is not like previous governments. It is doing a lot of cunning work to weaken the Tamil community not only in Tami Eelam but also around the world. Sri Lanka gov. wants Tamil Nadu shoud be divided and weak so that they will keep their mouth shut even Sri Lanka State Terrorism wipes out Tamils from Tamil Eelam. This gun boat drama is a part of it. Tamils around the world should understand this. It is now learnt that the recent split in the MMDMK is also a work of the Sri Lankan government with the help of some politicians in Nadu and North India. Central government also supported this to reduce the pressure cause by MMDMK which rallied the Tami Nadu people against India's policy towards SL. Now you can't hear any voice of Vaiko. Recently Karunanithi started to increase the tone on this case. His daughter also participated in some rallies gave interviews. Now this is a warning for him. His government can be dissolved again like before by showing a reason of LTTE threads. In the future you will see that MK will change his tone. The gun boat issue have not cause any damage on the political ground but it at least on yarl.com. See the discussion page. People alreay divided! This is Tamilan

Edited by rajcan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.