Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் பேச்சாளர் கடத்தப்பட்டார்

Featured Replies

மஹிந்தவின் பேச்சாளர் கடத்தப்பட்டார்
 
 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட, சிங்கபூரிலிருந்து நாடுகடத்தப்பட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/173735/மஹ-ந-தவ-ன-ப-ச-ச-ளர-கடத-தப-பட-ட-ர-#sthash.u7cZXMZU.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

 என்ன களவோ?

முன்னம் மகிந்தன்ற கமராக்காரர், டுபாயில கமரா களவெடுத்து மாட்டினவர்.

  • தொடங்கியவர்

மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்

 

மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளரும், சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவையின் தலைவருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். ப்ரோட்காஸ்ட் ஏசியா கண்காட்சியில் பங்கேற்பதற்காக அவர் சிங்கப்பூரிக்கு பயணம் செய்திருந்தார்.


எனினும், அந்நாட்டு குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் ரொஹான் வெலிவிட்டவை நாடு கடத்தியுள்ளனர்.


கடந்த செவ்வாய்க்கிழமை வெலிவிட்ட சிங்கப்பூருக்கும் பயணம் செய்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் மூன்று மணி நேர விசாரணையின் பின்னர், வெலிவிட்டவை நாடு கடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வெலிவிட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. எனினும், சிங்கப்பூர் அதிகாரிகள் நாடு கடத்தியதன் ஊடாக இந்த சம்பவத்தின் பின்னணியில் மறைகரமொன்று செயற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132784/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 என்ன களவோ?

முன்னம் மகிந்தன்ற கமராக்காரர், டுபாயில கமரா களவெடுத்து மாட்டினவர்.

இருக்கும் யார் கண்டது :rolleyes:

மகிந்தவின் பேச்சாளர் சிங்கப்பூருக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்!

சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் ரொகான் வெல்விட்டவை சிங்கப்பூருக்குள் நுழையவிடாமல் சிங்கப்பூர் அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது.

ஆசிய ஒலிபரப்புக் கண்காட்சியில் கலந்துகொள்ள கடந்த திங்கட் கிழமை சிங்கப்பூர் புறப்பட்டபோது கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்ட பின்னர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டார்.

சிங்கப்பூர் விமானநிலையத்தில் வைத்து அவரை 3 மணிநேரம் விசாரணை செய்த சிங்கப்பூர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், இறுதியில் அவரை சிங்கப்பூருக்குள் நுழையவிடாது திருப்பி அனுப்பியுள்ளனர்.

சி.எஸ்.என் தொலைக்காட்சியின் தலைவராகச் செயற்பட்ட ரொகான் வெல்விட்ட, அந்தத் தொலைக்காட்சிசேவையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ஷவுடன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதன்பின்னர் வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்திருந்த நீதிமன்றம் பின்னர் அத்தடையை நீக்கிக்கொண்டது.

இந்நிலையில் சிங்கப்பூர் புறப்பட்ட ரொகான் வெல்விட்ட அந்நாட்டுக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டார்.

http://thuliyam.com/?p=29114

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.