Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் படையினர் எறிகணைத் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி - 11 பேர் காயம்.

Featured Replies

வாகரையில் படையினர் எறிகணைத் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி - 11 பேர் காயம்.

மட்டக்களப்பு வாகரை மருத்துவமனை சுற்றாடல் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

கரடிக்குளம், வாழைச்சேனை மற்றும் கல்லாறு படை முகாம்களிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது செறிவான எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்தினர்.

காயமடைந்தவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வழித்துணையுடன் கடல்வழியாக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

-Puthinam-

Edited by YARLVINO

post-3-1168254107_thumb.jpg

post-3-1168254061_thumb.jpg

post-3-1168254073_thumb.jpg

post-3-1168254086_thumb.jpg

post-3-1168254098_thumb.jpg

படங்கள் கோரமானவை. நோயாளர்கள், சிறுவர்கள் பார்வையிடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும். மிகவும் கோரமான படங்கள் கறுப்பு வெள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது

நாளும் நட்சத்திரமும் பார்த்து அறிக்கையும் விட்டுகொண்டிருக்கட்டும் அதற்கிடையில் சிங்களவன் பாதிப்பேரை கொண்டு போட்டிடுவான் பின் என்ன செத்தவர்களின் ஆவிக்கா தனி நாடு.

tamilselvan & iilanthirayan will smile and talk about it can u accept

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு பொறுப்பைக் கூறும் போது நீங்கள் என்ன செய்தீர்கள், செய்கின்றீர்கள் என்று எண்ணுவது நல்லம்.

I doubt who this 'puthijavan' is! He even doesn't know how to spell 'puthiyavan'! :angry:

வாகரையில் நடந்த காட்சிகள் மன்னாரில் நடந்து முடிந்த காட்சிகள் இன்னும் நமது நிலத்தில் நடந்த காட்சிகள் எல்லாமே பார்க்க பொறுத்துக்கொள்ள முடியாத காட்சிகள் தான் ஆனாலும் நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கத்தோன்றுகின்றது காரணம் சண்டைசெய்பவன் சண்டைக்கு இழுத்துக்கொண்டு இருக்கின்றான் ஆனால் தமிழர் தரப்போ தனக்கு இன்னும் காலம் (எமது தரப்பு ) தேவையாக இருப்பது போன்று சிந்தனையில் இருக்கின்றது அதனால் பொறுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று எண்ணுகின்றேன்!!!!!!!!!

இன்னும் ஒன்றையும் சொல்லிக் கொள்ள வேண்டும் சண்டை தொடங்கினாலும் இருபக்கத்திலும் அழிவுகள் தாராலமாக இருக்கும் அதையும் நாம் தான் பொறுத்து இருக்க வேண்டும் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயமும் இல்லை ஆனால் நாம் தான் சண்டை இடும் எமது தரப்பை பார்க்க வேண்டும் அத்தோடு அவர்களுக்கும் உதவவேண்டும் அப்போதுதான் சண்டையில் நாமும் பங்குதாரர் ஆகிட முடியும்

இப்படிக்கு நாதன்

ஊரில சொந்தம் பந்தம் ஆரும் இருக்கினமோ?இருந்தா ஒரு சீட்டைப் போட்டு கெதியாய் கூப்பிடுங்கோ?

அப்படியா ஈழப்பிரியன் அப்ப பணம் உள்ளவர்கள் எல்லோரும் தப்பிவிட பணவசதியற்றோரோ மாவீரரும் போராளிகளும் பொதுமக்களும். என்ன கருத்து முன்வைக்கிறீர். இதுவா எமது மாவீரருக்கும், போராளிகளுக்கும், மரணித்த மக்களுக்கும் நாம் கொடுக்கும் மரியாதை. ஒவ்வொரு தமிழனின் பிணத்தையும் பார்க்கும் போது எப்படி இரத்தம் கொதிக்கிறது. கொஞ்சம் இலங்கைக்கு சென்று வவுனியாவில் நிலமையை நேரே பாருங்கள். ஜனநடமாட்டம் உள்ள பகுதியில் எல்லாளன் படையினர் கிளைமோர்களை வைக்கிறார்கள், குண்டுகள் வீசுகிறார்கள், துப்பாகியால் சுட்டுவிட்டு ஓடி மறைகின்றனர், ஆனால் பின்னர் தெருவில் செல்லும் அப்பாவி முதியவர் இளைஞர் யுவதிகளை அவன் வித்தியாசம் பாராது ஈன இரக்கம் இன்றி நடுத்தெருவில் சுட்டு கொலை செய்கிறான். என்ன தான் நடக்குதோ தெரியவில்லை. தமிழ் மக்களை பாதுகாப்பது என்றால் இப்படியா நடந்துகொள்வது. ஏன் முகமாலையில் ஓமந்தையில் நிற்கும் ஆமிக்கு அடிக்கவேண்டியது தானே ஏன் தமிழ் சனநடமாடம் மிக்க பகுதிகளில் இப்படிச் செய்கின்றார்கள் ??????

ஜனநடமாட்டம் உள்ள பகுதியில் எல்லாளன் படையினர் கிளைமோர்களை வைக்கிறார்கள், குண்டுகள் வீசுகிறார்கள், துப்பாகியால் சுட்டுவிட்டு ஓடி மறைகின்றனர், ஆனால் பின்னர் தெருவில் செல்லும் அப்பாவி முதியவர் இளைஞர் யுவதிகளை அவன் வித்தியாசம் பாராது ஈன இரக்கம் இன்றி நடுத்தெருவில் சுட்டு கொலை செய்கிறான். என்ன தான் நடக்குதோ தெரியவில்லை. தமிழ் மக்களை பாதுகாப்பது என்றால் இப்படியா நடந்துகொள்வது. ஏன் முகமாலையில் ஓமந்தையில் நிற்கும் ஆமிக்கு அடிக்கவேண்டியது தானே ஏன் தமிழ் சனநடமாடம் மிக்க பகுதிகளில் இப்படிச் செய்கின்றார்கள் ??????

------

Its true comments and thats real situation. Not only Vavuniya but also Jaffna, Batticaloa too.

------

But any how, our Tigers can only get Tamileelam

ஜனநடமாட்டம் உள்ள பகுதியில் எல்லாளன் படையினர் கிளைமோர்களை வைக்கிறார்கள், குண்டுகள் வீசுகிறார்கள், துப்பாகியால் சுட்டுவிட்டு ஓடி மறைகின்றனர், ஆனால் பின்னர் தெருவில் செல்லும் அப்பாவி முதியவர் இளைஞர் யுவதிகளை அவன் வித்தியாசம் பாராது ஈன இரக்கம் இன்றி நடுத்தெருவில் சுட்டு கொலை செய்கிறான். என்ன தான் நடக்குதோ தெரியவில்லை. தமிழ் மக்களை பாதுகாப்பது என்றால் இப்படியா நடந்துகொள்வது. ஏன் முகமாலையில் ஓமந்தையில் நிற்கும் ஆமிக்கு அடிக்கவேண்டியது தானே ஏன் தமிழ் சனநடமாடம் மிக்க பகுதிகளில் இப்படிச் செய்கின்றார்கள் ??????

------

Its true comments and thats real situation. Not only Vavuniya but also Jaffna, Batticaloa too.

------

But any how, our Tigers can only get Tamileelam

அப்ப விமாமத்தாக்குதலும் வானத்தில போன பிளேனுக்கு கிளைமோர் வச்சதாலேயே வந்து மன்னாரிலையும் கிளிநொச்சிலையும் முல்லைத்தீவிலையும் வந்து அடிக்கிறான்...???

ஆமிக்காறன் செய்யுறது பிழையோ இல்லையோ தட்டிக்கேக்க வக்கில்லை அப்படி ஆமி செய்தால்

அது மனித உரிமை மீறலும் இல்லை. ஆனால் சனத்தை கொல்லுறவைக்கு வக்காலத்து வாங்கமட்டும் வெக்கமே வாறதில்லையாக்கும்...

நீங்கள் சாகேக்கை எந்த சிங்களவனும் கவலைப்பட இல்லை ஆனால் சிங்களவனுக்கு எவனாவது குண்டு வச்சால் மட்டும் பீறிக்கொண்டு வந்திடும் மனிதாபிமானம்...

08_01_07_vaharai_woun_02_59610_435.JPG

இந்தப்பிள்ளையின் தாயா இறந்து கிடப்பது?

அவளுக்கும் கையில் காயமா? விரல் ஒன்று இல்லையா?

ஈழப்பிரியன், தூயவன் போன்றோர் ஏன் இப்படி ஈவு இரக்கமற்று கதைக்கின்றனர்?

உங்கள் நெருங்கிய உறவுகள் மட்டும் தப்பிவிட்டால் போதுமா?

மக்கள் கொல்லப்படுவது பற்றி நாங்கள் கேள்வி கேட்கக் கூடாதா?

எஞ்சிய கொஞ்சக் காசை எடுத்து வீசி விட்டு எங்களின் வாழ்வுரிமையை நீங்கள் எப்படி குத்தகைக்கு எடுக்கலாம், இளக்காரமாகக் கதைக்கலாம்?

இராணுவம் செய்கிறான் அவன் எங்கள் எதிரி, அதற்காக நீங்களுமா?

காயமடைந்தவன் படகில் வரமுடியுமென்றால் காயமடையாதவன் வரமுடியாதா?

இராணுவ நலன் முக்கியமா மக்களின் உயிர் முக்கியமா?

சிங்கள மக்கள் தாக்கப்பட்ட போது அவர்களை பாதுகாக்க இராணுவம் நடவடிக்கை எடுக்கிறது, அரசு நஷ்டஈடு வழங்குகிறது. தமிழ் மக்களுக்கு?

சரி இவ்வளவு வீரம் கதைக்கிறீர்களே வந்து முன்னரங்கில் ஒரு காவலரணை பாரமெடுங்கள் என்றால், முடியாதாம் எனென்றால் தாங்கள் உழைப்பில் தானாம் இங்கே போர் நடக்கிறதாம்!

மனந்தளரக் கூடாதாம்! எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்களாம்! எங்களுக்கு வேணும் எனென்றால் தமிழனாகப் பிறந்தது முதற் குற்றம் அதிலும் காசுக்கு வக்கில்லாமல் பிறந்து இங்கேயே மாட்டிக் கொண்டது இரண்டாவது குற்றம்.

ஆமிக்காறன் செய்யுறது பிழையோ இல்லையோ தட்டிக்கேக்க வக்கில்லை அப்படி ஆமி செய்தால்

அது மனித உரிமை மீறலும் இல்லை. ஆனால் சனத்தை கொல்லுறவைக்கு வக்காலத்து வாங்கமட்டும் வெக்கமே வாறதில்லையாக்கும்...

நீங்கள் சாகேக்கை எந்த சிங்களவனும் கவலைப்பட இல்லை ஆனால் சிங்களவனுக்கு எவனாவது குண்டு வச்சால் மட்டும் பீறிக்கொண்டு வந்திடும் மனிதாபிமானம்...

அதுக்கு ஏன் சனத்தின் குடிமனைக்குள் செய்கிறார்கள். அவன் தான் இதயம் அற்று இனவெறியில் நடக்கிறான் என்றால் எம்மவர்களும் சற்றும் யோசிக்காது தானே செய்கிறார்கள். சனிக்கிழமை மாலை சன நடமாட்டமான வயுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள சிங்களகாடைத்துறையின் காவல் அரணுக்கு மோட்டர்வண்டியில் வந்த இரண்டு பேர் குண்டை வீசிவிட்டு புயல் வேகத்தில் மாயமாய் மறைந்து விட்டார்கள். பின் காடைத்துறையோ அந்த வழியால் வந்த எமக்கு எல்லாம் எலும்பை எண்ணித்தான் அனுப்பினார்கள். ஆண் பெண் வித்தியாசம் இல்லாது பொல்லுத்தடியால் அடித்தார்கள். நல்லவேளை யாரையும் அன்று சுடவில்லை. ஏன் சனநடமாடமிலாத செட்டிகுள தெருவிலும் தான் பாரிய காவல் அரண்கள் உள்ளது. அங்கு சென்று எறிய வேண்டியது தானே ?

Edited by mathuka

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத்திற்கும் கொழும்புக்கும் வந்த சிலருக்கு கண் மண் தெரியுறதில்ல. தலையிடியும் காய்ச்சலும் தங்களை விட்டு தூர விலகிட்டுது என்ற நினைப்பில அந்த வலியே மறந்து நின்று எகிறினம்.அப்பாவி ஏழை மக்களும் அவர்களின் குடும்பங்களும் இப்படி அரச இராணுவ இயந்திரத்துக்குப் பலியாகின்றன.

புலிகள் ஏன் மக்களுக்குள் பதுங்கியுள்ள இராணுவத்தைத் தாக்கினம் என்றது நியாயம் தான். ஆனால் இராணுவத்தையும் மக்களுக்க பதுங்கி இருக்காமல் எங்காவது வெட்டை வெளில காம் வைச்சிட்டு இருக்கச் சொன்னால் செய்வார்களா...??! எது எப்படி இருப்பினும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டக் கூடிய தாக்குதல்களைக் குறைப்பது நன்று. இரு தரப்புன் ஐநா போர் விதிகளை மதித்து நடக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்..!

ஐநாவின் சமீபத்திய அறிக்கை சிறீலங்கா அரச இராணுவ இயந்திரத்தின் விமானத்தாக்குதல் மற்றும் வாகரையை பட்டினிக்குள் தள்ளி மக்களை விரட்ட இராணுவ இயந்திரத்தை ஏவிவிட்டது குறித்தும் கொழூம்பு காலி பஸ் குண்டு வெடிப்புக்கள் தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளது. சர்வதேச சமூகம் இரு தரப்பையும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடிய நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்க்க சரியான அழுத்தங்கள் கொடுக்க வேண்டும். ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தா அரசுக்கு மேலதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்..! பராபட்சமான உலகில் இவை சாத்தியமா...??!

எதிர்பார்த்து ஏமாறுவதுதான் தமிழர் தலைவிதி என்றால் அதை யார்தான் மாற்ற முடியும்..! :lol:

காயமடைந்தவர்களை செஞ்சிலுவை சங்கத்தால் வாழைச்சேனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள

Rasa army karan saijurathu sari eandu solla varavillai avan appdithan saivan eandu thereeju thana modu sinhalavan eandu perakum ean tamil sanam valura iildthila glaymore vaipan colombo , kandy , galle wattala poola illdathila vatchthan nallathu enkada sanam sakiramai sinhalasanamu saka vanum appathan equal akum niir laondon illa irunthu ealutha nalla irukum annna jaffna battcola vauniya poi irrunthu parum therejum glaymore ennda ennandu

soory my computer didnt type in tamil thatswhy

why we all are know about the Slarmy and their action so why tigers doing like that attacking in tamil area , if tigers attacked a centery Slarmy bloddies shoting our inocent people and killing if tigers attack in the south example Colombo ,Kandy,Galle that time the Sinhala people will kill by the Slarmy like that have to do

and you can write about the glymore attacking in tamil area from the London that is easy and nicefull but if you are in the Tamileelam you cant write about even news

why tigers didnt attacked on the Sinhala people i like to show like this photo from the sinhala people

why tigers didnt attacked on the Sinhala people i like to show like this photo from the sinhala people

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிள்ளையின் தாயா இறந்து கிடப்பது?

அவளுக்கும் கையில் காயமா? விரல் ஒன்று இல்லையா?

ஈழப்பிரியன், தூயவன் போன்றோர் ஏன் இப்படி ஈவு இரக்கமற்று கதைக்கின்றனர்?

உங்கள் நெருங்கிய உறவுகள் மட்டும் தப்பிவிட்டால் போதுமா?

மக்கள் கொல்லப்படுவது பற்றி நாங்கள் கேள்வி கேட்கக் கூடாதா?

எஞ்சிய கொஞ்சக் காசை எடுத்து வீசி விட்டு எங்களின் வாழ்வுரிமையை நீங்கள் எப்படி குத்தகைக்கு எடுக்கலாம், இளக்காரமாகக் கதைக்கலாம்?

இராணுவம் செய்கிறான் அவன் எங்கள் எதிரி, அதற்காக நீங்களுமா?

காயமடைந்தவன் படகில் வரமுடியுமென்றால் காயமடையாதவன் வரமுடியாதா?

இராணுவ நலன் முக்கியமா மக்களின் உயிர் முக்கியமா?

சிங்கள மக்கள் தாக்கப்பட்ட போது அவர்களை பாதுகாக்க இராணுவம் நடவடிக்கை எடுக்கிறது, அரசு நஷ்டஈடு வழங்குகிறது. தமிழ் மக்களுக்கு?

சரி இவ்வளவு வீரம் கதைக்கிறீர்களே வந்து முன்னரங்கில் ஒரு காவலரணை பாரமெடுங்கள் என்றால், முடியாதாம் எனென்றால் தாங்கள் உழைப்பில் தானாம் இங்கே போர் நடக்கிறதாம்!

மனந்தளரக் கூடாதாம்! எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்களாம்! எங்களுக்கு வேணும் எனென்றால் தமிழனாகப் பிறந்தது முதற் குற்றம் அதிலும் காசுக்கு வக்கில்லாமல் பிறந்து இங்கேயே மாட்டிக் கொண்டது இரண்டாவது குற்றம்.

வணக்கம் சாணக்கியன்,

நாங்கள் ஈவிரக்கமற்றுக் கதைக்கின்றமா? நான் கேட்டது இது தான்.

மற்றவர்களுக்கு பொறுப்பைக் கூறும் போது நீங்கள் என்ன செய்தீர்கள், செய்கின்றீர்கள் என்று எண்ணுவது நல்லம்.

நான் சொன்னதில் என்ன தவறு? நீங்கள் புலிகளைக் கேள்வி கேட்கும்போது, அதே மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று உங்களால் என்ன பதில் சொல்லமுடியும்? எல்லாவற்றையும் புலிகள் தான் செய்யவேணும். மற்றவர்கள் எல்லாம் புலத்தில் நிம்மதியாகத் தப்பி ஓடித் தஞ்சம் கேட்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஓடர் போடவேணும். இதைத் தானே சொல்ல வருகின்றீர்கள்??

இதில் குழந்தையின் உங்களை விட அவர்களுக்குத் தான் கூடப் பாதித்திருக்கும். நாங்கள் எல்லாம் எப்படா தப்பி ஓடலாம் என்று சிந்தித்தபோது, எம் மக்களின் துன்பத்தைக் கண்டு களமாடுகின்ற போராளிகளுக்கு என்னும் மனதை வலிக்கும். நீங்கள் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்க என்ன யோக்கியம் இருக்கின்றது.

போரைத் தொடங்க வேண்டிய காலத்தை தலைவர் நிச்சயமாகத் தீர்மானிக்கத் தெரியும். மக்கள் கொலல்ப்படுவது பற்றிக் கேள்வி கேட்க வேண்டுமானால் எதிரியை நோக்கிக் கேட்க வேண்டும். .

மேலும் இன்னும் போரை ஆரம்பிக்கவில்லை என அழுத்தம் கொடுப்பவர்கள் போர் பற்றியே சிந்திக்கின்றனரே தவிர, தோடங்கினால் இதை விட சிங்கள அரசு மூர்க்கமாகத் தாக்கினால் எவ்வாறு மக்களைப் பாதுகாப்பது என்று சிந்தித்திருப்பதாகத் தெரியவில்லை. மேலும் சாதானம் என்று சொல்லிக் கொண்டு சிங்கள தரப்பு ஒரு பக்கம் யுத்தம் செய்கின்றதால் ஒரு அழுத்தம். மறுபக்கம் சர்வதேசம் அழுத்தம். இதற்குள் நீங்களும் கொடுகின்ற அழுதத்ம் சிலவேளை அவசரமான முடிவுகளை எடுக்க வைத்துவிடும்.

நுட்பமானச் செய்வதன் பலனால் ஏற்படும் வெற்றிகளுக்கும், அவசரத்தால் செய்வதால் ஏற்படும் வெற்றிகளுக்கும் நிறைய வுறுபாடு உண்டு. இதற்கு குதர்க்க கதைகள் யாரும் சொல்லலாம். அது பற்றிக் கவலையில்லை. ஆனால் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற இந்த வெறியை அணையாமல் பாதுகாப்பதன் மூலம் சிங்கள தேசத்துக்கு எதிரான போரில் தீர்க்கமான வெற்றியைப் பொறலாம். அதற்கு ஒவ்வொரு தமிழனுடைய ஒத்துழைப்பும் மிகமிக அவசியம்.

--------------------

என் மீது குற்றம் சாட்டும் விதமாக எழுதியியிருப்பது தவறனாது. அனேகமாக விளக்கமின்றிக் கதைத்திருக்கின்றீர்கள் என்றே உணர்கின்றேன். ஆனால் உங்களின் கடைசி வசனத்தில் இருந்து நான் புரிந்திருப்பது, வெளிநாட்டுக்கு போகமுடியாமல் நீங்கள் ஆதங்கத்தில் கதைக்கின்றீர்கள் என்பதை.

அதுக்கு ஏன் சனத்தின் குடிமனைக்குள் செய்கிறார்கள். அவன் தான் இதயம் அற்று இனவெறியில் நடக்கிறான் என்றால் எம்மவர்களும் சற்றும் யோசிக்காது தானே செய்கிறார்கள். சனிக்கிழமை மாலை சன நடமாட்டமான வயுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள சிங்களகாடைத்துறையின் காவல் அரணுக்கு மோட்டர்வண்டியில் வந்த இரண்டு பேர் குண்டை வீசிவிட்டு புயல் வேகத்தில் மாயமாய் மறைந்து விட்டார்கள். பின் காடைத்துறையோ அந்த வழியால் வந்த எமக்கு எல்லாம் எலும்பை எண்ணித்தான் அனுப்பினார்கள். ஆண் பெண் வித்தியாசம் இல்லாது பொல்லுத்தடியால் அடித்தார்கள். நல்லவேளை யாரையும் அன்று சுடவில்லை. ஏன் சனநடமாடமிலாத செட்டிகுள தெருவிலும் தான் பாரிய காவல் அரண்கள் உள்ளது. அங்கு சென்று எறிய வேண்டியது தானே ?

எனது மாமியார் 6 மாதங்களுக்கு முன்னர் வண்ணார்பண்ணையில் நடந்த தாக்குதலில் காயம் அடைந்தார்.. அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போன எனது மைத்துனர் அதிஸ்ரவசமாக தப்பினார்... குண்டு ஒண்று வெடிக்க வைக்கப்பட போகிறது என்பதை கண்டுவிட்டு மோடார் சைக்கிளை வேகமாக எடுத்ததால்தான் மோட்டார் சைக்கிளின் பின்பக்க சீற்ரில் இருந்த மாமியார் குண்டு சிதறலால் காயம் அடைந்தார்...

இதை ஏன் சொல்லுரன் எண்டால் குன்டை வீசியதும் ஆமிக்காறந்தான் பின்னர் உச்ற்றி சுற்றி சுட்டதும் ஆமிக்காறன்ம்தான்... இதிலை நீங்கள் புலிகள் ஆதரவு குழு வீசியதாகத்தான் மட்டும் உங்கள் அறிவுக்கு எட்டலாம்... அதுவே உண்மை ஆகிவிடுவது இல்லை...

அதையும் விட முக்கியமாக இண்றய தமிழர் நிலைக்கு அண்று வீட்டுக்குள் ஆச்சி மாரின் சீலை தலைப்பை பிடித்த படி பதுங்கி இருந்த அப்பு மாரை போய் கேள்வி கேளுங்கோ.. அதுதான் உங்களுக்கு பிரியோசனமாய் இருக்கும்..

அதையும் விட முக்கியமாக இண்றய தமிழர் நிலைக்கு அண்று வீட்டுக்குள் ஆச்சி மாரின் சீலை தலைப்பை பிடித்த படி பதுங்கி இருந்த அப்பு மாரை போய் கேள்வி கேளுங்கோ.. அதுதான் உங்களுக்கு பிரியோசனமாய் இருக்கும்..

எப்படி? எப்படி பிரயோசனமாய் இருக்கும்?

தலை சும்மா TTN செய்திகளை மாத்திரம் பார்த்துவிட்டு ஆக உணற்சிவச படகூடாது. கொஞ்சம் நிலமைகளை நேரில் அவதானித்தால் தான் விளங்கும். சுனாமி அடிக்க முன் இன்னும் சில நாட்களில் சண்டை தொடங்கும் என வன்னியில் அறிவித்தார்கள். பின் சுனாமி அடித்தது பின் அதுபற்றி கதையே இல்லை. மீண்டும் 2005 மாவீரர் தினத்தில் மீண்டும் விரைவில் சண்டை தொடங்கும் என வன்னியில் அறிவித்தார்கள். எல்லோருக்கும் பயிற்சியும் கொடுக்கத் தொடங்கினார்கள். ஆனால் உருப்படியாக எதுவும் செய்யவில்லை... இன்று அவனே தொடங்கிவிட்டு எங்களை போட்டு தாக்குகிறான். இன்று பொறுமை காக்கிறார்களாம். இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரு தமிழ் பெடி பெட்டைகளை இருக்க விடுகிறான் இல்லை. யார் யாரையோ இரவில் கொண்டுவந்து சுட்டுப்போட்டு எங்கள் தெருக்களில் வீசிவிட்டு போகிறான். காலையில் எழுந்து பார்த்தால் எங்கும் பிணங்கள். எங்களுக்கு ஒவ்வொரு காலையும் எப்படி விடிகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு பகல் பொழுதை எப்படி மரண பயத்தோடு கழிக்கிறோம் என நீங்கள் அறிவீர்களா? இரவில் நாய் குரைத்தால் எங்கள் நெஞ்சு அடிக்கும் அடியை நீங்கள் அனுபவிக்கிறீர்களா? சரி அது போகட்டுக்கும் சிங்களவனுடன் நாம் வாழமுடியாது. அதனால் தனியரசு என்ற வழியை நாம் தெரிவு செய்ய நிர்ப்பந்தித்து விட்டார்கள். எனவே இன்னும் பொறுமை காத்து சாதிப்பது எதுவுமே கிடையாது. புலிகளைப்பற்றியும் உலக நாடுகளுக்கு தெரியும் அரசாங்கத்தையும் அவர்களுக்கு யார் என்று தெரியும். ஆனால் உலகம் எமக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை.... எமது அடியினால் நாம் எடுக்கும் வெற்றிகளை வைத்தே உலகம் எங்களுக்கு மதிப்பளிக்கும். இதுவே வரலாறு காட்டிய உண்மை....எனவே தாமதியாது நாடை கைப்பற்றி போகிறது போக எஞ்சுகிறதை வைத்து மீண்டும் எமது தேசத்தை கட்டி எழுப்புவோம். எமது இன்றைய மரண ஓல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

Edited by mathuka

....எனவே தாமதியாது நாடை கைப்பற்றி போகிறது போக எஞ்சுகிறதை வைத்து மீண்டும் எமது தேசத்தை கட்டி எழுப்புவோம். எமது இன்றைய மரண ஓல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

சிங்களவன்னுடன் சண்டை போடுவதை விட முக்கியமானது பலதும் இருக்கு அது இப்போ புரிபடும் நிலையி நீங்கள் எவரும் இல்லை.. அகவே அதைவிடுவோம்...

யாழ்ப்பானத்தில் நீங்கள் விரும்ம்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களை கொல்லவேணும் என்பதில் இராணுவம் உறுதியாகத்தான் இருக்கிறது... அதுக்கு பல காரணம் இருக்கு அரசியல் காரணத்தை விடுவோம்... அது புலிகள் சம்பந்தப்பட்டது... ஆனால் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு போராட்டத்தை ஒடுக்க ஒரு வளி அது என்பதை நீங்கள் யாரும் புரிந்ததாக தெரிய வில்லை... அப்படி படையினர் கொலை செய்வதுக்கு காரனங்கள் அமைத்து விடுவதும் கடினமான வேலை இல்லை... அந்த காரணங்களை நம்பத்தான் உங்களைப்போண்ற அறிவாளிகள் இருக்கிறீர்களே..

இண்றைக்கும் இராக்கில் அமெரிக்காவும், பலஸ்தீனத்தில் இஸ்ரேலியரும் கடைப்பிடிக்கும் கொலை கலாச்சாரத்துக்கு காரணங்கள் கற்பிக்கப்படுகிறது இந்த முறை இலங்கையாலும் கடைபிடிக்கபடுவது உங்களுக்கு புதிய விடயமாக தெரியுது... குடும்பத்தை காக்கும் பொருளாதாரத்தை விருத்தி செய்யும் குடும்பத்தவர், நண்றாக படுக்கும் இளைஞர்கள் என்பவர்களினான படு கொலையு, மக்களை மிரட்டும் தாக்குதல்களும் போராட்ட வாழ்வில் இருக்கும் மக்களை மிரட்ச்சியின் விழிம்புக்கு கொண்டு போவதும், பொருளாதாரம் இளந்து வறுமையில் வாட விடுவதும்தான் இபோதைய இராணுவ கொலைகளுக்கான காரனம்.. அதாலை என்ன நன்மை என்கிறீர்களா... இருக்கு அரசாங்கம் தரும் அற்ப சலுகைகளுக்கு படிய வைப்பதுதான்... இதுக்கு நீங்கள் தான் உதவ முடியும் . தமிழர் பலத்தை உங்கள் பொருளாதாரத்தால் பலப்படுத்துங்கள்... சிங்களவனை விரட்டி அடிக்க உங்களின் தார்மீக கடமையை நிறைவேற்றுங்கள்...

இவைகள் எல்லாம் எமக்கு தெரியாமல் இல்லை தலை. ஒரு வரையறை வரைக்கும் வலிந்த தாக்குதல்கள் எதையும் செய்யப்போவதில்லை என்றால். அந்த வரையறை முடிந்த பின் யுத்தத்திற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டிருக்கலாமே? உலகத்தின் முன் அரசின் முகத்திரையை கிழிக்க ஏன் அப்பாவி மக்களை பலிகொடுக்க வேண்டும். எத்தனை இலட்சம் பிணங்கள் மலையாய் குவிந்தாலும் ஒரு அரசை மீறி உலக நாடுகள் ஒருபோதும் ஒரு விடுதலை இயக்கத்தை ஆதரிக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு பாருங்கள் முல்லை. வல்லிபுனத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை யாருமே காணவில்லை. ஆனால் தென்பகுதியில் ஹபரண, நிற்றம்புவ, காலி, என இராணுவம் அவர்களுக்கே வைத்த குண்டுகளுக்கு கண்டணம் செய்தார்களே இப்படித்தான் இருக்கும் இந்த குருட்டு உலகத்தின் நடத்தை. எனவே இனியும் அறிக்ககள் மிரட்டலுகளை நிறுத்தி பிரயோசனமான பாதையில் செல்வார்கள் என நம்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய உலகசூழலில் பயங்கரவாதத்தைச் சாட்டாக வைத்து வலிமை மிகுந்த நாடுகள் (உ.ம். அமெரிக்கா சோமாலியாவில் தாக்குவதுபோல்) விடுதலை இயக்கங்களைத் தாக்கக்கூடும் (வான்வெளித் தாக்குதல்தான் நடைபெறச் சாத்தியம் உண்டு). எனவே இத்தகைய நிலை தமிழீழத்திலும் ஏற்படாமல் இருக்க எமது பக்கம் நியாயம் இருக்கவேண்டும். இல்லாவிடில் புலிகள் பரந்த எடுப்பில் வலிந்த தாக்குதல்களை ஆரம்பிக்க அமெரிக்கா வான் வெளித்தாக்குதலை வன்னியில் மேற்கொள்ளச் சாத்தியம் உண்டல்லவா?

உண்மைதானுங்கோ கிருபா அண்ணே.... :icon_idea:

ஆனால் சின்ன சின்ன தாக்குதல்களை செய்யலாமே? :angry:

போர் நிறுத்தத்தில் இருந்து தமிழர் தரப்பாக விலகச்சொல்கிறீர்களா..??? புலிகள் தாங்களாக போருக்கு போகவேன்டும் என்னும் நிலமை வரவழைக்கத்தானே அரச படைகள் இவ்வளவும் முனைகிறார்கள்.. அதுக்கு ஏற்றாப்போல புலிகளும் நடக்கவேணும் எண்று நினைப்பது சரியாக இருக்கும் என்கிறீர்களா..??

தமிழரின் பலமே புலிகள் வைத்திருக்கும் பலம்தான்... அவர்கள் பலமாக இருக்கும் வரைதான் உங்களுகாகஒரு தீர்வை எண்றாலும் கொடுக்க வேண்டும் எண்று சர்வதேசம் சொல்லும்.. அப்படி அவர்களிடம் பலம் குறிவிட்டதாக தெரிந்தாலோ இல்லை பலவீனமானவர்கள் என்பது தெரியப்பட்டாலோ உங்களையும் புலிகளையும் ஒடுக்கி விட்டு ஒரு தீர்வை திணித்து விடலாம் எண்றுதான் எல்லாரும் நினைப்பார்கள்... இண்று நடப்பதும் அப்படி புலிகளை வலுச்சண்டைக்கு இழுத்து பாதுகாப்பாக இருந்து கொண்டு தாக்கி அழிக்கும் போர் தந்திரம் அதோடு பெரியதொரு படை எடுப்பை செய்யாது இருக்க ஒரு தடை ... இதனால் இளப்புகள் முன்னேறும் சிறு அணிகள் பெறும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம், அதோடு தொடர் தாக்குதல் செய்யும் போராளிகள் கூட களைப்படைந்து விடுவர்.. இப்படியான விரயங்களை படையியல் ரீதியாக புலிகள் சந்திப்பது படை வலுவுக்கும் மேற்கொண்ட தாக்குதலுக்கும் நல்லதல்ல.. இது போர் ரீதியான காரணம் மட்டுமே...

தமிழ் மக்களை புலிகள் பாது காக்க வேணும் என்பதையும்விட அந்த மக்களே தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள்... அப்படி பார்த்தால் யாழ் மக்களுக்கு வேண்டிய அளவுக்கு சந்தர்ப்பம்,உம் அவகாசமும் இருந்து அறிவுறுத்தல்களும் இருந்தும் அவர்கள் அதை பயன்படுத்தாமல் பொறுப்பற்று இருந்தனர்.. இண்று வாகரையில் நடக்கும் அவலங்களுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாத அளவு, யாழ்ப்பாணத்தவர்களின் மேல் நடக்க கூடும் என எதிர்ப்பாக்கப்படும் தாக்குதல்கள்தான் புலிகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது போல இருக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.