Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுபடும் வடக்கு மக்களின் பிரச்சினை!-பிரிட்டன் உயர் ஸ்தானிகரிடம் முதல்வர் விக்கி விசனம்

Featured Replies

இழுபடும் வடக்கு மக்களின் பிரச்சினை!-பிரிட்டன் உயர் ஸ்தானிகரிடம் முதல்வர் விக்கி விசனம்
 
இழுபடும் வடக்கு மக்களின் பிரச்சினை!-பிரிட்டன் உயர் ஸ்தானிகரிடம் முதல்வர் விக்கி விசனம்
CV-720x480.pngவடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் நிலவுவதாகவும், தங்களுடன் கலந்துரையாடாது நடவடிக்கைகள் எடுப்பது மற்றும் திட்டங்களை செயற்படுத்தல் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
image2-1-720x480.jpeg
 
குறித்த சந்திப்பை தொடர்ந்து, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் சீர்த்திருத்தம் தொடர்பில் தமது கருத்துக்களை அவர் கேட்டறிந்த அதேவேளை, எமது தேவைகள் குறித்த மத்திய அரசுக்கு வலியுறுத்துவதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

http://onlineuthayan.com/news/13516

தமிழ் மக்களுக்குப் போதிய அளவிலான சுயாட்சிக்குரிய ஏற்பாடுகள் இலங்கைக்கான புதிய அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து வடமாகாணத்தில் சமாதானத்திற்கான நடவடிக்கைகள் எவ்வாறிருக்கின்றன என கேட்டறிந்துள்ளார்.

அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டறிந்தார்.

சமாதான முயற்சிகளுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருந்த போதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல தாமதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், முக்கிய விடயங்களில் தங்களைக் கலந்தாலோசிக்காமலும், முக்கிய நடவடிக்கைகளில் தங்களுடைய பங்களிப்பின்றியும் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானிய தூதுவரிடம் எடுத்துக் கூறியிருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள மக்களின் நிலைமைகளையும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமைகளையும் எடுத்து நோக்கினால் மொழி, மதம், கலை கலாசாரம் என பல விடயங்களிலும் இந்த வித்தியாசம் காணப்படுவதாகவும், எனவே, வடக்கு கிழக்குப் பிரதேச மக்களின் பின்புலத்திற்கு ஏற்ற வகையில் அவர்களே நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுடைய பொருளாதாரச் செயற்பாடுகளை அவர்களே பார்த்துக்கொள்ளத்தக்க வகையிலும் இடமளிக்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் பிரித்தானிய தூதுவரிடம் கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் மற்றும் சிவில் நிலைமைகள், மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு போன்ற விடயங்கள் குறித்து பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பண விஜயத்தின் போது பல தரப்பினரிடமும் கேட்டறிந்துள்ளார்.
http://www.tamilwin.com/politics/01/107268

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.