Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதாமை தூக்கு மேடைக்கு அனுப்பியதும் உள்நாட்டு நீதிபதிகள் தான்! - எச்சரிக்கிறார் குணதாஸ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
போர்க்குற்ற விசாரணையில் உள்நாட்டு நீதிபதிகளால் முன்னாள் ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர,  ஈராக்கில் சதாம் உசைனை தூக்கு மேடைக்கு அனுப்பியது அவரால் நியமிக்கப்பட்ட உள்நாட்டு நீதிபதிகள் தான்  என்றும் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் உள்நாட்டு நீதிபதிகளால் முன்னாள் ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர, ஈராக்கில் சதாம் உசைனை தூக்கு மேடைக்கு அனுப்பியது அவரால் நியமிக்கப்பட்ட உள்நாட்டு நீதிபதிகள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

   

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மேற்குலக சதியாளர்களும், இந்தியாவும் அவர்களது அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் இணைந்து நாட்டை பிளவடையச் செய்வதற்கே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுகின்றது. இதுவே பிரதான இலக்காகும்.நல்லிணக்கம், சமாதானம் என்ற போர்வையில் இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கான காரணியாக புதிய அரசியலமைப்பில் வழிவகுத்து கொடுக்கப்படுகின்றது. இதுஇவ்வாறிருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இதற்கு ஏன் ஒத்துழைத்தது என்பதே எமது வினாவாகும். தினேஷ் குணவர்தன போன்றவர்கள் குழந்தைகள் இல்லையே.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக மாற்றுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரால் முடிந்தது. அதன் இறுதி பிரதிபலனாக நாட்டைப் பிளவுபடுத்துதற்கு வழியமைத்துக் கொடுப்பதே ஆகும். ஸ்ரீலங்காவை பிளவுபடுத்துவதற்கு மேலும் சில விடயங்களை மேற்கொள்ள முடியும். பிளவிற்கு எதிராக குரல் கொடுப்போரை அடக்குவதே முதலாவது வழிமுறை. சர்வதேச நீதிமன்றமொன்றை அமைத்து, மனித உரிமைகள் மீறல் இடம்பெற்றதாக முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கப் போவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்த போதிலும், ஆட்சியாளர்களை தண்டிப்பதற்கு வெளிநாட்டு நீதிபகளே வரவேண்டும் என்ற தேவைப்பாடு இல்லை. ஏனென்றால் ஈராக்கில் சதாம் உசைனினால் நியமிக்கப்பட்ட உள்நாட்டு நீதிபதிகளினாலேயே அவர் தூக்கு மேடைக்குச் சென்றார். அதனால் உள்நாட்டு நீதிபதிகளால் இந்த நாட்டிலும் அவ்வாறு ஏற்படாது என்று கூறமுடியாது.

அதேவேளை இவற்றிற்கு எதிராக குரல் எழுப்புவோரை தடுப்பதற்காகவும், வெளிநாட்டவர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காகவுமே காணாமல் போனோர் தொடர்பான பணியகமும் அமைக்கப்படவுள்ளது – என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=159558&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பன் குதிருக்க இல்லை...

தூக்கில போடுற அளவுக்கு விசயம் இருக்குது என்று கிழடு சொல்லுது.

அப்ப வெளிநாடும் இல்லை, உள்நாடும் இல்லை. விசாரனையே கடைசீல இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரே நடக்கேல்லை எண்டு சொல்ல சனம் இருக்கு...இதுக்குள்ளை போர்க்குற்றம் விசாரணை எண்டதெல்லாம் தேவையில்லாத சொற்பிரயோகங்கள்.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.