Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இராணுவப் புரட்சிக்கு அஞ்சுகிறதா அமெரிக்கா?

Featured Replies

போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கையில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது.

இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையின், உள்விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக தூதுவர் ஜி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

சீனாவானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நிலையில், இதன் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், பிறநாடுகளின் உள்விவகாரங்களில் மற்றைய நாடுகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட மீளிணக்கப் பொறிமுறையானது புதிய பிரச்சினைகளை உருவாக்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு இலங்கை தலைவர்களிடம் சீனத் தூதுவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் நல்லிணக்கம் என்பது சாத்தியமற்ற ஒன்று என இவர் தெரிவித்துள்ளார்.

அதாவது நாட்டில் சமத்துவமான அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் போது மாத்திரமே சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் இதன் பின்னரே மீளிணக்கம் என்பது வெற்றியடையும் என சீனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலோபாயக் கற்கைகளுக்கான பிராந்திய மையத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே சீனத் தூதுவர் இலங்கைக்கு தனது ஆலோசனையைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனையைத் தூதுவர் தெரிவிப்பதற்கு முன்னர், இந்தியாவைச் சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

இப்பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கக் கூடாது என்ற கருத்தை மோடி தெரிவித்ததாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

மைத்திரி இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்புவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராணுவத் தளபதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் வெளிநாட்டு நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையில் பங்குபெறுவதற்கு அனுமதிப்படமாட்டார்கள் எனவும் இராணுவத் தளபதிகளிடம் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.

இதேவேளையில், இலங்கை அரசாங்கமானது எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் அதேவேளையில் இலங்கை மீதான சீனத் திட்டங்களுக்காக இந்திய-சீன கூட்டு முதலீட்டுப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும் சீனத் தூதுவர் எடுத்துரைத்திருந்தார்.
advertisement

இவரது இந்தக் கருத்தானது இலங்கையில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பான மேற்குலக நாடுகளின் தலையீட்டைக் குறைப்பதற்கான சீனாவின் மூலோபாயமாக இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்தியா கூட இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபெறுவதை எதிர்த்து நிற்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் இந்தியா இதையொத்த அணுகுமுறையையே கைக்கொண்டது.

ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அமெரிக்காவால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இந்நிலையில் இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை இந்தியா விரும்பவில்லை என்பது இங்கு தெளிவாகிறது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் லண்டனில் வைத்து உலகத் தமிழர் பேரவையின் தலைவர்களுடனும், வெள்ளைமாளிகையில் சமந்தா பவருடனும் இணைந்து பரிந்துரைகள் தயாரிக்கப்பட்ட அதேவேளையில், இந்தியாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஊடாக ரணில் இப்பரிந்துரைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை அமெரிக்கா செவிமடுப்பதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த போதிலும் இது தொடர்பில் சமந்தா பவர் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அமெரிக்க மனித உரிமைகள் நிறுவனம் ஒன்றின் மூலம் தகவல் வெளியில் கசிந்துள்ளது.

ஒக்லாண்ட் நிறுவகத்தின் உள்ளக இடப்பெயர்வுக் கண்காணிப்பு மையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வரும் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:

மேற்குலக சார்பு நிலை

முன்னைய அரசாங்கம் போலல்லாது இலங்கையின் தற்போதைய அரசாங்கமானது மேற்குலக சார்புக் கோட்பாட்டைக் கைக்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவானது இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துடன் வர்த்தக உறவைப் பலப்படுத்துவது தொடர்பில் அதிக அக்கறை காண்பித்து வருகின்றமை வெளிப்படை.

2016ஆம் ஆண்டு பெப்ரவரியில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் தலைமையில் ‘அமெரிக்க-இலங்கை கூட்டுக் கலந்துரையாடல்’ இடம்பெற்றது.

இதில் மகிந்த ராஜபக்சவிற்குப் பின்னான இலங்கைக்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையிலான உறவானது ‘உண்மையான புத்துயிர்ப்பு’ என இலங்கை வெளிவிவகார அமைச்சர் கூறியதாக ஒக்லண்ட் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘இலங்கையின் மிகப்பாரிய ஏற்றுமதிச் சந்தையாகத் திகழும் அமெரிக்காவானது இலங்கை மீது ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்துமாறு அழுத்தம் கொடுக்க முடியும்.

அதாவது அமெரிக்காவானது அனைத்துலக போர்க் குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என அழுத்தங் கொடுப்பதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ள போதிலும் அமெரிக்கா இதனைச் செய்யத் தவறியுள்ளது’ என ஒக்லண்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவானது அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளையில், மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

அனைத்துலக நீதிபதிகளின் ஊடாக இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டால், மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை இராணுவம் பாரியதொரு எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா அச்சம் கொள்கிறது.

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, இந்த விசாரணைக்கான ஒத்துழைப்பை இலங்கை இராணுவத்தினர் வழங்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீர மற்றும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு இடையிலான வாக்குவாதம், கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இலங்கை கடற்படை அதிகாரி ஆகியோருக்கு இடையிலான மோதல் ஆகிய இராணுவம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்வதற்கு இலங்கை இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இதுபோன்றே போர்க்குற்ற விசாரணையின் போதும் இலங்கை அரசாங்கம் பாரியதொரு நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.

கிழக்கு மாகாண முதலமைச்சர், இலங்கை இராணுவ முகாங்களுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்ட சம்பவமானது இராணுவத்தின் அதிகாரத்துவத்தையும் இலங்கை அரசாங்கத்தின் பலவீனத்தையுமே எடுத்துக் காட்டுகின்றது.

இவ்வாறான சூழலில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கையில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.

இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இந்தியா தனது எண்ணத்தை உறுதிப்படுத்துவதற்காக சீனாவையும் பயன்படுத்துகிறது.

எனினும், வெள்ளை மாளிகையைச் சேர்ந்த சமந்தா பவரின் அதிகாரத்தையும் குறைத்து எடைபோட முடியாது.

ஒபாமாவின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் போர்க் குற்றங்கள் தொடர்பான இலங்கை விவகாரம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே சமந்தா பவரின் கருத்தாகும்.

எது எவ்வாறிருப்பினும், இலங்கையானது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை எதிர்க்க வேண்டும் என இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை வழங்கியதா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது.

- Puthinappalakai

http://www.tamilwin.com/articles/01/108171

  • தொடங்கியவர்
28 minutes ago, போல் said:

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கையில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். அனைத்துலக நீதிபதிகளின் ஊடாக இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டால், மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை இராணுவம் பாரியதொரு எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா அச்சம் கொள்கிறது.

இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இந்தியா தனது எண்ணத்தை உறுதிப்படுத்துவதற்காக சீனாவையும் பயன்படுத்துகிறது.

போர்க்குற்ற விசாரணைக் கிலி பிடித்துப் போயுள்ள சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் புதிய புனைகதைகளை கட்டவிழ்த்து, சர்வதேசத்தை மிரட்டமுடியுமா என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்தப் புனை கதையில் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன என்று கதை கட்டியுள்ளனர் மகா பொய் வம்சக்காரர்கள். இதன் மூலம் சர்வதேசத்தை அச்சுறுத்தி போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்த முடியும் என்று நம்புவதையும் இவர்கள் எழுத்தில் காணலாம்.

கொஞ்சம் விட்டால் இன்னொரு படி தாண்டி, போர்க்குற்ற விசாரணையை முன்னெடுத்தால் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் சதி செய்வார்கள் என்றும், அப்படி அவர்கள் சதி முயற்சியில் இறங்கினால் அமெரிக்காவின் இராணுவமும் NATO படைகளும், சீன இராணுவமும் உலகில் இல்லாது அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றும் சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் புதிய மகா வம்சக் கதைகளை புனைந்து, சர்வதேசத்தை அச்சுறுத்தி போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்த முயலுவார்கள் போல் தெரிகிறது.

38 minutes ago, போல் said:

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட மீளிணக்கப் பொறிமுறையானது புதிய பிரச்சினைகளை உருவாக்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு இலங்கை தலைவர்களிடம் சீனத் தூதுவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் நல்லிணக்கம் என்பது சாத்தியமற்ற ஒன்று என இவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புனைகதைகள் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை மட்டுமல்ல, அரசியல் தீர்வுத் திட்டத்தையும் தடுத்து நிறுத்தமுடியும் என்ற நப்பாசை இருப்பதையும் சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் எழுத்தில் காணலாம்.

40 minutes ago, போல் said:

வெள்ளை மாளிகையைச் சேர்ந்த சமந்தா பவரின் அதிகாரத்தையும் குறைத்து எடைபோட முடியாது.

 

41 minutes ago, போல் said:

வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கக் கூடாது என்ற கருத்தை மோடி தெரிவித்ததாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

ஏதோ ஒரு தைரியத்தில் இந்தப் புனைகதைகளை அவிழ்த்துவிட்ட சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் இதை அமெரிக்கா, சீனா நம்புமோ இல்லையோ என்ற சந்தேகத்தில் குழப்பமடைவதையும், ஆனால் தங்கள் காலடியில் எப்போதும் படுத்திருக்கும் ஹிந்தியா நம்பிவிடும் என்ற நம்பிக்கையையும் இவர்கள் எழுத்தில் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா இராணுவத்தை இந்தளவுக்கு பயிற்சி.. ஆயுதம்.. அனுபவம் கொடுத்து வளர்த்தெடுத்ததே அமெரிக்கா தான். 

மிகப் பெரிய மனிதப் படுகொலைகளுக்குச் சொந்தக்காரர்களான.. சொறீலங்கா இராணுவத் தளபதிகள் எல்லாருமே அமெரிக்க அல்லது மேற்குலக பயிற்சி அனுபவம் உள்ளவர்கள்.. மற்றும்.. பலர் மெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள்.

இதில அமெரிக்காவுக்கு அச்சமாம்.. அச்சம். சும்மா போங்கண்ணே.. காமடி பண்ணாம. tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.