Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது இலங்கை! ஐ.நாவின்அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறையாக வேண்டும்!! - இரா.சம்பந்தன்

Featured Replies

சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது இலங்கை! ஐ.நாவின்அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறையாக வேண்டும்!!

"இலங்கை அரசின் சம்மதத்துடன்தான் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்தத் தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசு விலகிச்செல்ல சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது.'' - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 32ஆவது கூட்டத்தொடர் கடந்த 13ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பில் 29 ஆவது கூட்டத்தொடரில் (கடந்த மார்ச் மாதம்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் 32ஆவது கூட்டத்தொடரின்போது வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன் வாய்மொழிமூல அறிக்கையை, எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் இலங்கை அரசு மந்தகதியில் செயற்படுவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும், ஐ.நா. உறுப்பு நாடுகளின் முக்கியஸ்தர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் அமெக்காவின் வொஷிங்டன் நகரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதேவேளை, ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், இதன்போது இலங்கையர் அனைவரினதும் அர்த்தபூர்வமான ஈடுபாடு காணப்படவேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வின் ஆரம்ப உரையில் (கடந்த 13ஆம் திகதி) வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றுக்கான செயன்முறை அவசியம் என்ற விடயத்தில் அமெரிக்கா மிகவும் உறுதியாகவுள்ளது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களுடன் கூடிய பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் அதிரடிக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன் இலங்கை தொடர்பில் தனது வாய்மொழிமூல அறிக்கையை எதிர்வரும் 29ஆம் திகதி ஜெனிவாவில் சமர்ப்பிக்கவுள்ளார். இவை தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்னவென்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் தமிழ்ப் பத்திரிகை ஒன்று வினவியுள்ளது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, "இலங்கை அரசின் சம்மதத்துடன்தான் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 29 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளின் ஆதரவுடன்தான் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

இது இலங்கை அரசின் பொறுப்பாகும் - கடமையாகும். இதிலிருந்து இலங்கை அரசு விலகிச்செல்ல முடியாது. இதையும் மீறி இந்தப் பொறுப்பிலிருந்து இலங்கை அரசு நழுவிச்செல்ல முற்பட்டால் அதற்கு சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, ஐ.நா. தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைனின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். இப்போதைக்கு இதற்கு மேல் வேறு எதனையும் கூறமுடியாது'' - என்று கூறியுள்ளார்.

http://malarum.com/article/tam/2016/06/18/14850/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B

 

சம்பந்தன் கொஞ்சம் நித்திரையால எழும்பி இருக்கிறார் போல இருக்கு. ஏதோ நல்லது நடந்தால் சரி.    

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசு விலகிச்செல்ல சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசு விலகிச்செல்ல சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

   

"இலங்கை அரசின் சம்மதத்துடன்தான் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 29 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளின் ஆதரவுடன்தான் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இது இலங்கை அரசின் பொறுப்பாகும் - கடமையாகும். இதிலிருந்து இலங்கை அரசு விலகிச்செல்ல முடியாது. இதையும் மீறி இந்தப் பொறுப்பிலிருந்து இலங்கை அரசு நழுவிச்செல்ல முற்பட்டால் அதற்கு சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, ஐ.நா. தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைனின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். இப்போதைக்கு இதற்கு மேல் வேறு எதனையும் கூறமுடியாது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=159887&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, போல் said:

சம்பந்தன் கொஞ்சம் நித்திரையால எழும்பி இருக்கிறார் போல இருக்கு. ஏதோ நல்லது நடந்தால் சரி.    

எந்த வேகத்தில எழும்புவாரோ, அதே வேகத்தில மறுபடியும் படுத்துவிடுவார்.

21 hours ago, Athavan CH said:

"இலங்கை அரசின் சம்மதத்துடன்தான் கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 29 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளின் ஆதரவுடன்தான் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

இது இலங்கை அரசின் பொறுப்பாகும் - கடமையாகும். இதிலிருந்து இலங்கை அரசு விலகிச்செல்ல முடியாது. இதையும் மீறி இந்தப் பொறுப்பிலிருந்து இலங்கை அரசு நழுவிச்செல்ல முற்பட்டால் அதற்கு சர்வதேச நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது.

சர்வதேச நாடுகள் அனுமதிக்காது என்று சொல்வதன் மூலம் சம்சும் இந்த முறை காலை வாரிவிடமாட்டார்கள் என்று அரைகுறை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.  நாங்களும் அனுமதிக்க மாட்டொம் என்று எப்ப சொல்வாரோ தெரியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.