Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன் செல்கிறார் மங்கள சிக்குவாரா வீரதுங்க?

Featured Replies

உக்ரைன் செல்கிறார் மங்கள சிக்குவாரா வீரதுங்க?
 
 
உக்ரைன் செல்கிறார் மங்கள சிக்குவாரா வீரதுங்க?
1466330984_download%20%281%29.jpgஉக்ரைனுடன் குற்றவாளிகளை பறிமாற்றிக்கொள்ளும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், உக்ரைனில் மறைந்து வாழ்வதாக நம்பப்படும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்யும் நடவடிக்கைகளை இலங்கையின் நீதித்துறை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளிகளை பரிமாற்றிக்கொள்ளும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் உக்ரைன் நோக்கி செல்லவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
உதயங்க வீரதுங்க தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவினரும் உக்ரைன் அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக உதய வீரதுங்கவை இலங்கை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் மஹிந்த மேற்கொண்ட தாய்லாந்து மற்றும் ஜப்பான் விஜயங்களின்போது, உதயங்க வீரதுங்கவை சந்தித்தமைக்கு சான்றாக சில புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இதனையடுத்து, தாம் உக்ரைனில் வாழ்ந்து வருவதாக உதயங்க வீரதுங்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு உக்ரைனில் தங்கியுள்ளவர்களை தாய்நாட்டிற்கு ஒப்படைக்கும் வகையிலான ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு, கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மருமகன் முறையுடைய உதயங்க வீரதுங்க, ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக பல வருடங்கள் கடமையாற்றிய அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சின் முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திரியாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

சிங்கள-பௌத்த இனமதவெறியரான மங்கள தனது முன்னாள் நண்பரை காப்பாற்ற போயிருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.