Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொஹமட் முஸம்மில் கைது

Featured Replies

மொஹமட் முஸம்மில் கைது
 
 

article_1466401509-1.jpgதேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/175110/ம-ஹமட-ம-ஸம-ம-ல-க-த-#sthash.dFzQEAL7.dpuf

முஸம்மிலின் மனைவியின் பெயரில் 62 இலட்சம் ரூபா வைப்பு!

ஜனாதிபதியின் செயலகத்தில் உள்ள வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், தனது மனைவியின் பெயரில் 62 இலட்ச ரூபாய் வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் நிதிக்குற்றத்தடுப்பு அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15ஆம் திகதியிலிருந்து கே.எல்.8238 என்ற வாகனத்தை இவர் பயனன்படுத்தியுள்ளதாகவும், இதனை இவர் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்குகென்று பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்திற்காக 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 63 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ஜனாதிபதி செயலகத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இக்காலப்பகுதியில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் செயல்பாட்டு பணிப்பாளராக பதவிவகித்த முஸம்மில் தனது உத்தியோகப்பூர்வ வாகனமாக குறித்த வாகனத்தையே பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வாகனத்திற்கான செலவுப் பணமாக 62 லட்சத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திலேயே இவர் பெற்று வந்துள்ளதாகவும், குறித்த பணத்தையே தனது மனைவியின் பெயரில் வைப்பிலிட்டுள்ளதாகவும் நிதி குற்றவிசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த வழக்கு உள்ளிட்ட மேலும் 4 வழக்குகள் மொஹமட் முஸம்மில் மீது தொடரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் முஸம்மில் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/crime/01/108402

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.