Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்மன்பில கைது செய்யப்பட்டமைக்கு இவரே காரணம்!

Featured Replies

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தேவைக்கே பிவித்துர ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள உதய கம்மன்பிலவை இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சம்பிக்க ரணவக்க என்று ஒரு அமைச்சர் இருக்கின்றார், அவர் உதய கம்மன்பில மீது குரோதமாக செயற்பாடுகளின்றார்.

1997ஆம் ஆண்டு கைவிடப்பட்ட ஓர் விடயத்தை கட்டியெழுப்பி மீளவும் சட்ட நடவடிக்கை எடுப்பது சம்பிக்க ரணவக்கவின் தேவைக்காகவேயாகும் என்று நாம் அறிகின்றோம்.

சம்பிக்க ரணவக்க இதற்கு நேரடியாகவே தொடர்புப்பட்டுள்ளார் என எனக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/108401

  • தொடங்கியவர்

உதய கம்மன்பிலவினால் ஏமாற்றப்பட்ட அவுஸ்திரேலியர் இலங்கை வருகை!

110 மில்லியன் ரூபாய் பெறுமதியான தமது பேன் ஏசியா வங்கி பங்குகளை ஏமாற்றி கைமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியமளிக்க, அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரைன் ஷாட்டிக் இலங்கை வரவுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில், தற்போது உதய கம்மன்பில விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஷாட்டிக்கின் அவுஸ்திரேலிய லங்கா ஹோல்டிங் நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன்னர் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரியாக இருந்த உதய கம்மன்பில, போலியான பவர் ஒப் எட்டோனியை தயாரித்து கைமாற்றிக்கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் கம்மன்பில கைது செய்யப்பட்டவுடன் இன்று ஸ்கைப் மூலம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற பிரைய்ன் ஷாட்டிக், தாம் ஏமாற்றப்பட்டமை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்தபோதும் அரசியல் செல்வாக்கு காரணமாக கம்மன்பிலவை அனுக முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தமது நிறுவனத்தில் முகாமைத்துவ பணிப்பாளராக இணைந்த சிட்டி ஜயசிங்க என்பவர் தம்மை பயமுறுத்தியதாக ஷாட்டிக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சிட்னி ஜயசிங்கவும், கம்மன்பிலவுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மரண அச்சுறுத்தல் காரணமாகவே தாம் இலங்கையில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்ட ஷாட்டிக், ஜயசிங்க மீதும் கம்மன்பில மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/crime/01/108398

உதய கம்மன்பிலவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற ஞானசார தேரர்

பங்கு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலைக்கு சென்ற அவருடன் கூட்டு எதிர்க்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

இதில், தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, மஹிந்தாநந்த அலுத்கமகே, குமார வெல்கம, மஹிந்த யாப்பா அபேவர்த்தக, காமினி லொக்குகே உள்ளிட்டோர் அடங்கியிருந்தனர்.

http://www.tamilwin.com/crime/01/108397

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

உதய கம்மன்பிலவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற ஞானசார தேரர்

பங்கு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலைக்கு சென்ற அவருடன் கூட்டு எதிர்க்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

இதில், தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, மஹிந்தாநந்த அலுத்கமகே, குமார வெல்கம, மஹிந்த யாப்பா அபேவர்த்தக, காமினி லொக்குகே உள்ளிட்டோர் அடங்கியிருந்தனர்.

http://www.tamilwin.com/crime/01/108397

ஒட்டுமொத்த கள்ளக்கூட்டமும் போய் சிறையில் இருக்கும் தங்கள் திருட்டு சகாவை பார்த்திருக்கிறது ...
அவ்வளவும் ஒன்னாம் நம்பர் களவாணிகூட்டம் ..ராஜபக்ஷவால் உருவாகிய அரசியல் அனாதைகள் ..

  • தொடங்கியவர்

தமிழின அழிப்பில் ஈடுபட்ட ராஜபக்ச குழுவின் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை தொடர்வதில் முன்னின்று உழைக்கும் மிக மிக மோசமான சிங்கள-பௌத்த இனவெறியர்களில் முக்கியமான சிலர்:
(1) தினேஷ் குணவர்தன
(2) சம்பிக்க ரணவாக்க (இப்ப நல்லன் வேடம்)
(3) உதய கம்மன்பில
(4) விமல் வீரவன்ச
(5) ரத்ன தேரர்
(6) ஞானசார தேரர்
(7) ரில்வின் சில்வா
........
........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.