Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா எஸ்எஸ்ஆர் முதலாளி இனந் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார்

Featured Replies

வவுனியா எஸ்எஸ்ஆர் முதலாளி இனந் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார்

வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு அச்ச நிலை:-

 


வவுனியா நகரின் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் செவ்வாய்க்கிழமை மாலை கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
 
முறைப்பாட்டையடுத்து, வெளிக்குளம் இராணி மில் ஒழுங்கையில் உள்ள அவருடைய வீட்டிற்கச் சென்ற பொலிசார் கடத்தப்பட்டவருடைய மோட்டார் சைக்கிள், அவருடைய கைத்தொலைபேசி போன்றவை வீட்டு வாசலில் கிடந்து கண்டெடுத்துள்ளனர்.
 
இந்தச் சம்பவம் வவுனியா வர்த்தகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
இந்தச் சம்பவத்தை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர். இது குறித்து தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வ்வுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரீ.கே.இராஜலிங்கம் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து வர்த்தகர்கள் புதன்கிழமை கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார்.
 
சண்முகம் முதலாளி என அழைக்கப்பட்ட சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளராகிய பிரபல முன்னாள் வர்த்தகர் சண்முகம் அவர்களின் புதல்வரான செல்வராஜா எஸ்எஸ்ஆர் முதலாளி என நன்கு அறியப்பட்ட பிரபல வர்த்தகராவார்.
 
இவரை யார் என்ன தேவைக்காக கடத்தினார்கள் என்பது குறித்து பலரும் குழப்பமடைந்துள்ளனர். குறிப்பாக வர்த்தகர் சமூகம் பெரும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியிருக்கின்றது.
 
சம்பவம் பற்றி அறிந்ததும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சோதனைகள் நடத்தியதுடன் விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133341/language/ta-IN/article.aspx

வவுனியாவில் காலூன்ற முயலும்  முஸ்லிம் காடையர்கள் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு ஒட்டுக்குழுக்களினதும் சிங்கள-பௌத்த இனவெறிப் பாதுகாப்புத் துறையினதும்  பங்களிப்பும் உள்ளதா எனப் போகப்போகத் தெரியும்.

  • தொடங்கியவர்

வவுனியாவில் வர்த்தகரைக் கடத்தியது யார்?

 

வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் மோட்டார் சைக்களில் தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் வைத்து வேன் ஒன்றில் வந்த சிலரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்தில் இருந்து, வர்த்தகருடையது எனக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது கையடக்கத் தொலைபேசி, பாதணிகள் உள்ளிட்ட பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://tamil.adaderana.lk/news.php?nid=80910

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.