Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


🌷கரிசக்காட்டுப்பூவே🌷

Sundhari S ·Sortspdeno0m0m6cug390gha0l61u95ut5gt 11ul1t7uiu401g80tml77a8 ·

ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நாட்டு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மேல் போருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. ஆனால் மகாராணியை தனியாக விட்டு செல்ல பயம்!

அதனால் ராணியை ஒரு அறையில் தேவையான உணவுகளை வைத்து மன்னர் பூட்டு பூட்டி விட்டார் !

தன்னுடைய உயிர் நண்பனும் மந்திரி கிட்ட அறையின் சாவியை கொடுத்து ! எனக்கு இந்த அரண்மனையில் யார் மேலும் நம்பிக்கை இல்லை ! உன்னை தவிர . இந்தா ராணியின் அறையின் சாவி ! ஒருவேளை நான் நான்கு நாட்களில் போரில் இருந்து வரவில்லை என்றால் ராணியின் அறை கதவை திறந்துவிடு என்று சொன்னார் !

சொல்லிவிட்டு குதிரையின் மேல் ஏறி புறப்பட்டார் . கொஞ்சம் தூரம் சென்று இருப்பார், பார்த்தால் யாரோ ஒருவர் குதிரையில் அவரை நோக்கி வேகமாக வருவதை பார்த்து தன் குதிரையை நிறுத்த,

வந்தது தன் நண்பனான மந்திரி. மன்னர் என்ன விஷயம் ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்க

அதற்கு அவர் சொன்னார் ! மன்னா நீங்க மகாராணியை பூட்டிய அறையின் சாவியை விட்டு விட்டு

தவறுதலாக வேற சாவியை என்னிடம் கொடுத்து விட்டீர்கள் ! என்றார் !

Voir la traduction


  • Replies 313
  • Views 62.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • கருத்துக்கள உறவுகள்

கோபமும் கொலைவெறியும் . ........ ! 😀

Ammu ·Sopdtseonrc1cu 95lgl0it6tfh79a156a0239mlua530h0m29cl10fi1ucm ·

சிரிக்க மட்டுமே! படித்ததில் சிரித்தது. அதுவும் கடைசி வரிகள்👌"

கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்று

மகன் தன் அப்பாவிடம் கேட்டான்.

அப்பா ஒருகணம் யோசித்தார்.

“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.

மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.

“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.

“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.

“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”

போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.

“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவத திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ…அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...

... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.

படித்துவிட்டு பகிரவும் 👍

504378159_122127312242877425_20603792817

  • கருத்துக்கள உறவுகள்

524970019_1778742413070024_9103603146539


பழமையும் புதுமையும்

Santha Batumalai ·entdpsSoroc 0559f07t:ih2gef077103a1lil uctu193681u13fl9,9u0j ·

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவரை எனது தொழில் நிமித்தமாக சந்தித்தேன்.

வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட! �

தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..

அன்று காலை எழுந்தவுடன்

அவருக்கு ஒரு பிரச்னை.

சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது..

ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.

இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால்,

சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான்,

ஏதோ பிரச்னை என்று புரிந்தது.

டாக்டராக இருந்தாலும்,

தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய்,

உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன்.

பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன்.

அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.

‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்னார்

அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.

அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..

போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர்.

‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா?

கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர்,

அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.

‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்!

இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக்

கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா?

என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என

குதிக்க ஆரம்பித்தார்.

நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர்

வெளிவர ஆரம்பித்து விட்டது.

அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!!

‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார்.

அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து,

பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம்.

அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!

நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில்

இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்.

மருத்துவர் பெற்ற பலன் இவ்வுலகும் பெற வேண்டி பகிர்கிறேன்

படித்ததில் பகிர்ந்தேன் 🙏" ........!

பிரச்சினை வரும்போது முயற்சித்துப் பார்க்கலாம் .......... !

  • கருத்துக்கள உறவுகள்

523488003_719312274353145_12261144871322


முக்கடல் சங்கமம் ❤️❤️❤️ (இசை கவி நகை )❤️❤️❤️❤️❤️
  · 

விஜயா கிருஷ்ணன் ·Srdtopoesnju031h0a13iu8t24l7:gmta271u2014lc  1ff,l2f3uiiea80 ·

😁டாக்டருக்கும் ஆக்டருக்கும்

உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!

😁" சிவகாசிக்கும்

நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!

😁" FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILES அ உட்கார்ந்து பார்க்கணும்.

PILES க்கு பார்த்து உட்காரணும்.

😁" செல்போனுக்கும்

மனிதனுக்கும் என்ன

வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

ஓவ்வொரு இளைஞனின்

மன உளைச்சலுக்கும்

காரணம்?

மதிப்பெண்ணும்

மதிக்காத பெண்ணும்!

😁" வசதி இல்லாதவன்

ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

😁" ஆண்களை

அதிக தூரம் நடக்க வைக்கும்

விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!

😁" என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது

பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்

சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.

😁" கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்.

எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்..

🍅" *சிரித்து சிந்தியுங்கள்

இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள்* .🍅"

மொத்தத்துல சிரிங்க 😂"

இனிய மாலை வணக்கம் .......... !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

523488003_719312274353145_12261144871322


முக்கடல் சங்கமம் ❤️❤️❤️ (இசை கவி நகை )❤️❤️❤️❤️❤️
  · 

விஜயா கிருஷ்ணன் ·Srdtopoesnju031h0a13iu8t24l7:gmta271u2014lc  1ff,l2f3uiiea80 ·

😁டாக்டருக்கும் ஆக்டருக்கும்

உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!

😁" சிவகாசிக்கும்

நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!

😁" FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILES அ உட்கார்ந்து பார்க்கணும்.

PILES க்கு பார்த்து உட்காரணும்.

😁" செல்போனுக்கும்

மனிதனுக்கும் என்ன

வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

ஓவ்வொரு இளைஞனின்

மன உளைச்சலுக்கும்

காரணம்?

மதிப்பெண்ணும்

மதிக்காத பெண்ணும்!

😁" வசதி இல்லாதவன்

ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

😁" ஆண்களை

அதிக தூரம் நடக்க வைக்கும்

விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!

😁" என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது

பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்

சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.

😁" கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்.

எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்..

🍅" *சிரித்து சிந்தியுங்கள்

இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள்* .🍅"

மொத்தத்துல சிரிங்க 😂"

இனிய மாலை வணக்கம் .......... !

எல்லாம் திறமான நகைச்சுவைகள் சுவியர். 😂

  • கருத்துக்கள உறவுகள்


💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰🥰 Best Friends For Ever💐💐💐

Dharma Lingam ·ontdeSrposcftmh7654al4ct59 g1m2334uhiiag16t6fn04ci3hai6cafa6 ·

ஒரு தெருநாயை சிறுத்தைப்புலி ஒன்று வேட்டையாட துரத்தி வந்துள்ளது . அந்த நாய் மக்கள் வசிக்கும் தெருவில் புகுந்து ஒரு வீட்டின் கழிவறைக்குள் சென்றுவிட்டது . பின்னாலே துரத்தி வந்த சிறுத்தைப்புலியும் கழிவறைக்குள் புகுந்து விட , அப்போது வீட்டு உரிமையாளர் சிறுத்தைப்புலியின் வாலைப் பார்த்துவிட்டார் . கழிவறைக் கதவை வெளியே இருந்து பூட்டி விட்டு வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார் .

வனத்துறையினர் வந்து கழிவறை கூரையை தகர்த்து , சிறுத்தைப்புலிக்கு மயக்கமருந்து செலுத்தி அதை மீட்க ஏறத்தாழ 7 மணிநேரம் ஆகியது . அதாவது நாயும் சிறுத்தைப்புலியும் மிகச்சிறிய இடத்தில் ஆறுமணி நேரத்திற்கு மேல் ஒன்றாக இருந்துள்ளன. வேட்டையாட வந்த சிறுத்தைப்புலி நாயை எதுவும் செய்யவில்லை .

காரணம் அது தனது சுதந்திரத்தை இழந்து விட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தம் . அது உணவு எடுத்து கொள்ளவில்லை( பசி மறந்து போனது) . வனவிலங்குகளுக்கு அது உயிரோடு இருக்கும் போது இழக்கும் கடைசி விசயம் அதன் சுதந்திரம்.

இப்போது நாம் , மனிதர்கள் . நாம் எடுத்தவுடன் நம் தேவையை பூர்த்தி செய்ய இழக்க நினைக்கும் முதல் விசயம் நம் சுதந்திரம் . வசதியான வாழ்க்கைக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கடனில் மூழ்கி அதை அடைக்க பணத்தேவையை தீர்க்க சுதந்திரத்தை இழந்து வேலை . வசதியான/ சொகுசான வாழ்க்கைக்கான விலை சுதந்திரம் . ஒரு உறவு நீடிக்க , அவர்களின் அன்பு வேண்டும் என்று வேறொருவர் நாம் உடுத்தும் உடை வரை தேர்வு செய்ய விட்டுவிடுவோம் . அடுத்தவரின் அன்பு, அக்கறை வாங்க நாம் தரும் விலை சுதந்திரம் . நம் அன்பை புரியவைக்க கூட சில இடங்களில் நம் சுதந்திரத்தை அடகு வைக்கிறோம் . இந்த மாதிரி பல சூழல்களில் நாம் ஒன்றை நிரூபிக்க / பெற நம் சுதந்திரம் தான் மனிதர்கள் தரும் முதல் விலை .

ஆனால் சுதந்திரம் மனிதனுக்கு மிகவும் அவசியம். தெளிவான சிந்தனை மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அதுதான் தேவை . நிம்மதி கிடைக்கும். தங்கச்சிறையானாலும் சிறைதான், மூன்று வேளையும் அறுசுவை உணவு என்றாலும் சிறைஉணவு தான். அதனால் எந்த காரணத்திற்காகவும் சுதந்திரத்தை இழக்காதீர்கள்....... !

530498462_3668795406761106_8022155274954

  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

செல்வன் சௌந்தரராஜ் ·porSendtsoi0l77hci1ta1haa4hg59a8 ga0lmmuch98ct0l4g3t7tf697c9 ·

‘நாய்க்_குட்டிகள்_விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார்

அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும்

என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான்.

"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை என்று கடைக்காரர் பதில் சொன்னார்.

நான் நாய்க் குட்டிகளைப் பார்க்கலாமா?"

என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடி வந்தன.

ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது. பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன்,"என்னாச்சு அதுக்கு?"

என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை.எனவே எப்போதும் முடமாகத் தான் இருக்கும் என்று கூறி விட்டதாக விளக்கினார் கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம்.

"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."என்றான்.

"அப்படின்னா நீ அதுக்குக்

காசு கொடுக்க வேணாம். நான்

அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்"

என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில்

இப்போது சிறு வருத்தம்.

கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.

"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக்

கொடுக்க வேணாம். மற்ற நாய்க்

குட்டிகளைப் போலவே இதுவும்

விலை கொடுத்து வாங்கத்

தகுதியானது தான்.

நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத்

தொகையையும் கொடுக்கிறேன்.

ஆனா, இப்போ எங்கிட்ட கொஞ்சம் பணம் தான் இருக்கு. பாக்கித்

தொகையை மாசா மாசம்

கொடுத்துக் கழிச்சிடறேன்." என்றான்.

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.

"பையா... இந்த நாய்க் குட்டியால

உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓட முடியாது...குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."என்றார்

உடனே, அந்தப் பையன்

குனிந்து தனது இடது கால்

பேண்டை உயர்த்தினான்.

வளைந்து, முடமாகிப் போயிருந்த

அக்காலில் ஓர் உலோகப்

பட்டை மாட்டப்பட்டிருந்தது.

இப்போது அவன்

கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச்

சொன்னான்.

"என்னாலும் தான் ஓட முடியாது...

குதிக்க முடியாது. இந்தக்

குட்டி நாயின் கஷ்டத்தைப்

புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத்

தேவை!" என்றான்.

உன் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ உயிரோடு இருக்கிறாய்.

ஆனால் பிறர் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.....!💪"

530232920_1778641986116618_8751601256520

  • கருத்துக்கள உறவுகள்

அரசனும் ஒரு நெசவாளியும் ........ ! 😀

  • கருத்துக்கள உறவுகள்

💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰🥰 Best Friends For Ever💐💐💐

Dharma Lingam ·rpootSesdna32fl490 6c987515tfig3317h279916hgg9lmaht8tm711fmf ·

ஜட்ஜ் :

எதற்காக விவாகரத்து கேட்கிறாய் ?

விண்ணப்பதாரர் :

ஐயா.. என் மனைவி என்னை தினமும், பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.. வெங்காயம் வெட்டச் சொல்கிறாள். கடைக்குப் போகச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது அதனால் தான் கேட்கிறேன், விவாகரத்து தாருங்கள்.

ஜட்ஜ் :

இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்

கொள்ளவே முடியாது.. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால், தோல் தன்னால் வரப்

போகிறது. அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிட்ஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம், அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது.

பத்து பாத்திரத்தையெல்லாம்,

பத்து நிமிஷம் தண்ணீரில் ஊற வைத்து, விம் பாரால தேய்ச்சா சரியாப் போயிடுது. அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா, எப்படி பட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும். அது மட்டுமில்ல துணியை சர்ப்புல ஊற வைக்கறதுக்கு முன்னாடி நல்ல தண்ணியில ஒரு தடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்புல ஊற வைச்சி மிஷின்ல போட்டா,

துணி தும்பப்பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கு

எல்லாம் டைவர்ஸ் தர முடியாது புரிஞ்சுதா..

விண்ணப்பதாரர் :

ஐயா நல்லா புரிஞ்சதுங்க...

ஜட்ஜ் :

என்ன புரிஞ்சது ?

விண்ணப்பதாரர் :

எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயத்தோட விட்டுட்டா, ஆனா, அங்க பாத்திரமும் தேய்ச்சி,

துணியும் தொவைக்கிறீங்கன்னு ......... !

534827922_3678623565778290_1866027666755

  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

Sundhari S ·Srtodoepsn2a03c1g45576f m2t21th0656mc6t6fuc6g996ti8i4u9h862a ·

என்றோ படித்தது, இன்றும் நினைவில் நிற்கிறது

ஒரு துறவி. அவருக்கு 5, 6 சீடர்கள்.

ஒருநாள், அவர்களில் ஒருவன் தன் குருவுக்கு முன்னால் வந்து நிற்கிறான்.

இனி, கேள்வி-பதில் பாணியில், அவர்களுக்குள் உரையாடல் தொடர்கிறது.

'என்ன வேண்டும் உனக்கு?'

'அது, குருவே! அந்த . . . இருக்கிறானே, அவன் . . .'

'நிறுத்து, நிறுத்து. நீ சொல்லப் போகும் சேதி நல்லதா, கெட்டதா?'

'குருவே, அது நல்லது இல்லை குருவே. அதைச் சொல்லத் தான் . . .'

'ஓஹோ, கெட்ட செய்தியா? இருக்கட்டும், இருக்கட்டும். அது உனக்கு எப்படித் தெரிய வந்தது? நீயே நேரில் பார்த்தாயோ?'

'இல்லை, குருவே. எனக்குத் தெரிந்த 2, 3 பேர் சொன்னார்கள்'.

'அதன் உண்மைத் தன்மையை விசாரித்து அறிந்தாயோ?'

'இல்லை, குருவே'.

'சரி, அது போகட்டும். அந்தச் சேதியை நான் தெரிந்து கொள்வதால், எனக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா?'

'அப்படிச் சொல்ல முடியாது, குருவே. ஆனாலும், உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிய வேண்டும் என்று தான் . . .'

'அப்படி ஆனால் சரி. இந்தச் சேதியை என்னிடம் சொல்வதால், உனக்கு ஏதாவது பயன் உண்டோ?'

'அது எப்படிச் சொல்ல முடியும், குருவே?'.

'சரி. இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேள்'.

'நீ என்னிடம் சொல்ல வந்தது நல்ல சேதி இல்லை. அது வேறு யாரோ சொல்லித் தான் உனக்கே தெரிய வந்தது. அதன் உண்மைத் தன்மையை நீ தீர விசாரித்து அறிந்திலாய். அதை நான் தெரிந்து கொள்வதால், எனக்கு எந்த நன்மையும் இல்லை. என்னிடம் சொல்லி, உனக்கும் பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை'.

'ஆகையால், நீ என்னிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம். போய், உன்னுடைய வேலையைப் பார்'.

குருவின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த சீடன், தலை குனிந்தவாறே திரும்பிப் போகிறான்.

இந்தக் கதையால், நமக்கு விளங்கும் நீதி என்ன?

1. கெட்ட சேதியை வீணாகப் பரப்பலாகாது.

2. ஒரு சேதியின் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், அதை இன்னொருவரிடம் சொல்லுவது பிழை.

3. சொல்பவன், கேட்பவன் இருவருக்குமே உதவாத ஒன்றைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

இது தான் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை நோக்கம்; அதி உன்னத நோக்கம்........ !

Voir la traduction

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

536761265_1468165530872911_6662207343046

  • கருத்துக்கள உறவுகள்

538975973_1279837507215261_4067000510827

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியிடம் ஜோக் அடிக்க நினைத்தவன்… மருத்துவமனை படுக்கையிலே முடிச்சான்!”

ஒரு நாள் ஒரு பிரபலமான பேச்சாளர் கூட்டத்தில் சொன்னார்:

“என் வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருந்த நாட்கள், 👉" இன்னொருவரின் மனைவியுடன் கழித்த நாட்கள்தான்!” 😲"

அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் 😶‍🌫️" அமைதியாக இருந்தார்கள்.

சில நொடிகள் கழித்து அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார்:

“அந்த இன்னொருவரின் மனைவி… என் அம்மா தான்!” 😍"

இதைக் கேட்ட மக்கள் எல்லாம் பெருசா சிரிச்சார்கள் 🤣" >

---

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன்,

“நானும் வீட்டில் என் மனைவியிடம் சொல்லி சிரிக்க வைக்கணும்” என்று நினைத்தான்.

அந்த இரவு 🍲"உணவு முடிஞ்ச பின், அவன் மனைவியை பார்த்து சொன்னான்:

“என் வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருந்த நாட்கள், 👉" r இன்னொருவரின் மனைவியுடன் கழித்த நாட்கள்தான்…”

அடுத்த வரி சொல்லும் முன்னாடியே

அவன் நேரே கீழே விழுந்து மயங்கிப்போனான்.

கண் திறந்த போது 🛏️மருத்துவமனை படுக்கை…

தலையில் பெரிய காயம் 🩹

அருகில் கோபத்தோடு 🥵" உருட்டுக்கட்டை பிடிச்சுக்கிட்டு இருந்தாள் அவன் மனைவி.

---

நீதி

பிறர் செய்ததை யோசிக்காமல் காப்பி அடிக்க முயற்சித்தால்…

முடிவில் காயம் தான் அடையும்

😂"

நன்றி ....முகநூல் .

  • கருத்துக்கள உறவுகள்

💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰🥰 Best Friends For Ever💐💐💐

Dharma Lingam ·oStoeprdsnl358176t1 ci6h8hmt0t12thfuat40hf8t694faf0u1l3tltuc ·

பேச கற்றுக்கொள்

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.

மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.

'முடிந்தவியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள் ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.

எப்படியும்அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதைமன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.

இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில்விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.

'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.

அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில்மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது'.

இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மஹாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.

நீதி: யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.......!!!

537541663_3683628721944441_7923949862870

  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

செல்வன் சௌந்தரராஜ் ·rdoeopsStn072c81a558u406ai89ghuahg1h3a6617 i76f3guumaggg4628 ·

ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’.

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’.

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’.

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’.

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’.

‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’.

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’.

‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்.

#நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்......!

540958832_1793936987920451_9064696714589

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

538860727_4045662105655106_2790317174187

செத்தான்டா சேகர். 😂 🤣

ஜெயிலில் இருக்கும் புருஷனை பார்த்து விட்டு காவல்துறை அதிகாரியிடம் சென்று மனைவி :

ஐயா என் புருஷன் ரெம்ப வீக்கான ஆளு . அவருக்கு இது மாதிரி கஷ்டமான வேலையை கொடுக்காதீங்க

காவல்துறை அதிகாரி:

என்னம்மா விளையாடுறீங்களா?

உங்க புருஷன் மூணு நேரமும் சாப்புடுறது தூங்குறதை தவிர வேறு எந்த வேலையும் செய்வது இல்லையே

மனைவி: மூன்று மாதமாக தினமும் இரவு அஞ்சு மணி நேரம் சுரங்கம் தோண்டுவதாக சொல்றார்

காவல்துறை அதிகாரி: ???????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

541143830_1229504415869589_6678765743647

முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது:

"எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்"

நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: "சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. உனக்கு நல்ல நாட்கள் வரப்போகின்றன..

கழுதையும் சென்றது.....

கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது.

கழுதை நரியிடம் சொன்னது:

நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது.....

அதற்கு நரி சொன்னது:

சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்.

கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.

மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது..

கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது:

நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது.

நரி சொன்னது:

நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்.

நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது.

சிங்கம் நரியிடம் சொன்னது:

பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா.

நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது.

சிங்கம் கோபமடைந்து கேட்டது:

மூளை எங்கே?

நரி பதிலளித்தது:

அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாம் முறை வந்திருக்குமா?

மகிழா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

540962676_1180517454098528_8653114616788

ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான், ''அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன். ''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.'' நீ பொய் சொல்கிறாய்.. நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?' என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான், ''இல்லை,இல்லை, நீ பொய் சொல்லவில்லை.'' என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்,''நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,' 'அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

கதை கருத்து காமெடி 

  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

Samuel Churchill ·ntoeoSdpsrf1i7955mi82ta98uth th2g3mlifhil70l7478107h0221clm5 ·

......சங்கு கதை....

ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.

நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.

தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.

“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.

இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.

“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.

இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.

ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான்.

சங்கோசை எங்கும் கேட்டது.

அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.

Voir la traduction.....!

542608849_1152688420011207_5621742550413

  • கருத்துக்கள உறவுகள்

542233773_1813490312579316_3536255575674

அவர் செய்தது சரியா தப்பா ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

544976142_1839377720793340_9066143186562

பல்லும் சொல்லும் போனது போனதுதான் . .......! 😃

  • கருத்துக்கள உறவுகள்

💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰🥰 Best Friends For Ever💐💐💐

Sujatha Jaganathan ·teonSpodsr 0au5ug3221739g036h5cg8392fh9af7l5f665f4uuhc1h7ial ·

படித்து ரசித்த ஒரு அருமையான கதை.

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்

பல மாணவர்கள் படித்து வந்தனர்.

ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .

அதில் ஒரு மாணவன் எல்லோரையும்

விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான்.

இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே

சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட

அன்பும் , கவனமும் செலுத்தினார்.

சிறிது காலம் சென்றது. அவனிடம்

பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன.

அவன் எல்லோரையும் ஏளனமாக

நோக்க ஆரம்பித்தான். தன்னை

விட மூத்த மாணவர்களைக் கூட

மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில்

மூத்த மாணவர்களிடம் கடினமாகக்

கேள்வி கேட்டு, அவர்கள் விடை

தெரியாமல் விழிப்பதைப் பார்த்து

கைகொட்டிச் சிரித்து, அவர்கள்

அவமானத்தில் அழும்வரை கேலி

செய்யத் தொடங்கினான்.

ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை.

அவனது பிழையை அவனுக்கு

உணர்த்த விரும்பினார்.

நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய்

விவரத்தைச் சொல்லி ஒரு தரமான

சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல்.

இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத்

தேவைப் படுகிறது. இதை உன்னால்

மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் "

என்றார் .

கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன.

''இதோ உடனே செய்து முடிக்கிறேன்

ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி

வீட்டுக்கு விரைந்தான்.

ஆசாரி அவனை வரவேற்று அவன்

வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும்

மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.

ஆசாரி இறந்து போனவரைக் குறித்த

விபரங்களைக் கேட்டார்.

அவனும் ஆசிரியர் சொன்னபடியே,

"அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக்

குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட

நூல்களை எழுதியவர். பத்து முறை

அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான

விருதினைப் பெற்றவர். பல அயல்

நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள்

உண்டு."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி

சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ

பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர

மூட்டியது. "அவரைப் பத்தி இவ்வளவு

சொல்லியும் புரியலைன்னு சொன்னா

நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.

ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே !

என்னதான் படிச்சிருந்தாலும்,

விருதெல்லாம் வாங்கி இருந்தாலும்

எனக்கு அது பிணந்தான். எனக்கு

வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப்

பெட்டி வேணும்னா மரியாதையா

போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.

எங்கோ பளீரென்று அடி விழுந்தது

அவனுக்கு.

"மனித அறிவு இவ்வளவுதானா ?

இதுக்காகவா இத்தனை பேரை

அவமானப்படுத்தினேன் ? "

அவமானம் பொங்கியது .

கூனிக் குறுகியபடியே ஆசியரின்

முன்னால் போய் நின்றான் .

ஆசிரியர் சிரித்துக் கொண்டே

கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி

அடிச்சாச்சா?"

அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு."

ஆசிரியர் சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்...!💝"

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்


🌷கரிசக்காட்டுப்பூவே🌷

செல்வன் சௌந்தரராஜ் ·oensrdptSoicu6tc1919um111m5a3l03u3h0 c0704i000485ggghm4ct908 ·

ஒரு இந்தியன் விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான். அவன் அருகே சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் இந்தியனை எப்படியும் ஏமாற்றி பணம் பறித்து விடவேண்டும் என எண்ணினான். இந்தியனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்..

சீனன்: ”அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது. நமக்குள் போட்டி வைத்து நேரத்தை கடத்துவோமா..?”

இந்தியன்: “வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை.. எனக்கு தூக்கம் வருகிறது...”

சீனன்: “அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய் நீங்கள் எனக்கு தரவேண்டும்.. போட்டிக்கு இப்போது சம்மதமா..?

இந்தியன்: “நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னேனே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..

சீனன்: (விடுவதாக இல்லை) “சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று நான் தோற்றால் 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..?

இந்தியன்: “சரி..சம்மதம்...”

சீனன்: ” போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்.. நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..?

இந்தியன்: ”தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..”

சீனன்: “மகிழ்ச்சி நண்பரே..”

இந்தியன்: “நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?”

சீனன்: “கேளுங்கள்..”

இந்தியன்: “ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும். அது என்ன விலங்கு..?

சீனன்: ( அதிர்ச்சியானான், நீண்ட நேரம் யோசித்து விட்டு ) “தெரியவில்லை.. 500 ரூபாயை பிடியுங்கள்..”

இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..

சீனன்: “ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..?

இந்தியன்: எனக்கும் தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..

யாருகிட்ட

இந்தியன்டா.......!

Voir la traduction

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

549918730_4102518673323430_1841204311393

1960-ஆம் ஆண்டு, மருத்துவமனை காவலர்களின் அலட்சியத்தால் அப்பாஸிய்யா மனநல மருத்துவமனையில் இருந்து (எகிப்து) மனநலம் பாதிக்கப்பட்ட 243 பேர் தப்பிச் சென்றனர். தெருக்களில் அவர்கள் அலைந்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது.

நிர்வாக இயக்குனர், உடனடியாக மருத்துவ நிபுணர் டாக்டர் கமலை வரவழைத்து, பிரச்சினையை எப்படியாவது தீர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

அவர் என்ன செய்தார்…?

ஒரு விசிலையும் சில ஊழியர்களையும் அழைத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார்.

ஒருவரோடு ஓருவர் பின்னால் இருந்து பிடித்தவாறு ரயில் விளையாட்டு விளையாடுமாறு ஊழியர்களிடம் கூறினார்.

ஒருவர் விசில் அடித்து "டூட்.. டூட்.." என்று சொல்ல, அவருக்குப் பின்னால் ரயில் பெட்டிகளைப் போன்று ஒருவரையொருவர்

பிடித்தவாறு வீதியில் சென்றனர்.

மருத்துவர் கமல் என்ன கணித்தாரோ அது நடந்தது.

ஆம். தப்பியோடிய ஒவ்வொரு பைத்தியமும் அந்த ரயிலில் ஏறியது. அவர்களை சுற்றி வளைத்த டாக்டர் கமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் வெற்றி பெற்றார்.

இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

பிரச்சினை எப்போது துவங்கியது தெரியுமா…? தப்பியோடிய பைத்தியங்கள் மொத்தம் 243 தான்!

ஆனால் ரயில் பயணத்தின் மூலம் மருத்துவமனைக்கு திரும்பியவர்களோ 612 பேர்.

மீதிப் பைத்தியங்கள் எங்கிருந்து வந்தனர்? தெரியாது. அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் திகைத்தது.

அதே சம்பவம் மீண்டும் இப்போது நடந்தால், அந்த ரயிலில் எத்தனை நபர்கள் ஏறுவார்கள்?!

உண்மை உரைகல்

  • கருத்துக்கள உறவுகள்

Thava Arumugam ·

Suivre

rpdetsooSnm3m82uh95911ah0ali1m 2u29mahh3017m65itg19901f20c50 ·

ஊருக்குப் போய் கலியாணம் கட்டின நம்ம பயல் ஒருத்தன் மனைவி வந்ததும் அவள் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுறாள் என்று ஆங்கில வகுப்பிற்கு அனுப்பி வைத்தான்.

கொஞ்சநாள் கழிய ஒருநாள் மனுசன் வேலையால களைத்து விழுந்து வர வீட்டம்மா தான் படிச்ச ஆங்கிலத்தை மனுசனுக்கு கதைத்துக்காட்டி பேர்வாங்கனும் என்றிட்டு அவன் வீட்டவர

அவள் : Welcome home,

Are you tired darling?

அவன் : Today I am so tired ...

அவள் : Ok...Rest in Peace !!!

கிழிஞ்சுது போ😂"

554103132_24748963044794670_457525322566

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.