Jump to content

குட்டிக் கதைகள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Kavitha Kavitha  ·   · 
 
என்ன ஒரு வில்லதனம்🙄
பேப்பரில் ஒரு விளம்பரம்..
''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)
பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.
விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.
வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.
பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்..
"அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"
அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்......
"அன்பே என்னை மன்னித்துக் கொள்..இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.. நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் ஸ்கார்ப்பியோவை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...!!!
😜😜🤣😂🤣
 
Peut être une image de 4 personnes et personnes souriantes
Link to comment
Share on other sites

  • Replies 226
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அன்புத்தம்பி

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

தமிழ் சிறி

இணையத்தில், ரசித்த...  குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதா

தமிழ் சிறி

படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Kavitha Kavitha  ·   · 
 
என்ன ஒரு வில்லதனம்🙄
பேப்பரில் ஒரு விளம்பரம்..
''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)
பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.
விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.
வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.
பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்..
"அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"
அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்......
"அன்பே என்னை மன்னித்துக் கொள்..இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.. நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் ஸ்கார்ப்பியோவை உடனடியாக என்ன விலைக்காவது விற்று பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...!!!
😜😜🤣😂🤣
 
Peut être une image de 4 personnes et personnes souriantes

பாவம் முனியம்மா, வெறும் பத்தாயிரம் ரூபாயுடன்…. 
எப்படி குடும்பம் நடத்தப் போகின்றார் என்று தெரியவில்லை. 😂

(ரசித்து…. வாசித்து சிரித்த… அருமையான கதை. நன்றி சுவியர்.) 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பசங்க வாசல்ல கிரிக்கெட் விளையாடும் போது வெளியே வரவே மாட்டேன். கார் கண்ணாடி ஒடைஞ்சிரும், ஜன்னல் கண்ணாடில பட்ரும், பல்புல பட்ரும், டைல்ஸ் ஒடைஞ்சிரும்னு டென்சன்ல சத்தம் போட்ருவேன். சொன்னாலும் கேக்காதுக. சோ உள்ளயே இருந்திருவேன். நேத்து என்னமோ சாவகாசமா வேடிக்க பாத்திட்டிருந்தேன். பெரியவன பாதில கூப்பிட்டு மேல்படிப்ப பத்தி விசாரிச்சேன். அடுத்த வருசம் அப்ராட் போக இருக்கான். அந்த படிப்புக்கு இந்தியால என்ன வேலை கிடைக்குனு கேட்டதுக்கு .... நா அங்க படிச்சிட்டு இங்க எதுக்கு வர்ரேன். அப்ராட்லயே செட்டில் ஆகலாம்னு இருக்கேன்னான்.
அடேய் அங்க செட்டில் ஆனா தம்பி கூட யார் கிரிக்கெட் விளையாடுவா? யார் கூட நா சண்ட போட? எனக்கு யார் சோறு போடுவான்.
ம்மா என்னைய நம்ப வேணா. என் கேரியர் படி தான் நான் போவனும்.
எனக்கு பொக்குனு ஆகிருச்சு. இந்த ஒரு வருசம் புள்ளைக்கு நல்லா ருசியா ஆக்கி போடனும்னு உடனே கிச்சன் போய்ட்டேன் 😁😕
#Dis இவனுக்கு பத்து வயசு இருக்கும் போது மாமியார் , வீட்டுக்கார் கூட எங்கயோ கோவிலுக்கு போனான். அங்க சும்மா இருக்காம கிளி ஜோசியம் பாத்தான். நீ உங்கம்மாக்கு சோறு போட மாட்டன்னு சொல்லிட்டாங்க. இவன் கோவில்லயே ஓ..... ன்னு அழுகை. வீட்டுக்கு வந்து என்னைய கட்டி அழுகுறான். அன்னிக்கு நைட் என்னைய உக்கார வச்சு சோறு போட்டு சாப்ட வச்சான் 😂😂
#தக்காளி இந்த வாழ்க்கை இருக்கே 😂😂
Peut être une image de 1 personne, océan, nuage, plage, crépuscule et horizon
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Variety of images  · 
Rejoindre
 
Anu Anish  ·   · 
 
ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம் நடைபயிற்சி போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.
அப்போ அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார்.
*மந்திரி பறிக்க போனார். அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.*
*ராஜா சொன்னார். யோவ் மந்திரி.!! அத பறிச்சு சாப்பிடு. வாந்தி வருதான்னு பாக்கலாம்.*
*வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.*
*ராஜா கேட்டார். யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.*
*அந்த குருடன் சொன்னான். அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும்ன்னு.*
*ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.*
*ராஜா குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.? எப்படி சரியா தீர்வு சொன்னாய்.? குருடன் சொன்னான். ராஜா..!! இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.*
*ராஜாவுக்கு சந்தோஷம்.*
*இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.*
*கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.*
*இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம். மந்திரிய கூப்பிட்டார்.*
*ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...*
*வைரத்தை முழுங்கித்தொலைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டார்.*
*ராஜா சொன்னார். மந்திரி.!! போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா. அவன்தான் காரண காரியத்தோட சரியாக சொல்லுவான்.*
*மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார். டேய் இது ஒரிஜினல் வைரமா.? போலி வைரமா.? இல்லன்னா ரெண்டும் கலந்து இருக்கா ன்னு பார்த்து சொல்லு.*
*அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை கையில எடுத்து பிரிச்சு.... ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான்.*
*வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.*
*ராஜாவுக்கு ஆச்சர்யம்.*
*எப்படிப்பா கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?*
*குருடன் சொன்னான்.*
*ராஜா.!! வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன்.*
*ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன குடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார்.*
*இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.*
*யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட கேட்கிறார். எல்லா பொண்ணுமே நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி சொல்றார்.*
*ராஜா பார்த்தார்.*
*கூப்புடுங்கடா அந்த கபோதிய.*
*குருடன் வந்தான்.*
*ராஜா குருடன் கிட்ட சொன்னார். என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன். எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.*
*குருடன் சொன்னான்.*
*ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.*
*ராஜாவுக்கு ஒரே குஷி.*
*சபாஷ்.!! இந்தா டோக்கன். அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.*
*குருடனும் போய்ட்டான்.*
*கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார்.*
*டேய்.!!*
*நான் ஒன்னு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.* அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல எல்லோரும் என்னைய
*பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.? சரியா சொல்லனும் என்றார்.*
*குருடன் அமைதியா இருந்தான்.*
*பதிலே பேசல.*
*ராஜா திரும்ப கேட்டார்.*
*குருடன் அமைதியா சொன்னான்.*
*ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.*
*நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான்.*
*ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.*
*ராஜா...*
*முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு இலவச டோக்கன்.*
*நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.*
*அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.*
*ஆனா நீங்க குடுத்தது பட்டை சாத டோக்கன்.*
*மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார்.*
*நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை சாத டோக்கன்.*
*ஆக.... சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?*
*நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.? ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும் முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.*
*மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.*
நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் *பணமோ,சொத்தோ,*
*பதவியோ* தீர்மானிப்பதில்லை..
*உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன......!
Peut être une image de 2 personnes
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன்..
.
“அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய் பதில் சொன்னாள், என் மனைவி...
.
அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ மனைவியின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்...
.
“வணக்கம்ண்ணே, சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு செய்திருப்பாள்...
.
“கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்...
.
“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் மகன்.
.
“என்னடா சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்க…
தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே...?’
.
என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்தது போல வலித்தது. மனைவியை பார்த்தேன்.. அவளும் தலைகுனிந்திருந்தாள். அவளுக்கும் வலித்திருக்க வேண்டும்......!
 
Peut être une image de 2 personnes, enfant, herbe et texte
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முல்லா நஸ்ருதீனுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும், அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது.
அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டி விட்டது.
அவர் ஒரு வீட்டுத் தரகரைக் கூப்பிட்டு, “வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்' என்று சொன்னார்.
அடுத்த நாள் செய்தித்தாள்களில் அந்த வீட்டுத் தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்து இருந்தார்.
முல்லா நஸ்ருதீன் செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் படித்தார். பிறகு அவர் வீட்டுத்தாகருக்கு தொலைபேசியில் சொன்னார் "என் வீட்டை விற்க வேண்டாம்.
உங்கள் விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடு நாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன்.
என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உங்களுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன்.
நான் ஏங்கிக் கொண்டிருந்த அதே வீட்டில்தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் என்னை திருப்திப்படுத்தி விட்டது என்றார்.
இருப்பதில் திருப்தி அடையாதவர்கள் எதிலுமே திருப்தி அடைய முடியாது.
மனம் எப்பொழுதும் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவிக்கொண்டே இருக்கிறது.
கார்,வீடு, நண்பன், காதலி என ஓடிக்கொண்டே இருக்கிறது. அது கிடைத்தவுடன் அடுத்ததில் தாவி விடுகிறது.
கிடைத்ததில் திருப்தி அடைவதில்லை.
மனம் என்றாலே ஓட்டம் தான். அது ஓடும் திசையில் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்.
இதனால் மிஞ்சப் போவது எதுவும் இல்லை. களைப்பை தவிர.......!
__ஓஷோ......!
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ram Ram  ·   · 
 
ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள்.
👬👉🙎🙎🙎
மூவருக்கும்
திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை
பரிசோதிக்க மாமியார்
விரும்பினார்.
😇😇😇
அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி
முதலாவது மகள் மற்றும் மருமகனுடன்
ஒரு ஏரியில் படகு சவாரி
செய்தார்.⛵🚤⛴🛳
தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார்.
இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.
🚣🏊
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார்.
அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது. 👒
இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார்.
அவரும் முதல் மருமகனைப் போலவே
செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார்.
🚖
முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை.
திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை.
மாமியார் கெஞ்சினார்.
ம் ஹும்.
பார்க்காதது போல் இருந்தார்.
மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.🙇
காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்..
பொண்ண வளக்க சொன்னா பேய்ய 🙎👹 வளர்த்திருக்கிற...சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.
மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்....
ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது.
அருகில் சென்று பார்த்தால்.. .............
மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.😜😜😜
 
Peut être une image de 1 personne
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, suvy said:

மாமனார்… புது BMW கார் வாங்கிக் கொடுத்ததை பார்க்க மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார் போல் தெரிகிறது. 😂
ஹ்ம்ம்ம்… இனி, மிகுதிக் காலத்திலாவது சந்தோசமாக இருக்கட்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kavitha Kavitha  ·   · 
 
😄😄😄😄😄
ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.
இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..
'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'.
போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.
அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.
போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்......!
 
Peut être une image de 4 personnes et texte qui dit ’லெஜண்ட் ah eh கலங்க வைத்த பதிவு’
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான். அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார்!
பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது!
ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு? "400 ரூபாய்..!"
வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.
வியாபாரி, "நான் அதை விற்க விரும்பவில்லை..." என்றார்.
ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த, இதற்கு ரூ.5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது..?"
"உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"
"ஆம் இது கத்தும்போது, மற்ற பிற கௌதாரிகள் இது இருக்கும் இடத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் கூடி வருகின்றன, பின்னர் நான் அனைத்தையும் எளிதில் வலையில் சிக்க, நான் அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன்..!" என்றான் வியாபாரி.
அப்புறம் அது விரும்பும் உணவை இந்த கௌதாரிக்கு "டோஸாக" தருகிறேன், அது மகிழ்ச்சி அடைகிறது..!
அதனால்தான் அதிக விலை..!" என்றான்.
அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான்..!
ஒருவர் கேட்டார்,
ஏன் இப்படி செய்தாய் ..?
அதற்கு அந்த வாடிக்கையாளர்....
"தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக, தனது மக்களை ஏமாற்றி காட்டிக் கொடுக்கும் ஒரு துரோகிக்கு உலகத்தில் வாழ உரிமை இல்லை ..!" என்று கூறினார்.
நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன..! அவர்களிடம் ஜாக்கிரதையாக நாம் தான் இருக்க வேண்டும்.
இது கௌதாரிக்கான கதை இல்லை நமக்கானது.....!
 
Peut être une image de tétra
 
இதுதான் கௌதாரி பறவை........அனால் இது அதல்ல ......!  😁
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இதுதான் கௌதாரி பறவை........அனால் இது அதல்ல ......!  

யாருக்குத் தெரியும்? இதுவும் காட்டிக் கொடுக்கக் கூடும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Suggestions
அந்த நாட்கள். என் பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம் தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டியவை ரெடியாக வைத்து விடுவார்.
அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தார்
என்ன ஆயா! சுறுசுறுப்பே இல்ல !ரொம்ப சோகமா உட்கார்ந்து இருக்கே! ஏன்! என்று கேட்டேன் .
மகளே ஆசுபத்திரிலே சேர்க்கணும் ! பிரசவம் இன்னைக்கோ நாளைக்கோ தெரிலே அப்பா! என்றாள்.
சட்டென்று என் பையில் எப்பொழுதும் அவசரத்திற்க்காக வைத்திருக்கும் ஆயிரம் ரூபாயை அவளிடம் நீட்டினேன்.
ஆயா! அவசரத்துக்கு வச்சுக்கோ! அப்புறம் பாக்கலாம்! என்று சொல்லிட்டு போய்ட்டேன் .
அதற்குள் சனி,ஞாயிறு விடுமுறை கழிந்து திங்கள் மாலை வந்தேன்.
ஆயா இல்லை! வேறு ஒரு பெண் இருந்தாள்..ஆனால் என்னுடைய காய்கறிப் பை ரெடியாக இருந்தது.
ஐயா ! உங்க கூட்டரை பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டேன்! இந்தாங்க உங்க காய் ,ரெடியா கட்டி வச்சுட்டேன் ! என்று கொடுத்தாள்.
ஐய்யா! மறந்துட்டேன் ! என்று சொல்லி ரெண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து" ஆயா உங்க கிட்ட கொடுக்கச் சொல்லிச்சு " என்று கொடுத்தாள் அந்த பெண்மணி .
என்னம்மா !ஆயாவுக்கு என்ன ஆச்சு ! என்றேன்
"ஆயா ஆசுபத்திரிலேதான் இருக்கு! இன்னம் பொண்ணுக்கு பேறு காலம் ஆவலே" என்றாள்
அந்த ரூபாய் நோட்டுக்களை பார்த்தேன் !.நான் கொடுத்த அதே ரூபாய்கள்தான்! எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகப் போய் விட்டது.
அதற்குள் பக்கத்துக்கு கடை பெண்மணி என்னிடம் பேசுவதற்கு சைகை செய்தாள்.
" நீ அன்னைக்கி நோட்டை கொடுத்துட்டு கூட்டர்லே ஏறி போயிட்டே சாமி
ஆயா அத்தே கைலே வச்சிக்கிணு ரொம்ப நேரம் உக்காந்துகினு இருந்தது!
வழக்கமா வாடிக்கையா ரொம்ப நாளா காய் வாங்கிக்கினு போறாரு !
அவர் கைலெல்லாம் கடன் வாங்கினா மருவாதே இல்ல !அவர் வருவாரு !இத்தக் கொடுத்திடுன்னு சொல்லிட்டுப் போச்சு !செலவு பணத்துக்கு நான் ஏற்பாடு செய்திட்டேன்" என்றாள் .
! அன்றாடம் கஷ்டப்பட்டு ஜீவனம் செய்யும் ஒரு வயதான பெண்மணியின் வைராக்கியம் ,கவுரவம் என்னை பெருமையுடன் சிலிர்க்க வைத்தது!
சிறிது யோசனை செய்தேன்! பிறகு அந்தப் பெண்மணியிடம்
"தப்பா நெனச்சுக்காதே ! இந்தப் பணத்தை நீ கொடுத்ததாக இருக்கட்டும் .என்று சொல்லி இன்னும் ஒரு ஆயிரம் சேர்த்துக் கொடுத்தேன் அவளிடம் .
இதை ஆயாவிடம் கேட்காதே ! நீயும் எனக்குத் தரவேண்டாம் " என்றேன்.
அந்தப் பெண்மணி கொஞ்ச நேரம் யோசனை செய்தாள் .பிறகு என்னைப் பார்த்தாள்.
யப்பா! உனக்கு ரொம்ப நல்ல மனசு! பிள்ளை குட்டியோட எப்பவும் சந்தோஷமா இருப்பே! இந்த பணம் தேவை இல்லே ! நான் கொடுத்திட்டேன் ! எப்படியாச்சும் எங்க செலவே நாங்க சுதாரிச்சுருவோம்" என்று என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள்.
நான் மிகவும் அசந்து போய்ட்டேன் .
என்ன வில் பவர்! என்ன தன்னடக்கம் கலந்த சுய கவுரவம் !
தன் மானமும் மனிதநேயமும் இங்கே தலை நிமிர்ந்து வாழ்கிறது !
சட்டென்று என் நண்பன் ஞாபகம் வந்தது .இதே மாதிரி அக்ஷய திருதிநாள் . அவனிடமிருந்து போன் வந்தது ."நான் டி.நகர்லே நகைக்கடையிலிருந்து பேசறேன் மச்சான் பணம் போறலே ! கிரெடிட் கார்டும்
வேல செய்யலே ! உடனே அட்லீஸ்ட் இருபதாயிரம் ரூபாயோட வந்து என்னைக் காப்பாத்து! என்றான் .
நான் என் மனைவியிடம் கூட சொல்லாமல் ஓடினேன்! வருஷம் இரண்டாகி இப்போ மூணாவது அக்ஷய திரிதி கூட போயாச்சு !
அவனும் பணத்தைப் பற்றி வாயத் திறக்கலே ! நானும் கேட்டால் கவுரவ குறைவு என்று கேட்க்காமே இருக்கேன்! இது வசதி படைத்தவர்கள் விவகாரம் ! மௌனமான வேதனைகள் !
அன்று இரவு என் மனைவியிடம் காய்கறி ஆயாவைப் பற்றி சொன்னேன்.மனைவி உடன் சொன்னாள்.
என்ன தயக்கம் !நேரா ஆஸ்பத்ரிக்குப் போவோம் .நான் விசாரிக்கிறேன் அங்கு ஆகும் சிலவை நாம் அவளுக்குத் தெரியாமல் கட்டி விடுவோம். வாருங்கள் .என்றாள் .
என் மனைவிக்கு எனக்கு மேல நல்ல மனசு ! வாழ்த்தினேன் .
ஆஸ்பத்ரிக்குப் போனோம்.
பிரசவம் கிரிட்டில்லாக இருப்பதால் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன் விரைந்து சென்றோம் பாவம் பண தடுமாட்டம் அந்தப் பொண்ணுக்கு சிசைரின் வேற !விசாரித்து அறிந்து எல்லா பில்லுக்கும் என் மனைவி செட்டில் பண்ணிவிட்டு ,அவர்களிடம் ஆயா வந்து கேட்டால் இலவச சேவை மூலம் கட்டி விட்டார்கள் என்று சொல்லச் சொல்லி ரிக்வஸ்ட் பண்ணிவிட்டு வந்து விட்டாள் .
ஒரு வாரம் சென்றது ! கடையில் மறுபடியும் ஆயா உட்கார்ந்திருந்தாள் .என்ன ஆயா! சௌக்கிமா இருக்கயா ! மகளுக்கு பேரனா இல்ல பேத்தியா! என்றேன் .
பேரன் பொறந்திருக்கான் அப்பா ! ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க!எல்லாம் நல்லா இருக்காங்க !
யாரோ ஒரு புண்ணியவதி ! மகராசி ! மொத்த செலவையும் கட்டிட்டுப் போய்ட்டாங்களாம் ! அவங்க குடும்பத்தோட நல்லா இருக்கணும் சாமி ! என்றாள் .
ரொம்ப சந்தோஷம் ஆயா ! என்று சொல்லி வழக்கமான என் காய்கறிப் பையை தூக்கினேன் .எப்பொழுதையும் விட சற்று கனமாகி இருந்தது! திறந்து பார்த்தேன் ! வழக்கத்தை விட அதிகமான காய்கறி !
தவிர கட்டாக ஒரு மல்லிகை பூச்சரம் சுற்றி வைக்கப் பட்டிருந்தது .
என்ன ஆயா ! இது என்னோட பையா! என்றேன்
ஆமாம் அய்யா! உன்னோடதுதான் ! அந்த பூ பையே உங்க வீட்டுக்கார அம்மா கைலே கொடு ! அவங்க எப்பவும் சந்தோஷமா உன்னோட இருக்கணும்! அவங்க செஞ்ச உபகாரம் என் குடும்பம் என்னைக்குமே மறக்காது!
என்ன ஆயா! என்னவெல்லாமோ சொல்றே!ஆமாம் ராஜா! உன் வீட்டுக்கார அம்மாதான் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டாங்க ன்னு முதல்லே தெரியாது! அப்புறம் விசாரிச்சு தெரிச்சுக்கிட்டேன் ! என்றாள்
நான் திகைத்துப் போய்விட்டேன் .பிறகு இப்படியே இது தொடராக கூடாது என நினைத்து
சரி ஆயா! என் மனைவிதான் வந்தாங்க! ஆனா நாளையிலிருந்து நீ வழக்கமா கொடுக்கிற காய்தான் கொடுக்கணும்.சரியாய் சில்லறை வாங்கிக்கணும். அதிகமா எல்லாம் கொடுத்தீன்னா அப்புறம் நான்
இங்கே வர மாட்டேன்.உன்ன எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
சரி ராஜா ! அப்படியே செய்றேன் !வராம கண்டி இருந்திராதே ! என்றாள்.
வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன்.
என் மனைவி ரொம்ப ஆச்சர்யப் பட்டாள். வாவ் ! வாட் எ கிரேட் லேடி ! என்ன பெருந்தன்மை! என்று அந்தப் பூச்சரத்தை அப்படியே சாமி படத்தில் அலங்காரம் செய்து அவளுக்காக வேண்டிக் கொண்டாள்.
மனிதாபிமானம் சாகாமல் இருப்பதால்தான் நாம் மானிடராக திகழ்கிறோம்
இது உண்மை சம்பவம்
அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்.....!
Peut être une image de temple
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வயலின் கலைஞர் திரு. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவு நாள் சிறப்பு பதிவு.
கவியரசர் கண்ணதாசன் எழுதிய மிக அருமையான ஆன்மீக பாடல்களுள், "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலில், அவரின் அசத்தலான வார்த்தை ஜாலத்தினை அழகாய் சொல்லும் ஒரு சம்பவம்....
"மருதமலை மாமணியே" என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கவியரசர் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கவியரசர் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்
முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..
கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "மலையது,நதியது, கடலது சகலமும் உனதுரு கருணையில் எழுவது", என்ற வார்த்தைகளை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...
கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்......
கவிஞரின் ஞானத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது... காலத்தை வென்ற பாடல்களை தந்த மாமேதை கவிஞர் கண்ணதாசன்.
கவியரசரின் சிறப்பான வரிகளும், குன்னக்குடி வைத்தியநாதனின் அருமையான இசையும், இந்த பாடலில் இருவரின் பேராற்றலும் வெளிப்படும்!
"தெய்வம்" திரைப்படத்தில், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் அருமையான இசையில், கவியரசரின் அற்புதமான வரிகளில், கணீரென ஒலிக்கும் மதுரை சோமு அவர்களின் குரலில் மலர்ந்த தெய்வீக பாடல்!
Voir la traduction
Peut être une image de 2 personnes et texte qui dit ’கவிக்கும் இசைக்கும் நடந்த போட்டி உங்களுக்கு தெரியுமா? இந்து சம்யவகுப்பு’
 
Toutes les réactions :
9090
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

Variety of images  · 
Rejoindre
 
Venkatesan Lakshmi  ·   · 
படித்ததில் மிகவும் நெகிழ்ந்தது.
அலறிய காமராஜர்
நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர்.
சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.
ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல் நிலை மோசமாகி விட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.
“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்து விடத் தான் அழைத்தேன்” என்றார் பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.
இந்த பணத்திற்காகதான் வரச் சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .
சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்
.
அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர்.
வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். தேதி வாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்து விட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.
பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒரு முறை இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்து கொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.
கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததை விட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார்.
பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம் பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்த போது கூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.
தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.......!  🙏
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

காமராஜரை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணித்தது ஒரு கசப்பான சம்பவம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன்,
அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.
அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார்.
குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.
முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை.
மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது".
இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான்.
முதலாளிக்கு கோபம் வந்து விட்டது.
"இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால்,
உன் வேலை பறி
போய் விடும்"
என்று எச்சரித்தார்.
"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"
இளைஞன் சொன்னான்,
"933005 பவுண்டுகள்".
அதிர்ச்சியடைந்த முதலாளி,
"அப்படி என்ன விற்றாய்"
வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."
"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?"
இது முதலாளி.
"உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால்,
நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஓர் இருபது அடி நீளப்
படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப்
பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"
"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.
"இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான்,
தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுது போக்கு என்று சொன்னேன்."
முதலாளி கேட்டார்,
"ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"
"அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக இருந்தேன்,
ஏன் ?"
"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக் கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்து விட்டு வருகிறேன்".
படித்ததில் கவர்ந்தது.
இப்படித்தான் இருக்கிறது...
*இன்றைய மருத்துவ உலகம்.*
சிரிப்பதற்கு மட்டுமன்று... சிந்திப்பதற்கும் .......!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காலச் சக்கரம்...
இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....
முப்பது வயசுல இது
வேணும்னு தோணும்....
நாற்பது வயசுல
இதுவே போதும்னு தோணும்....
ஐம்பது வயசுல
இது இல்லைன்னா கூட
பரவாயில்லைனு தோணும்.....
அறுபது வயசுல
எது இல்லைன்னாலும்
பரவாயில்லைனு தோணும்....
எழுபது வயசுல
எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!!
காலமாற்றம்....
காலச்சுழற்சி...
கால நேரம்....!!!!!
பிடிவாதம் எல்லாம்
முடக்குவாதமா மாறும்....!!!!
ஆணவம் எல்லாம்
பணிவா மாறும்....!!!!
அதிகாரம் எல்லாம்
கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!!!!
மிரட்டல் எல்லாம்
கப்சிப்னு ஆகியிருக்கும்......!!!!
எது வேணும்னு
ஆளாய் பறந்தோமோ....
அதையே தூரமாக வைத்து
பார்க்கத் தோணும்....!!!!
எதற்காக ஓடினோம்....
எதற்காக ஆசைப்பட்டோம்....
எதற்காக எதைச் செய்தோம்.....
என்ற காரணங்கள் எல்லாமே .....
காலப் போக்கில் மறந்து போகும்....
மரத்துப் போகும்....!!!
தீராப்பகையைத் தந்து
வன்மத்தோடு வாழ்ந்து
ஆட விடுவதும் காலம்தான்...
அதன் பின் ஆட்டத்தை அடக்கி....
மறதியைக் கொடுத்து
ஓரமாய் உட்கார வைப்பதும்
அதே காலம்தான்....!!!!
வெளியே மாளிகையாய்
தோற்றமளிக்கும் எதுவும்.,...
உள்ளிருக்கும் விரிசல்களை
எடுத்துரைக்காது....!!!!
வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது
அவ்வளவு எளிதல்ல.....
அதற்குப் பல அவமானங்களைக்
கடந்திருக்க வேண்டும்....
பிடித்ததால் பகிர்ந்தேன்.......!
 
Peut être une image en noir et blanc de 1 personne
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
Kongu Food Club  · 
Rejoindre
 
Prabhushetty  ·   · 
 
மும்பையில் உள்ள மாஹிம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து அருகில் இருந்த குஜராத்தி உணவகத்தில் மதியம் சாப்பிட கிளம்பினேன்.
மழைநீர் படாமல் ஒரமாக சென்று அடைந்து மேஜையில் அமர்ந்த போது பீகாரை சேர்ந்த உடன் பணி புரியும் நண்பன் அமர்ந்து இருந்தான். என்னை பார்த்து சிரித்தான் பேசியபடியே சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.
மழை வலுத்திருந்தது. அருகில்
இருந்த பீடா கடையில் ஒதுங்கி நின்றோம். அவன் பீடா போடும் வழக்கம் உள்ளவன் அவனுக்கு பீடா தயார் செய்ய சொன்னான்.
உடன் எனக்கும் ஒன்று சேர்த்தான்.
நான் வேண்டாம் என கூறினேன்.
அதற்கு அவன் உனக்கு தயாரிக்க சொன்னது இனிப்பு பீடா தான் சாப்பிடு ஒன்றும் செய்யாது என்று கூறினான். (இப்படித்தான் பிறரை கெடுப்பார்கள்)
நான் கடைக்காரரை பார்த்தேன் அவரும் எனது நண்பர் தான் கர்நாடகா மங்களூரை சேர்ந்தவர் அவர் என்னிடம் ஆமாம் இது இனிப்பு பீடா தான் ஒன்றும் செய்யாது என்று கன்னடத்தில் கூறினார் சரியென்று நானும் வாங்கி சாப்பிட்டேன் நன்றாக இருக்கிறது என கூறிவிட்டு மீண்டும் மழையிநீர் படாமல்
ஓரமாக சென்றுவிட்டோம் எங்கள் அலுவலகத்திற்கு.
மறுநாள் அவன் இல்லை நான் மட்டும் தனியாக சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன் மழைதான் மீண்டும் ஒரு பீடா கடையில் ஒதுங்கினேன்.
கடைக்காரர் என்னை பார்த்தவுடன் ஒரு பீடாவை தயாரித்து கையில் கொடுத்து விட்டார் பேசாமல் சாப்பிட்டேன். (இது அந்த பீடா வாயனுடனான கூடா நட்பினால் வந்த வினை)
மூன்றாம் நாள் மழை இல்லை
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் எனது கால்கள் பீடா கடையை நோக்கி தானாக சென்றது. சட்டென்று திடடுக்கிட்டேன். இது மூன்றாம் நாள் எனது அப்பா கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது வேடிக்கை வாடிக்கை தேடிக்கை
நீ எந்த விஷயத்தையும் வேடிக்கையாக ஆரம்பித்து பின்னர் அதை வாடிக்கையாக்கி அதன் பின் நீ இருக்கும் இடத்தில் அந்த செயலை செய்ய முடியாவிட்டால் அதைத் தேடிச் சென்று செய்வாய் இதுதான் அதற்கு அர்த்தம்.
சற்று யோசித்துப் பார்த்தேன் அதற்குள் பீடா கடைக்காரர் பீடாவை தயார் செய்து என் கையில் கொடுத்தார் நான் அதை மடித்து தருமாறு கேட்டேன் பார்சல் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து மடித்து கொடுத்தார் அலுவலகத்துக்கு வந்து அதை பிரித்து பார்த்தேன் ஒரு ஏலக்காய் துண்டு துண்டாக வெட்டப்பட்ட முழு பாக்கு சிறிது சிகப்பு நிற பழத் துண்டுகள் மற்றும் சிறிய மணி போன்ற இனிப்பு வகைகள் இவைதான் அதிலிருந்தன சிறிது ரோஜா குல்கந்து இருந்தது இதில் என்னை அடிமை ஆக்கியது எது என யோசித்து ஒவ்வொன்றாக தனித்தனியாக எடுத்து சாப்பிட்டு பார்த்தேன் எல்லாம் சுவையாக தான் இருந்தது ஆனால் எதிலும் பிடித்தமான சுவை இல்லை சாதாரணமாக இருந்தது பிறகு அந்த வெற்றிலையில் ஒரு பேஸ்ட் போல தடவியது நினைவுக்கு வந்தது அதை விரலால் எடுத்து சுவைத்து பார்த்தேன் சரிதான் அதில் தான் அந்த சுவை இருந்தது நம்மை பீடாவிற்க்கு அடிமை படுத்தும் சுவை.
பிறகு வெற்றிலையை கழுவி விட்டு எனது உதவியாளரை அழைத்து சிறிது மிளகு வாங்கி வர சொல்லி நான்கு மிளகுடன் அந்த வெற்றிலையை கடித்து சாற்றை விழுங்கினேன் அது சளியை முறிக்கும் என்பதால்.
இதில் நான் கற்றுக்கொண்டது எந்த ஒரு கெட்ட பழக்கங்கள் இருப்பவர்கள் கூட அவர்கள் அதை செய்யும் பொழுது நாம் அருகில் இருந்தால் நமக்கு கற்றுக் கொடுத்து விடுவார்கள் என்பது தான்.
இந்த சுவையூட்டிகள் நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். பெரும்பாலான ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் அஜுனோமோட்டோ என்னும் ஒரு சுவையூட்டி சேர்க்கப்படுகிறது அதனால் தான் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதை சாப்பிடுகிறார்கள் இதே போல தான் குழந்தைகளுக்கான உணவு வகைகளையும் தயார் செய்கிறார்கள் அதனால் தான் அதை சாப்பிட்ட அந்த குழந்தைகள் சுவையூட்டிகளின் சுவையினால் கவரப்பட்டு குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதுவே வேண்டும் என்று கேட்டு அடம் பிடிக்கிறது.
குழந்தைகளுக்கு பாக்கெட்டு களில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவு வகைகளும் இவ்வாருதான் தயாரிக்கபடுகின்றன.
செரிலாக் பேரக்ஸ் லாக்டோ ஜென் போன்ற உணவு வகைகளை குழந்தைகள் மீண்டும் மீண்டும் சாப்பிடுவதற்கு இதுதான் காரணம். அதாவது அத்துடன் கலந்து செய்யப்படும் சுவையூட்டிகளால். இதைத் தவிர்க்க நாம் நம் வீட்டிலேயே அது போன்ற உணவு வகைகளை தயாரித்துக்கொடுத்து விடலாம்.
அதற்கு
1 கோதுமை. 1/4 கிலோ
2 கொண்டைக்கடலை 100கிராம்
(கருப்பு)
3 பாதாம் பருப்பு 100கிராம்
4 பிஸ்தா பருப்பு. 100கிராம்
5 சோயாபீன்ஸ். 100கிராம்
6 பச்சை பயிர். 100கிராம்
(பாசிப்பயறு)
7 முந்திரிப் பருப்பு. 100கிராம்
8 சாமை அரிசி. 100கிராம்
9 தினை அரிசி. 100கிராம்
10வரகு அரிசி. 100கிராம்
11 மக்காசோளம். 100கிராம்
12 வேர்கடலை. 100கிராம் 13நாட்டு கொள்ளு. 100கிராம்
14 கேழ்வரகு. 100கிராம்
முதலியவற்றை தனித்தனியாக நன்றாக தீய விடாமல் பொன் நிறமாக வறுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக காய்ந்த இந்த தானியங்களை ஒன்றாக நன்கு கலந்து அரைத்து காற்று போகாமல் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும் இதை குழந்தைகள் மட்டுமல்ல உடல் சற்று பலகீனமான அனைவருமே சாப்பிடலாம். இதில் உள்ள தானியங்கள் அனைத்துமே நாம் நன்கு அறிந்தது தான்.
ஒரு சிலருக்கு (குழந்தைகளுக்கு கூட)தோல் ஒவ்வாமை இருக்கும் அவர்கள் அவர்கள் வேர்கடலை மட்டும் தவிர்க்கவும்.
கொள்ளு தேவைப்படுபவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் அதை தவிர்த்தாலும் தவறில்லை
இந்த மாவை பாலிலோ அல்லது சுடுநீரிலோ வேகவைத்து சற்று கெட்டியான பதத்தில் கஞ்சி மாதிரி காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
சுவைக்கு நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம் அஸ்கா சக்கரை என்று நமது கொங்கு பகுதியில் அழைக்கப்படும் வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும்.
உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் முதலில் அனைத்து தானியங்களையும் 10 கிராம் அளவிற்கு எடுத்து மேலே கூறியுள்ளவாறு தயாரித்து கொடுத்து பாருங்கள் குழந்தைக்கு நன்றாக சாப்பிட்டால் நிறைய தயாரித்து கொடுங்கள்.
இது உடல் பலவீனமான பெரியோர்களுக்கும் உரிய குறிப்பாகும்
Voir la traduction
Aucune description de photo disponible.
 
Toutes les réactions :
228228
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
பாகுபலி தோசையும் – சங்க இலக்கிய மொக்கையும்
***********************************************************************
வீட்டுல சாம்பார் , அவரை பொரியல் – அமாவாசை , சனிக்கிழமை..எதோ ஒன்ணு ஆக மொத்தம் இன்னிக்கு சைவம் .
டேய் எங்காவது சாப்பிடபோலாமா என்று சின்ன மகனிடம் கேட்டேன்.
வாங்க டாடி ஒரு இடம் காட்டுரேன்ன்னு கிளம்பிட்டோம்
20 நிமிடம் மாத்தூரிலிருந்து கொடுங்கையூர் போலிஸ் ஸ்டேஷன் எதிர் தெரு வர.. கையேந்திபவன் தான் .கூட்டம்.
கடை பேரு தல தளபதி தோசை கடை . ஏரியாவின் ரசிகர்களின் நுண் அரசியல் தெரிந்தவர் போலும்
என்னடா இங்கு ஸ்பெஷல் என்றேன்.
டாடி பாகுபலி தோசை, பிக்பாஸ் தோசை இங்கு ஸ்பெஷல் என்றான்
சொல்றா பார்ப்போம்னு ஆர்டர் கொடுத்தோம்
முதலில் பாகுபலி தோசை – அதாகப்பட்டது தோசையை ஊத்தி அது காய்வதற்குள் அதன் மேல் முட்டையை ஒடைச்சி ஊத்தி அதுக்கு மேலே எலும்பு இல்லாத மசாலா கலந்த சிக்கன் கறிய அது மேல சாரல் போல தூவி தொட்டுக்க மீன் குழம்பு தந்தா ( முட்டை, கறி, மீன் சேர்ந்தா அது பாகுபலி) அதான் பாகுபலி தோசை..செம.
அடுத்து பிக்பாஸ் தோசை .கமல் மாதிரி பொன் நிறமா தோசை வார்த்து அது மேல முட்டை பொடி மாஸ் தூவி ஒரு சிக்கன் லெக் பீஸை உள்ள வெச்சி மடிச்சி தந்தா அதான் பிக் பாஸ் தோசை. ஹாஹா சுட சுட அப்படி ஒரு இன்பம்.
என் மகன் இது மாதிரி உங்க ப்ரெண்டு சாப்பிட்டு இருப்பாங்களா என்றான் .
இதைவிட சூப்பரா சாப்பிட்டு இருக்காங்க என்றேன்
எப்படி டாடி எங்க என்றான்
“அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்” என்று பெரும்பாணாற்றுல அரிசிச் சோற்றுடன் வெள்ளாட்டு இறைச்சியைக் கலந்து சாப்பிட்டு இருக்கான்
“ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடி வாலுவன்” என்று ஊன் சோறு உண்டதை மதுரைகாஞ்சி சொல்லுது.
கடல் இறாலையும், வயல் ஆமையையும் கலந்து தின்ற சுவையை “கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்” என்ற ‘பட்டினப்பாலை’ எழுதுது
மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் சேர்த்துப் பொரித்து “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” – இந்தப் பட்டினப்பாலையில் சிலாகிக்கிறான்
..ஆக நம்மள விட ருசித்து அசைவம் சாப்பிட்டு இருக்கான்க டா என்றேன்
ஸாரி டாடி இது மாதிரி மொக்கை போட்ட்டா இனி என் கூட வாராதே .சாதாரணமா இருங்க டாடி என்று சொல்லி போலாமா டாடி என்றான்
டேய் சில்லுன்னு குடிக்க.. என்றதும் இங்க சூப்பரா ஒரு கோலி சோடா கடை இருக்கு ..வேணா அதுக்கும் எதாவது சங்கபாட்டுன்னு ஆரம்பிச்சுட்டுவ..
--- அமிர்தம் சூர்யா
( சந்தடி சாக்கில் தமிழ் இலக்கியத்தை ஊட்டலாம் என்ற என் முயற்சி தோல்வியானது.அப்புறம் பாகுபலி தோசை 60 ரூபா. பிக்பாஸ் தோசை 80 ரூபா)
Voir la traduction
May be an image of 6 people and text that says '73580 22470 கடை KADAI தல தளபதி HALA cpsi'
 
பாகுபலி தோசையும் பிக்பாஸ் தோசையும்......சங்க இலக்கியங்களுடன் சங்கமிக்கும் ........!   😂
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
வற்புறுத்திய ஏ.ஆர்.ரகுமான்… ட்யூன் பிடிக்காமல் பாடிக்கொடுத்த எம்.எஸ்.வி…ஆனா பாடல் சூப்பர்ஹிட்… என்ன பாட்டு தெரியுமா?
கோலிவுட்டின் மெல்லிசை மன்னராக இருப்பவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
பல வருட உழைப்புக்கு பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி கொண்டே வந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது ஒருமுறை இவரின் வீட்டிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் சந்திக்க வருகிறார். அவரை பார்த்த எம்.எஸ்.விக்கும் சந்தோஷம். என்னப்பா இந்த பக்கம் எனக் கேள்வி கேட்கிறார். ஐயா என்னுடைய அடுத்த படத்தில் நீங்க ஒரு பாட்டு பாட வேண்டும். அதற்காக தான் வந்தேன் எனக் கூறுகிறார். எம்.எஸ்.வியோ நான் இப்போலாம் பாடுவதே இல்லையே என மறுத்துவிட ரஹ்மானோ தன்னுடைய ட்யூனை கொடுத்து கேளுங்கள் என சொல்லிவிட்டு சென்றார்
அதை கேட்ட எம்.எஸ்.விக்கு மேலும் குழப்பம் இதுக்கு எப்படி பாட முடியும். சரி முடியாது என சொல்லிவிடுவோம் என ரஹ்மான் வீட்டிற்கு செல்கிறார். அந்த நாள், ரஹ்மானின் பிறந்தநாளாக இருந்து இருக்கிறது. இவரை பார்த்த ரஹ்மான் ஆர்வத்துடன் வரவேற்றார். சொல்லி இருந்தால் நானே வந்திருப்பேனே ஐயா எனக் கேட்டார்
பிறந்தநாள் அதுவுமாக ஏ ஆர் ரகுமான் சங்கடப்படும் படி எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்து, வந்தது தான் வந்து விட்டோம் பாடலை பாடிவிட்டே சென்று விடுவோம் என்று முடிவு செய்துள்ளார். ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்குள் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாடுவதற்கு தயாரான பொழுது ஆர்மோனிய பெட்டியை வாசிப்பவரை வெளியே அனுப்பிவிட்டு அந்த ஹார்மோனி பெட்டியில் வந்து அமர்ந்து ஏ ஆர் ரகுமான் வாசிக்க ஆரம்பித்துள்ளார்.
ஐயா நான் பாடல் சொல்லித் தர மாட்டேன் நீங்களாகவே பாடுங்கள் என்று ஏ ஆர் ரகுமான் சொல்ல... தம்பி நானாக பாட மாட்டேன் நீ சொல்லித் தருவதை தான் பாடுவேன் என்று எம் எஸ் விஸ்வநாதன் ஒருபுறம் அடம்பிடிக்க..... நான் ராகத்தை சொல்கிறேன், நீங்கள் உங்கள் இஷ்டப்படி அந்த ராகத்திற்கு ஏற்றவாறு பாடுங்கள் என்று ரகுமான் கூற ஒரு வழியாக ரெக்கார்டிங் ஆரம்பித்தது. சுமார் 4மணி நேரம் நடந்த ரெக்கார்டிங் முடிந்த பின்பு பாடலை இசைத்து காட்டுமாறு எம் எஸ் வி ரகுமானிடம் கேட்டுள்ளார்.
இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது நான் பிறகு உங்களுக்கு போட்டு காட்டுகிறேன் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். ஒருவேளை நாம் சரியாக பாடவில்லையோ..!! இல்லை நாம் பாடிய பாடல் ரகுமானுக்கு பிடிக்கவில்லையோ..!? என்று குழப்பத்தோடு சென்ற எம் எஸ் விஸ்வநாதன் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தை பார்த்து ரகுமானிடம் சொல்லி அந்தப் பாட்டை கொஞ்சம் போட்டு காட்ட சொல்லுப்பா என்று ரெக்கமண்ட் கேட்டுள்ளார்.
எஸ் பி பாலசுப்ரமணியம் ரகுமானிடம் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் கேட்டபடி பாடலை போட்டு காட்ட சொல்லி கேட்டிருக்கிறார்.ரகுமானும் பாடலை ஓரளவிற்கு முடித்துவிட்டு போட்டுக் காட்டியுள்ளார். அதை கேட்ட எம் எஸ் விஸ்வநாதன் தான் பாடிய பாடலா இவ்வளவு அருமையாக வந்துள்ளது என்று ஆச்சரியப்பட்டு போனாராம்.
எம்.எஸ்.விக்கே பிடிக்காமல் கம்போஸ் செய்த பாடல் தான் “சங்கமம்” படத்தில் வரும் “ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க” என்ற பாடல். ரஹ்மானை மட்டுமல்ல ரசிகர்கள் எம்.எஸ்.வியையும் ஏமாற்றவில்லை. பாடல் இன்று வரை ஹிட் பட்டியலில் தான் இருக்கிறது.
Voir la traduction
Peut être une image de 2 personnes
 
Toutes les réactions :
3,2 KVous et 3,2 K autres personnes
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ?
பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான் "குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். “இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான்.
சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது ... முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.
இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர், போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை.
அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான், "குருவே , நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான். புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான். நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது...
அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்
Voir la traduction
Peut être une image de route
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

“உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான். நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது...

பலவீனமே... பலமாய் மாறிய, அருமையான கதை. 👍
பகிர்விற்கு நன்றி சுவியர். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.