Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா வெளியேறி இருக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா வெளியேறி இருக்கிறது.
நல்லவிடயம்
நாடுகளாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி ஏன் குடும்பமாக இருந்தாலும் சரி
இன்பத்திலும் துன்பத்திலும்
நன்மையிலும் தீமையிலும் 
பங்கு கொள்பவர்களே ஒன்றாக வாழலாம். வாழமுடியும்.
இன்பத்தை மட்டும் நன்மையை மட்டுமே இதுவரை பிரித்தானியா பங்கு கொண்டுள்ளது. மற்றும்படி எப்பொழுதும் மதில் மேல் பூனை விளையாட்டுத்தான். கொஞ்சம் இறுக்கினால் போய்விடுவேன் என்ற பயமுறுத்தல் வேறு.
எதிரியை நம்பிக்கூட ஒன்றாக பயணிக்கலாம்.
ஆனால் இப்படியான பச்சோந்திகளை நம்பி????
.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது. அத்தனை பொருளாதார நிபுணர்களும் ஒன்றாக இருங்கள் என்ற போதும் பிரித்தானிய மக்கள் பிரிந்து போகிறார்கள் என்றால் அவர்களது பிரச்சினை வேறு. ஆனால் அவர்களது பிரிச்சினைகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதால் தீரப்போவதில்லை. விடைகிடைக்கப்போவதில்லை. காலம் பதில் சொல்லும். 
போனால் போகட்டும் போடா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் மக்கள் அறிவுபூர்வமாகச் சிந்தித்து  வாக்களிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன். பிரித்தானிய மக்களுக்கு பொதுவாகவே ஐரோப்பிய யூனியன் தமது நாளாந்த வாழ்வில் அதிகம் தலையிடுகின்றது என்ற கோபம் உள்ளது. அத்தோடு தற்போதைய அரசு கடன் சுமையைக் குறைக்க பலவகையான உதவிகளையும் குறைத்தும், வரிகளைக் கூட்டியும் உள்ளதால் அரசு மீதான கோபமும் சேர்ந்து அவர்களை ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வாக்களிக்கத் தூண்டியுள்ளது.

பொருளாதார நிபுணர்களால் நாளைய பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று கணிக்கவேமுடியாது. அதனால்தான் பங்குச் சந்தை அடிக்கடி தடுமாறுகின்றது. எனவே பொருளாதார நிபுணர்கள் சொல்லுவதை எல்லாம் நம்பவேண்டியதில்லை. பிரித்தானியாவின் பொருளாதாரம் நலிவடைந்தால், மூழ்கும் கப்பலில் இருந்து தப்பியோடும் எலிகளைப் போன்று இங்கு வந்து சேர்ந்துள்ள ஐரோப்பியர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்வர். அதுவும் நல்லதுதானே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அதற்குள் அவர்களது 2  தலைமுறைகள் பிரித்தானியாவில் பிறந்து விடும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதற்குள் அவர்களது 2  தலைமுறைகள் பிரித்தானியாவில் பிறந்து விடும்...

அதனால் என்ன? பூர்வீக ஐரோப்பியர்கள் எப்போதும் தமது நாடுகளுக்குத் திரும்புவதில் பிரச்சினைகள் இருப்பதில்லை. ஆனால் ஐரோப்பாவில் குடியேறி, பின்னர் பிரித்தானியாவில் வசிக்க வந்துள்ள குடியேறிகளுக்குத்தான் ஒரு நாட்டைத் தாயகமாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அதனால் என்ன? பூர்வீக ஐரோப்பியர்கள் எப்போதும் தமது நாடுகளுக்குத் திரும்புவதில் பிரச்சினைகள் இருப்பதில்லை. ஆனால் ஐரோப்பாவில் குடியேறி, பின்னர் பிரித்தானியாவில் வசிக்க வந்துள்ள குடியேறிகளுக்குத்தான் ஒரு நாட்டைத் தாயகமாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல்!

உண்மை தான்

ஆனால் தமிழர்களாக பார்க்கின்றபோது இது எமக்கு உறுத்துகிறது

ஆனால் பிரித்தானிய சனத்தொகையுடன் ஒப்பிடும் போது

பிரித்தானியர்களை இது உறுத்துமா என்று தெரியவில்லை

மிகச்சிறிய அளவு தானே...??

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பாக சில நாடுகள் சேர்ந்து இயங்கும்போது நன்மைகள் என்பவை எல்லாத் தரப்புக்களுக்குமானதாக இருக்க வேண்டும். ஜேர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளின் மக்களுக்கு இந்தக் கூட்டமைப்பால் என்ன நன்மை என்று தெரியவில்லை. ஜேர்மன் அரசுக்கு இது ஒரு பலப்பிரயோகம் செய்யக்கூடிய ஒரு அஸ்திரமாக உள்ளது. பிரித்தானியா அரசுக்கு நேட்டோவை வலுப்படுத்தும் வகையில் நன்மை. இவற்றைத் தவிர இந்த இரு நாடுகளின் சாதாரண மக்களுக்கு என்ன நன்மைகள்? ரஷ்யா கலைத்துவிட்ட சிரிய அகதிகள் வந்து குவிந்ததுதான் கிடைத்த நன்மை. நேட்டோவுக்கு இது ஒரு தோல்வி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

அப்படியானால் இவர்கள் சேர்ந்திருந்து சட்டங்களை இயற்றி

தத்தமது நாடுகளையும் ஐரோப்பாவையும் ஏன் நேட்டோவையும் பாதுகப்பது தானே சரியாக இருக்கும் இசை?

பிரிந்து நிற்பதால் கூத்தாடிகளுக்குத்தானே (தில்லுமுல்லுக்காரர்கள்) கொண்டாட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அப்படியானால் இவர்கள் சேர்ந்திருந்து சட்டங்களை இயற்றி

தத்தமது நாடுகளையும் ஐரோப்பாவையும் ஏன் நேட்டோவையும் பாதுகப்பது தானே சரியாக இருக்கும் இசை?

பிரிந்து நிற்பதால் கூத்தாடிகளுக்குத்தானே (தில்லுமுல்லுக்காரர்கள்) கொண்டாட்டம்.

நேட்டோ என்பதைப் பற்றியெல்லாம் சாதாரண மக்களுக்கு கவலையில்லை. அது உலக வல்லாதிக்கப் போர் சம்பந்தப்பட்டது அல்லவா? இக்காலத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இராணுவ அரசியல் அது ஒரு தளம் மட்டுமே. இந்தப் பிரிவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறவர் புடின் என தோன்றுகிறது. மொத்தத்தில் ஒன்றுமறியாத சாதாரண மக்களை வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபடுத்துவதுதான் இவர்கள் செய்வது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

நேட்டோ என்பதைப் பற்றியெல்லாம் சாதாரண மக்களுக்கு கவலையில்லை. அது உலக வல்லாதிக்கப் போர் சம்பந்தப்பட்டது அல்லவா? இக்காலத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இராணுவ அரசியல் அது ஒரு தளம் மட்டுமே. இந்தப் பிரிவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறவர் புடின் என தோன்றுகிறது. மொத்தத்தில் ஒன்றுமறியாத சாதாரண மக்களை வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபடுத்துவதுதான் இவர்கள் செய்வது.

அப்பயென்றால் விதைத்ததை அறுவடை செய்கிறார்கள் எனலாமா?

(ரஷ்யாவை உடைத்தது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது. அத்தனை பொருளாதார நிபுணர்களும் ஒன்றாக இருங்கள் என்ற போதும் பிரித்தானிய மக்கள் பிரிந்து போகிறார்கள் என்றால் அவர்களது பிரச்சினை வேறு. ஆனால் அவர்களது பிரிச்சினைகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதால் தீரப்போவதில்லை. விடைகிடைக்கப்போவதில்லை. காலம் பதில் சொல்லும். 
போனால் போகட்டும் போடா.

அவர்களின் பிரச்சனை வேறு. இளம் சமுதாயத்தினர் யூனியனுடன் கூட்டாக இருப்பதற்கே வாக்களித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பழமைவாதிகள் அரசியல் ரீதியாக தனித்து நிற்கவே விரும்புகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அப்பயென்றால் விதைத்ததை அறுவடை செய்கிறார்கள் எனலாமா?

(ரஷ்யாவை உடைத்தது)

ஈரான், சிரியா இரண்டும் ரஷ்யாவுக்கு முக்கியமானவை. இதில் நேட்டோ கை வைத்தது.

பரிசு: சிரிய அகதிகள் :D:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அவர்களின் பிரச்சனை வேறு. இளம் சமுதாயத்தினர் யூனியனுடன் கூட்டாக இருப்பதற்கே வாக்களித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பழமைவாதிகள் அரசியல் ரீதியாக தனித்து நிற்கவே விரும்புகின்றார்கள்.

உண்மைதான்

அரசியை தொழுபவர்கள் அப்படியே தான் உள்ளனர்

அதை வைத்து கொஞ்சப்பேர் பிரிவினை காசு வெடி .....இப்படி .....??

2 minutes ago, இசைக்கலைஞன் said:

ஈரான், சிரியா இரண்டும் ரஷ்யாவுக்கு முக்கியமானவை. இதில் நேட்டோ கை வைத்தது.

பரிசு: சிரிய அகதிகள் :D:

பரிசா?

துன்பத்தில் இவ்வாறு இன்பம் காணுதல் நல்லதோ??:grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அவர்களின் பிரச்சனை வேறு. இளம் சமுதாயத்தினர் யூனியனுடன் கூட்டாக இருப்பதற்கே வாக்களித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பழமைவாதிகள் அரசியல் ரீதியாக தனித்து நிற்கவே விரும்புகின்றார்கள்.

இளவட்டங்களுக்கு வெரைட்டியான ஃபிகர் கிடைக்கிறதுதானே முக்கியமான பிரச்னை?! :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

உண்மை தான்

ஆனால் தமிழர்களாக பார்க்கின்றபோது இது எமக்கு உறுத்துகிறது

ஆனால் பிரித்தானிய சனத்தொகையுடன் ஒப்பிடும் போது

பிரித்தானியர்களை இது உறுத்துமா என்று தெரியவில்லை

மிகச்சிறிய அளவு தானே...??

உற்பத்தியை பெருக்கிறது எல்லாம் ஒரு விசயாமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இசைக்கலைஞன் said:

இளவட்டங்களுக்கு வெரைட்டியான ஃபிகர் கிடைக்கிறதுதானே முக்கியமான பிரச்னை?! :grin: 

அது சரி

மச்சாளை இப்படியும் வரவழைக்கலாம்...

3 minutes ago, நந்தன் said:

உற்பத்தியை பெருக்கிறது எல்லாம் ஒரு விசயாமா

நீங்க சுருட்டி வைத்திருக்கிறதுக்கு நாங்க என்ன செய்யமுடியும்??

ஒன்றியங்களால் ஆனது இவ்வுலகு
================================
பெரும்பான்மை - மக்களாட்சிக் காலத்தின் புனிதச் சொல். 
எல்லாப் புனிதச்சொற்களின் பின்னால் தன்னலம் ஒளிரும்; அபத்தம் ஒழிந்துகொள்ளும். இது எனது நம்பிக்கை. வரலாறு பலதடவை இதை நிரூபித்திருக்கிறது. இன்று திரும்பவும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ‘பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்’ அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். 48.1சதவீதம்பேர் பிரியவேண்டாம் என்றுசொல்ல, 51.9 சதவீதம்பேர் பிரிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பான்மையென்பதைப் புனிதச் சொல்லாக ஆக்கிய சதவீதம் 3.8 சதவீதம் தான். புனிதத்தின் முதல் பலி. அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகிவிட்டார்.

'முடிவைப்பார்; பாதையைப் பார்க்காதே' என்பதைக் கடைப்பிடித்து உருவாக்கப்படும் புனிதச்சொற்கள் எப்போதும் தன்னலம்கொண்ட சிறுகூட்டத்தால் உருவாக்கப்படுகின்றன. பக்கத்தில் இருப்பவர்களை ஏதாவதொரு காரணம்சொல்லிப் பகைவர்களாகப் பார்க்கச்சொல்லும் கூட்டம் மனிதர்கள் கொள்ளும் ‘பகைமை’ இயல்பானது எனப் பேசிச் சமாளித்து வருகிறது. உலக அளவில் உண்டாக்கப்படும் பகைமைக்குப் பின்னால் மனிதர்கள் பின்பற்றும் சமயநடவடிக்கைகள், நிலவியல் அடிப்படையில் உருவாகும் நிறம் மற்றும் உடல்வாகு, அதன் வழியாக அடையாளப்படும் இனம், குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் இருப்பவர்களோடு தொடர்புகொள்ள உருவாக்கிக்கொள்ளும் தகவல் கருவியான மொழி, அதன்வழியாக உருவாகும் பண்பாடு போன்றனவெல்லாம் புனிதச்சொற்களின் அர்த்தத்தை உருவாக்குகின்றன. ஆனால் இவையனைத்தும் அதனதனளவில் தன்னலத்தை ஊட்டிவளர்க்கும் கருவிகள் என்பதை உணர்வதில்லை மனிதக்கூட்டம்.

வாய்க்கால் மற்றும் வரப்புத்தகராறில் தொடங்கிக் கொலைகளில் முடியும் பங்காளிச்சண்டைக்குப் பின்னால் இருக்கும் தன்னலம்தான் உலக அளவில் பெரும்போர்களாக மாறியிருக்கின்றன. குட்டிகுட்டி நாடுகளாகப் பிரிந்திருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த பங்காளிச்சண்டைகள் தான் இரண்டு உலகப்போர்களையும் உருவாக்கிய உண்மையை வரலாற்றுப் புத்தகங்கள் வெளிப்படையாகச் சொன்னதில்லை. இரண்டு உலகப்போர்களிலும் வெற்றிபெற்ற அணியின் தலைமைப் பங்காளியான பிரிட்டனின் தன்னலம், இயல்பான புனிதச் சொல்லாடல்களால் மூடி மறைக்கப்பட்டன.

தேசங்களுக்கான அடையாளங்களைக் கொண்டிருந்தபோதும் ஒன்றியங்களாக இருப்பதன் பொருளாதார நலனும் அரசியல் அதிகாரமும் வல்லாண்மை மிக்கவைதான். என்றாலும் பங்காளிச் சண்டைகளைத் தவிர்க்கும் என்பது அதன் நேர்மறைப் பலன. சோவியத் ஒன்றியம் உடைந்ததின் பலன்களை அனுபவிக்கின்றன அவற்றின் உறுப்பு நாடுகள். சோவியத் ஒன்றியத்தின் நட்பு ஒன்றியமாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் உடுக்கை இழந்தவன் கைபோலத் தவித்துக்கொண்டிருந்த வரலாற்றை உலகம் கவனிக்கவில்லை. தன் கைகளே தங்களுக்கு உதவமுடியும் என்பதை உணர்ந்த கிழக்கு ஐரோப்பிய மக்கள் உழைத்தார்கள். ஓடி ஓடி உழைத்தார்கள். சோசலிசக் கட்டுமானத்திலேயே உழைப்பின் அவசியத்தை உணர்ந்திருந்த போலிஷ் நாட்டினரும் ருமேனியர்களும் ஹாலந்தினரும் கடும் உழைப்பாளிகள். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதைக் கைக்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டதைப் பயன்படுத்தித் தங்களது உழைப்பை ஜெர்மனி, நார்வே, சுவீடன், பிரிட்டன் என தொழிற்சாலைகள் நிரம்பிய நாடுகளுக்குச் சென்று வழங்கினார்கள். இழப்பதற்கு எதுவுமில்லை; உடல் உழைப்பைத் தவிர என்ற நிலையில் அவர்கள் தந்த உழைப்பின்வழியாக வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து உழைப்பாளிகள், பிரிட்டனின் வேலைவாய்ப்புகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற பொய்ப்பிரசாரத்தை முன்வைத்துப் பேசும் கூட்டம் நமது தேசம் நமக்கானதாக இருக்கவேண்டும் என்று பேசுகின்றது. இதன் மறுதலையாக பிரிட்டன், ஜெர்மனி, பிரெஞ்சு நாட்டுப் பெருமுதலாளிகளின் வியாபாரக்குழுமங்களும் தொழில் குழுமங்களும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் வியாபாரங்களையும் முதலீடுகளையும் அதன்வழியாக வரும் லாபத்தின் பங்கு தங்கள் நாட்டுக்கு வருவதைப் பற்றிப் பேசுவதில்லை. அமெரிக்க ஒன்றியத்திலும் அப்படியொரு குரல், புதிய அதிபர் வேட்பாளர் வடிவில் வந்துள்ளது. அவரது குரல் அண்டை நாட்டு உழைப்பாளிகளான மெக்சியர்களைக் கைகாட்டி ஓங்கி ஒலிக்கிறது. ஆஸ்திரேலியாவிற்குள் இனி ஆசியர்கள் வரவேண்டாம் என்ற குரல் எழும்பப்போகிறது. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கிவிடாமல் தடுப்பதில் இருப்பது யாருடைய நலன் என்பது புரியாத புதிர். வளைகுடா நாடுகளுக்குள் வரும் இந்தியர்கள், இலங்கையர்களுக்கெதிரான குமுறல்கள் பலகாலமாகக் கேட்டுக்கொடிருக்கின்றன. தென்னாசிய நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்க நினைத்தபோது எதிர்ப்புகள் உள்ளும்புறமும் எழுந்தன. எழுப்புபவர்கள் சொல்லும் ஒருவார்த்தை தேசப்பற்று எனும் புனிதச்சொல். தேசப்பற்றின் பின்னிருப்பதும் பங்காளிச்சண்டைதான். இந்தப் பின்னணிகளோடு ஒரு வாக்கியம் அர்த்தமுடையதாக இன்னும் இருக்கிறது.

உலகத்தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள். இது புனிதச்சொல்லோ வாக்கியமோ அல்ல. கேள்விகளற்று ஏற்றுக்கொள்வன மட்டுமே புனிதச்சொற்கள். ஒன்றிணைப்பிலிருந்து உருவாவது ஒன்றியம். ஒன்றியங்களாலானது இவ்வுலகு.

Photo de அ. ராமசாமி.

  • கருத்துக்கள உறவுகள்

ஈயூ,யூஎன் என்ட அமைப்புகளே தேவையில்லை. அதை கலைத்து விட்டாலே அரைவாசிப் பிரச்சனை தீர்ந்து விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

ஈயூ,யூஎன் என்ட அமைப்புகளே தேவையில்லை. அதை கலைத்து விட்டாலே அரைவாசிப் பிரச்சனை தீர்ந்து விடும்.

உண்மைதான் ரதி

ஆனால் உதுகள் கட்டாக்காளி மாடுகள் மாதிரி

கூட்டாக இருந்தாலும் பிரச்சினை 

தனிய விட்டாலும் பிரச்சினை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.