Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு

Featured Replies

வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு
வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு
 
வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
25-6-2016%2013.6.20%207.jpg
இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
25-6-2016%2013.6.53%208.jpg
இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அசதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடுவிக்ப்படும் காணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
25-6-2016%2013.6.53%206.jpg

http://onlineuthayan.com/news/14197

  • தொடங்கியவர்

201 ஏக்கர் நிலப்பரப்பும் , காங்கேசன்துறை புகையிரத நிலைய பகுதியும் கையளிக்கப்பட்டுள்ளன

 

201 ஏக்கர் நிலப்பரப்பும் , காங்கேசன்துறை புகையிரத நிலைய பகுதியும் கையளிக்கப்பட்டுள்ளன



வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த  201 ஏக்கர் நிலப்பரப்பும் , காங்கேசன்துறை புகையிரத நிலைய பகுதியும் இன்று  சனிக்கிழமை மக்கள் மீள் குடியேற்றத்திற்கு என காணி அனுமதிப்பத்திரம் கையளிக்கப்பட்டது.


உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 26 வருடங்களுக்கு மேலாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அப்பகுதியினை இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.




இந்நிலையில் 26 வருடங்களுக்கு பின்னர் குறித்த பகுதியினை நாளை காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி  மீள் குடியேற்றத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்து காணி உரிமையாளர்களிடம்   காணி பத்திரங்களை வழங்கினார்.


 வலி..வடக்கில் உள்ள ஜே ஃ 233, ஜே ஃ 234, ஜே ஃ 235, ஜே ஃ 236, குரும்பசிட்டி (ஜே-238), கட்டுவன் (ஜே-242), மற்றும் வறுத்தலை விளான் (ஜே241) ஆகிய பகுதிகளில் உள்ள 201 ஏக்கர் காணிகளே இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் விடுவிக்கப்பட்டன.




காங்கேசன்துறை பகுதி விடுவிக்கப்படுகின்றமையால் காங்கேசன்துறை ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.



அத்துடன் வறுத்தலை விளான் பகுதியில் முன்னர் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்த 12 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி  , வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே  , மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன்ஆ கியயோர்  கலந்து கொண்டு காணி உரிமையாளர்களிடம் காணிப் பத்திரங்களை கையளித்தனர்.

 


 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133451/language/ta-IN/article.aspx

201 ஏக்கர் நிலப்பரப்பும் , காங்கேசன்துறை புகையிரத நிலைய பகுதியும் கையளிக்கப்பட்டுள்ளன

காங்கேசன்துறையில் வாழ்ந்த தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருந்த கொள்ளையர்கள் மேடையில் வீற்றிருக்க, சிங்கள-பௌத்த அரச இனமதவெறியர்களால் சிறிய அளவிலான தமிழர் காணிகள் மீளவும் கையளிக்கப்பட்டது.

ஜெனிவா அழுத்தங்களை சமாளிக்கவும், சர்வதேசத்தை தொடர்ந்து ஏமாற்றவும் சிங்கள-பௌத்த அரச இனமதவெறியர்களால் இந்த இறுதிநேரக் கையளிப்பு நடத்தப்பட்டுள்ளது. அபகரித்த காணிகளில் ஒருசில காணிகளே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது காணிகளில் 201...

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது காணிகளில் 201.3 ஏக்கர் காணி மக்களிடம் மீள கையளிப்பு!

வல்லை தெல்லிப்பழை அராலி வீதியை அண்மித்த 126.18 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறை புகையிர நிலையத்திற்கு அண்மித்த 63. ஏக்கர் காணிகளும், தெல்லிப்பழை 18ஆவது சிங்கரேஜின படைமுகாமை அண்மித்த 12 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 201.3 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தன.மேலும் இவ் காணிகளை மக்களிடம் மீள கையளிக்கும் நிகழ்வானது இன்று காலை காங்கேசன்துறை புகையிர நிலையத்திற்கு அண்மையிலுள்ள பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.இதன் போது நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி மீளக்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முப்படைத் தளபதிகள் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்களால் மக்களின் காணி உறுதிபத்திரங்கள் உரிமையாளர்களிடம் மீளக்கையளிக்கப்பட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அரசியலாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்த வரைக்கும் மகிழச்சியான விடையம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.