Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரின் பேருந்துக்களில் ஏற்றி செல்லப்பட்ட மீள் குடியேற்ற மக்கள்:-

Featured Replies

இராணுவத்தினரின் பேருந்துக்களில் ஏற்றி செல்லப்பட்ட மீள் குடியேற்ற மக்கள்:-

25 ஜூன் 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

இராணுவத்தினரின் பேருந்துக்களில் ஏற்றி செல்லப்பட்ட மீள் குடியேற்ற மக்கள்:-

 

இராணுவத்தினரின் பேருந்துக்களில் ஏற்றி செல்லப்பட்ட மீள் குடியேற்ற மக்கள் வலி.வடக்கில் இன்றைய தினம் காணி கையளிப்பு நிகழ்வுக்கு சென்ற காணி உரிமையாளர்களை இராணுவத்தினர் தமக்கு சொந்தமான பேருந்துகளிளையே ஏற்றி சென்றனர். 

வலி.வடக்கில் இன்றைய தினம் 201 ஏக்கர் காணி அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கும் நிகழ்வு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது. 

அந்நிகழ்வுக்கு சென்ற காணி உரிமையாளர்களை தமது சொந்த வாகனங்களில் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. 

காணி கையளிப்பு நிகழ்வுக்கு வருகைதந்த காணி உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி கிரம சேவையாளர்கள் அனைவரும் மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு பதிவுகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர். 

இராணுவ சோதனை சாவடிகளில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அவர்களது வாகனங்களில் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இராணுவத்தினருக்கு சொந்தமான பேருந்துகளில் ஏற்றப்பட்டு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கடந்த 2ம் திகதி முதல் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி சொந்த இடத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மாவிட்ட புரம் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடி அகற்றப் படாமையால் மாணவர்கள் தினமும் குறித்த சோதனை சாவடி ஊடாக சென்றே தமது கல்வி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

கடந்த 18ம் திகதி யாழ்ப்பணத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்ட போது குறித்த சோதனை சாவடி அகற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவைகள் அகற்ற ப்படவில்லை. 

இந்நிலையில் இன்றைய தினம் மீள் குடியேற்றத்திற்கு குறித்த சோதனை சாவடிக்கு அப்பால் உள்ள பிரதேசங்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும் குறித்த சோதனை சாவடி அகற்றப்படவில்லை. 
  

அனுப்புக Home, Srilankan News

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133454/language/ta-IN/article.aspx

13 minutes ago, நவீனன் said:

இராணுவத்தினரின் பேருந்துக்களில் ஏற்றி செல்லப்பட்ட மீள் குடியேற்ற மக்கள்

காங்கேசன்துறையில் வாழ்ந்த தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருந்த போர்க் குற்றவாளிகள் அவசர அவசரமாக மேடையேற்றிய கபட நாடகம்.

ஜெனிவா அழுத்தங்களை சமாளிக்கவும், சர்வதேசத்தை தொடர்ந்து ஏமாற்றவும் சிங்கள-பௌத்த அரச இனமதவெறியர்களால் இந்த இறுதிநேரக் கையளிப்பு நடத்தப்பட்டுள்ளது. அபகரித்த காணிகளில் ஒருசில காணிகளே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

14 minutes ago, நவீனன் said:

காணி உரிமையாளர்களை தமது சொந்த வாகனங்களில் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. 

 

சிங்கள-பௌத்த அரச இனமதவெறியர்களின் ஜனநாயகமும், மக்கள் சுதந்திரமும் இந்தக் கோலத்தில் தான் உள்ளது.

ஏமாற்றுவது சிங்கள-பௌத்த அரச இனமதவெறியர்கள். ஏமாறுவது சர்வதேச முட்டாள் ராஜதந்திரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு தீர்வு மார்கழிக்கு கிடைக்கும் போல தான் உள்ளது.tw_dissapointed:tw_confused:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.