Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடா நட்பு கூடா நட்பால் நிகழ்ந்த கொலை: சுவாதி வழக்கில் போலீஸ் 'திடுக்'

Featured Replies

போலீஸார் எங்கே சென்றார்கள்? சுவாதி வழக்கில் அரசுக்கு ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி

chennaihighcourt-swathilong.jpg 


யில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது ஏன் என்றும், சுவாதி கொலை செய்யப்பட்ட பின்பு உடலை கூட மூடாமல் போலீஸார் எங்கே சென்றனர் என்றும் அரசு வழக்கறிஞரிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்விகள் எழுப்பினர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி பட்டப்பகலில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி, வாலிபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த நிலையில், ரயில்வே காவல்துறைக்கும், தமிழகக் காவல்துறைக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாலேயே சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை இதுவரை கைது செய்யவில்லை என ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் தமிழக அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதத்திடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளியைக் கைது செய்வோம் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சுவாதி கொலை ஒவ்வொருவரின் மனதிலும் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கொலையாளியைக் கண்டுபிடிக்காதது மிகவும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், பெண்களின் மீதான் வன்முறைகளை தடுக்க ஆசிட்  விற்பனைக்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தாலும், வாங்குபவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் வன்முறை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்குக் காவல்துறையும், நீதிமன்றமும்தான் பொறுப்பு என்றும், இத்தகைய குற்றங்களை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது என்றும் தெரிவித்தனர்.

உடனடியாகக் சென்னை காவல் ஆணையர், ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு தொடர நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.  மேலும், இது தொடர்பாக காவல்துறை ஆணையரும், ரயில்வே எஸ்பியிடம் விளக்கம் கேட்டு பிற்பகலில் பதிலளிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, சுவாதி கொலை வழக்கு விசாரணை ரயில்வே காவல்துறையிடம் இருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர், கண்காணிப்பார்,சைபர் கிரைம் மற்றும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு உதவி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை மாற்றுவதற்கு 3 நாட்கள் தேவையா என கேள்வி எழுப்பியதோடு, சுவாதி கொலை செய்யப்பட்ட பின்பு உடலை கூட மூடாமல் போலீஸார் எங்கே சென்றார்கள் என வினா எழுப்பினர்.

மேலும், ஒருவர் உயிரிழந்த பின்னரும் அவரது கண்ணியம் காக்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது. கொலையான பெண்ணின் சடலத்தை 2 மணி நேரமாக அப்புறப்படுத்தாதது ஏன் என்றும், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது ஏன் என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/65595-high-court-questioned-police-in-swathi-murder-case.art

  • தொடங்கியவர்

'சுவாதிக்காக இதை மட்டும் செய்யுங்கள் ப்ளீஸ்..!'- வேண்டுகோள் வைக்கும் தங்கை

SwathisisterNithya.jpg

 

சுவாதியை பற்றி யூகத்தின் படி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவள் பெயரில் சமூக வலைத்தளங்களில் யாரும் எந்தவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்று சுவாதியின் தங்கை நித்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் சகோதரி நித்யா இணையதள பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "எனது தங்கை சுவாதி பற்றி யூகத்தின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது. அவளது மூத்த சகோதரி என்ற முறையில் சுவாதி பற்றி சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அவள் மிகவும் குழந்தைத்தனமான குணம் கொண்டவள். மென்மையாகவே பேசுவாள். கடவுளுக்கு பயந்து நடந்தவள். சுந்தரகாண்டம், பஞ்சாங்கம்  படிக்காமல் மற்றும் அர்ச்சதை தூவி கொள்ளாமல் அவள் ஒரு நாள் கூட வீட்டை விட்டு வெளியில் காலடி எடுத்து வைத்ததில்லை. தினமும் ரயிலில் வேலைக்கு செல்லும் போது விஷ்ணு சகஸ்ரநாமம் உச்சரித்தபடியேதான் செல்வாள். அவள் வேலைக்கு செல்லும் வழியில் சிங்கபெருமாள் கோயில் இருப்பதால் தவறாமல் நரசிம்மர் ஆலயத்துக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள். அது போல திருமளிகையில் உள்ள ஆச்சாரியர் முதலியாண்டான் சுவாமிகள் ஆலயத்துக்கும் அவள் செல்வதுண்டு. மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது சூளைமேட்டில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலுக்கு செல்லாமல் அவள் வருவதே கிடையாது. அந்த அளவுக்கு அவள் தெய்வ பக்தி நிறைந்தவள்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த நாங்கள் பாரம்பரிய வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அடிக்கடி யாத்திரை சென்று நிறைய கோயில்களில் வழிபாடு செய்துள்ளோம். கடைசியாக நான் என் தங்கையுடன் மசினக்குடியில் உள்ள ஆலயத்திற்கு சென்று இருந்தோம். அங்குள்ள இயற்கை அழகை கண்டு என் தங்கை சுவாதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவள் இயற்கையை மிகவும் விரும்புவாள். ஓரிரு தடவை மலையேற்றத்துக்கும் அவள் சென்று வந்துள்ளாள். சுவாதிக்கு என் குடும்பத் தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் அதிக பாசமுண்டு. அவளுக்கு நண்பர்கள் வட்டாரம் கிடையாது. சில நட்புகளே உண்டு. தேவையில்லாமல் அவள் எந்த பொழுதுபோக்குகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டாள். இத்தகைய பண்புடன் வளர்ந்த அவள் பற்றி யூகத்தின் படி பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுவது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவள் பெயரில் சமூக வலைத்தளங்களில் யாரும் எந்தவித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் யூகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் இந்த வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சுவாதி பற்றி கருத்துக்களை வெளியிடுவதற்கு பதில் அவள் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். எங்கள் அனைவரது வேண்டுகோளுமே, இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான். துரதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்ட எனது தங்கையின் குணத்தையும், இமேஜையும் பாதிக்கும் வகையில் நாம் யாரும் தேவையில்லாமல் செயல்பட வேண்டாம். அதுபோல ஸ்பிரிட் ஆப் சென்னையையும் மடிய நாம் அனுமதிக்க கூடாது. என்ன காரணத்தினாலோ சுவாதியை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அவற்றை இனி மறந்து விடுவோம்.

இனியாவது இத்தகைய கொடூரம் நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்று ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்வோம். மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்கலாம். சுவாதியின் கொலை சம்பவம் இந்த விஷயத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.

சுவாதியின் கடைசி ஆசை தான் இறந்த பின்னர் உடல்உறுப்புகளை தானம் செய்ய வேண்டுமென்பது. ஆனால் அது நிறைவேறவில்லையென அவரது தந்தை வேதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/65666-please-do-this-for-swathi-says-swathis-sister.art

  • தொடங்கியவர்

சுவாதி கொலை வழக்கு: சந்தேக நபரின் சற்றே தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

 
சுவாதி கொலை வழக்கில் சந்தேக நபரின் சற்றே தெளிவான புகைப்படம் | படம்: சிறப்பு ஏற்பாடு.
சுவாதி கொலை வழக்கில் சந்தேக நபரின் சற்றே தெளிவான புகைப்படம் | படம்: சிறப்பு ஏற்பாடு.

சுவாதி கொலையாளி என கருதப்படும் சந்தேக நபரின் சற்றே தெளிவான சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் அந்த நபரின் உருவம் அருகிலிருந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

அந்த சிசிடிவி காட்சியே வழக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில், சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சியிலிருந்து சந்தேக நபரின் சற்றே தெளிவான புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

'எதுவும் பேசாத கொலைகாரன்'

சம்பவத்தன்று ரயில் நிலையத்திலிருந்த நபர் ஒருவர் கூறிய சாட்சியின்படி சுவாதியின் அருகே வந்த நபர் அவரிடம் பேசவில்லை, வாக்குவாதம் செய்யவில்லை. வந்ததும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு சென்றிருக்கிறார் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

சுவாதியிடம் அந்த நபர் எதுவும் பேசாததாலேயே அவர் சுவாதிக்கு அந்நியராக இருக்க வேண்டிய அவசியமில்லை. காலை 6.31 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த அந்த நபர் 6.42 மணிக்கெல்லாம் வெளியேறிவிட்டார். வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே அவர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றிருக்கிறார். அந்த நபரின் ஒரே குறிக்கோள் சுவாதியை கொலை செய்வதாக மட்டுமே இருந்திருக்கிறது. அதனாலேயே அவர் எந்த பேச்சும் இல்லாமல் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளில் கைரேகை ஏதும் இருக்கிறதா என கேட்கப்பட்டபோது, "அந்த அரிவாளில் மரக்கட்டையால் ஆன கைப்பிடி இருக்கிறது. இருப்பினும் தடயவியல் துறைக்கு அனுப்பியிருக்கிறோம். சிசிடிவியில் பதிவாகியிருந்த நபர்தான் கொலையாளி என்பதை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்" என்றார்.

போலீஸுக்கு தகவல்:

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தொலைபேசி வாயிலாக ஒருவர் துப்பு கொடுத்திருக்கிறார். அவர் ஸ்வாதி பயணிக்கும் அதே ரயிலில் சிசிடிவியில் பதிவான நபர் பயணித்ததை இரண்டு முறை பார்த்திருப்பதாக கூறியிருக்கிறார். அதுதவிர புதிதாக கிடைத்துள்ள சிசிடிவி காட்சி ஒன்றில் கொலையாளியுடன் உருவ ஒற்றுமை கொண்ட நபர் ஒருவர் சுவாதியிடன் தகராறு செய்வது பதிவாகியிருக்கிறது. தாம்பரம் அல்லது மாம்பலம் ரயில் நிலையத்தில் அந்த காட்சி பதிவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

செல்போன் சிக்னல்:

சுவாதியை கொலை செய்த கொலைகாரன் அவரது செல்போனை யும் எடுத்துச் சென்றுவிட்டார். காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ‘ஆன்' செய்தே வைத்திருந்திருக்கிறார். பின்னர் அதை ‘சுவிட்ச் ஆப்' செய்திருக்கிறார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல் போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதியின் வீடும் சூளைமேட்டில்தான் உள்ளது. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடமும் அவரது வீட்டு அருகில் உள்ள இடத்தையே காட்டுகிறது.

எனவே சுவாதியை கொலை செய்து விட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. எனவே சுவாதியை கொலை செய்தவர் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சூளை மேட்டில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். சூளைமேட்டில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வரு கிறது. கொலையாளி என்று சந்தேகப் படும் நபரின் புகைப்படத்தையும் பொதுமக்களிடம் காட்டி விசாரணை நடத்துகின்றனர்.

பெங்களூர், மைசூர்:

செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சுவாதி, முன்னதாக மைசூரில் உள்ள நிறுவனத்தில் பயிற்சியும், பின்னர் பெங்களூரிலும் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னரே பரனூர் நிறுவனத்துக்கு வந்துள்ளார். கொலையாளி குறித்த தகவல்களை சேகரிக்க மைசூர், பெங்க ளூருக்கும் தனிப்படை சென்றுள்ளது. அங்கு சுவாதியுடன் பணிபுரிந்த நண்பர் களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரது படத்தை வரையும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ள னர். சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது, அவரை ஓர் இளைஞர் நேருக்கு நேர் பார்த்திருக் கிறார். ஆனால் அந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை. கொலையாளி எப்படி இருப்பார் என்று அந்த இளைஞர் தகவல் தெரிவித்தால் படம் வரைய உதவியாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/சுவாதி-கொலை-வழக்கு-சந்தேக-நபரின்-சற்றே-தெளிவான-புகைப்படத்தை-வெளியிட்டது-போலீஸ்/article8791845.ece?homepage=true

  • தொடங்கியவர்

'பைக்கில் தப்பிய சுவாதி கொலையாளி..!' - அதிரும் அடுத்தடுத்த காட்சிகள்

swathi-Criminalphotoslong.jpg 

 

மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற புதிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி அதிகாலை 6.30 மணியளவில் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளி யார் என்று கூட தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் கொலையாளி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சுவாதியின் நண்பர்கள், உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் அவரை கொலை செய்த மர்மநபர், நிச்சயம் சுவாதிக்கு நன்றாக தெரிந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீஸார் கருதுகின்றனர். அந்த நபர் யார்? என்று தெரியாததே போலீஸாருக்கு தலைவலியாக உள்ளது.

சுவாதியின் குடும்பத்தினர், போலீஸாருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காதது கொலையாளி குறித்த தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கொலையை நேரில் பார்த்ததாக சூளைமேட்டை சேர்ந்த ஆசிரியர் தமிழ்செல்வன், போலீஸ் உயரதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அவர் அளித்த தகவலில் கூட கொலையாளி குறித்து எந்தவித துப்பும் துலங்கவில்லை. இதனால் சுவாதி கொலையில் உள்ள மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முடியாமல் போலீஸார் சிரமப்பட்டு வருகின்றனர்.

சுவாதி கொலை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதில் தற்போது ஒரு வீடியோவில் கொலையாளியாக சந்தேகிக்கப்படும் மர்மநபர் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. போலீஸார் வெளியிட்ட கொலையாளி படத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபரின் உருவம் ஒத்துப் போகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் கொலையாளியாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்த வீடியோ பதிவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் அந்த இருசக்கர வாகனம் சூளை நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. இதன்பிறகு அந்த நபர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அதைப்பார்த்த போலீஸார், அந்த இருசக்கர வாகன நம்பர், அதில் செல்பவரின் முகம் தெளிவாக உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர். கொலையாளி என்று போலீஸார் சந்தேகிக்கும் மர்மநபர் குறித்து பல புகைப்படங்கள் வெளியானாலும் கொலையாளியின் முகம் மட்டும் எதிலும் தெளிவாக தெரியாதது விசாரணையின் தொய்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறது போலீஸ் வட்டாரம்.

இதற்கிடையில் பெங்களூர், மைசூர் சென்ற தனிப்படை போலீஸாருக்கும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சுவாதியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.கள், அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.கள், இன்கம்மிங், அவுட் கோயிங் கால்கள் குறித்த விவரங்களை சேகரித்த போலீஸார், அதில் எதாவது கொலையாளி குறித்த தகவல் கிடைக்குமா என்று இரவும், பகலுமாக ஆராய்ந்து வருகிறார்கள். 5 லட்சத்துக்கும் அதிகமான விவரங்கள் உள்ளதால் அதிலிருந்து முக்கியமான தகவல்களை சேகரிக்க குறைந்தபட்சம் 10 நாட்களாகும் என்கிறது தனிப்படை போலீஸ்.

சுவாதி கொலையில் நீதிமன்றம் விடுத்த காலக்கெடு முடிந்துள்ள நிலையில் போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் போலீஸார் விழிபிதுங்கியுள்ளனர். கொலையாளி யார் என்பது தெரியாத வகையில் சுவாதியின் வழக்கு விசாரணை செல்கிறது. ஆனால் போலீஸ் உயரதிகாரிகளோ சுவாதி வழக்கு சரியான பாதையில் செல்வதாக சொல்கிறார்கள். மேலும், சுவாதி கொலை குறித்து தினந்தோறும் ஒரு தகவல்கள் வெளியாகி வருவதால் அனைத்து கோணங்களிலும் போலீஸாரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது.

சுவாதியுடன் பணியாற்றும் சக ஊழியர்கள், நண்பர்கள், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரடியாகவே களத்தில் இறங்கி சுவாதி வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சுவாதி வழக்கு விவரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படுகிறது. இப்போது கிடைத்துள்ள இருசக்கர வாகன பதிவு கூட ரகசியமாக வைக்க போலீஸ் உயரதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/65724-swathi-murder-verdict-escaped-in-bike-new-twist.art

  • தொடங்கியவர்
சுவாதி கொலை வழக்கில் கொலையாளி கைது
 
 
Tamil_News_large_155512620160702010518_3
 
Share this video : facebooktop.jpgtwittertop.jpg
 
 
 

சென்னை: சென்னையில் பெண் பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவு கைது செய்யப்பட்டான்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து பல இடங்களிலும் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவில் நெல்லையில் கைது செய்யப்பட்டான்.

கொலையாளியின் பெயர் ராம்குமார் என்றும், போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த அவன், கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கொலையாளி ராம்குமார் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட ராம்குமார், 24 நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவன்; பி.இ., பட்டதாரி.

கடந்த மூன்று மாதங்களாக சுவாதியின் வீடு அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்தாகவும், தன் கூட்டாளியுடன் சேர்ந்து திட்டமிட்டு சுவாதியை கொன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1555126

  • தொடங்கியவர்
கூடா நட்பு
கூடா நட்பால் நிகழ்ந்த கொலை:
சுவாதி வழக்கில் போலீஸ் 'திடுக்'
 
 
 

'தவறான நபர்களுடன் நட்பு வைத்து இருந்ததால், மென்பொறியாளர் சுவாதி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்' என, போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

 

Tamil_News_large_1555132_318_219.jpg

இந்த கொலைக்கு, அவரது முன்னாள் காதலன் மூளையாக இருந்து சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என, போலீசார்சந்தேகிக்கின்றனர்.

சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், சந்தான கோபால கிருஷ்ணன்; ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. அவரது இளைய மகள் சுவாதி, 24, செங்கல்பட்டு அருகே, பரனுாரில் உள்ள, 'இன்போசிஸ்' நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்த அவரை, ஜூன், 24 காலை, 6:30 மணியளவில், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம வாலிபன் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றான்.

இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் மேற்பார்வையில், கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில், எட்டு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், சூளைமேடு நெடுஞ்சாலை, சுவாதி வீடு மற்றும் அவர் பணியாற்றிய பரனுாரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த, கொலையாளியின் உருவத்தை போலீசார் வெளியிட்டனர்.

அவன், சுவாதியை கொல்ல, சூளைமேடு சவுராஷ்டிரா நகர், 6வது தெரு வழியாக நடந்து வரும் காட்சி மற்றும் கொலை செய்த பின், ரயில் நிலையத்தில் இருந்து தப்பிச்செல்லும் காட்சி என, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த, ஐந்து வீடியோ காட்சிகளையும் போலீசார் வெளியிட்டனர்.

இந்நிலையில், போலீசாருக்கு நேற்று மேலும் ஒரு வீடியோ காட்சி கிடைத்தது. அதில், கொலை நடந்த அன்று, சுவாதி, தன் தந்தையுடன், இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து, வேலைக்கு செல்ல ரயில் நிலையம் நோக்கி செல்கிறார். அவர்களை பின் தொடர்ந்து, இரு சக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணிந்தபடி கொலையாளி செல்கிறான்.

இதனால், சுவாதியை கொன்ற பின் கொலையாளி, இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்று இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வாகனத்தின் பதிவு எண் வாயிலாக, கொலையாளியை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.தனிப்படை போலீசார், சுவாதி பயன்படுத்திய, இ - மெயில், கம்ப்யூட்டர் மற்றும், 'லேப் டாப்'பில் இருந்த, 'ஹார்ட் டிஸ்க்' ஏற்கனவே பயன்படுத்திய மொபைல் போன் எண்களை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில்,

இந்த வழக்கில் போலீசாரின் நேற்றைய விசாரணை:
* கொலையாளி எடுத்துச் சென்ற சுவாதியின் மொபைல் போன் எண்ணிற்கு, அடிக்கடி தொடர்பு கொண்ட நபர்கள், அவர்கள் எவ்வளவு நேரம் சுவாதியிடம் உரையாடியுள்ளனர் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்
* ஒரு பெண்ணை தொடர்பு கொள்ள கூடாத நள்ளிரவு நேரம், அதிகாலையில், தொடர்பு கொண்ட நபர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து உள்ளனர்
 

* சுவாதி ரகசியமாக, மொபைல் போன் எண் பயன்படுத்தி வந்தாரா எனவும்; அவரது இ - மெயிலில், சேமித்து வைத்துள்ள மொபைல் போன் எண்கள் சேகரிக்கப்பட்டு, சந்தேக நபர்களை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்
* பரனுாரில், சுவாதியுடன் பணியாற்றிய, சென்னை, நொளம்பூரைச் சேர்ந்த வாலிபர், சுவாதியை நள்ளிரவில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசிய விவரங்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், அந்த வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது
* ஏற்கனவே பணியாற்றிய பெங்களூருக்கு, சமீபத்தில், சுவாதி சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவருடன் வேறு யாரும் பயணித்தனரா; அவர்களின் மொபைல் போன் எண்கள் மொபைல் போன் டவரில், ஒரே 'லொகேஷனை' காட்டுகிறதா என, ஆய்வு நடக்கிறது. போலீசாருக்கு சந்தேகம்வலுப்பதால், சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, சுவாதியின் ஆண் நண்பரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது
* பெங்களூரில், சுவாதி தங்கி இருந்த இடம்; அவரை சந்தித்த நபர்கள்; சுவாதிக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்பது குறித்து, அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் தகவல் திரட்டி வருகின்றனர்
* கொலைகாரன், ஒரு மாதமாக, வசிப்பிடம், செல்லுமிடம், பணியிடம் என, சுவாதியை பின் தொடர்ந்து, 'என்னை ஞாபகம் இருக்கிறதா' என, கேட்டு தொல்லை கொடுத்த போதிலும், தன் நடத்தை மீது பிறர் சந்தேகிக்க கூடாது என்பதற்காக, அந்த வாலிபன் பற்றி, தன் தோழியரிடம் கூட சுவாதி வெளிப்படையாக தெரிவிக்க மறுத்தது ஏன்?
* பெங்களூரில் பணியாற்றிய போது, சுவாதியை, அந்த வாலிபன் ஒரு தலையாக காதலித்தானா; சுவாதி ஏற்கனவே பயன்படுத்திய மொபைல் போன் எண்களில், ரகசிய தொடர்பு எண் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது
* சுவாதிக்கு, ஒரு காதலன் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவனிடம் இருந்து பிரிந்ததால், 'தனக்கு கிடைக்காத சுவாதி, வேறு எந்த வாலிபனையும் மணந்து விடக்கூடாது' என்பதற்காக, கூலிப்படை மூலம், அவன் கொன்று விட்டானா?
* திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆண் நண்பர், சுவாதியை, அவர் பணியாற்றிய பரனுாரில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து, வீட்டிற்கு கொண்டு விட்டுள்ளார். சுவாதி யும், அந்த ஆண் நண்பரின்வீட்டிற்கு சென்றுள்ளார்.
இருவருக்கும் இடையே இருந்தது நட்பா, காதலா; திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தனரா; அதனால், இருவீட்டாருக்கும் இடையே பிரச்னை இருந்ததா என, ஆண் நண்பரின் உறவினர்கள், அவர்களின் நட்பு வட்டாரங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறியதாவது: நாங்கள், புகைப்படமாக வெளியிட்டுள்ள வாலிபனே, கொலைகாரன் என்பதை உறுதி செய்து விட்டோம். அவன் எதற்காக சுவாதியை கொன்றான்; அந்த பெண்ணுக்கும், அவனுக்கும் என்ன தொடர்பு; அவனை, வேறு யாராவது ஏவி, சுவாதியை கொன்று விட்டனரா என்ற கோணத்தில்விசாரணை செல்கிறது.

அதற்காக, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்திய விசாரணையில், கொலைகாரன் குறித்து, ஒரு மையப்புள்ளியை அடைந்து விட்டோம். தவறான நபர்களுடன் பழகியதன் விளைவாக, இந்த கொலைநிகழ்ந்துள்ளது.

கொலைகாரன் குறித்து, எங்களிடம் தகவல் தெரிவித்த, சுவாதி யின் தோழியர்; கொலையை நேரில் பார்த்த, ரயில் நிலைய கேன்டீன் ஊழியர்; ஜூன், 7ம் தேதி, சுவாதியை, ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்ததை நேரில் பார்த்தாக கூறிய சென்னை, சூளைமேடு தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரிடம் மேலும் தகவல்கள் கிடைக்கிறதா என, விசாரித்து
வருகிறோம்.இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

கருத்து கேட்பு கூட்டத்தில்ரயில் பயணிகள் ஆவேசம்:ரயில் நிலையங்களில் மேற்கொள்ள

 

வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் சார்பில், நேற்று, சென்ட்ரலில் உள்ள தலைமை அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில், ஐந்து பயணிகள் நல சங்கத்தினர், ஐ.டி.,நிறுவனத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

இது குறித்து, குரோம்பேட்டை ரயில் பயணிகள் சங்க தலைவர் சந்தானம் கூறியதாவது:
சுவாதியை கொலை செய்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கண்காணிப்பு கேமரா இல்லாதது; பாதுகாப்புக்கு போலீஸ் இல்லாதது; முதலுதவிக்கு மருத்துவரை அழைக்க எந்த வசதியும் செய்யாதது; சுற்றுப்புற சுவரை உயர்த்தி கட்டாதது என, பாதுகாப்பு அம்சங்கள் அத்தனையிலும் கோட்டை விட்டுள்ளனர்.

மற்ற ரயில் நிலையங்களிலும், இதே நிலைதான். பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து, பயணிகள் சங்க நிர்வாகிகள் பலரும் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டனர். இவற்றை உடனடியாக களைய வேண்டும். ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர, மற்ற யாரும் வெகு நேரம் காத்திருக்க அனுமதிக்க கூடாது.

ரயில் நிலையங்களில் ஆபத்தான நேரங்களில், எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம். 'டிசம்பருக்குள் அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

உருண்டோடிய ஒரு வாரம்நம்பிக்கையுடன் போலீஸ்! சுவாதி, ஜூன், 24ல் கொல்லப்பட்டு, நேற்றுடன் ஒரு வாரம் உருண்டோடி விட்டது. கொலையாளி விட்டுச்சென்ற அரிவாள், கண்காணிப்புகேமராவில் பதிவாகி இருந்த அவனது உருவம் உள்ளிட்டதடயங்கள் இருந்த போதிலும்,
போலீசாரால் அவனை கைது செய்ய இயலவில்லை.மக்கள் மத்தியிலும்,'சுவாதியை கொன்றவனை போலீசார் பிடித்து விடமாட்டார்களா' என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. இதற்கு விரைவில் விடை சொல்லுவோம் என, நம்பிக்கையுடன் கூறுகின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

சாப்ட்வேர் நிறுவனத்தில்5 மணி நேரம் விசாரணை:சுவாதி பணியாற்றிய, பரனுார், மகேந்திரா வேல்டு சிட்டியில் உள்ள, 'இன்போசிஸ்'நிறுவனத்தில், பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண் தலைமையில், இரண்டு தனிப்படை போலீசார், நேற்று விசாரணையை துவக்கினர்.

பரனுார் ரயில் நிலையத்தில், தனிப்படை பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு போலீசார்,சுவாதியை கொலை செய்த, மர்ம நபரின் படத்தை, 2,000 ஊழியர் களிடம் காட்டி விசாரணைநடத்தினர்.

பகல், 12:30 மணிக்கு, மற்றொரு தனிப்படை பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட, நான்கு போலீசார், சுவாதியுடன் பணிபுரிந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மாலை, 5:15 மணி வரை விசாரணை நடைபெற்றது
. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1555132

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடகம்.  ஒருவன் தன்.... கழுத்தை அறுத்து,  சாவானா?
தமிழ் நாட்டு  போலீசுக்கு கிடைக்கும்...  மேலிடத்து அழுத்தத்தில், ஒரு அப்பாவி மாட்டிக் கொண்டான்.

இந்திய காவல் துறையில்,  எனக்கு நம்பிக்கை இல்லை.
ஏனென்றால்.... அவர்களுக்கு, அரசியல் அழுத்தம் அதிகம். 
ராஜீவ் காந்தி பலியான விடயத்தில் கூட.... அன்று கடமையில் இருந்து, 
இன்று ஓய்வு எடுத்த... போலீஸ் அதிகாரிகள் எழுதும் சுயசரிதைகள், முக நூல் கருத்துக்கள் பலரிடம், விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாதி தொடர்பாக... எத்தனை தலைப்புகள்? 

சுவாதி கொலையை..... முன் பக்கத்தில்,  "பின் பண்ணி"  விட்டால்,
ஒரே தலைப்பில்.... அந்த வெட்கம்   செயலை, நாங்கள்... வாசிக்காமல் இருப்போம்.

  • தொடங்கியவர்

நுங்கம்பாக்கம் முதல் மீனாட்சிபுரம் வரை... சுவாதி கொலையில் நடந்தது என்ன? 3Minutes Read

Swathi.jpg

ஜூன் 24, வெள்ளிக்கிழமை. அன்று எப்போதும் போல்தான் பொழுது புலர்ந்தது. துளசி மாடத்தில் புதிதாக ஓர் இலை அன்றும் துளிர்த்தது. காலை 6.30 மணி. சந்தான கோபாலகிருஷ்ணன், தன் மகள் சுவாதியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் இறக்கி விடுகிறார்.

யாருக்கு தெரியும்... அப்போது சுவாதி, தாம் கடைசியாக சென்ற மசினகுடி சுற்றுலா குறித்த நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே, ரயில்நிலைய படிக்கட்டுகளில் ஏறிச் சென்றிருக்கலாம். மசனக்குடியின் பச்சைய வாசனையை கற்பனையாக தன் நாசியில் மீண்டும் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்திருக்கலாம். சுவாதிக்கு மலை ஏறுவது மிகவும் பிடிக்கும் என்பதால், சொல்லமுடியாது அந்த படிக்கட்டுகளை சிறு மலைப்பாதையாக நினைத்துக் கூட விறுவிறுவென ஏறி இருக்கலாம்.

நடைமேடை இரண்டில், பெண்களுக்கான சிறப்பு பெட்டி நிற்கும் இடத்தில், இப்போது  சுவாதி  6.46 மணிக்கு வரும் செங்கல்பட்டு தொடர்வண்டிக்காக காத்திருக்கிறாள்.  அருகில் ஒரு பொது தொலைபேசியகம் இருக்கிறது. அடுத்துள்ள சிறு கடையில், கடைக்காரர் அன்று வந்த தினசரிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். சற்று தொலைவில், ஆசிரியர் தமிழ் செல்வனும் கையில் செய்தித் தாளுடன் அதே தொடர்வண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சிலரும் காத்திருக்கிறார்கள்.

சில நிமிடங்கள் அவளுடன் அடையாளம் தெரியாத நபர் உரையாடிக்கொண்டிருக்கும்போதே, திடீரென அவளை வெட்டிவிட்டு, அவளது செல்ஃபோனை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். இந்த சம்பவத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைகின்றனர். இருவர், அந்த கொலையாளியை துரத்திக் கொண்டு செல்கின்றனர்.   கொலையாளி அங்கிருந்த சுவரில் ஏறிக் குதித்து, செளரஷ்ட்ரா நகரின் ஏழாவது தெரு வழியாக ஓடுகிறான்.

Train.jpg

ரயிலுக்கு என்ன தெரியும்...? அது உயிரற்ற ஜடப்பொருள். அது சரியாக 6.46 மணிக்கு வருகிறது. அந்த தொடர்வண்டிக்காக காத்திருந்தவர்கள், ஏறிச் செல்கிறார்கள். சுவாதியுடன், அவள் கனவுகளும் மரணித்த நிலையில், குருதி தோய்ந்த அவளது உடல் அங்கே கிடக்கிறது. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவள் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கு முன் உரையாடி விட்டுச் சென்ற  சந்தான கோபாலகிருஷ்ணன், இப்போது குருதி குளத்தில் கிடக்கும் தம் மகளை பார்த்து அழுகிறார்.  அதன் பின் பல தொடர்வண்டிகள் வந்து போய்விட்டன. 

athikesavan.jpg8.30 மணிக்கு, செளராஷ்ட்ரா தெருவை சேர்ந்த 72 வயது முதியவர் ஆதிகேசவன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வருகிறார்.  குருதியில் மிதக்கும்  சுவாதியின் உடலைக் கண்டு, அதிர்ச்சியில் சரிந்து விழுகிறார். ஆனால், அதன் பின்னும் சுவாதி உடல் அப்புறப்படுத்தப்படவில்லை. ஏறத்தாழ 2. 15 மணி நேரம் அங்கேயே கிடக்கிறது.  9:20 மணிக்கு பின்னரே,  ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையத்தில் இருந்து சுவாதியின் உடலை, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்கிறார்கள்.

இதற்குள் செய்தி நிறுவனங்கள் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை முற்றுகையிடுகின்றன.  காற்றலைகள் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தமிழகமெங்கும் கடத்திச் செல்கின்றன.
 

ஜூன் 25ம் தேதி, அதே 6.30 மணி.  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டாவது மேடையில்  வழக்கமாக சுவாதி தொடர்வண்டி ஏறும் இடத்தின் அருகில் இருந்த கடைகளில், இப்போது சுவாதியின் படங்களை தாங்கிய செய்திதாள்கள் இருக்கின்றன.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது செய்தி நிறுவனங்கள், சென்னையில் உள்ள அனைத்து புறநகர் தொடர்வண்டி நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்கின்றன. எந்த நிலையத்திலும் சிசிடிவி கேமிரா இல்லை.

ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்திற்குரிய நபரின் உருவம் பதிவானது தெரியவந்தது. போலீசார் அந்த நபர்தான் கொலையாளியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் சிசிடிவி பதிவை ஊடகங்களுக்கு வெளியிடுகின்றனர்.

Swathi-killer.jpg


ஜூன் 26ம் தேதி,  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய சௌராஷ்ட்ரா நகரில் உள்ள ஒரு தெருவில் இருக்கும் வரைகலை பயிற்சி மையத்தின்  கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அது வரை துப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்த காவல் துறையினருக்கு இந்த வீடியோ பதிவு பேருதவியாக இருக்கிறது.

இந்த இரண்டாவது வீடியோவை  போலீசார் வெளியிட்டு,  இது கொலையாளியின் மற்றொரு வீடியோ என்று தெரிவிக்கின்றனர். இப்போது காவல் துறைக்குன் புது பிரச்னை வருகிறது.  இரண்டு வீடியோவிலிருந்த நபர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கிறது. இது புதுக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பி.ஜே.பி தலைவர் எச். ராஜா, சுவாதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் இதற்கிடையே, நகரத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது.

மாலை, நுங்கம்பாக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சுவாதிக்காக இளைஞர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

SwathiInfosys.jpgஜூன் 27ம் தேதி, சென்னையின் மையப்பகுதியில், மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகம் உள்ள இடத்தில் ஒரு கொலை நடந்து, மூன்று நாட்களாகியும் துப்பு துலங்காததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் ரயில்வே போலீசார் திணறுகிறார்கள்.  சுவாதி கொலை வழக்கு, ரயில்வே போலீஸிடமிருந்து சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றப்படுகிறது. உடனடியாக, கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. அவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள்  ஆகியோரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. சுவாதி முன்பு வேலை பார்த்த மைசூருக்கும்  தனிப்படை பிரிவு ஒன்று விரைகிறது.

சுவாதியின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர்.  இதற்கிடையே விசாரணையில் துன்புறுத்தியதாக சுவாதியின் பெற்றோர், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்கின்றனர்

சுவாதி குடும்பத்தினரை திமுக பொருளாளர் முக ஸ்டாலின், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், குஷ்பு, தமிழிசை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.  தமிழகத்தில் பெரும் அரசியல் பிரச்னையாக உருவெடுக்கிறது சுவாதியின் மரணம்.

ஜூன் 28ம் தேதி,   சுவாதி வழக்கு நத்தை வேகத்தில் நகர்வதால்,  தாமே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கில் இரண்டு நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால், தாமே விசாரணையை மேற்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறது நீதிமன்றம்.

நடிகர் ஒய்.ஜி மகேந்திரன், சுவாதியை பிலால் மாலிக் என்ற ஒருவன்தான் கொன்றான் என்ற தொனியில் ஒரு செய்தியை தன் முக நூல் பக்கத்தில் பகிர்கிறார். இது கடும் கண்டனத்திற்கு உள்ளாகிறது. பின் அந்த இடுகை தனது சொந்த கருத்தல்ல என்றும், தனக்கு வந்த செய்தியை பகிந்தேன் என்றும் இன்னொரு பதிவை வெளியிடுகிறார் மகேந்திரன்.

சுவாதி குறித்து பல தகவல்கள் உலாவியதால், அவரின் பெற்றோர், சுவாதிக் குறித்து எந்த அவதூறையும் பரப்ப வேண்டாமென்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

Swathi-and-her-sister-Nithya.jpg



ஜூன் 29ம் தேதி, சுவாதியின் ஃபேஸ்புக் முடக்கம் செய்யப்படுகிறது. சுவாதியின் அக்கா நித்யா,  சுவாதி குறித்து ஒரு உருக்கமான கடிதத்தை எழுதுகிறார். அதில் சுவாதி மிகுந்த கடவுள் நம்பிக்கை  உடையவர் என்றும், அவள் குறித்து யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்.

இதனிடையே, செங்கல்பட்டு பரனூர் அருகே கொலையாளி மறைந்திருப்பதாக தகவல் பரவுகிறது. சிசிடிவியில் பதிவான மாதிரி புகைப்படத்தை வைத்து, பரனூரில் வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை மேற்கொள்கிறார்கள்.

RamKumarhouse1.jpg


ஜூன் 30ம் தேதி, நுங்கம்பாக்கத்தில் நடைபாதையில் ஓடிய நபரின் தெளிவான புகைப்படத்தை வெளியிடுகிறது காவல்துறை. முக்கிய துப்பு ஒன்று  காவல்துறைக்கு கிடைக்கிறது. அதாவது, கடைசியாக சுவாதியின் கைபேசி, சூளைமேடு சிக்னலில் உயிர்ப்புடன் இருந்திருக்கிறது. சூளைமேட்டில் வீடுவீடாக விசாரணை மேற்கொள்கிறார்கள்.  கொலையாளியின் அடையாளத்தில் ஒருவன், ஒரு மேன்சனில் தங்கி இருப்பதாக கவல்துறைக்கு துப்பு கிடைக்கிறது.  அந்த கொலையாளி தங்கியிருந்த மேன்சனில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கிறார்கள். அருகிலுள்ள மேன்சன் காவலாளி  அளித்த தகவலின் பேரில் போலீசார் நெல்லை விரைகிறார்கள்.

Ramkumar.jpg

 



ஜூலை 1ம் தேதி,  செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக தகவல் . ஆடு மேய்த்து விட்டு மாலை வீடு திரும்பிய  ராம்குமாரை, சுவாதி கொலை வழக்கில் கைது செய்ய இரவு 10 மணிக்கு போலீஸார் முயற்சிக்கும் போது, பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு  ராம்குமார் முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.  ராம்குமாரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றதால் ராம்குமார் கழுத்தில் 18 தையல்கள் போடப்படுகிறது.

http://www.vikatan.com/news/coverstory/65758-nungambakkam-to-meenakshipuram-swathi-murder-case.art

  • தொடங்கியவர்

சுவாதி கொலை வழக்கு: போலீஸ் விசாரணையில் ராம்குமாரின் குடும்பத்தினர்

 
 
தற்கொலைக்கு முயன்ற ராம்குமார்
தற்கொலைக்கு முயன்ற ராம்குமார்

சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் (24) குறித்து பல்வேறு பின்னணி தகவல்கள் கிடைத்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் என்ற சிறிய கிராமம்தான் ராம்குமாரின் சொந்த ஊர். இவரது தந்தை பரமசிவன். தாய் புஷ்பம் ஆடு மேய்க்கும் தொழிலாளி.

5 பாடங்கள் அரியர்

ராம்குமார் பிளஸ் 2 வரை செங்கோட்டையில் உள்ள எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். தொடர்ந்து ஆலங்குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் படித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்துவிட்ட போதிலும், 5 பாடங்கள் வரை அரியர் வைத்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஊரில் இருக்கும் நாட்களில் தாய்க்கு உதவியாக ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் அரியர் தேர்வு எழுதுவதற்காக கோச்சிங் பயில, சென்னை செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு திரும்பிய ராம்குமார், 2 நாட்களாக வெளியே தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார். அதன் பிறகு சகஜநிலைக்கு வந்த அவர், கடந்த சில தினங்களாக காட்டுப் பகுதிக்கு தனது வீட்டு ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். நேற்று முன்தினம்கூட காலையில் ஆடு மேய்க்கச் சென்றுவிட்டு, மாலையில்தான் வீடு திரும்பியுள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் அவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீஸார் கைது செய்ததை அறிந்த ஒட்டுமொத்த மீனாட்சிபுரம் கிராமமே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது.

ராம்குமார்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்த போலீஸார், அவரை பொறி வைத்து நள்ளிரவில் கைது செய்துள் ளனர். பகலில் அவரது நடமாட்டத்தை கண் காணித்த தென்காசி ஆய்வாளர் பாலமுரு கன் தலைமையிலான போலீஸார், இரவு 11 மணியளவில் மீனாட்சிபுரம் முழுவதும் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, அம்பேத் கர் தெருவில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஊரில் நண்பர்கள் கிடையாது

மீனாட்சிபுரத்தில் ராம்குமாரின் அண்டை வீடுகளில் விசாரித்தபோது, `அவன் யாரிடமும் அதிகம் பேசமாட்டான்’ என்றே கூறினர். ராம்குமாரின் உறவினரான பாப்பா என்ற பெண் கூறும்போது, `அவன் வெளியே யாரிடமும் அதிகம் பேசமாட்டான். ஊரில் அவனுக்கு என நண்பர்கள் யாரும் கிடையாது. ஊருக்கு வந்தால் ஆடு மேய்க்கச் செல்வான். இல்லையெனில் வீட்டில் இருப்பான்.

நேற்று முன்தினம்கூட அவன் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்ததைப் பார்த்தேன். அவனது முகத்தில் எந்த மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை.

கடந்த ஒரு வாரமாக சுவாதி கொலை செய்தியை டிவியில் பார்த்தேன். ஆனால், டிவியில் காட்டிய புகைப்படம் தெளிவாக இல்லாததால், அது ராம்குமார் என்பது எனக்கு தெரியவில்லை. இந்த கொலை மூலம் ஊருக்கு பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்திவிட்டான்’ என்றார் அவர். இதே போல் ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் அவன் யாரிடமும் பேசமாட்டான் என்றே கருத்து தெரிவித்தனர்.

போலீஸ் காவலில் குடும்பம்

ராம்குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது தந்தை, தாய், சகோதரிகளை போலீஸார் விசாரணைக் காக தங்கள் காவலில் வைத்துள்ளனர். இதனால், மீனாட்சிபுரத்தில் உள்ள அவர்களது வீடு பூட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மீனாட்சிபுரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/சுவாதி-கொலை-வழக்கு-போலீஸ்-விசாரணையில்-ராம்குமாரின்-குடும்பத்தினர்/article8803743.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

சுவாதி கொலை வழக்கு: கொலையாளி ராம்குமாரை காட்டிக் கொடுத்த செல்போன்

 
swathi_2918506h.jpg
 

சுவாதியை கொன்றவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெளியே ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்லும் இளைஞரின் தெளிவில்லாத உருவம் பதிவாகி இருந்தது. அந்தப் புகைப்படத்தை கடந்த 30-ம் தேதி போலீஸார் வெளியிட்டனர்.

சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்ற ராம்குமார் அதை தான் தங்கியிருந்த விடுதி அறை யில் வைத்து காலை 8.30 மணிக்கு சுவிட்ச் ஆப் செய்துள்ளார். சுவாதி செல்போன் சிக்னலை வைத்து கொலையாளி சூளைமேட்டில்தான் இருக்கிறார் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.

எனவே, சூளைமேடு முழுவதும் வீடு வீடாக போலீஸார் சோதனை நடத்தினர். கொலையாளியின் தெளிவில்லாத புகைப்படத்தை சூளைமேடு முழுவதும் ஒட்டி தேடுதல் வேட்டை நடத்தினர். ராம்குமார் தங்கியிருந்த விடுதியி லும் அந்தப் படம் ஒட்டப்பட்டது. ஆனால், படம் தெளிவாக இல்லாததால் அதை பார்த்த பின்னரும் ராம்குமார்தான் அந்த நபர் என்பது யாருக்குமே தெரியவில்லை. சந்தேகமும் வரவில்லை.

ஏ.எஸ். மேன்ஷன் விடுதியில் இருக்கும் நபர்களின் விவரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தும் போது, ராம்குமார் தகவல் எதுவுமே தெரிவிக்காமல் சென்றது தெரிந்தது. சந்தேகம் அடைந்த போலீஸார், விடுதி காவலாளி கோபாலிடம் புகைப்படத்தைக் காட்டி விசாரணை நடத்தினர். அது ராம்குமாரைபோல இருப்பதாக கோபால் தெரிவித்தார். விடுதியில் சேருவதற்கு முன்பு ராம்குமார் கொடுத்த விண்ணப்பத்தில் அவரது முகவரி மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருந்தது. அந்தப் படத்தை வீடியோவில் பதிவாகி இருந்த காட்சியுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, உடல் அமைப்பு ஒத்திருந்தது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

விடுதியில் உள்ள கேமரா வில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொலை நடந்த அன்று கொலையாளி அணிந்திருந்த ஊதா நிற கட்டம் போட்ட சட்டையுடன் அதே இளைஞர் விடுதிக்குள் செல்வது தெரிந்தது. உடனே, ராம்குமார் தங்கியிருந்த அறையை உடைத்து அவரது சூட்கேசை சோதனையி செய்தபோது, அதில் ரத்தக் கறை படிந்த சட்டை இருந்தது. இதனால் அவர்தான் கொலையாளி என்பதை உறுதி செய்தனர். அவர் கொடுத்திருந்த முகவரியில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை டி.மீனாட்சிபுரம் டாக்டர் அம்பேத்கர் நகர், பரமசிவன் மகன் ராம்குமார் (22) என்பது தெளிவாக இருந்தது. உடனே, சென்னை போலீஸார் கொடுத்த தகவலின்பேரில் செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் சாதாரண உடையில் சென்று ராம்குமார் வீட்டை சுற்றி வளைத்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் ராம்குமாரை பிடிக்க முயன்றனர். அப்போது ராம்குமாரின் தாத்தா போலீஸாரை தடுத்துள்ளார். அந்த இடைவெளியில் ராம்குமார் பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். போலீஸார் அவரை சுற்றிவளைத்து பிடித்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/சுவாதி-கொலை-வழக்கு-கொலையாளி-ராம்குமாரை-காட்டிக்-கொடுத்த-செல்போன்/article8803723.ece?homepage=true&relartwiz=true

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா! இரு மாதிரி இந்தக் கேஸ் முடிவுக்கு வந்திட்டுது...இந்தக் கொலையை நேரில் பார்த்திட்டுது ஒன்றுன் நடக்காதா மாதிரி ரயில் வர,வேலைக்கு கிளம்பி போனவர்கள்,கண்டும் காணத மாதிரி நின்றவர்கள் அனைவருமே தண்டனைக்குரியவர்கள்.

  • தொடங்கியவர்

போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்னை புறப்பட்டார் சுவாதி கொலையாளி ராம்குமார்: ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை

Date: 2016-07-03@ 16:39:51

Daily_News_947796106339.jpg

நெல்லை: நெல்லை மருத்துவமனையில் இருந்து ராம்குமாரை சென்னை அழைத்துச் செல்ல நெல்லை நீதிமன்ற மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கியுள்ளார்.  மாஜிஸ்திரேட் ராமதாஸிடம் ராம்குமார் 35 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ராம்குமாரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்னை புறப்பட்டது. ஆம்புலன்சில் 2 டாக்டர்கள், செவிலியர்கள் ராம்குமாருடன்  ஆம்புலன்சில் வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் ராம்குமாரை ஏற்றிக்கொண்டு போலீஸ் வாகனம் சென்னை புறப்பட்டது. ராயப்பேட்டை மருத்துமனையில்  ராம்குமாரை அனுமதிக்க போலீசார் திட்மிட்டுள்ளனர். மரு்துவ சோதனைக்கு பிறகு நாளை எழும்பூர் மாஜிஸ்திரேட்டிடம் ராம்குமார் ஆஜர்படுத்தப்படுவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனுடன் சென்னை தனிப்படை போலீசார் தீவிர ஆலோசனை நடத்தினர். இன்று இரவு ஆம்புலன்சில் அவர்   சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள ராம்குமாருக்கு போலீஸ் காவலில் ராயப்பேட்டை அரசு  மருத்துவமனையில்  சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி சாப்ட்வேர்  இன்ஜினியர் சுவாதி  (24) கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தின் சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு  கேமராக்களில் கொலையாளி  தப்பியோடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் 10 தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளியின் உருவத்தின் மேம்படுத்தப்பட்ட போட்டோவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ்   நிலையங்களுக்கும் தனிப்படை போலீசார் அனுப்பி வைத்தனர். பத்திரிகை மற்றும் டி.வி.க்களிலும் இந்த படங்கள் பிரசுரமானது. இதற்கிடையே சுவாதியின்   உறவினர்கள், தோழிகள், நண்பர்கள் மற்றும் இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும்  அவரது படத்தை சூளைமேட்டில் உள்ள அனைத்து லாட்ஜ்கள் மற்றும் வீடுகளில் விநியோகித்து இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் போலீசுக்கு கூறும்படி   தனிப்படையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில்தான் நேற்று முன்தினம் காலை 7.45 மணிக்கு அதிரடி திருப்பமாக சூளைமேடு பகுதியில் உள்ள ஏ.எஸ்.   மேன்சனில் தங்கியுள்ள ஒருவர் ‘‘சுவாதி கொலை தொடர்பாக போலீசார் வெளியிட்ட படத்தில் காணப்படுகிற நபர் என்னுடன் ஏ.எஸ். மேன்சனில் அறை எண் 404ல்   தங்கியிருந்தவர் தான். சுவாதி கொலை நடந்த பின்னர் அவரை காணவில்லை’’ என போலீசுக்கு துருப்பு சீட்டை கொடுத்தார்.

இதையடுத்து ஏ.எஸ். மேன்சனுக்கு விரைந்த போலீசார் போனில் பேசியவரை சந்தித்து விசாரித்தனர். விசாரணையில் போலீசுக்கு தகவல் கொடுத்தவர் திருச்சியைச்   சேர்ந்த நடேசன் (50) என்பதும், படத்தில் காணப்படும் கொலையாளி 3 மாதங்களாக தன்னுடன் சக ‘ரூம் மேட்’டாக தங்கியிருந்ததையும், சம்பவம் நடந்த 24ம் தேதிக்கு   பின்னர் அவரை காணவில்லை என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஏ.எஸ். மேன்சன் காவலாளி கோபாலிடம், கொலையாளியின் போட்டோவைக் காட்டி   விசாரித்தபோது அவர் படத்தைப் பார்த்து உறுதி செய்தார்.

அதன்பின்னர் லாட்ஜ் நிர்வாகத்தினர் மூலம் சாவி வாங்கி 404 எண் அறையை திறந்து தனிப்படையினர் சோதனையிட்ட போது, அந்த அறையில் தங்கியிருந்து   மாயமானவர் நெல்லை மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பதும், போலீசார் வெளியிட்ட படமும், லாட்ஜின் விண்ணப்பத்தில்   ஒட்டப்பட்டிருந்த படமும் ஒரே சாயலில் இருக்கவே அவர் தான் கொலையாளி என போலீசார் முடிவு செய்தனர். மேலும் அந்த அறையில் கொலை நடந்த அன்று   அந்த வாலிபர் அணிந்திருந்த சட்டையும், அதில் ரத்தக் கறைகளும் இருந்ததை போலீசார் கண்டறிந்து அதை கைப்பற்றினர். இதையடுத்து இந்த தகவல்கள் நெல்லை   எஸ்.பி. விக்ரமனுக்கு தெரிவிக்கப்பட்டது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=228575

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2016 at 1:06 PM, நவீனன் said:

 

 

 



SwathiInfosys.jpg
Swathi-and-her-sister-Nithya.jpg


 

Ramkumar.jpg

 


 

சுவாதி வேண்டாம் என்று சொன்னபோது ....
இந்த மூஞ்சி அதை ஏற்றுக்கொண்டு இருக்கலாம்.

சுவாதி பெங்களூர் அங்கு இங்கு என்று சென்று படித்து 
கல்வியில் அனுபவம் பெற்றவர் 
அவர் சொல்லும்போது அதில் அறிவுசார்ந்தும் ஏதும் இருக்கும் 
என்று இந்த சின்ன பய எண்ணியிருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலிப்பது என்றாலும் தகுதி பார்த்து காதலிக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம்/இவர்களுக்கெல்லாம் சினிமாக்கள் தான் முன்னுதாரணமாக அமைந்து விடுகின்றன.

  • தொடங்கியவர்

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

 
 
ராம்குமாரிடம் வாக்குமூலம் பெற சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த மாஜிஸ்திரேட் | படம்: சிறப்பு ஏற்பாடு.
ராம்குமாரிடம் வாக்குமூலம் பெற சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த மாஜிஸ்திரேட் | படம்: சிறப்பு ஏற்பாடு.

சுவாதியை கொலை வழக்கில் கைதான ராம்குமாரை வரும் 18-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் பொறுப்பு மாஜிஸ்திரேட் கோபிநாத் ஆணையிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் இன்ஜினீயர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, செங்கோட்டை அருகே தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமார் என்ற இளைஞரை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

போலீஸார் பிடிக்க முயன்ற போது, ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னையில் நடைபெறுவதால் ராம்குமாரை இங்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, நெல்லை சென்ற சென்னை தனிப்படை போலீஸார், நீதிபதி மற்றும் டாக்டர்களின் அனுமதி பெற்று ராம்குமாரை சென்னை அழைத்துவந்தனர்.

Ramkumar-Chennai_2919623a.jpg

நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸில் சென்னை கொண்டுவரப்பட்ட அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையிலேயே விசாரணை...

இந்நிலையில், இன்று காலை எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் பொறுப்பு மாஜிஸ்திரேட் கோபிநாத், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் ராம்குமாரை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.

நலமாக இருக்கிறார்:

ராம்குமாரை சோதித்த சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் காது.மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ராம்குமார் உடல் நலன் தேறி வருவதாகக் கூறினார். காயம் ஆறி வருவதாகவும் கூறினார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/சுவாதி-கொலை-வழக்கு-ராம்குமாரை-15-நாள்-நீதிமன்றக்-காவலில்-வைக்க-உத்தரவு/article8806821.ece?homepage=true

  • தொடங்கியவர்

சிறையில் ராம்குமார் என்ன செய்கிறார்?

swathimurderaccesd.jpg

 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி பொறியாளர் சுவாதி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.இந்தக் கொலை தொடர்பான வழக்கில் பி.இ பட்டதாரியான ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது, ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைகு முயன்றதால் அவருக்கு நெல்லை, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று(செவ்வாய்)ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார் ராம்குமார்.

புழல் சிறையில் 'ஹாஸ்பிட்டல் பிளாக்' என்ற அழைக்கப்படும் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் சிறைக் காவலர்களின் கண்காணிப்பில் ராம்குமார் இருந்து வருகிறார். இந்த பிளாக்கில் எட்டுக்கு பத்து அளவுள்ள அறை ராம்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கழிவறையுடன் கூடிய அந்த அறையில் ராம்குமார், அமைதியாகவே இருப்பதாகச்  சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 மேலும், ராம்குமார் குறித்து கூறிய சிறைத்துறை வட்டாரங்கள், "சிறைக்கு வந்த பிறகு மதியம் வரை ராம்குமாரைச் சந்திக்க யாரும் வரவில்லை. அவரின் உடல்நிலையைச் சிறை மருத்துவர்கள் காலையில் சோதித்தனர். அவரின்  கழுத்தில் உள்ள காயங்கள் குணமாகி வருகின்றன. அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல் இன்னும் பிரிக்கப்படவில்லை. காலையில் ராம்குமாரை பரிசோதித்த டாக்டர், அவரிடம் வலி எதுவும் உள்ளதா என்று கேட்டதற்கு வலி இல்லை என்று மட்டும் சொல்லியுள்ளார். ராம்குமார், எதையோ பறிக்கொடுத்தது போல அவர் சோகமாகவே காணப்படுகிறார்" என்றனர்.

ராம்குமார் குறித்து சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ராம்குமார், ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றவர் என்பதால் அவர் சிறைக்குள்ளேயும் அதுபோல ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காகவே அவரைக்  கண்காணித்து வருகிறோம். அவரின் உடல் நிலை சரியானதும் வேறு அறைக்கு மாற்றப்படுவார். சிறையில் நலமாக இருக்கிறார்" என்றார்.

http://www.vikatan.com/news/crime/65890-what-swathi-murder-accused-ramkumar-did-in-prison.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.