Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்த்ததும்.. பிறந்தவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13528776_1150756078280788_66447302350339

 

மலர் ஒன்று

மலர்களுக்கு விளக்குப் பிடிக்கிறது..

காதலுக்கு காவலுக்கு அல்ல..

காவாலிகள் அவற்றை சிதைத்திடக் கூடாதின்னு. !!!

 

(அப்பப்ப இங்கால சில கிறுக்கல்களோடு வந்து  போவம்... நீங்களும் வந்து பார்த்து ரசிச்சுப் போங்க. )

 

  13516371_1150751361614593_62776362734488

வெண்ணிற மேகங்களுக்கு

சிவப்பு வர்ணம்  தீட்டும் மலர்கள்..

தமக்குள் பேசிக் கொள்வது

தீட்டுன்னு இதை உலகம் வெறுக்கக் கூடாதுன்னு..! tw_blush:

13439228_10157149385365055_3898701104377

பெண்ணுக்குள்

நிலவை புதைக்கும் உலகம்

தன்னை முழுக்காட்ட நினைத்தது மறந்து

நிலவு மூழ்கி எழுகிறது

என்ன கொடுமை இதுன்னு...!tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்பத்திலிருந்து?? 

நான் எழுத நினைக்கிறேன் ஆனாலும் வார்த்தை முட்டுதே?☺tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் முன்பும்  பல படங்களூடன்க  கூடிய  கதைகள் , கவிதைகள் எழுதியவர்தான். இப்ப அசை மீட்கின்றார் என நினைக்கின்றேன்....!

நன்றாக இருக்கு , தொடருங்கள், மங்கலகரமாய் மங்கையுடன் ஆரம்பித்திருக்கின்றீர்கள்...! tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

நன்றாக இருக்கு , தொடருங்கள், மங்கலகரமாய் மங்கையுடன் ஆரம்பித்திருக்கின்றீர்கள்...! tw_blush:

அதொன்னுமில்லை சுவிண்ணா...

முதற் காட்சியில் உள்ள காட்சியும் கன்னியும் மனதில் ஏற்படுத்திய கிளர்ச்சி வளர்ச்சியடைந்து குளிர்ச்சியான வரிகளாகி துளிர்ச்சியடைக்கின்றதன் விளைவு இதுன்னு வைச்சுக்கலாம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13315685_1013582748726982_41958008331711

சூரியனால் ஒளிரும் நிலாப் போல

எரியும் சுடரில் ஒளிரும் இவள் வதனம்

ஏக்கமெனும் இருள் சுமக்குது

மெழுகுன்னு காலம் உருகுதுன்னு..!

 

13439079_934513870037202_122494448678559

மலை முகடுகளோடு

வீட்டுக் கூரைகள்..

கடுப்பாகிப் போகின்றன

தாங்கள் எல்லாம் சின்னவீடுகளுன்னு. tw_blush:

13537775_10157150939600055_4956638066644

பறவைகளுக்கு குந்தக் கிளை இருக்கு

மனிதர்களுக்கு குந்தக் கதிரை இருக்கு

பறவைகளை தாங்கும் கிளை கலங்கவில்லை

மனிதர்களைக் காணும் மரம் கலங்குகிறது...

கால் தறியுமோ கதிரைக்கின்னு..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1910147_10152177183222944_67574894489096

பிறப்பில் சாவு உறுதின்னு
தெரிந்தும் இடையில்..
காதல் தோல்வின்னு
சாவில் விழுவதும்
படிப்பில் தோல்வின்னு
சாவில் விழுவதும்
கடன் தொல்லைன்னு
சாவில் விழுவதும்
ஏன் மதவெறின்னு
வெடிச்சுச் சிதறுவதும்
நிகழும் உலகில்
ஓர் இனத்தின் வாழ் உரிமைன்னு
உடல் வெடித்தோர்
இவ்வுலகில் சிலரேன்னு
ஈழத்துப் பரணி
நினைவில் வைக்க
பிறந்தது யூலை 5ன்னு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 03/07/2016 at 5:09 AM, nedukkalapoovan said:

அதொன்னுமில்லை சுவிண்ணா...

முதற் காட்சியில் உள்ள காட்சியும் கன்னியும் மனதில் ஏற்படுத்திய கிளர்ச்சி வளர்ச்சியடைந்து குளிர்ச்சியான வரிகளாகி துளிர்ச்சியடைக்கின்றதன் விளைவு இதுன்னு வைச்சுக்கலாம். tw_blush:

இதென்ன புதுமையடா? பெண்ணை கண்டு நெடுக்ஸுக்கு மனதில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கு .....வாழ்த்துக்கள்..:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 02/07/2016 at 9:09 PM, nedukkalapoovan said:

அதொன்னுமில்லை சுவிண்ணா...

முதற் காட்சியில் உள்ள காட்சியும் கன்னியும் மனதில் ஏற்படுத்திய கிளர்ச்சி வளர்ச்சியடைந்து குளிர்ச்சியான வரிகளாகி துளிர்ச்சியடைக்கின்றதன் விளைவு இதுன்னு வைச்சுக்கலாம். tw_blush:

உந்தக் கிளார்ச்சி வளர்ச்சி குளீர்ச்சி துளீர்ச்சி எல்லாம் ஒரு துனணவி தேடும் அறீகுறீகள் ராசா....! tw_blush:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13592347_10153709740592944_8712188196239

உன் கண்களில்  கவிதை படித்தேன்

உன் வதனமதில்  நிலவின் ஆய்வு செய்தேன்

உன் இமைகளில் கருமையின் நிறப்பிரிகை உணர்ந்தேன்

உன் விரல்களில் வாத்தியம் வாசித்தேன்

உன் உதடுகளில் இனிமையின் மீடிறன் கணித்தேன்

நீ...

பெண் அல்ல.. ஓவியமுன்னு..!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 05/07/2016 at 0:42 PM, suvy said:

உந்தக் கிளார்ச்சி வளர்ச்சி குளீர்ச்சி துளீர்ச்சி எல்லாம் ஒரு துனணவி தேடும் அறீகுறீகள் ராசா....! tw_blush:

 

ஏதோ நல்லது நடந்தால் வாழ்த்துவோம் ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முனிவர் ஜீ said:

ஏதோ நல்லது நடந்தால் வாழ்த்துவோம் ??

ஏ.. ஏ.. ஒரு மனுசன் சுதந்திரமா கற்பன செய்யவும் தடையா. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

ஏ.. ஏ.. ஒரு மனுசன் சுதந்திரமா கற்பன செய்யவும் தடையா. tw_blush:

உங்கள் கற்புக்கு ஒரு  அணைதான்  தானே கற்பனை ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.