Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவமுகாங்களும் இராணுவநினைவுத் தூபிகளும் அகற்றபடவேண்டும்!

Featured Replies

இராணுவமுகாங்களும் இராணுவநினைவுத் தூபிகளும் அகற்றபடவேண்டும்!

கிளிநொச்சி நகர அபவிருத்தி முகாமைத்துக் குழுகூட்டத்தில் வலியுறுத்தல்!! குளோபல் தமிழ் செய்தியாளர் - கிளிநொச்சி:-

இராணுவமுகாங்களும் இராணுவநினைவுத் தூபிகளும் அகற்றபடவேண்டும்!

கிளிநொச்சி நகரத்தில் நிலைகொண்டுள்ள இராணுவமுகாங்கள் அகற்றப்படுவதுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள இராணுவநினைவுத் தூபியும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எஸ்.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், எந்திரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பில் ஆராய்நதனர்.
 
கிளிநொச்சி நகரத்தின் அபிவிருத்தி இராணுவ வெளியேற்றம் அவசியமானது என்றும் நகரத்தின் முக்கிய இடங்கள் பலவும் இராணுவத்தின் கையில் உள்ளதாகவும் வளம் பொருந்திய, பொருளாதாரம் மிக்க இடங்கள், அழகான பகுதிகள் இராணுவத்திடம் உள்ளதாகவும் நகரத்தின் அபிவிருத்திக்கு இது பாரிய இடைஞ்சலாக காணப்படுகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்திருந்தார். 
 
இதேவேளை, கிளிநொச்சி நகரத்தின் டிப்போ சந்தியில் தென்னிலங்கையில் இருந்து  கொண்டு வரப்பட்ட பழமையான கற்களை அடுத்தி கிளிநொச்சி நகரத்தின் அடையாளத்தையும் வரலாற்றையும் திசை திருப்பும் விதமாக அமைத்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். 
 
இதேவேளை, கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபியை அகற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். உயர் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த இராணுவ நினைவுத் தூபி இளைய சந்ததியிடம் பகைமை உணர்வை தூண்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 
 
குறித்த இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் பிரதேச சபையினரின் ஒத்துழைப்பின்றி பூங்கா ஒன்று அமைக்கப்படுவதாகவும் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை இராணுவ நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தை நகர அபிவிருத்தி சபை ஏன் இராணுவத்தினருக்கு வழங்கியது? என்றும் அதற்கு யார் அனுமதி கொடுத்தது என்றும் கேள்வி எழுப்பட்டது. 
 
குறித்த பகுதியை பிரதேச சபையிடம் கையளிக்கவேண்டும் என்று கரைச்சிப் பிரதேச  சபை செயலாளர் தெரிவித்தார். கிளிநொச்சி நகரத்தில் பேருந்து நிலையம் ஒன்று இல்லாதிருப்பது பெரும் பலவீனம் என்று நகர அபிவிருத்தி சபையின் முன்வரைபில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கிளிநொச்சி அரச பேருந்து நிலையத்தை அறிவியல் நகருக்கு மாற்றுவது தொடர்பிலும் இங்கு முன் வைப்புக்கள் இடம்பெற்றன. 
 
கலாசார மண்டபம் அமைத்தல், பொதுநூலகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது. கிளிநொச்சி நகரத்தை நவீன நகரமாகவும், தனித்துவமான நகரமாகவும், அதன் அடையாளங்களை பாதுகாக்கும் வகையிலும் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இராணுவ நினைவுத் தூபி தொடர்பான பிரச்சினை எதிர்காலங்களில் தீரக்கப்படும் சூழ்நிலைகளும் உருவாகலாம் என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். 
 
குளோபல் தமிழ் செய்தியாளர் - கிளிநொச்சி

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133683/language/ta-IN/article.aspx

26 minutes ago, நவீனன் said:

கிளிநொச்சி நகரத்தின் அபிவிருத்தி இராணுவ வெளியேற்றம் அவசியமானது என்றும் நகரத்தின் முக்கிய இடங்கள் பலவும் இராணுவத்தின் கையில் உள்ளதாகவும் வளம் பொருந்திய, பொருளாதாரம் மிக்க இடங்கள், அழகான பகுதிகள் இராணுவத்திடம் உள்ளதாகவும் நகரத்தின் அபிவிருத்திக்கு இது பாரிய இடைஞ்சலாக காணப்படுகிறது

மிகவும் நியாயமான கோரிக்கைகள்!
சிங்கள-பௌத்த போர்க் குற்றவாளிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

28 minutes ago, நவீனன் said:

கிளிநொச்சி நகரத்தின் டிப்போ சந்தியில் தென்னிலங்கையில் இருந்து  கொண்டு வரப்பட்ட பழமையான கற்களை அடுத்தி கிளிநொச்சி நகரத்தின் அடையாளத்தையும் வரலாற்றையும் திசை திருப்பும் விதமாக அமைத்துள்ளதாக

மிகவும் நியாயமான கோரிக்கைகள்!
சிங்கள-பௌத்த போர்க் குற்றவாளிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மகா பொய் வம்சக் (මහා බොරු වංශය) காரர்கள் மகா பொய் வம்சத்தை எப்படி போலிக் கதைகளாலும், புனைவுகளாலும் இயற்றினார்கள் என்பதற்கு இது சான்று.

இந்த போலிப் புனைவுகளே கந்தரோடையிலும், கீரிமலையிலும், நயினாதீவிலும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளால், சிங்கள-பௌத்த இனமதவெறி அரச இயந்திரங்களால் அரங்கேற்றப்படுகின்றன.

34 minutes ago, நவீனன் said:

கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபியை அகற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

சிங்கள-பௌத்த இனமதவெறி கொண்ட போர்க் குற்றவாளிகளுக்கும், இராணுவப் பயங்கரவாதிகளும் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிகள் இடித்தழிக்கப்பட வேண்டும். 

நல்லிணக்கம் என்றால் இவை அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் மற்றும்  இராணுவ நினைவுத் தூபிகளும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் எஸ்.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், எந்திரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பில் ஆராய்நதனர்.

கிளிநொச்சி நகரத்தின் அபிவிருத்தி இராணுவ வெளியேற்றம் அவசியமானது என்றும் நகரத்தின் முக்கிய இடங்கள் பலவும் இராணுவத்தின் கையில் உள்ளதாகவும் வளம் பொருந்திய, பொருளாதாரம் மிக்க இடங்கள், அழகான பகுதிகள் இராணுவத்திடம் உள்ளதாகவும் நகரத்தின் அபிவிருத்திக்கு இது பாரிய இடைஞ்சலாக காணப்படுகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கிளிநொச்சி நகரத்தின் டிப்போ சந்தியில் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட பழமையான கற்கள் அடுக்கப்பட்டு கிளிநொச்சி நகரத்தின் அடையாளத்தையும் வரலாற்றையும் திசை திருப்பும் விதமாக அமைத்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபியை அகற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். உயர் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த இராணுவ நினைவுத் தூபி இளைய சந்ததியிடம் பகைமை உணர்வை தூண்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

கலாசார மண்டபம் அமைத்தல், பொதுநூலகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது. கிளிநொச்சி நகரத்தை நவீன நகரமாகவும், தனித்துவமான நகரமாகவும், அதன் அடையாளங்களை பாதுகாக்கும் வகையிலும் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இராணுவ நினைவுத் தூபி தொடர்பான பிரச்சினை எதிர்காலங்களில் தீரக்கப்படும் சூழ்நிலைகளும் உருவாகலாம் என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160737&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.