Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

மூவின மக்களும் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கதிர்காமம் உற்சவத்தினை முன்னிட்டு, யால காட்டினூடாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

ஆலய கொடியேற்றல் நிகழ்வு நாளை காலை கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் பள்ளிவாசலை வலம் வந்து, பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத தலைவர்களுடன் கதிர்காம ஆலய கப்புறாளையுடன் கொடியேற்றப்படும்.

இந்நிலையில், கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ரயில் மற்றும் பஸ்கள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பக்தர்களின் பாதுகாப்பு கருதி பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புனிதப் பிரதேசத்தில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

கதர்காமம் ஜூம்ஆப் பள்ளியின் கொடியேற்றம் நாளை மாலை கதிர்காமம் ருஹணு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி. குமாரகேயினால் முன்னெக்கப்படவுள்ளது.

இதேவேளை, சட்ட விரோத செயல்கள், வியாபாரம் மற்றும் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸார் விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/events/01/109948

  • கருத்துக்கள உறவுகள்

ஒரெ கொன்வூசனாய் இருக்கு!கொடியேற்றம்,தீர்த்தம்,பள்ளிவாசல் ,நிலமே,கப்புறாளை..... ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமலிருக்கு..........

எது எப்படியோ "கத்திர கம தெய்யோவுக்கு" அரோகரா

  • கருத்துக்கள உறவுகள்
கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் உற்சவத்தினை ஒட்டியதாக யால காட்டினூடாக சராசரி 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் வரை பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் உற்சவத்தினை ஒட்டியதாக யால காட்டினூடாக சராசரி 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் வரை பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

   

ஆலய கொடியேற்றல் நிகழ்வு இன்று காலை கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் பள்ளிவாசலை வலம் வந்து உள்ளே பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத பெரியார்களுடன் கதிர்காம ஆலய கப்புறாளையுடன் கொடியேற்றப்படும்.

ஓவ்வொரு நாள் இரவும் யானைகள் மற்றும் புராதன கலை கலாசார சம்பிரதாயங்களுடன் பெரஹரா வீதி உலாவரவுள்ளதோடு ஜூலை 19 ஆம் திகதி இரவு ரன்தோலி மஹா பெரஹராவும் இடம் பெறவுள்ளது. ஜூலை 20 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல் உற்சவம் நிறைவு பெறவுள்ளது. உற்சவத்தை முன்னிட்டு நாடு பூராவிலிருந்தும் ரயில், பஸ்களை விசேடசேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களமும் போக்குவரத்து சபையும் நடவடிக்கை எடுத்துள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர். இத்தோடு புனிதப் பிரதேசத்தில் விசேட அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்று தயாரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இதனூடாக பாதைகள் மற்றும் மாணிக்க கங்கையில் பக்தர்களுக்கு பாதுகாப்பாக நீராடுவதற்கான பிரதேசங்கள் என்பனவும் பெயரிட்டு காட்டப்பட்டுள்ளதோடு உயிர் பாதுகாப்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ காரியாலயமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கதர்காமம் ஜூம்ஆப் பள்ளியின் கொடியேற்றம் இன்று மாலை ஐந்து மணிக்கு கதிர்காமம் ருஹணு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி. குமாரகேயினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=160872&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, putthan said:

ஒரெ கொன்வூசனாய் இருக்கு!கொடியேற்றம்,தீர்த்தம்,பள்ளிவாசல் ,நிலமே,கப்புறாளை..... ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமலிருக்கு..........

எது எப்படியோ "கத்திர கம தெய்யோவுக்கு" அரோகரா

All-in-One 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.