Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமரர் செ.க.சிவப்பிரகாசம் ( சிற்பக்கலாநிதி)

Featured Replies

கண்ணீர் அஞ்சலி!

13627060_1107152352654010_45569140259117

 

அமரர் செ.க.சிவப்பிரகாசம் ( சிற்பக்கலாநிதி)
யாழ். மத்திய கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் இன்று இறைவனடி சேர்ந்தார். இவர் திருமதி. அன்னலட்சுமி ( முன்னைநாள் ஆசிரியை, யாழ். மத்திய கல்லூரி) அன்புக்கணவரும்
துசியந்தன்(யேர்மன்) Dr. அனுசியந்தன் அவர்களின் தந்தையுமாவார்.இலங்கையில் மிகப்பிரத்தி பெற்ற கலைஞரான இவரது சிற்பங்களில் ஒன்றாக சங்கிலியன் சிலைய்யுள்ளது. எமது நிறுவுனர் அதிபர் வண.ஜேம்ஸ் லின்ச் அவர்களின் சிலையும் இவராலேயே செய்யப்பட்டது. அண்மையில் யாழ். மணிக்௬ட்டு கோபுரத்தை சுற்றி நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலைகளையும் இவரே உருவாக்கினார்.யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் சார்பில் எங்கள் கண்ணீர்
அஞ்சலிகள்.

 

https://www.facebook.com/Jaffna-Oldboys-Association-of-Jaffna-Central-College-836056216430293/?fref=nf

  • தொடங்கியவர்

 

13590525_10153850665423823_4023030543240

13606519_10153850665713823_5569032494284

எனக்கு இன்றுவரையும் அழகாக படம் வரைய தெரியாவிட்டாலும் எனது ஆசான் இவர். இவருடன் ஒரு மறக்க முடியாத சம்பவம் ஒன்றும் உள்ளது.

எனக்கு எப்பவுமே சித்திர பாடத்தில் அக்கறை இருக்காது. யாழ் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன் - ஒளிச்சுத்தான். அதை வாசித்துக்கொண்டு இருக்கும்போது யாரோ (பக்கங்கள் ஞாபகமில்லை) 23 ம் பக்கம் பார் எண்டு பேனாவால் எழுதியிருந்தார்கள். நானும் 23 ம் பக்கம் போனால் 73 ம் பக்கம் பார் எண்டிருந்தது. இப்படியே தொடர்ந்து போக கடைசியில் வேலை மினக்கெட்ட  #&%/&&()/= என்று கெட்ட வார்த்தையில் எழுதியிருந்தது. என்னை அறியாமலே சிரித்துவிட்டேன். வாத்தியும் வந்து புத்தகத்தை பாத்தது. எண்ட தலை விதி - அவர் திருப்பிய பக்கத்திலும் இத்தனையாம் பக்கம் பார் என்றிருந்தது. வாத்தியும் அந்த அந்த பக்கங்களை தவறாமல் புரட்டிப் பாத்து கொண்டு போய் கடைசி பக்கத்தையும் பார்த்தார் - என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவருக்கோ தான் ஏமாந்து விட்டேன் என்ற அவமானம். இதை நீதான் எழுதியது என்று சொல்லி எனக்கு நாலு சாத்து சாத்திவிட்டு அப்பாவை கூட்டிவா என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்.

ஆனாலும் அடுத்தமுறை வகுப்பிற்கு பயந்து கொண்டே போன போது "ஜீவன் ஒருக்கா நீ இஞ்சால வா" எண்டார். பயத்துடன் திரும்ப அடிவிழுமோ என்ற யோசனையுடன் போனபோது "டேய் உன்னை மாதிரி நானும் நேற்று உந்த புத்தகத்தை பாத்து ஏமாந்திட்டன் - ரொம்ப அடிச்சிட்டானா" என்று தலையை தடவியபடி இனிமேல் வகுப்பிலே களவா புத்தகம் வாசிக்காதை என்கிறார்.

இதைவிட நாகரீகமா எந்த ஒரு ஆசிரியரும் மாணவனிடம் மன்னிப்பு கேட்க முடியாது. பின்னர் எமக்கிடையே ஒரு புரிந்துணர்வு. தவணை பரீட்ச்சைகளுக்கும் ரிப்போர்ட் தருவதுக்கும் இடையிலான  நாட்கள் சில இவர் வீட்டில் கழித்ததுண்டு. இவர் 2 ம் குறுக்குத்தெருவில் வசித்த ஞாபகம்.

சங்கிலியனின் சிலையை இவர் செய்தபோது நானும் சாந்தகப்பை எடுத்து இவருக்கு கொடுத்திருக்கின்றேன்.

ஒரு நிறைவான, மறக்கமுடியாத ஆசிரியர் இவர்.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ஐயாவுக்கு....!

  • தொடங்கியவர்

எனக்கும் சித்திர பாடத்திற்கும் வெகுதூரம்.. நான் யாழ் நூலகத்திற்க்கு போய்விடுவேன் அந்த நேரம்..

ஏன் தேவையில்லாத பிரச்சனை என்று..

கண்ணீர் அஞ்சலிகள்..:(

  • கருத்துக்கள உறவுகள்

நல்லை சார்ந்து இவரை சிறுவயதில் கண்ட அனுபவம் உண்டு. கொஞ்சம் கடுமையான ஆசிரியராக அறியப்பட்டிருந்தாலும் ஒழுக்கத்தைப் போதிப்பவராகவும்.. நல்ல ஆழமான படைப்பாற்றல் உள்ள ஒருவராகவும் மிளிர்ந்தவர். இவரின் இழப்பு ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்திற்குமான இழப்பாகும்.

கண்ணீரஞ்சலிகள் ஆசான். 

  • கருத்துக்கள உறவுகள்

எனது முன்னாள் யாழ். மத்திய கல்லூரியின்  ஓவிய ஆசிரியர் இவர்.
யாழ் நல்லூரில்..... ஆறுமுக நாவலர் சிலை நிறுவப் பட்ட போது,  அதனை யாழ் வீதி பலவற்றால் ஊர்வலமாக எடுத்துச் சென்ற போது....
மத்திய கல்லூரியின் சார்பில்... அலங்கார ஊர்தி வடிவமைக்கப் பட்டது....
அதற்குப் பொறுப்பாக இருந்த இவருடன், சேர்ந்து சிறுவர்களாகிய  நாமும் சில பங்களிப்பை வழங்கினோம்.
அந்த ஊர்தி பலரின் பாராட்டை பெற்றது, குறிப்பிடத் தக்கது.
அன்னாரின் மறைவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்  !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.