Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி

Featured Replies

ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி
 

article_1468491603-DSC_0687.jpg

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளின் வீர, வீராங்கனைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியது.

article_1468491991-IMG_4390.jpg

இன்றை ஆரம்ப நிகழ்வு வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய துணைத்தூதர்  ஆ.நடராஜன் கலந்துகொண்டார்.

article_1468494372-DSC_0678.jpg

இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களிலும் 258 மைதான மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தெரிவு, அரையிறுதி மற்றும் இறுதி என்ற ரீதியில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

article_1468494417-DSC_0681.jpg

வடமாகாணப் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டியில் பெரு விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்த நிலையில், தற்போது தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இந்தப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகள் தங்குவதற்கான இடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

article_1468494451-DSC_0670.jpg

 

article_1468494464-DSC_0669.jpg

வவுனியா மாவட்ட வீரர்கள் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும், வீராங்கனைகள் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், மன்னார் மாவட்ட வீரர்கள் சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும், வீராங்கனைகள் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும், முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் சென்.ஜோன்ஸ் கல்லூரியிலும், வீராங்கனைகள் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும், கிளிநொச்சி மாவட்ட வீரர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், வீராங்கனைகள் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/177045/ஆரம-பம-னத-வடம-க-ண-வ-ள-ய-ட-ட-ப-ப-ட-ட-#sthash.cM4g0cnp.dpuf

 

- See more at: http://www.tamilmirror.lk/177045/ஆரம-பம-னத-வடம-க-ண-வ-ள-ய-ட-ட-ப-ப-ட-ட-#sthash.cM4g0cnp.dpuf
  • தொடங்கியவர்

9வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்மதிய கல்லூரி 152புள்ளிகள் பெற்று சம்பியனானது இப்போட்டியில் யாழ்மத்திய கல்லூரி வீரர்களால் நான்கு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. 19வயதின் கீழ் முப்பாச்சல் நிகழ்ச்சியில் தே.செந்தூர்யன் 13.66M பாய்ந்து புதியசாதனையும் 4*400M அஞ்சல் ஓட்டத்தில் (3.34:6செக்கன்)19வயதின்கீழ் ஆண்கள் புதியசாதனையும் இதேபிரிவில் 4*100M ஓட்டத்தில் புதியசாதனையும் 21வயதின் கீழ் ஈட்டி எறிதலில் ம.சஞ்சீவன் 57.79M எறிந்து புதிய சாதனையையும் புரிந்தனர். தே.செந்தூர்யன் 19வயதின் சிறந்த சுவட்டு வீரராகவும் சிறந்த களவீரராகவும் ஒருவீரர் தெரிவானது சிறப்பானது ஆகும்

13724974_1112304888805423_29923666746690

13723923_1112304995472079_38002817396822

13738202_1112305115472067_21025466719368

13690978_1112305145472064_17070605820346

13738202_1112305192138726_17757416120324

https://www.facebook.com/Jaffna-Oldboys-Association-of-Jaffna-Central-College-836056216430293/

வாழ்த்துக்கள் மாணவமணிகளே. எதிர்காலம் உங்கள் கையில்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் தமிழ் மாணவர்களுக்கு... வெறுங்காலோடு.. புல்லில ஓட்டம். (இதற்கான செலவு பல பத்து மில்லியன் ரூபாய்கள்.)

தெற்கில சிங்கள மாணவர்களுக்கு...

7f102915c4cd1d7f867836d245b62264.jpg

7d402877ae06dfdeb8b8d310ffee2637.jpg

எது சர்வதேச தரமுன்னு அறியாத தமிழன்... முட்டாள்..! இதில.......................................... :rolleyes:

உலகத்தில எந்தப் போட்டிலடா.. புல்லில வெறுங்காலோட ஓட விடுறாங்கள். ஏன்டா தமிழங்களா.. உங்கட புல்லரிப்புக்கு... விசுவாசத்திற்கு ஒரு அளவே இல்லையா.

உந்த வேசம் போடுதலை விட்டிட்டு.. மாணவர்களை.. 21ம் நூற்றாண்டில் தடகள விளையாட்டிற்குரிய..  உலக தரத்திற்கு தயார்ப்படுத்துங்கடா வெண்ணைகளா. சிங்களவனுக்கும் ஹிந்தியனுக்கும் பயந்து வெருண்டது எசமான விசுவாத்தைக் காட்டினது காணும். tw_blush:

குறைந்தது யாழ் மத்திய கல்லூரி மைதானத்தையாவது.. சர்வதேச தரத்திலான..  தடகள போட்டிகளுக்கும்.. கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஏற்ற வகையில்..  தரமுயர்த்தி.. தமிழர்கள் சிங்களவனுக்கும் ஹிந்தியனுக்கும் நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும். tw_angry:

article_1468494372-DSC_0678.jpg

யாழ்ப்பாண தடகளப் போட்டி.

ஒருவர் காலணியோடு ஓட.. இருவர் வெறுங்காலோடா புல்லுத்தரையில் ஓடினம். நீங்க எல்லாம் ஒலிம்பிக்கில ஓடினாலும் ஓடுவீங்க. நல்ல தயார்ப்படுத்தல்கள்...???! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
சம்பியனானது யாழ். கல்வி வலயம்
 

article_1468930687-InsayyazakdujLEAD-Sma

 

வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலகைளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் 1795 புள்ளிகளைப் பெற்று யாழப்பாணக் கல்வி வலயம் சம்பியனாகியது.

வடமாகாண விளையாட்டுப் போட்டிகளின் பெரு விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தடகள மற்றும் மைதான போட்டிகள் கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில், புதிதாக மீளப்புனரமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதனடிப்படையில் பெருவிளையாட்டுப் போட்டிகளில் 1056 புள்ளிகளைப் பெற்றிருந்த யாழ்ப்பாணக் கல்வி வலயம் தடகள மற்றும் மைதானப் போட்டிகளில் 739 புள்ளிகளையும் பெற்று 1795 என்ற மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் சம்பியனாகியது.

இரண்டாமிடத்தை 1041 புள்ளிகள் பெற்ற வலிகாமம் கல்வி வலயமும், மூன்றாமிடத்தை 741 புள்ளிகள் பெற்ற வடமராட்சி வலயமும், நான்காமிடத்தை 719 புள்ளிகள் பெற்ற மன்னார் வலயமும் பெற்றுக்கொண்டன.

தொடர்ந்து இடங்களை கிளிநொச்சி -456, முல்லைத்தீவு 370, வவுனியா தெற்கு 310, துணுக்காய் - 256, தென்மராட்சி - 242, மடு - 188, வவுனியா வடக்கு - 114, தீவகம் 60 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டன.

இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வெற்றிபெற்ற வீரர்களுக்கான கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

- See more at: http://www.tamilmirror.lk/177458/சம-ப-யன-னத-ய-ழ-கல-வ-வலயம-#sthash.DnroUiCv.dpuf

 

 

 


பாடசாலை ரீதியில் மகாஜனா முதலிடம்
 

article_1468931006-LEAD-BoxMahhashvsd.jp

 

வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பாடசாலையாக வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி பெற்றுள்ளது. பெருவிளையாட்டு, தடகள மைதான போட்டிகளின் அடிப்படையில் அவ்வணி மொத்தமாக 228 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

வடமாகாண பெரு விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், மைதான மற்றும் தடகள போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் அதிக புள்ளிகளைப் பெற்ற பாடசாலைகளுக்கும் வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில் முதலிடத்தை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து முறையே 10 இடங்களுக்குள் வந்த பாடசாலைகளாக, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி - 152, மன்னார் சென்.ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயம் -127, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி - 126, அளவெட்டி அருணோதயக் கல்லூரி - 120, முல்லைத்தீவு பாரதி வித்தியாலயம் 119, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி 108, சென்.ஜோன்ஸ் கல்லூரி 82, ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் 80, பளை மத்திய கல்லூரி - 79 ஆகியன பெற்றுக்கொண்டன.

- See more at: http://www.tamilmirror.lk/177459/ப-டச-ல-ர-த-ய-ல-மக-ஜன-ம-தல-டம-#sthash.9HsBhCKJ.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.