Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தைப் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Featured Replies

இன்று தைப்பொங்கல். தமிழர்கள் கொண்டாடுகின்ற விழாக்களில் இந்த விழா மட்டுமே மிச்சமுள்ள ஒரேயொரு தனித் தமிழர் விழாவாக இருக்கிறது. இயற்கையே அனைத்தும் கடந்து நிற்பது என்கின்ற பகுத்தறிவுத் தத்துவத்தை பறைசாற்றும் விழாவாகவும் இது அமைகிறது.

தைப் பொங்கல் என்பது இந்துக்களின் விழா அல்ல. இது தமிழர்களின் விழா என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த விழா எந்த வித மதச் சார்புமற்ற ஒரு இனத்தின் விழாவாக அமைகிறது.

பொதுவாக இந்து மத விழாக்கள் அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு புராணக் கதை இருக்கும். அது ஒரு கடவுளையோ, அரக்கனையோ மையப்படுத்தி இருக்கும். அறிவியலுக்கு முரணானதாகவும் ஆபசமாகவும் இருக்கும். அப்படி எதுவும் தைப் பொங்கலுக்கு இல்லை என்பதை வைத்தே இது ஒரு மதம் சார்ந்த விழா இல்லை என்று உறுதியாக நம்பலாம்.

பொங்கல் விழாவை சூரிய வழிபாடோடு சுருக்கிப் பார்ப்பது மிகத் தவறான ஒன்றாகும். இது தமிழர்களின் ஒரு ஆண்டு கழிந்து மறு ஆண்டு தொடங்குவதை கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும்.

தமிழர்கள் ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து கணித்தார்கள். ஆரியர்கள் நான்கு பருவங்களாக மட்டுமே பிரித்து வைத்திருந்தார்கள். தமிழர்கள் கணித்த பருவங்கள் வருமாறு:

1. இளவேனில் ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

உலகின் நாகரீகம் மிக்க இனங்கள் இளவேனில் காலத் தொடக்கத்தை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடினார்கள். தமிழர்களும் அவ்வாறே கொண்டாடினார்கள். இளவேனிற் காலத்தின் தொடக்க நாளை கணித்து அந்த நாளை வரவேற்று பெரும் விழாவாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் சூரியனையும் தமது வாழ்க்கையோடு உடன் நின்ற மாட்டையும் போற்றினார்கள். ஒரு ஆண்டு கழிவது என்பது சூரியனோடு எவ்வளவு தூரம் சம்பந்தப்பட்டது என்பதையும் இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.

பொங்கல் நாளுக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. 1935ஆம் ஆண்டில் ஒன்று கூடிய தமிழ் அறிஞர்கள் தை முதலாம் நாளை திருவள்ளுவர் ஆண்டின் பிறப்பாக அறிவித்தார்கள். கிறிஸ்துவுக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்தார் என்பது அந்த அறிஞர்களின் கணிப்பாகும் அந்த அறிஞர்கள் தமிழர்களின் பண்டைய நூல்களை ஆராய்ந்து இந்த முடிவிற்கு வந்தார்கள். 1970ஆம் ஆண்டில் தமிழக அரசும் இதை ஏற்று சட்டபூர்வமான ஆண்டாக அறிவித்தது.

இந்த நாள்தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கு உறுதியான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இல்லை. ஆயினும் எப்படி யேசு கிறிஸ்துஇ முகம்மது நபி போன்றோர்களின் பிறந்த தினத்திற்கும் சரியான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாது வெறும் நம்பிக்கை மற்றும் பண்டைய நூல்களை ஆராய்ந்து ஒரு அண்ணளவான கணிப்பிலும் கொண்டாடப்படுவது போல் திருவள்ளுவர் ஆண்டையும் கொண்டாடுவதில் தவறில்லை.

அத்துடன் தைப்பொங்கல் நாள் குறித்து உள்ள சில குழப்பங்களையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சில ஆண்டுகளில் ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகின்ற பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15இல் கொண்டாடப்படுகிறது. லீப் ஆண்டு வருவதில் ஏற்படுகின்ற குழப்பமே இதற்கு காரணம். தமிழ் ஆண்டுக் கணக்கில் லீப் ஆண்டு என்கின்ற ஒன்று இல்லை. இதை சிலர் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்தி, தமது வருமானத்திற்கு ஏற்றமுறையில் பொங்கல் நாளை கணித்துவிடுகிறார்கள்.

ஆகவே தைப் பொங்கல் திருநாளை பார்ப்பனர்கள் கணிப்பதை தடை செய்ய வேண்டும்.

இன்றே தைப்பொங்கல் திருநாளும் திருவள்ளுவர் ஆண்டாகிய தமிழர் புத்தாண்டும் ஆகும். சில நாட்களுக்கு முன் புது வருடம் கொண்டாடிய நாம் மறுபடியும் எங்களின் புத்தாண்டான திருவள்ளுவர் புத்தாண்டையும் வரவேற்போம். 2007 ஆம் ஆண்டு பிறப்பதைக் கொண்டாடிய நாம் 2038 ஆம் திருவள்ளுவர் ஆண்டையும் கொண்டாடுவோம்.

தைப் பொங்கல் வாழ்த்துக்களோடு, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் சொல்வோம்.

  • தொடங்கியவர்

கள நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கள நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

வள்ளுவனின் பிறப்பையே ஜேசுவின் பிறப்போடு ஒப்பீடு வைத்துக் கணிக்க வேண்டிய நிலையில் தமிழர்களின் காலக் கணிப்பீடுகள் பலவீனமாகவும் போலியாகவும் உள்ளன உலகில்..!

பொங்கல் தமிழர் பெருநாள் என்று சொல்லிக் கொள்ளலாம்..ஆனால் இந்திய உபகண்டத்தில் வட இந்தியர்களும் இப்பெருநாளை மகர் சங்கராதி என்று கொண்டாடுவது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

பொங்கலை கிறிஸ்தவத் தமிழர்களோ தமிழ் பேசும் இஸ்லாமியர்களை கொண்டாடுவதில்லை என்பதை சபேசன் சார் உலகின் முன் கனவுக் கண்ணை மூடி கொஞ்சம் யதார்த்தக் கண்ணைத் திறந்து நோக்குதல் நன்று.

பொங்கல் உழவர் பெருநாளாகத்தான் அடையாளமிடப்பட்டுள்ளது. தமிழர் பெருநாளா சமகால அரசியல் தேவைகளுக்காக முன்வைக்கப்படுகிறது. தமிழர்களின் பெருநாள் தான் பொங்கல் என்பதற்கு எந்த வரலாற்றுச் சான்றும் தனித்துவமாக இல்லை. வழமையான கால இடைவெளிகளில் செருகிக் கொண்ட கற்பனைகளோடு இதுவும்..தமிழர்களினாகி பலவீன ஆதாரங்களோடு பலவீன உரிமை கோரலுக்கு இலக்காகி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கட்டுரையின் உள் நோக்கம் அது ஒரு இந்துப் பண்டிகை என்பதாகக் காட்ட கூடாது என்பதில் தான் இருக்கின்றது என்பது புலனாகின்றது. சூரியவழிபாட்டு முறை என்பதை ஏற்றுக் கொள்ள அவர் மனம் விரும்பவில்லை என்பது புலனாகின்றது. சூரிய தலைவனாக தேசியத் தலைவர் போற்றப்படுவது கூட, இயற்கைக்கு கொடுக்கும் ஒரு முக்கியத்துவமாகும். இது தமிழரின் தனித்துவம் மட்டுமல்ல, குறிப்பாக தமிழ்மக்களின் வழிபாட்டு அம்சங்களில் ஒன்று.

மறுபக்கம் இது தமிழரின் பண்டிகை இல்லை என்ற நிருபிக்க நெடுங்காலபோவான் முயற்சிக்கின்றார். வட இந்தியர்கள் கொண்டாடுவதற்காக அது அவர்களுக்கு உரித்தானது கிடையாது. தமிழர்கள் வருட இறுதியில் பயிர் செய்து அறுவடை செய்த பின்னர் செல்வத்தோடு வரும் பண்டிகை இது. ஆனால் வட இந்தியாவில் மார்கழி மாதம்,தை மாதம் என்பது குளிர்கலந்த காலப்பகுதி. எனவே அதை அவர்கள் சிறப்பு நாளாக கொண்டாடி இருப்பார்கள் என்பதற்குச் சர்ததியமல்ல. மற்றய பண்டிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட இதற்கு அவர்கள் கொடுக்காத போதே இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இம்முறை மகா சங்கராந்தி தினமும் பொங்கல் திருநாளும் ஒரே நாளில் கொண்டாடப்படவில்லை என்று படித்தேன். மகா சங்கராந்தி தினம் நேற்றும் பொங்கல் இன்றும் கொண்டாடப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மதன். சங்கராந்தி எதற்காகக் கொண்டாடுகின்றார்கள் என்ற விபரம் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை மகா சங்கராந்தி தினமும் பொங்கல் திருநாளும் ஒரே நாளில் கொண்டாடப்படவில்லை என்று படித்தேன். மகா சங்கராந்தி தினம் நேற்றும் பொங்கல் இன்றும் கொண்டாடப்பட்டது.

காலக்கணிப்பீடுகளில் உள்ள சில சிறிய வேறுபாடுகளால் பொங்கல் வழமையை விட்டுப் பிந்தியுள்ளது. மற்றும் படி மகர சங்கராதியும் பொங்கலும் உழவர் பெருநாளாக (அறுவடைப் பெருநாள் என்றும் சொல்லப்பட்டுகிறது) சூரிய வழிபாடு - நன்றி செலுத்துதல் சார்ந்து பெரிதும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

-----

பொங்கல், சங்கராந்தி : குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

13 ஜனவரி 2007

ஆதாரம்: வெப் உலகம்

அறுவடைத் திருநாளாம் பொங்கல், மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகிழ்ச்சியை விளக்கும் பண்டிகைகளாக பொங்கல், சங்கராந்தி ஆகியவை விளங்குவதாகவும், நாட்டின் உணர்வுப் பூர்வமிக்க பண்டிகைகக்ளாக இவை திகழ்வதாகவும் கூறியுள்ளார். இந்த நாளில் முன்னேற்றத்தை நோக்கிய உழைப்பு தொடரட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில், உழவுத் தொழில் மற்றும் விவசாயம் நாட்டின் கலாச்சாரத்துடன் தொடர்புடையது என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் வகையில் அறுவடைத் திருநாள் திகழ்வதாகக் கூறியிருயிருக்கும் பிரதமர், நவீன யுகத்தை நோக்கி நாடு முன்னேறிச் செல்வதற்கு இந்த பண்டிகைகளின் முக்கியத்துவம் அவசியமாகிறது என்றார்.

தென்னிந்தியாவில் 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, அறுவடையை சிறப்பாக்கிய இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடைபிடிக்கப்படுவதாகும் என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

சங்கராந்தி எதற்காகக் கொண்டாடுகின்றார்கள் என்ற விபரம் தெரியுமா?

அது குறித்து எனக்கு விளக்கமாக தெரியவில்லை தூயவன். இந்திய நண்பர்களை தான் கேட்க வேண்டும். மற்றது ஐயப்பனை வழிபடுபவர்களை மகரசங்கராந்தியை கொண்டாடுவார்கள் போலுள்ளது உறுதிபட தெரியவில்லை. இணையத்தில் இது குறித்த விளக்கங்கள் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தை பொங்கல் திருநாளை கிறிஸ்தவர்களோ,முஸ்லீம்களோ கொண்டாடியதாக யாராவது கேள்விப்பட்டீர்களா?அவர்களிலும் விவசாயம் செய்பவர்கள் இருக்கின்றார்கள் தானே?என்னைப் பொறுத்தவரைக்கும் தைப்பொங்கல் இந்துக்கள் பண்டிகையே.இப் பண்டிகைக்கான ஒரு சில நடைமுறைகள் இதர மதங்களுக்கு ஒத்து வரமாட்டாது.இதே போல் ஆங்கில வருடப்பிறப்பையோ அல்லது நத்தார் பண்டிகையையோ அநேகமான இந்துக்கள் கொண்டாடுவதில்லை.தைப்பொங்கலை தமிழர்திருநாள் என சொல்லுவதற்கு காரணம் ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்காய் இருக்காலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

புராணக்கதை இல்லாவிட்டால் அது இநற்துப் பண்டிகையல்ல என்ற சபேசனின் வாதம் கேலிக்குரியது. புராணக் கதைகள் என்பது படிப்பறிவில்லாத மக்களுக்கு கொண்டு செல்லும் விதத்தில் அமைந்ததாகவே உணரப்படுகின்றது. இராமகிஸ்ணனுரும் கூட மக்களுக்கு புரிவதற்காக கதை வடிவில் வழிபாட்டு முறையைக் கொண்டு சென்றார்.

பிள்ளையாருக்கு நிறையப் புராணக்கதைகள் இருக்கின்றன. மோதகம் என்றால் அன்பு... என்று ஒவ்வொரு அங்கங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தம் வைக்கப்பட்டே திருஸ்டிக்கப்பட்டது. அப்படியிருக்க இரண்டும் குழப்பாக இருக்கின்றதே? ஏனென்றால் பாமருக்கு புரிய வைக்க கதை மூலமும், படித்தவர்களுக்கு வியாக்கியனத்தோடும் இறை வழிபாடு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அதனால் தான் ஞானிகளும், முனிவர்களும் உருவவழிபாடு செய்வதில்லை.

இடையில் ஓன்று, இரண்டு கதைகளை வைத்துக் கொண்டு, குதர்க்கம் கதைப்பவர்களுக்குத் தான், ஒன்றும் புரிவதில்லை.

தைப்பொங்கல் தமிழரின் திருநாள். சைவமும் தமிழும் எவ்வாறு பிரிக்க முடியாததோ, அவ்வாறே வழிபாட்டு முறைகளும் சைவத்தோடு பிரிக்க முடியாதது.

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டில் பல தேவாலயங்களிற்கு முன்னால் கிறிஸ்தவர்கள் பொங்கலிட்டு பொங்கலை கொண்டாடினார்கள்.

தமிழ்நாட்டில் பல தேவாலயங்களிற்கு முன்னால் கிறிஸ்தவர்கள் பொங்கலிட்டு பொங்கலை கொண்டாடினார்கள்.

இதுல என்ன அதிசயம்? கிறிஸ்தவர்கள் விவசாயம் செய்தால் அவர்களும் நன்றி செலுத்துவதில் தப்பு இல்லை தை பொங்கல் திருநாள் தமிழர் நாளே தவிர வெறிபிடித்த இந்துதிருநாள் இல்லை இதை நான் சொன்னா ஒன்ரும் அறியா சிறுவான் ஏதோ பிற்றுகிறான் என்று என்னை கிழ்பக்கம் அனுப்ப ஏதும் அறியா மூடர்கள் அம்புலன்ஸ்க்கு போன் போடுகிறார்கள்.........

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ்சையும் தான் எங்களின் சனம் கொண்டாடுதுகள். அதற்காக அன்று யேசு பிறக்காத நாளா? இல்லை. யேசு பொது ஆளா? தைப்பொங்கலைக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து தான் அது எம்மதம் சார்ந்தது என்று முடிவெடுக்க வேண்டிய தேவையில்லை. ஏன் சபேசன் முஸ்லீம்கள், பொங்குவதில்லையாமே

வினித் உண்மையிலேயே நீங்கள் கீழ்பாக்கம் போக வேண்டிய நாள் தான். கிறிஸ்தவர்கள் விவாசாயம் செய்தால் கொண்டாட வேண்டும் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுமா கொண்டாடுகின்றார்கள். சில வெறிபிடித்த ஆட்கள் தங்களுக்கு ஏற்றது போல சம்பிர்தாயங்களை மாற்றப்பார்ப்பது கூட மண்டைக் கோளாறாகத் தான் கருத் முடியும்.

நான் சொன்னது தமிழர் பற்றியத்Hஊ( கிறிஸ்தவர்களாக இருந்தாலும் தமிழர் தானே?)

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கலி தமிழனின் பாரம்பரிய பண்டிகை என்கின்றீர்கள். ஆனால் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டது இற்றைக்கு 400 ஆண்டுகள் கூட வராது. அப்படியிருக்க எவ்வாறு கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டதை வைத்து மதச்சார்பின்மை இல்லை என்று சொல்ல முடியும்.

  • தொடங்கியவர்

தமிழர்கள் இந்து ஆலயங்களில் கிறிஸ்துவின் பிறப்பை அர்ச்சனை செய்து கொண்டாடுகிறார்கள் என்று தூயவன் சொல்வது எனக்கு புதுமையாக இருக்கிறது.

தைப்பொங்கலி தமிழனின் பாரம்பரிய பண்டிகை என்கின்றீர்கள். ஆனால் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டது இற்றைக்கு 400 ஆண்டுகள் கூட வராது. அப்படியிருக்க எவ்வாறு கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டதை வைத்து மதச்சார்பின்மை இல்லை என்று சொல்ல முடியும்.

தாலிகட்டுவது தமிழ் கிறிஸ்தவ்ர்களிடமும் இருக்கு தானே?

அதுவும்???????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவர் எப்படி வாதிட்டாலும் தைப்பொங்கல் என்பதின் மறுபெயர் உழவர் திருநாள்.இயற்கையை நம்பி வாழும் உழவர்கள்(விவசாயிகள்)சூரியனுக

  • தொடங்கியவர்

இந்து மதத்தில் சொல்லப்படுகின்ற சூரியக் கடவுள் வேறு. சூரியதேவன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வந்து கொண்டிருப்பதாக இந்து மதம் நம்புகிறது. (இந்த சூரியக் கடவுள் கிரேக்கத்தில் இருந்து கடன் வாங்கப்பட்டது)

இந்த சூரியக் கடவுளுக்கு என்று புராணக் கதைகள், வழிபாட்டு முறைகள், மந்திரங்கள் என்று எல்லாம் உண்டு.

ஆனால் இந்த சூரியக் கடவுளுக்கும் பொங்கலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இந்து மதம் இல்லாத சூரியக் கடவுள் பற்றி சொல்கிறது.

தமிழர்கள் வானத்தில் தெரிகின்ற சூரியன் பற்றியே பொங்கலில் பேசுகிறார்கள்.

பொங்கல் சூரிய வழிபாட்டு நாள் என்று யாரும் சொல்வது இல்லை.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் என்றுதான் சொல்கிறார்கள்: அடுத்த நாள் அதே மரியாதையோடு மாட்டுக்கும் நன்றி சொல்கிறார்கள்.

ஆகவே இது தமது வாழ்வாதாரத்திற்கு அடிப்படைத் துணையாக இருந்தவைகளை புத்தாண்டில் நினைத்துப் பார்க்கின்ற நாள். நன்றி சொல்லி கொண்டாடுகின்ற நாள். புத்தாண்டை வரவேற்கின்ற நாள். அனைத்து மதத்தவருக்கும் பொதுவான ஒரு தமிழர் தினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அவர்களே!நித்திரையாய் இருப்பவனை எழுப்பலாம்.ஆனால்நித்திரை போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.புரிஞ்சவனுக்கு சொல்லத்தேவையுமில்லை புரியாதவனுக்கு சொல்லி பிரயோசனமில்லை.விதண்டாவாதம் பிடிப்பவர்களிடம் என்னத்தை பேசி என்னத்தை சொல்லி........வேண்டாம் சோலியப்பா.கனக்க கதைக்க வெளிக்கிட கள்ளுக்கொட்டில் ............... முட்டாள் தனம் எண்டு நக்கல் அடிக்கிறாங்களப்பா. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

2000ம் ஆண்டு பிறந்தபொது அதை கொழும்பில் உள்ள இந்துக் கோவில்களில் கொண்டாடினார்கள். ஏன் இப்பவும் கூட நம்மவர்கள் ஆங்கிலப்புதுவருடம் பிறக்கின்ற போது கோவிலில் பிரத்தியோக வழிபாடு செய்வதை அறியலாம். இதுலுள்ள சரிபிழை பற்றிய கருத்து பிறிதொரு விவாதம். ஆனால் இப்படி நடக்கின்றது.

மேலும் கிறிஸ்தவர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு அதைப் மதச்சார்பின்மையற்றதாக்க வேண்டிய தேவையில்லை. மற்றவன் வந்து தான் இது யாருடைய அடையாளம் என்பதைச் சொல்ல வைக்க வேண்டிய தேவையும் இல்லை.

வினித் அண்ணா

இதை பகுத்தறிவுவாதிகளிடம் கேளுங்கள். தாலி கட்டுவது ஆரியர் கொண்டு வந்தது என்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களும் செய்தால் அது மதச்சார்பற்றதாம். ஆக தாலி கட்டுவது பிழை இல்லை என்று சொல்ல வருவார்கள்.

( தாலி கட்டுவது பற்றிய முடிவு என்பது அவரவர் எடுக்க வேண்டியது. தாலி அடிமைச் சின்னம் என்று கதை விடுபவர்கள் கட்டாமல் இருக்கலாம். விரும்பினவர்கள் கட்டலாம். யாரையும் எவரும் வற்புறுத்தவில்லை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தைப்பொங்கல் சூரியனுக்கு,மாட்டுப்பொங்கல் மாடுகளுக்கு,தமிழ்வருடத்தில் தை முதலாந்திகதி உழவர் திருநாள்.விடியவிடிய ராமர் கதை விடிஞ்ச பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை?

  • தொடங்கியவர்

ஜனவரி 1தான் இந்துக்களின் புத்தாண்டு.

ஏறக்குறைய அனைத்து இந்துத் தமிழர்களும் எண்கணிதத்தை நம்புகிறார்கள். ஆங்கில மாதம், திகதி, ஆண்டுகளை வைத்து எண் கணிதத்தை செய்கிறார்கள். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு கோள் அதிபதி என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஆகவே எண்கணிதத்தின் மூலம் மதரீதியாக ஆங்கில ஆண்டுக் கணக்கை ஏற்றுக்கொண்ட பிற்பாடு, ஜனவரி 1இல் கோயில்களுக்கு போவதிலும், ஆண்டு பலன் சொல்வதிலும் என்ன ஆச்சரியம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியாயின் சித்திரை வருடத்தை பற்றிய உங்கள் தத்துவம் என்ன?தமிழ் சிங்கள புதுவருடம்.

  • தொடங்கியவர்

சித்தரைப் புத்தாண்டு சாலிவாகனன் என்ற வட நாட்டு மன்னனால் கொண்டுவரப்பட்ட ஒரு ஆண்டு முறை என்று அறிகின்றேன். மேலதிக விபரங்களை படித்தபின் தருகிறேன்.

அதற்காக சித்தரைப் புத்தாண்டை கொண்டாடாதீர்கள் என்றும் நான் சொல்லப்போவதில்லை. ஜனவரி 1ஐ கொண்டாடுவது போல் அதையும் கொண்டாடிவிட்டுப் போங்கள்.

ஆனால் அது தமிழ் புத்தாண்டு அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.