Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ?

Featured Replies

புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ?

சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து விலக்கி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவம் வாகரையை நோக்கி முன்னேறும் பொழுது புலிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப் பகுதியில் இருந்து தங்கள் படைகளை விலக்கி கொள்வார்கள். வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தால் அரசியல் ரீதியாக புலிகள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதில் முக்கியமானது கிழக்கிலங்கை - கருணாவின் வசம் செல்வது. கருணா பிரச்சனையின் ஆரம்பகாலங்களில் கருணா பிரச்சனையே புலிகளின் ஒரு ராஜதந்திரமோ என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதற்கு காரணம் கருணா மீதான நம்பிக்கை என்பது ஒரு புறம் இருக்க, கிழக்கு இலங்கை புலிகளின் பலவீனமான பகுதியாகவும் இருந்து வந்தது. இதனை இராணுவ ரீதியாக கைப்பற்றுவது புலிகளுக்கு சவால் மிகுந்த காரியம். கிழக்கு இலங்கையை அரசியல் ரீதியாக வெற்றி கொள்வது தான் புலிகளுக்கு சரியான உத்தியாக இருந்திருக்கும்.

ஒட்டுமொத்த தமிழருக்கும் ஒரே பிரதிநிதியாக புலிகள் தங்களை முன்நிறுத்தியதற்கு எதிராகத் தான் கருணாவை இலங்கை-இந்திய உளவு நிறுவனங்கள் புலிகளுக்கு போட்டியாக உருவாக்கின. கிழக்கிலங்கை மக்களுக்கும், வடக்கு பகுதி மக்களுக்கும் காலங்காலமக நிலவிய பிரச்சனையை உளவு நிறுவனங்கள் இதற்கு பயன்படுத்திக்கொண்டன. இராணுவ ரீதியாக இவர்களின் இந்த முயற்சி எடுபடவில்லை என்றாலும் அரசியல் ரீதியாக இதனை சாதித்துக் கொள்ள தற்பொழுது முனைகின்றனர்.

புலிகள் வாகரையை இழப்பதாலோ, கிழக்கு இலங்கையில் கருணா தலைமையில் ஒரு மொம்மை அரசாங்கம் அமைவதாலோ புலிகளுக்கு இராணுவ ரீதியில் பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை, என்றாலும் அரசியல் ரீதியாக இதனால் புலிகளுக்கு நிறைய நிர்பந்தங்கள் ஏற்படும்.

புலிகள் இராணுவ ரீதியில் மிகவும் பலவீனமாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிற நிலையில், புலிகளின் நடவடிக்கைகளும் இந்த சந்தேகத்தை வலுவாக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் புலிகளின் உண்மையான பலம் குறித்த கேள்விகள் எழுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பூரை புலிகள் இழந்த பிறகு கூட இவ்வாறு ஊடகங்கள் எழுதிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பூரை கைப்பற்றிய பிறகு ஆனையிறவை நோக்கி சிறீலங்கா இராணுவம் நகரக்கூடும் என்றும், ஆனையிறவை கைப்பற்றியப் பிறகு அந்த பலத்துடன் பேச்சுவார்த்தைக்கு சிறீலங்கா செல்லும் என்றும் ஊடகங்களில் செய்திகள் காணப்பட்டன. DBS.ஜெயராஜ் கூட இது போன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் ஆனையிறவை நோக்கி முன்னேறிய இராணுவத்தை புலிகள் முகமாலையில் தாக்கி அவர்களுக்கு மிகக் கடுமையான தோல்வியை ஏற்படுத்தினர். அதன் பிறகு சில மாதங்கள் குறைந்திருந்த "புலிகள் பலவீனமடைந்து விட்டனர்" என்ற வாதம் இப்பொழுது மறுபடியும் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.புலிகள் பலவீனமடைந்து விட்டனரா என்பது புலிகளை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை.

புலிகள் இது வரை தங்கள் பலத்தில் சிறிய அளவு கூட பயன்படுத்த வில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் தன்னுடைய விமானப் படையின் முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. இராணுவச் செலவு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. புலிகளை அழிக்க இது தான் சரியான சமயம் என்பதாக சிறீலங்கா ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கிழக்கு பகுதியை கைப்பற்றியப் பிறகு வடக்கு பகுதியையும் கைப்பற்றுவோம் என்கிறார் சிறீலங்கா இராணுவ தளபதி போனஸ்கா.

நிறைய இடங்களை கைப்பற்றி அதனை தக்க வைக்க கூடிய வலிமை சிறீலங்கா இராணுவத்திற்கு உள்ளதா என்பதை எதிர்வரும் நாட்கள் தெளிவு படுத்தும்

புலிகளின் யுத்தம் குறித்து எங்கோ படித்த சில வரிகள் இவை.

கொரில்லா யுத்தம் குறித்து மாவோ இவ்வாறு கூறுகிறார்

"the enemy advances, we retreat; the enemy camps, we harass; the enemy tires, we attack; the enemy retreats, we pursue."

புலிகளின் கடந்த கால யுத்த முறை இவ்வாறு தான் இருந்தது. the enemy advances, we retreat என்ற நிலையில் இருந்து தான் முன்னேறி ஆனையிறவு உட்பட பல இடங்களை கைப்பற்றினர்.

கடந்த காலங்களுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இம்முறையும் புலிகளால் தாங்கள் இழந்த இடத்தை கைப்பற்ற முடியுமா ?

புலிகள் பதில் தாக்குதல் நடத்தும் வரை அவர்களின் உண்மையான பலத்தை யாராலும் கணிக்க முடியாது

http://thamizhsasi.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் ஹெல உறுமையத் தலைவர் அத்திரதேனிய ரத்தினதேரர் புலிகளுக்கு பொலிஸ்நிலையத்தைத் தாக்கப்பலமில்லை என்று அறிக்கை விட்டார். சிங்கள அரசாங்கங்கமும் இடையிடையே புலிகளின் பலம் குறித்து நக்கல் தொனியில் அறிக்கைகள் விடுகின்றன. உண்மையில் இது ஏன் என்றால் புலிகளைச் சீண்டுவதன் மூலம் யுத்தநடவடிக்கை ஒன்றை அவர்களாகவே ஆரம்பிக்க வைப்பது என்ற நிலைக்குத் தான். பொதுமக்கள் மீதான தாக்குதல் கூட அந்த வகை தான். செஞ்சோலை, வாகரை, மன்னார் படுகொலைகள் புலிகளைச் சீண்டி அவர்கள் யுத்த உடன்படிக்கை இல்லை என்று சொல்ல வைக்க வேண்டும் என்ற சிந்தனையைச் செயற்படுத்த வைக்க மனைகின்றன.

இன்று யுத்தம் நடப்பது போலத் தொனி இருந்தாலும், யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கின்றது. யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இருக்கின்றது. நாளைக்கு ஏ9 ஜத் திறந்து எரிக் கொல்கைம் பேச்சுவார்த்தை பற்றி அறிவிப்பு விட்டாலும், அது நடக்க கூடும். எனவே எம் மக்களுக்குள்ள ஆதங்கம் புரிக்ன்றது. தலைவர் சொல்லியும் ஏன் நடவடிக்கை ஏதும் ஆரம்பிக்கவில்லை என்று. ஆனால் ஒரு விடயம் என்னவென்றால் புலிகளின் இராணுவப் பலத்தை பரிட்சிக்க எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாதபோத, இவ்வாறன கட்டுரைகளால் மக்களின் மனங்களைச் சோர வைக்காதீர்கள். அத்தோடு யுத்தத்தைத் தொடங்க வைக்க முயலும் சிங்கள அரசின் செயற்பாட்டுக்குத் துணையும் போகாதீர்கள்.

எது என்ன நடந்தாலும் வென்றாக வேண்டிய தேவையே எமக்கு உண்டு. அது பற்றி மட்டுமே சிந்திப்போம்.

இவ்வாறான கட்டுரைகள் எழுதியவர்கள் புலிகளினது

பலத்தை அவர்களது இராணுவ உத்திகளை போரியல் தந்திரங்களை புரியதவர்களாகத்தான்

இருப்பார்கள் இருக்க முடியும்.

விடுதலைப்புலிகள் தமது ஆழுமையை ஆதிக்கத்தை ஆழமாக அகல கால் ஊன்றி

கிழக்கினில் விசலமாக விருட்சம் பெறுவார்கள் என்பதே அசைக்க முடியாத உண்மை .

அவர்களுணுடய கடந்தகால போரியல் சான்றுகள் இவற்றை பறை சாற்றி நிற்கின்றன.

அரசபடைகளும் அதன் அடிவருடி ஊடகங்களும் திட்டமிட்டு மக்களை குழப்பவும் புலிகளை சீண்டவும்

இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை காட்டாறு போல் கட்டவிழ்த்து விடுவதை

தற்பொழுது கண்டு வருகின்றோம்.

அதில் இருந்தே பல உண்மைகள் புலப்படுகிறது .

தற்கால அழிவுகள் மக்களின் இழப்புக்களை சாதகமாக பயன் படுத்தி

இவ்வாறான பெரும் கட்டுகதைகளையும் தமது எண்ணத்திற்கேற்ப வந்தபடி

எழுதி கொட்டுவதிலும் இருந்தே அந்த அரச அடிவருடிகளின் ஈன செயல்

அவர்கள் எதிர் பார்க்கும் விடயம் தெரிகிறதல்லவா?

புலிகளின் படையணிகள் கிழக்கில் பல பகுதியை தமது ஆளுகைக்குள்

கொண்டு வந்த போது இதே அரசு என்ன சொன்னது?

இதனை இந்த கட்டுரை ஆய்வெழுதியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

அதுவிடயமாக துருவி ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.

மாறாக தமிழின விடுதலைக்காக எழுந்த புலிணயிகள் பாதியில்

தமது பயணத்தை திசை திருப்பி அந்த வடக்கு.கிழக்கு இணைப்பை

மாற்றாரின் கைகளில் கொடுப்பார்கள் அல்லது ஆளுகைக்குள் விடுவார்கள் என்பது

சாத்தியமாக ஒரு விடயம். அது நடைபெற போவதுமில்லை.

எனவே இது போன்ற ஒரு நிகழ்வ சத்ஜெய.ஜெயசிக்குறு. போன்ற நடவடிக்கை ஊடாக வன்னியில்

படைகளல் அகல கால் பதித்தபோது இதை விட படுமோசமாக பரப்புரை விசன உரை புலிகள் மீது வீசப்பட்டது

ஆனால் பின்னர் நடந்தேறிய நிகழ்வுகளின் ஊடு யாவும் தவிடு பொடியாகியதும்.

புலிகள் முன்னரை விட பல மடங்கு பலம் வாய்ந்திருந்ததர்கள் என்பதையும் கண்டு

உலகே வியந்தது.

பல அரச படை உயர் அதிகாரிகள் மாற்றப் பட்டார்கள் பலர் பணியில் இருந்து

நீக்கப்பட்டர்கள். ஏன் இதை அந்த அரசு செய்தது...???

எனவே மக்களே தற்போது புலிகளின் பல புதிய படையணிகளின் பிறப்பும். ஈருடக படைபிரிவின் அதிவேக தாக்குதலும்

இனி ஏறி ஆட போகும் களங்களில் ஒலிக்கும் என்பது உறுதி.

எனவே இவ்வாறான குழப்ப காறரின் அல்லது திசை திருப்பு காரரின் கட்டுரைகளையோ அல்லது

செய்திகளையோ படித்து உங்கள் மனதில் சோர்வு நிலை உண்டாக்காதீர்கள்.

இனி வரும் காலங்கள் தனியே படைகளை மட்டும் குறி வைக்காது தேச குழுக்கள் மீதும் பரந்து

விரிந்து தாவும் என்பதும். காட்டு தீயாய் ஒரு பகை காடே அழியும் என்பதும் அத்தோடு விடுதலை ஒளி

உதயமாகும் என்பதும் உறுதி.

இது தற்கால உல்லாச பயணிகள் சுற்றுல விடுதியாகவிட்டது

அவர்கள் தான் இவ்வாறு எழுத முடியும்.

இவ்வாறான கட்டுரைகள் வெளிவருவதை தவிர்க முடியாது

ஆனால் புலிகள் தற்போது ஒரு நிர்பந்தத்தில் உள்ளார்கள்

கிழக்கில் தமது அகல கால் ஊன்றலை காட்டியெ தீரவேண்டும்

அவ்வாறு செய்யம் போதுதான் தமது பலத்தையும் அந்த மக்களின்

கேள்விக்கான பதிலையும் நிரவிட முடியும்.

-வன்னி மைந்தன் -

Edited by vanni mainthan

ஸ்ரீலங்கா அரசின் இன்றைய கலக்க நிலையே இவ்வாறான தாக்குதல்கள். வி.புலிகளின் மௌனம் அவர்களை குலைநடுங்க வைத்தருப்பது என்னவோ உண்மை. புலிகள் ஒருங்கினைப்பையும்,அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராவதையும் குளப்பியடிப்பதே இவ்வாறான தாக்குதல்களின் முக்கிய நோக்கம். இந்த நோக்கத்தை அறிந்தே புலிபதுங்குகின்றது பாய்வதற்கு தன்னை தயார்படுத்துகின்றது. சிறிய மீன்களை விட்டு சுறாபிடிப்பதற்கான ஆயத்தம். சிங்களம் அறியும் ஏதோ பெரிதாக செய்யவே இந்த மௌனம் என்பது. இத்தனை சீண்டல்கள் வலிந்து ஒரு போருக்கு இழுத்து குறைந்த பட்சம் ஓரிரு புலிகளையாவது கொன்று அதைப் பிரச்சாரப்படுத்துவதன் மூலம் நன்மையடையப்பார்க்கின்றது. புலிகள் பாயமுன் தாம் பாய எண்ணி அடிவாங்குகின்றது. தாம் பலம் பொருந்தியவர்களாக வெளியே காட்ட நினைக்கின்றது. அத்துடன் புலிகளின் அரணாக உள்ள தமிழரின் மனநிலையை சிதைக்கப்பார்க்கின்றது. அதற்கு இக்களத்தில் ஒரு சில கோடுகளும் துணைபோகின்றன. உணவுத்தடை விமானத்தாக்குதல் இராணுவ அழுத்தம் இவை எமது உடலைத்தான் சோரவைத்துள்ளது உள்ளத்தின் உறுதியை அல்ல. இவை அத்தனையும் ஒரு புலிப்பாச்சலில் இல்லாது போகும் என்பது நாமறிவோம். நம்பிக்கை தான் வாழ்வின் அச்சு அந்த நம்பிக்கையை இழக்காமல் பொறுத்திருப்போம். இது யுத்தத்தின் கடைசி அத்தியாயாம் எழுதும் காலம். இனி வரும் காலம் ஈழ மலர்வோடு விடியும் என்று நம்பிக்கை கொள்வோம். எம் போராளிகளின் கைகளை பலப்படுத்துவோம். வெற்றி நிச்சயம்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இராணுவ ஆய்வாளர்கள் மழைக்கு முளைத்த காளான்களாக எங்கும் தென்படுகின்றார்களே.. எப்படி ஒழித்துக் கட்டமுடியும்???

  • தொடங்கியவர்

புலிகள் இது வரை தங்கள் பலத்தில் சிறிய அளவு கூட பயன்படுத்த வில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் தன்னுடைய விமானப் படையின் முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. இராணுவச் செலவு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. புலிகளை அழிக்க இது தான் சரியான சமயம் என்பதாக சிறீலங்கா ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கிழக்கு பகுதியை கைப்பற்றியப் பிறகு வடக்கு பகுதியையும் கைப்பற்றுவோம் என்கிறார் சிறீலங்கா இராணுவ தளபதி போனஸ்கா.

நிறைய இடங்களை கைப்பற்றி அதனை தக்க வைக்க கூடிய வலிமை சிறீலங்கா இராணுவத்திற்கு உள்ளதா என்பதை எதிர்வரும் நாட்கள் தெளிவு படுத்தும்

புலிகளின் யுத்தம் குறித்து எங்கோ படித்த சில வரிகள் இவை.

கொரில்லா யுத்தம் குறித்து மாவோ இவ்வாறு கூறுகிறார்

"the enemy advances, we retreat; the enemy camps, we harass; the enemy tires, we attack; the enemy retreats, we pursue."

புலிகளின் கடந்த கால யுத்த முறை இவ்வாறு தான் இருந்தது. the enemy advances, we retreat என்ற நிலையில் இருந்து தான் முன்னேறி ஆனையிறவு உட்பட பல இடங்களை கைப்பற்றினர்.

கடந்த காலங்களுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இம்முறையும் புலிகளால் தாங்கள் இழந்த இடத்தை கைப்பற்ற முடியுமா ?

புலிகள் பதில் தாக்குதல் நடத்தும் வரை அவர்களின் உண்மையான பலத்தை யாராலும் கணிக்க முடியாது

  • தொடங்கியவர்

9 மறுமொழிகள்:

Sashi,

First of all, wish you a very Happy Pongal!

Nice Post.

Sorry to write in English. I am out of town, I will respond to your essay in detail when I get back.

Please refer to the essay wrtten by Iqbal Athas in this week's Sunday Times.Please click here to read the article.

Thanks.

Best Regards

VK வெற்றி, at 4:27 PM நன்றி வெற்றி

உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் சசி, at 12:16 AM நீண்ட நாட்களாக தங்களின் பதிவை எதிர்பார்த்திருந்தேன். ம.தி.மு.க.வை உடைக்க முயற்சித்து தோழ்வி கண்ட திமுக பற்றி, பாலா அண்ணனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், அவரது வாழ்க்கை பற்றியும், புலிகளிடம் ஏற்பட்டுள்ள வெற்றிடம் பற்றியும், சென்னை மாநகராட்சியில், மறுதேர்தல் பற்றியும் பதிவுகள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன்.

--

புலிகள் ஏன் எதிர் தாக்குதல் நடத்த மறுக்கின்றனர் என்பதற்கு இணையத்தில் ஒரு நண்பர் தந்த செய்தி. எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது.

தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தமிழர்தரப்பும் சிங்கள தரப்பும் குறிப்பிட்ட நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும், அந் நிலப்பரப்புக்களுக்கு எல்லையும் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு அமுலில் இருந்தால், சர்வதேச சட்டத்திற்கமைய அப்பகுதிகள் அவர்களின் நிரந்தர பகுதிகளாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். இக் கருத்தை நேற்று முன் தினம் ஜே.வி.பி யும் முன் வைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் இந்த யுத்த நிறுத்தம் 5 வருடத்தை எட்டக்கூடாது என்பதற்காக ஜே.வி.பி அரசுக்கு ஆலோசனை கூறி மகிந்தரும் யுத்தத்தைத் தமிழர் தரப்பு மீது திணிக்கின்றார். அவர்களைப் பொறுத்த வரையில் எப்படியாயினும் புலிகளைச் சண்டைக்கு இழுத்து யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் இலட்சியம். சிங்கள தரப்பின் இந்த நோக்கத்தை அறியாதது அல்ல தமிழர் தலைமை. அதனால் தான் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு நிறுத்தி, தாம் இன்னும் யுத்தநிறுத்ததைக் கடைப்பிடிப்பதாக தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது. என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு வருடத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். Jayaprabhakar, at 7:34 AM நீங்க எழுதியது உண்மையாகிவிட்டது. வாகைரையை நாம் பறிகொடுத்துவிட்டோம். எமது இன்னல்கள் என்று பொய்யாகும் என ஏங்குகின்றோம். தொடர்ந்து எழுதுங்கள். ஆதரவு தாருங்கள்.

ஆபிரிக்க அடிமைகளை விட மிகக் கேவலமாக வாழ்கின்றோம். ஒரு மாத விடுமுறையில் இலங்கை சென்றேன். 4 நாட்கள் மட்டுமே

எனது வீட்டில் படுத்தேன். தினமும் ஒரு வீடாக அலைந்து தங்கினேன்.

ஈழம் கிடைக்காவிடின் நாம் அனைவரும் அழிந்துவிடுவோம். kulakkodan, at 6:08 PM பலர் பேசுவது போன்று 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை.

எந்த சட்டமும் இது குறித்துக் கூறவில்லை. விரும்பினால் இல‌ங்கை

போர் நிறுத்த‌க் க‌ண்க‌னிப்புக் குழு இணைய‌த் த‌ள‌த்தில் பார்வையிட‌வும்.

உட‌ன்ப‌டிக்கை 4.2 ம் பிரிவின் பிரகார‌ம் கால எல்லை வ‌குக்க‌ப்ப‌ட‌வில்லை. kulakkodan, at 6:25 PM குளக்கோடன்,

/*நீங்க எழுதியது உண்மையாகிவிட்டது. வாகைரையை நாம் பறிகொடுத்துவிட்டோம் */

மன்னிக்கவும். நீங்கள் நினைப்பது மிகவும் தவறு. எமது போராட்டம் சரியான பாதையில் முன்னேறிக் கொண்டுதான் போகிறது. ஏன் என்ற விபரத்தைப் பின்னர் எழுதுகிறேன். தலைவர் பிரபாகரனின் சிறப்பே, தனது குறிக்கோளில் இருந்து விலகாமல் முன்னேறிச் செல்வதுதான். வெற்றி, at 9:51 PM ஜெயபிரபாகர்,

விடுமுறையில் தமிழகம் சென்றிருந்த நேரத்தில் பாலா அவர்களின் மறைவும், மதிமுக உடைப்பும் நிகழ்ந்ததால், என்னால் இணையத்தில் எழுத முடியவில்லை.

நீங்கள் கூறியுள்ள கருத்தை நானும் வாசித்தேன். ஆனால் அது குறித்து மேலதிக விபரங்கள் தெரியவில்லை

உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் சசி, at 9:54 PM Kulakkodan,

ஆம், வாகரையை சிறீலங்கா இராணுவம் இன்று கைப்பற்றி இருக்கிறது.

புலிகள் தங்கள் படைகளை விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal என்றே இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் தமிழ் சசி, at 9:58 PM வாகரை வீழ்ந்து விட்டது! பார்ப்போம் என்ன நடக்கப்போகின்றது என்று! mayooresan மயூரேசன், at 12:56 AM

பலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது அதில் சந்தேகம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது அதில் சந்தேகம் என்ன?

புஸ்டியான ஆகாரங்களை உட்கொள்ள வேண்டியதுதானே.. :D:D:lol:

  • தொடங்கியவர்

சிறீலங்கா இராணுவம் வாகரையை கைப்பற்றி இருக்கிறது. புலிகள் தங்கள் படைகளை வாகரையில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal தான், என்றாலும் இதனை பெரிய வெற்றியாக ஊடகங்கள் முன்நிறுத்துகின்றன. வாகரையை இராணுவம் கைப்பற்றியிருக்கும் சூழலில் புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற வாதம் இன்னும் அதிகமாகும்.

இது வரை நடந்தவற்றை நோக்கும் பொழுது சில விடயங்கள் புலப்படும்

புலிகள் இதுவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை. புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் (Surface to Air missiles - SAM) உள்ளன. சமாதானக் காலத்தில் இன்னும் அதிகமாக கூட பெற்றிருக்கலாம்

புலிகளிடம் சில இலகுரக விமானங்கள் உள்ளன. இதனை பெரும் செலவிட்டு வாங்கியிருக்கும் புலிகள் அதனை இது வரை பயன்படுத்தவில்லை

பெரிய அளவிலான கடற்படை தாக்குதலை புலிகள் நடத்தவேயில்லை

புலிகளின் தாக்குதல் தொடர்ச்சியாக நடக்கும். முகமாலையில் தாக்குதல், அடுத்த சில தினங்களில் ஹபரணையில் தாக்குதல், காலியில் தாக்குதல் என புலிகள் நடத்திய தொடர் தாக்குதலுக்கு பிறகு இராணுவ பலம் புலிகள் வசம் சாய்ந்து விட்டதாக ஊடகங்கள் எழுதின. சிறீலங்கா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்தினாலும் புலிகள் இது வரை பெரிய பதில் தாக்குதல் எதுவும் நடத்த வில்லை.

இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது ஒரு விடயம் புலப்படும் - தங்களுடைய பலத்தை புலிகள் தக்கவைத்து கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் பிரயோகிக்கலாம்.

They have lost some battles, but not war. ஆனால் இந்தப் போரை யாருமே வெல்ல முடியாது என்பது தான் உண்மை.

இந்த சமயத்தில் குறிப்பிட வேண்டியது - சர்வதேச சமூகத்தின் அமைதி. சிறீலங்கா இராணுவம் முகமாலையில் தோற்ற பொழுது பாய்ந்தோடி வந்த சர்வதேச சமூகம், தற்பொழுது அமைதி காத்து வருகிறது. அதன் இரட்டை வேடம் தெளிவாக புலப்படுகிறது.

புஸ்டியான ஆகாரங்களை உட்கொள்ள வேண்டியதுதானே.. :icon_idea::D:lol:

பூஸ்ட் சாப்பிட்டால் பலம் கூடுமோ? :D:unsure: :P

பலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது அதில் சந்தேகம் என்ன?

சந்தேகம் வரப்படாது பூஸ்ட் சாப்பிடுங்க பலம் கூடும் :icon_idea::D :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.