Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கியில் 2,750 நீதிபதிகள் கைது

Featured Replies

ராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கியில் 2,750 நீதிபதிகள் கைது

 
 
துருக்கி ராணுவ புரட்சியின்போது உயிரிழந்த பொதுமக்களின் இறுதிச் சடங்கு இஸ்தான்புல்லில் நேற்று நடந்தது. இதில் அதிபர் எர்டோகன் (இடது ஓரம்) பங்கேற்றார். | படம்: ராய்ட்டர்ஸ்
துருக்கி ராணுவ புரட்சியின்போது உயிரிழந்த பொதுமக்களின் இறுதிச் சடங்கு இஸ்தான்புல்லில் நேற்று நடந்தது. இதில் அதிபர் எர்டோகன் (இடது ஓரம்) பங்கேற்றார். | படம்: ராய்ட்டர்ஸ்

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 2,750 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த 15-ம் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ புரட்சியில் ஈடுபட்டனர். அதனை ஆளும் ஏ.கே. கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடித்தனர்.

புரட்சியில் ஈடுபட்டதாக 3,000 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். நீதித் துறையிலும் பலர் புரட்சிக்கு ஆதரவு அளித்தனர். அந்த வகையில் 2750 நீதிபதிகள் நேற்றுமுன்தினம் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக துருக்கி நீதித் துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக், அரசு ஊடகமான டிஆர்டி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ராணுவம், நீதித் துறை களங்கப்பட்டிருக்கிறது. அவற்றை சுத்தப்படுத்தி வருகிறோம். இரு துறைகளிலும் இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

துருக்கியில் தற்போது மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. எனினும் ராணுவ புரட்சி யில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க மரண தண்டனைக்கான தடையை நீக்க, துருக்கி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலனே ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். அவரை துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி அமெரிக்காவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் பெதுல்லாவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை அளித்தால் மட்டுமே எர்டோகனின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

அதிபர் எர்டோகன் பின்னணி

துருக்கியில் கடந்த 2001 ஆகஸ்டில் ஏ.கே.கட்சி தொடங் கப்பட்டது. தற்போதைய அதிபர் எர்டோகனும் அப்துல்லா குல் என்பவரும் இணைந்து கட்சியை தொடங்கினர். 2002 நவம்பரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏ.கே. கட்சி அமோக வெற்றி பெற்று அப்துல்லா குல் பிரதமராக பதவியேற்றார்.

தேர்தல் ஆணைய தடை காரணமாக எர்டோகன் தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும் சில மாதங்களில் அவர் மீதான தடையை ஆளும் கட்சி நீக்கியது. இதைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்ட எர்டோகன் 2003 மார்ச்சில் பிரதமரானார்.

அடுத்தடுத்து 2007, 2011 நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஏ.கே.கட்சி வெற்றி பெற்று எர்டோகன் பிரதமராக நீடித்தார். அந்த நாட்டு சட்டத்தின் 4-வது முறை பிரதமராக முடியாது என்பதால் அரசமைப்பு சாசனத்தை திருத்தி அதிபர் தேர்தல் நடத்த வகை செய்தார். அதன்படி முதல்முறையாக 2014-ல் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் 52 சதவீத வாக்குகளைப் பெற்ற எர்டோகன் அதிபராகப் பொறுப்பேற்றார்.

புரட்சியை முறியடித்த ஊடகம்

கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கும் எர்டோகன் பழமைவாத கொள்கை களை ஆதரித்து வருகிறார். சமூக ஊடகங்கள், மேற்கத்திய கலாச் சாரத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. எர்டோ கனின் சர்வாதிகார போக்கினால் கடந்த மே மாதம் பிரதமர் அகமது டாவுட்டோலு பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தப் பின்னணியில் ராணுவ புரட்சி வெடித்துள்ளது. இதில் எர்டோகன் கடுமையாக வெறுக்கும் சமூக ஊடகங்கள்தான் அவரது ஆட்சியைக் காப்பாற்றியுள்ளது.

கடந்த 15-ம் தேதி இரவு 10 மணிக்கு சமூக ஊடகங்களில் ராணுவ புரட்சி குறித்த தகவல்கள் தீயாகப் பரவின. தலைநகர் அங்காரா, இஸ்தான்புல் நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம் முகாமிட்டிருப்பதாக சமூகவலை தள ஆர்வலர்கள் தகவல்களை பரப்பினர்.

உடனடியாக சுதாரித்து கொண்ட அதிபர் எர்டோகன், தான் தங்கியிருந்த மர்மாரிஸ் நகர ஹோட்டலில் இருந்து பாதுகாப் பான இடத்துக்கு தப்பினார். மறைவிடத்தில் இருந்து கொண்டு ஐ போனின் பேஸ்டைம் மூலம் சிஎன்என் தொலைக்காட்சிக்கு நள்ளிரவில் பேட்டியளித்தார். அவரது பரபரப்பான பேட்டி பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவின.

இதன்காரணமாகவே அங்காரா, இஸ்தான்புல்லில் லட்சக் கணக்கான பொதுமக்கள் நள்ளிர வில் சாலைகளில் திரண்டு 5 மணி நேரத்தில் ராணுவ புரட்சியை முறியடித்தனர்.

http://tamil.thehindu.com/world/ராணுவ-புரட்சிக்கு-ஆதரவு-தெரிவித்ததால்-துருக்கியில்-2750-நீதிபதிகள்-கைது/article8864582.ece?homepage=true

  • தொடங்கியவர்

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் மற்றும் 34 இராணுவ தளபதிகள் கைது

Published by Gnanaprabu on 2016-07-18 21:31:25

 

துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க  இரவு இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது. 

36614AED00000578-3695232-image-a-17_1468

குறித்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 265 பேர் உயிரி ழந்தனர். 1500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

36614AD900000578-3695232-image-a-14_1468

இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் 103 இராணுவ தளபதிகள் அடங்குவர். இவர்கள் தவிர புரட்சிக்கு உதவியதாக துருக்கி நீதி துறையை சேர்ந்த பல்வேறு மூத்த நீதிபதிகள் உள்பட 2745 நீதிபதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். 

மேலும் இராணுவ புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

366077AB00000578-0-image-m-8_14688269655

366076D300000578-0-image-m-2_14688267030

http://www.virakesari.lk/article/9141

  • கருத்துக்கள உறவுகள்

123623814843335f5304067.gif.8a46fe1b7053

நல்ல காலம்..... 
ஜெயலாலிதா......  அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்று, விடுதலை கொடுத்த.....
நீதிபதி... குமாரசாமி அண்ணை,  தப்பீட்டாரு.:grin:

  • தொடங்கியவர்

இராணுவ புரட்சிக்கு உதவிய 9000 அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

 

துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க  இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதையட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரி ழந்தனர். 1500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

201607181646081660_Turkey-dismisses-almo

இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 இராணுவ தளபதிகள் அடங்குவர். 

உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் 9000  அரசு அதிகாரிகள பதவியில் இருந்து பணி நீக்கப்பட்டுள்ளனர். ஒரு மாகாண மேயர், 29 நகர மேயர்கள், மற்றும்  8777 பொது பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

http://www.virakesari.lk/article/9142

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.