Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்

Featured Replies

முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்
 
கிளி­நொச்சி மாவட்டம் முழங்­கா­விலில் பழங்­கள், மரக்­க­றிகள் பத­னிடும் நிலையம் நேற்று திறந்­து­ வைக்­கப்­பட்­டுள்­ளது.

1809102.jpg

அவுஸ்­தி­ரே­லி­யாவின் இலங்­கைக்­கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்­செ­சன், இந்­தியத் துணைத்­தூ­துவர் ஆ.நட­ரா­ஜன், வடக்கு கூட்­டு­றவு அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்­து­வைத்­துள்­ளனர்.

போரின் கார­ண­மாக செயலற்­றி­ருந்த விநா­ய­க­புரம் விவ­சா­யிகள் கூட்­டு­றவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும் இயங்­கி­வ­ரு­கி­றது. இச் ­சங்­கத்தில் ஆண்­களும் பெண்­க­ளு­மாக 500 வரை­யான அங்­கத்­தவர்கள் உள்­ளனர். 

1809110.jpg

இவர்­க­ளினால் உற்­பத்தி செய்­யப்­படும் பப்­பாசிப் பழங்கள் தற்­போது ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

ஏற்­று­மதித் தரங்­க­ளுக்கு அமை­யாத பழங்கள் மற்றும் கறி­வேப்­பி­லை, முருங்கை இலை போன்­ற­வற்றை உலர்த்திப் பதப்­ப­டுத்தி ஏற்­று­மதி செய்யும் பொருட்டே இப்­ப­த­னிடும் நிலையம் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

1809105.jpg

விநா­ய­க­புரம் விவ­சா­யிகள் கூட்­டு­றவுச் சங்­கத்தின் உற்­பத்­தி­களைக் கொள்­வ­னவு செய்து பதப்­ப­டுத்தி ஏற்­று­மதி செய்ய கிறீன் ஃபீல்ட் பிளான்­டேஷன்ஸ் தனியார் நிறு­வனம் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டுள்­ளது.

கூட்­டு­றவு – தனியார் துறை இணைந்த பங்­கேற்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்தத் திட்­டத்­தில், கூட்­டு­றவின் பங்­க­ளிப்­பாக பத­னிடும் நிலை­யத்தின் கட்­டடத் தொகுதி 6.4 மில்­லியன் ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

1809108.jpg

இதற்­கான நிதியை அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் உலக தொழி­லாளர் நிறு­வ­னத்தின் ஊடாக வழங்­கி­யுள்­ளது. தனியார் நிறு­வ­னத்தின் பங்­க­ளிப்­பாக 5 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான இயந்­தி­ரங்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

கூட்­டு­ற­வு, தனியார் பங்­கேற்­புடன் உரு­வாக்­கப்­பட்ட வடக்கின் முத­லா­வது தொழி­லகம் என்ற சிறப்பை இப் பத­னிடும் நிலையம்  கொண்­டுள்­ளது.

1809106.jpg

இதன் திறப்பு விழாவில் சர்­வ­தேச தொழி­லாளர் நிறு­வ­னத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்­பாளர் இந்­திரா உடா­வ, வட­மா­காண விவ­சாயப் பணிப்­பாளர் சி.சிவ­கு­மார், பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கனகம்மா நல்லதம்பி, கிறீன் ஃபீல்ட் பிளான்ரேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் செ.முத்துசாமி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=18091#sthash.glRK1w1v.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

8 minutes ago, சுவைப்பிரியன் said:

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

ஆனால் இவை சம்பந்தமான தொடக்கவேலைகள் ஏன் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை

அதனால் ஏனையோர் பாதிக்கப்படலாம்

உதாரணமாக 

கிட்டத்தட்ட இதேபோல் (கருவேப்பிலை மற்றும் முருங்கை) 

ஒரு விடயத்தை எனது ஊரிலும் ஆரம்பித்திருக்கிறார்கள்

சில  ஏக்கர்கள்  நிலம் ஒதுக்கப்பட்டு 

திட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

http://www.pungudutivu.fr/2016/06/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

45 minutes ago, விசுகு said:

இது தான் எனக்கும் விழங்க வில்லை.இதால நானும் பல நிகழ்வுகளை தவற விட்டுள்ளேன்.

  • தொடங்கியவர்
1 hour ago, சுவைப்பிரியன் said:

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

நன்றி சுவைப்பிரியன்... :)

உங்கள் பார்வையில்தான் இப்படியான சில திரிகள் தென்படும். இல்லை என்றால் பத்தோடு பதின்ஒன்றாக போய்விடும். நான் இதை இணைத்தபோது உங்களைத்தான் நினைத்தேன்.

விசுகுவிற்கும் நன்றி.

நேற்று விளையாட்டு திரியில் 92 வயதான இளைஞ்சன் 4 தங்கபதக்கம் வென்றார் என்று ஒரு செய்தி. யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் செய்தி திரட்டியில் ஏதாவது செய்தி என்றால் ...:grin:

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நவீனன் said:

நன்றி சுவைப்பிரியன்... :)

உங்கள் பார்வையில்தான் இப்படியான சில திரிகள் தென்படும். இல்லை என்றால் பத்தோடு பதின்ஒன்றாக போய்விடும். நான் இதை இணைத்தபோது உங்களைத்தான் நினைத்தேன்.

விசுகுவிற்கும் நன்றி.

நேற்று விளையாட்டு திரியில் 92 வயதான இளைஞ்சன் 4 தங்கபதக்கம் வென்றார் என்று ஒரு செய்தி. யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் செய்தி திரட்டியில் ஏதாவது செய்தி என்றால் ...:grin:

நன்றி நவீனன் உங்கள் அவதானிப்புக்கு. tw_blush:ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 21/07/2016 at 6:55 PM, நவீனன் said:

அவுஸ்­தி­ரே­லி­யாவின் இலங்­கைக்­கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்­செ­சன், இந்­தியத் துணைத்­தூ­துவர் ஆ.நட­ரா­ஜன், வடக்கு கூட்­டு­றவு அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்­து­வைத்­துள்­ளனர்.

நல்ல விடயம் ,இந்தியாவும் உதவி செய்திருக்கினம் போலகிடக்கு எந்த உதவி என்றுதான் தெரியவில்லை....

On 7/21/2016 at 2:44 PM, விசுகு said:

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

ஆனால் இவை சம்பந்தமான தொடக்கவேலைகள் ஏன் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை

அதனால் ஏனையோர் பாதிக்கப்படலாம்

உதாரணமாக 

கிட்டத்தட்ட இதேபோல் (கருவேப்பிலை மற்றும் முருங்கை) 

ஒரு விடயத்தை எனது ஊரிலும் ஆரம்பித்திருக்கிறார்கள்

சில  ஏக்கர்கள்  நிலம் ஒதுக்கப்பட்டு 

திட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

http://www.pungudutivu.fr/2016/06/blog-post.html

யாரவது திட்ட்ங்களை தொடங்க முன்பு ஏன் வடக்கு மாகாணசபையுடன் தொடர்பு கொள்ள முனையவில்லை ?மாகாண சபையிடம் இருந்து நீண்டகால குத்தகைக்கு காணிகளை பெறமுடியும் ,அதே நேரத்தில் தொழில்நுட்ப உதவிகளையும் பெறமுடியும் .

நல்ல முயறசி ,பாராட்டுக்கள் விசுகு .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Gari said:

யாரவது திட்ட்ங்களை தொடங்க முன்பு ஏன் வடக்கு மாகாணசபையுடன் தொடர்பு கொள்ள முனையவில்லை ?மாகாண சபையிடம் இருந்து நீண்டகால குத்தகைக்கு காணிகளை பெறமுடியும் ,அதே நேரத்தில் தொழில்நுட்ப உதவிகளையும் பெறமுடியும் .

நல்ல முயறசி ,பாராட்டுக்கள் விசுகு .

முயற்சி  எனது அல்ல.

இங்கு பதிந்தது மட்டுமே நான்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.