Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பியர் அடிச்சரோ இல்லையோ அண்ணாச்சியும் கடுப்பில இருக்கார் நெருப்பில இருந்து வந்த மாதிரி.

ம்ம்ம்ம்ம்ம்.... யத்த நிறுத்தம் ஏன் வந்தது! போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏன் வந்தது? ... அது தனது கடமையை சரியாக செய்கிறதா? ... என்றால் அவைகள் என்ன நோக்கத்திற்காக வந்ததோ அந்தந்த வேலையை சரியாக செய்கிறது!!!!!!!!!

எமது ஊடகஙங்களும் எம்மை திருப்திப்படுத்த இப்படியான வாணவேடிக்கைகளை நடத்துகிறார்கள்.

ஆனால் நாம் ஏதோ ஒரு சர்வதேச மாயைக்குள் உட்பட்டு சிக்குகிறது போல தெரிகிறது.

நாளுக்கு நாள் விமானக் குண்டு வீச்சு, செல் வீச்சு, சுட்டுக் கொலை, காணாமல் போதல், கடத்தல், வேலையிமையால் வறுமை, மருந்துத் தட்டுப்படென்று .... அடுக்கடுக்காக போய்க் கொண்டிருக்கிறம்.

ஆனால் சிறீலங்காவோ, சர்வதேசமோ 87களிலிருந்து தமிழர்களின் இழப்பை 60,000 என்ற மாறா எண் கணக்கிலேயே வைத்திருக்கிறது. அவர்கள்தான் அப்படி சொல்கிறார்களென்றால் நாமும் 60,000 இலேயே நிற்கிறோம். நாமும் எம் உண்மை இழப்பை இன்றுவரை கணக்கிடவில்லை.

ம்ம்ம்ம்ம்........... 6 கோடி தமிழ் மக்களல்லவா!!!!!!!!!! இன்னும் எத்தனை 60,000 வந்தாலும் தாங்கும்!!!!!!!!!!!!????????.........

பெரிய அளவிலான யுத்தம் ஆரம்பித்தால் அதை யாரும் இம்முறை தடுத்துநிறுத்துவதாக இருக்காது.

உ+ம் ஆனையிறவுச்சமர்.அப்படியாயின் பிறதலையீடுகள் இருக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் பெரியாளவிலான யுத்தம் ஆரம்பிக்கப்படும்.கண்காணிப்ப

இன்றைய சுடர்ஒளி பத்திரிகையின் முன் பக்க முகப்புச் செய்தியா கொட்டை எழுத்தில் வந்துள்ளது :

கிளிநொச்சியில் புலிகள் துருப்புக்களைக் குவிப்பு!

போர் ஆயத்த நிலைமை குறித்து கண்காணிப்புக் குழு எச்சரிக்கை

கிளியில் வி.புலிகள் பெரும் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர் என்ற சாரப்பட செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அப்பிரதேசத்திலி மிகப் பெரும் இராணுவக் கட்டமைப்புப் பெருக்கத்தை புலிகள் மேற் கொண்டுள்ளனர். மிகப் பெரும் மோதலுக்கு தெற்கின் நிலைமையைப் பொறுத்து பெரும் பாலும் இன்னும் சில வாரங்களில் பெரும் சமருக்கு அங்கு தயாரிப்புகள் இடம் பெற்று வருகின்றன என இலங்கை கண்காணிப்புக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : சுடர் ஒளி

இனி ஊடகங்கள் கண் காது மூக்கு வைத்து காசு பண்ணப்பர்ர்ப்பார்கள். இதைச் சாட்டாக வைத்து கிளியில் குண்டு மழை கொட்டப் போகின்றது.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த முகமாலைச் சமரிற்கு முன்னர் புலிகள் கண்காணிப்புக் குழு நோர்வே இணைத் தலமை நாடுகள் எல்லாருக்கும் பல தடவை அறிவித்தார்கள் சிறீலங்கா முகமாலை ஊடான நகர்விற்கு தயாராகிறது தடுத்து அழுத்தம் கொடுத்து நிறுத்துங்கள் என்று.

அப்பிடி இருந்தும் சிறீலங்கா அடிவேண்டினாப் பிறகு தனது வலிந்த நகர்வை நியாயப்படுத்த முனைந்தது புலிகள் தம்மை தாக்க தயாரானவர்கள் அதை குழப்ப முறையடிக்க தாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து விட்டது என்று. ஆனால் அந்தப் பிரச்சாரத்திற்கு வெளிப்படையாக ஆதாரங்கள் எதுவும் பதிவாகவில்லை. மாறாக புலிகள் தான் இராணுவம் தயாராகிறது என்ற அறிவித்தது பின்னர் அதன்படி சிறீலங்காவும் ஆரம்பித்ததுமாக போயிருந்தது.

கண்காணிப்புக்குழு இன்னமும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருப்பதாக சொல்லிய பின்னணியில் இந்திய வெளிவிகார அமைச்சரின் விஜயத்திற்கு பின்னர் சடுதியாக பேச்சளவில் சிறீலங்கா மிகவும் அடக்கி வாசிக்கும் தன்மையின் பின்னணியில் பார்த்தால் இது பாதகமானது. அண்மையில் புலிகளை வெளியேற்றப் போகிறோம் கிழக்கில் இருந்து என்ற வெளிப்படையான பேச்சுகள் அரச தரப்பு பிரதிநிதகளிடமிருந்தோ (அமைச்சர்கள் பேச்சாளர்கள்) இராணுவா தரப்பிடமிருந்தோ வருவது நின்றுவிட்டது. மாறாக புலிகளின் தாக்குதல் திட்டங்களை குழப்ப தற்பாதுகாப்பு தாக்குதல் நடத்துவதாகவும் புலிகளின் தாக்குதலிற்கு பதில் தாக்குதல் நடத்துவதாகவும் தான் வெளிப்படையாக கதைவிடப்படுகிறது. இந்த பின்னணியில் கண்காணிப்புக்குழு புலிகள் பாரிய தாக்குதலிற்கு தயாராகுவதாக கூறியது சிறீலங்காவிற்கு வருமுன் காப்பு தாக்குதல் ஒன்றை வலிய ஆரம்பிப்பதற்கும் அதற்கான சர்வதேச மட்டத்திலான அரசியல் இராஜதந்திர ஆதரவை தக்கவைத்துக் கொள்ளவும் உதவும். வடக்கு கிழக்கில் இருந்து கண்காணிப்புக்குழுவினர் விலகி கொழும்பிற்கு சென்றபின்னர் இந்த அறிக்கை வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கிழக்கை ஆக்கிரமிக்க மோட்டுத்தனமான பேச்சுகள் அறிக்கைகளோடு ஆரம்பித்த திட்டம் தற்பொழுது விமர்சனங்கள் கவனத்தை இழுக்காது மாத்திரமல்ல நியாயப்படுத்தக் கூடிய முறையில் பக்குவமாக முன்னகர்த்தப்படுகிறது பல்வேறுபட்ட சக்த்திகளின் துணையுடன்.

புலநாய்வு என்பது ஒரு புதிர் போன்று கிடைக்கும் சிறு தகவல்கள் துணுக்குகளை வைத்து புதிருக்கான விடை ஊகிப்பது ஊகித்ததை கட்டம் கட்டமாக உறுதி செய்வது. கண்ட விடையை சாதகமாகப் பயன் படுத்தி தமது நிகழ்ச்சி நிரல்களிற்கு ஏற்ப சொந்த நலன்களை முன்னெடுப்பது. அந்த முயற்சியில் எதிர் கொள்ளு வேண்டிய அரசியல் இராஜதந்திர சவால்கள் விமர்சனங்களை எப்படிக் கைய்யாழுவது பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது நியாப்படுத்துவது ஆதாரங்களை முன்வைப்பது என்று வரும் பொழுது எப்படியான எழுத்துக்கள் துணைபோகும் என்று சிந்தித்தால்.... அப்படி எல்லாம் சிந்தித்து ஏன் வில்லங்கப்படுவான்

அலலூய... அலலூயா... அதிர்ச்சி வைத்தியம்....

அலலூய... அலலூயா... அகல கால்வைக்கப போறாங்கள்

அலலூயா... அலலூய... வைச்சதும் மின்னல் தாக்குதல்...

அலலூய... அலலூய... மிக நீண்ட ஒரு பாச்சல்....

அலலூய அலலூய 1990 களில் இருந்தே நீர்மூழ்கிக் கப்பல கட்ட வெளிக்கிட்டா இப்ப என்ன எல்லாம் கட்ட முடியும்...

அலலூய அலலூய... 1995 இலேயே 45 நொட்ஸ் ஸ்ரெல்த் படகு வைச்சிருந்தா இப்ப என்ன எல்லாம் முடியும்...

அலலூய அலலூய பதுங்கி பதுங்கிப் பாச்சல்...

அலலூய... அலலூய... குறிவைச்சிட்டம் அந்தா பாயப்போயினம் இந்தா பாயப்போயினம்....

அலலூயா... அலலூய... network warfare...

அலலூயா... அலலூயா... எதிரிக்கு எல்லப்பக்கத்தாலையும் ஒரே அழுத்தம்...

அலலூயா... அலலூயா... எதிரி பலவீனம் அடைகிறான் அந்தா வழி பிறக்குது இந்தா வழி பிறக்குது...

அலலூயா... அலலூயா... இந்தா தடை எடுபடுது அந்தா தடை எடுபடுது...

அலலூய... அலலூய பல புதிய புதிய அணிகள் புதிய புதிய முறைகள்...

அலலூய... அலலூயா... வாடர்ஜெட்டில ஒலிகன் பூட்டிக் காட்டினவை எண்டா...

அலலூயா... அலலூயா... மழைகாலம் வருகுது இயங்கு நிலையில் டாங்கிகள் சேத்தில் புதையப்போகுது...

அலலூய... அலலூயா... வான்கோழி ஆடுது...

அலலூய... அலலூய...

இந்த அலலூயாவுகள் எல்லாம் ஓதினது களத்தில இருக்கிற மக்களை யுத்தத்திற்கு தயார்படுத்த இல்லை வெளிநாடுகளில் கொழுக்க திண்டது செமிக்கிற ஓய்வு நேரத்தில புதினம் வாசிக்கிறவைக்கும் கேக்கிறவைக்கும்.

என்ன பம்மாத்து குறூக்ஸ் ஒருக்கால் வி.புலிகளை அடிக்கவில்லை என்று ஒரு மாய்மாலம்.பின்பு ஒரு இழுவை முக்காலே இழுத்துப் போட்டு அல்லேலுயா என்று புலம்புகின்றீர்.ஜெகோவாக்கார

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்புக்குழுவின் எதிர்கால பணிகள் தொடர்பாக அரசினதும் புலிகளினதும் கருத்துக்களைபெற முடிவு

வீரகேசரி நாளேடு

குழுவின் பேச்சாளர் தெரிவிப்பு

தற்போது கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலந்துரையாடலுக்கு அமைவாகவே எதிர்கால நடவடிக்கைகளில் மாற்றங்களை கொண்டுவர முடியுமென கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுக்கு அறிவித்துள்ளதாக குழுவின் பேச்சாளர் தோபினூர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். அரச சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோகன்னவுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடியபோதே மேற்படி விடயத்தை தான் தெரிவித்ததாகவும் தோபினூர் ஒமர்சன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பணிகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதற்கு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதேபோன்று விடுதலைப்புலிகளுக்கும் அடுத்த வாரம் அழைப்பு விடுக்கவுள்ளோம். கண்காணிப்புக்குழுவின் பணிகளில் எத்தகைய மாற்றங்கள் வரும் என்பதை தற்போதைக்கு கூறமுடியாது.

எவ்வாறாயினும் சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய நிலைமை உள்ளது. எமது பணிகள் தொடர்பாக கொழும்பில் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் நடத்திக்கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. புலிகளின் கருத்துக்களை பெறுவதற்காக கிளிநொச்சியிலுள்ள சமாதான செயலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம்.

திரு குருக்ஸ்,

வணக்கம், நம்மவர்கள் நமது வலிமையையும், சிறப்புகளையும் விரித்துரைப்பது என்பது நம்மவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும், சிலரது பயத்தை போக்குவதற்க்குமான முயற்ச்சி. மாறாக யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளதாக கருதபடக்கூடிய சூழலில் அதை கண்காணிக்க வந்தவர்கள் கூறினால் அது குற்றம் சுமத்துவதாகதான் கருதமுடியும். ஆகவே கண்காணிப்பு குழுவினர் நிச்சயமான ஆதரமில்லமலோ அல்லது ஒருதலைபட்சமான கருத்துக்களையோ தெரிவிப்பது கண்டனத்துக்குறியது வரவேற்க்க தகுந்ததல்ல என்பதை தாங்களின் கவனத்திற்க்கு கொணர்கிறேன். தாங்கள் கருத்துக்களில் பல சமங்களில் நெகட்டிவ்வாகவே உள்ளன. நெகட்டிவ் கருத்துருவினால் பசிட்டிவ் திட்டங்கள் உருவாகும் (காப்பீடு போன்றவை) என்றாலும் தொடர்ந்தும் நெகட்டிவ் கருத்துகளையே பரப்புவது வரவேற்க்க தக்கதல்ல. தாங்கள் எமது கருத்துக்களை தவரான கோணத்தில் அனுகமாட்டீர்கள் என்ற அழ்ந்த நம்பிக்கையுடனும், நட்புடனும்

சிவராஜா

புலநாய்வு என்பது ஒரு புதிர் போன்று கிடைக்கும் சிறு தகவல்கள் துணுக்குகளை வைத்து புதிருக்கான விடை ஊகிப்பது ஊகித்ததை கட்டம் கட்டமாக உறுதி செய்வது. கண்ட விடையை சாதகமாகப் பயன் படுத்தி தமது நிகழ்ச்சி நிரல்களிற்கு ஏற்ப சொந்த நலன்களை முன்னெடுப்பது. அந்த முயற்சியில் எதிர் கொள்ளு வேண்டிய அரசியல் இராஜதந்திர சவால்கள் விமர்சனங்களை எப்படிக் கைய்யாழுவது பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது நியாப்படுத்துவது ஆதாரங்களை முன்வைப்பது என்று வரும் பொழுது எப்படியான எழுத்துக்கள் துணைபோகும் என்று சிந்தித்தால்.... அப்படி எல்லாம் சிந்தித்து ஏன் வில்லங்கப்படுவான்

இதை கண்டு பிடிக்க புலநாய்வு பிரிவு தேவையே இல்லை...

இங்கை கட்டுரை எழுதுதும் பலங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் பிரஸ்தாபிப்பதின் நோக்கம் ந்னவோ அது தனிப்பட நடந்து கொண்டுதான் இருக்கிறது... வேண்டாத விதத்தில் வரும் கட்டுரைகள் இன்னும் ஒரு ஆக்கபூர்வமான அறிக்கைகள் அல்லது கட்டுரைகள் மூலம் தலைமை ஏற்று வளிநடத்துபவர்களால் செய்யப்படுக்கின்றது.. இதை நீங்கள் அவதானிக்கவில்லை போலும்...

புலநாய்வு என்பதில் பல நிகள்ச்சி நிரல் படுத்தப்படும். அதில் பத்திரிகை செய்திகளும் கட்டுரைகளுக்கும் 2% கூட முன்னுரிமை குடுக்க மாட்டா அப்படி சேகரீக்கப்படும் தகவல்கள் உண்மைத்தன்மை கேள்விக்குரியது... பல கோடி ச்புலநாய்வுக்காய் செலவளிக்கும் இலங்கை பத்திரிகை கட்டுரைக்கும் மட்டும் முக்கியம் இலலி அதையும் தாண்டி செய்வது நிறைய... முக்கியமாகச் தகவல் சேகரிக்க... நீங்கள் சொல்லும் விடயங்கள் யானை பசிக்கு சோழப்பொரி...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்........... 6 கோடி தமிழ் மக்களல்லவா!!!!!!!!!! இன்னும் எத்தனை 60,000 வந்தாலும் தாங்கும்!!!!!!!!!!!!????????.........

எப்போது தொடக்கம் உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களையும் குத்தகைக்கு எடுத்தீர்கள்? மலையகத் தமிழர்கள் கூட போராட்டத்திற்கு வெளியே உள்ளனர். போராட்டம் எல்லாம் வரையறுக்கப்பட்ட தமிழீழ எல்லைக்குள். இதற்குள் வேறிடத்தில் இருப்பவர்கள் பங்கு பெறவேண்டுமென்றால் வெறும் தமிழ் மொழி பேசுகின்றார்கள் என்பதனூடக வரப்போவதில்லை. பிரச்சினை தமக்கும் என்றும், மொழியால் இணைந்த நாம் ஒரு தேசத்தவர் என்றும் உணரவேண்டும். அது நடைபெறப் போவதில்லை என்பதைத்தான் 30 வருட போராட்ட வரலாறு உணர்த்துகின்றது. 6 கோடி பின்னுக்கு நிற்கும் என்று நம்பினால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நடவடிக்கைகள், கிளேமோர் தாக்குதல்களினால் வடக்கு கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகின்றது கண்காணிப்புக்குழு கவலை

வீரகேசரி நாளேடு

வட கிழக்கு நிலைமை குறித்து கண்காணிப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முன்னரங்க நிலைகளில் பரஸ்பரம் மேற்கொள்ளப்படும் எறிகணை வீச்சுக்கள் மற்றும் விமானத தாக்குதல்கள் இரு தரப்புக்குமிடையிலான முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது.

மேலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இராணுவத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கிளேமோர் தாக்குதல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

:) கண்காணிப்பவனுக்கு இது புது அனுபவம்.....ஆனால் நமக்கோ......பேச்சுவார்த்தையில் தோல்வி என்று சொன்னால்....புலிகளுக்கு அது......

தோல்வி என்றால் அவர்கள் தோற்றபின் என்று பொருள் அல்ல!!.

அவர்கள் எல்லோரும் வெற்றியடைவதற்கான அடுத்த கம்பீரியமான நகர்வுக்கான முயற்ச்சி

தோல்வி என்றால் அவர்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல!!

சில ஆணித்தரமான பாடங்களை அனுபவத்தினூடே கற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதே பொருள் படும்.... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வரு கின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலைமையைப் பொறுத்து அவர்களின் தாக் குதல்கள் ஆரம்பமாகலாம் என்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரி வித்திருந்தது.

இது குறித்து சிங்கப்பூர் "தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப் போதுமே தயார் நிலையில்தான் நாம் உள் ளோம் எனக் கூறினார்.

இளந்திரையன் மேலும் கூறியிருப்பதா வது:

70களில் நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த போது கழுத்தில் மாட்டிய சய னைட்டை இன்னமும் நாங்கள் கழற்ற வில்லை. மக்களின் பிரச்சினை முழுமை யாகத் தீர்க்கப்படும் போதுதான் அதனை நாங்கள் கழற்றுவோம்.

படை ரீதியாகத் தயார் நிலையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சிறிலங்கா அரசு எங்களைத் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வலிந்த தாக்குதலை சிறிலங்காப் படையினர் மேற் கொண்டனர். அந்த தாக்குதல்கள் தொடர்ந் தும் நடக்கின்றன.

சிறிலங்கா அரசின் இனவெறித் தாக்கு தல்களில் ஏறக்குறைய 80,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எங்கள் மக்களின் பிரச் சினை தீரும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். (ஐ)

நன்றி . உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.