Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிக தற்கொலை இடம்பெறும் 5 நாடுகளுள் இலங்கை.!

Featured Replies

அதிக தற்கொலை இடம்பெறும் 5 நாடுகளுள் இலங்கை.!

 

 

suicideeee.jpg

உலகில் கூடு­த­லாக தற்­கொலை செய்­து­கொள்ளும் மக்கள் உள்ள ஐந்து நாடு­களுள் இலங்­கையும் உள்­ள­டங்­கி­யிருப்­ப­தற்கு உடல் மற்றும் மன நிலையில் அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்டு வரு­வதே முக்­கிய கார­ண­மாகும். இதனை யோகா உடற் பயிற்சி முறை மூலம் சம­நிலைப்படுத்­தலாம் என களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர்

புத்­துறை பேரா­சி­ரியர் கலா­நிதி ரோஹன லக் ஷ்மன் பிய­தாச தெரி­வித்தார்.

கண்டி பேரா­தனை வீதியில் அமைந்­துள்ள குடும்ப யோகா கல்வி நிலையம் ஒழுங்கு செய்த ஊடக சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-,

இன்று எமது நாட்டில் உயர் மட்­டத்தில் வாழ்­ப­வர்­க­ளது உடல், மன நிலை பாதிக்­கப்­பட்­டாலும் அவர்கள் அதனை நிவர்த்தி செய்­து­கொள்­வ­தற்கு பல முறை­களை கையா­ளு­கின்­றனர். இதற்­கான வசதி வாய்ப்பு என்­பன அவர்­க­ளுக்கு உண்டு. இருப்­பினும் மத்­திய மற்றும் கீழ் மட்­டங்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு அவ்­வா­றான வாய்ப்­பு­களும் வச­தி­களும் கிடைப்­ப­தில்லை. இதனால் அவர்கள் மத்­தியில் மன அழுத்தம் அதி­க­மாக உள்­ளதை காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இதன் ஒர் விளை­வா­கவே உலகில் கூடு­த­லாக தற்­கொலை செய்­து­கொள்ளும் ஐந்து நாடு­களுள் இலங்­கையும் உள்­ள­டங்கியுள்­ளது. இவ்­வா­றான மன அழுத்­தங்­களை போக்கி மன­தையும் உட­லையும் சம நிலைப் படுத்தி ஆரோக்­கிய­மான ஒரு நிலைக்கு கொண்டு வரு­வ­தற்கு யோகா உடற் பயிற்சி முறை மிக முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.

ஆசி­யாவில் இருந்து பாரம்­ப­ரிய மாக உரு­வெ­டுத்த இவ்­வ­கை­யான உடற்­ப­யிற்சி முறை உல­கிற்கு கிடைத்த ஒரு வரப்­பி­ர­சா­த­மாகக் கூட எம்மால் கூறலாம்.

இன்று சமூகத்தில் வாழ்­கின்ற எல்லா தரப்­பி­னரும் யோகா முறையை கையாண்டு வரு­கின்­றனர். இதன் மூலம் ஆரோக்­கி­ய­மான சமூகம் ஒன்றை உருவாக்க முடியும். இன்று இளை­ஞர்­க­ளுக்கு மத்­தியில் அதிக பிரச்­சி­னை­களைக் காண்­கிறோம். இதற்கு மன அழுத்தம் முக்­கிய கார­ண­மா­கி­றது. மன அழுத்­தத்தைப் போக்க தவ­றான முறை­களை இளை­ஞர்கள் கையாள்­கின்­றனர். அவற்றை விட பல மடங்கு யோகா முறை சிறந்­தது.

உலக நாடு­களில் அதிக போசனை, அதி­க­ளவு உடல் பருத்தல் என்­பன பாரிய சமூ­கப்­பி­ரச்­சி­னை­யாகி விட்­டது. இலங்­கையைப் பொறுத்­த­வரை 20 சத­வீ­தத்­திற்கு மேல் நீரி­ழிவு நோயா­ளர்கள் காணப்­ப­டு­கின்­றனர். இதுவும் மேற்­சொன்­னது போன்று உடற்­ப­ருமன், அதி­போ­ஷாக்­கு­ணவு, உடற்­ப­யிற்சி இன்மை போன்­ற­வற்றின் அடிப்­ப­டையில் உரு­வான சமூ­கப்­பி­ரச்­சி­னை­யாகும். இவற்­றிற்கு மேற்­கத்­தேய நாடு­களில் பாரிய பொரு­ளா­தார செல­வுக்கு மத்­தியில் ஏற்­பா­டுகள் உள்­ளன. உயர் மட்ட மக்­க­ளுக்கும் அதற்­கான வாய்ப்­புக்கள் உண்டு. ஆனால், ஆசிய நாட்­ட­வர்­க­ளுக்கு யோகா பயிற்­சிகள் அக்­கு­றையை நிவர்த்­திக்கக் கூடிய இல­கு­வான ஒரு வழி­யாகும்.

யோகா­சனப் பயிற்­சி­களைப் பொறுத்­த­வரை மூன்று வச­திகள் உள்ளன. முத­லா­வ­தாக வயது வித்­தி­யாசம் இல்­லாமல் எவ­ராலும் முடியும். முதி­யவர், சிறுவர் என்ற பாகு­பாடு ஏற்­ப­டு­வ­தில்லை. சில விளை­யாட்­டுக்­களைப் பொறுத்த வரை வயது பிரிவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வேறு பிரிக்க வேண்டும். யோகா­ச­னத்தில் எல்லா வய­துப்­பி­ரி­வி­னரும் குறிப்­பிட்ட சில பயிற்­சி­களைச் செய்ய முடி­யும். இரண்­டா­வ­தாக இதற்­கென பிரத்­தியேக இடம் தேவை இல்லை. வீட்­டிலும் காட்­டிலும் எங்கும் செய்­யலாம். ஆனால் விசேட விளை­யாட்­டுக்­க­ளுக்கு பிரத்­தி­யேக இடம் தேவை. மூன்­றா­வ­தாக சிக்­க­லில்­லாத எளிய முறையைக் கொண்­ட­தாகும். இவ்­வாறு சில அனு­கூ­லங்கள் காணப்­ப­டுகின்­றன.

அதேபோல் ஒருவர் அமர்ந்து கொண்டும் மேற்­கொள்­ளலாம். படுத்துக் கொண்டும் மேற்­கொள்­ளலாம். நின்று கொண்டும் மேற்­ கொள்ளலாம். வயது, உடல் நிலை என்­வற்­றிற்கு ஏற்ப மேற்­கொள்ள முடியும்.

உலகில் எல்­லோரும் மகிழ்ச்­சி­யா­கவே இருக்க விரும்புகின்­றனர். பணம் இருந்தால் மகிழ்ச்­சி­யாக இருக்­கலாம் என்பதல்ல. உடல்

உளம் இரண்டும் ஊனமடையாது இருக்கு மாயின் அதுவே மகிழ்ச்சியான வாழ்வாகும்.

யோகாசனப்பயிற்சியில் சிரசாசனம், சர்வாங்காசனம், வஜிராசனம், புஜஆசனம், பத்மாசனம் என்றெல்லாம் பலவகையான ஆசனங்கள் உண்டு. அவற்றுள் குறைந்தது 25 ஆசனங்களாவது நாம் மேற்கொள்வதால் ஒருவகை மனக்கட்டுப்பாடு எமக்குக் கிடைக்கிறது என்றார்.

http://www.virakesari.lk/article/9724

  • கருத்துக்கள உறவுகள்
Rank Country Suicides per 100,000 People
1 Guyana 44.2
2 South Korea 28.9
3 Sri Lanka 28.8
4 Lithuania 28.2
5 Suriname 27.8
6 Mozambique 27.4
7 Tanzania 24.9
8 Nepal 24.9
9 Kazakhstan 23.8
10 Burundi 23.1
11 India 21.1
12 South Sudan 19.8
13 Turkmenistan 19.6
14 Russia 19.5
15 Uganda 19.5
16 Hungary 19.1
17 Japan 18.5
18 Belarus 18.3
19 Zimbabwe 18.1
20 Bhutan 17.8
21 Sudan 17.2
22 Comoros 16.9
23 Ukraine 16.8
24 Poland 16.6
25 Equatorial Guinea 16.6

http://www.worldatlas.com/articles/countries-with-the-most-suicides-in-the-world.html

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்கள், சினிமா, சின்னத்திரை போன்றவைகளைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் முழுமையான யோகா பயிற்சியைப் பெற்றுத் தேறினால்..... தற்கொலைகள் உலகில் வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு. :rolleyes::rolleyes: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.