Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

Featured Replies

இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

 

Omanthai.jpg

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யி­லேயே அமைக்­க­வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி இன்று முதல் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் (வயது 73) என்­பவர் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளார்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்டபாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் இந்த தக­வலை பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நிதி முகா­மைத்­துவம் (பொறுப்பு)(திருத்தச்) சட்­ட­மு­லத்தின் இராண்டாம் மதிப்­பீடு தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில் வெ ளியிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமைக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்டே அர­சாங்­கத்­தினால் வரவு செல­வுத்­திட்­டத்தில் நிதி ஒதுக்­கப்­பட்­டது. அந்த நிலையம் வவு­னியா மாவட்­டத்தில் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது வரையில் இந்தப் பிரச்­சினை முடி­வ­தாக இல்லை.

தற்­போது மாங்­கு­ளத்தில் ஒன்றும், மன்னார் மாவட்­டத்­திற்கு ஒன்­று­மாக இரண்டு பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்கள் அமைக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. உண்­மை­யி­லேயே வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ள­தார நிலையம் என்றால் எவ்­வாறு கூறு­போட்டு இரண்­டாக அமைக்­க­மு­டியும். ஆகவே மன்னார், வவு­னியா மாவட்­டங்­க­ளுக்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யமா அல்­லது வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ள­தார நிலை­யமா என்­பது தொடர்பில் தெளி­வற்ற தன்­மை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தையில் உள்ள அரச வீட்­டுத்­திட்ட பகு­திக்கு அண்­மையில் அமைப்­ப­தென வவு­னியா மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்தில் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு இவ்­வி­டத்தில் அமைப்­பது தொடர்­பாக ஆராய்ந்த நிபு­ணர்­குழு பூரண அறிக்­கை­யொன்­றையும் சமர்ப்­பித்­துள்­ளது.

மேலும் வடக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­தி­க­ளி­டையே நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்­பிலும் இவ்­வி­டத்தில் அமைப்­ப­தற்கு பெரும்­பான்­மை­யான ஆத­ரவு கிடைத்­துள்­ளது. இவ்­வா­றான நிலை­யி­லேயே இரண்டு இடங்­களில் அமைப்­ப­தற்­கு­ரிய தீர்­மா­னத்தை அர­சாங்கம் எடுத்­துள்­ளது. இதனை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்­ள­மு­டியும்?

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார நிலை­யத்தை அமைப்­பது குறித்து அர­சாங்கம் கொள்கை ரீதி­யான தீர்­மா­ன­மொன்றை எடுக்­க­வேண்டும். பெரும்­பான்மை கருத்­துக்கும் தீர்­மா­னத்­திற்கும் மதிப்­ப­ளிக்­க­வேண்டும். அத­னை­வி­டுத்து ஏதேச்­ச­தி­கா­ர­மாக சில நபர்­களின் நலன்­களை திருப்­ப­திப்­ப­டுத்தும் வகையில் தீர்­மா­னங்­களை எடுக்க கூடாது.

இவ்­வா­றி­ருக்­கையில் வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலையம் ஓமந்­தை­யி­லேயே அமை­ய­வேண்டும் என்­பதை வலியுறுத்தி நாளையதினம் முதல்(இன்று) தமோதரம்பிள்ளை மகேஸ்வரன் (வயது 73) எனும் முதியவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்வுள்ளார். ஆகவே பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் உகந்த இடத்திலேயே இந்த மத்திய நிலையம் அமையவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு உரிய தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவேண்டியது அவசியமாகும் என்றார்.

http://www.virakesari.lk/article/10007

  • தொடங்கியவர்
போராட்டம் ஆரம்பம்...
 
 

article_1470815411-s.jpg

க.அகரன்

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம், ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி,  ஓமந்தையைச் சேர்ந்த தா.மகேஸ்வரன் (வயது 73), இன்று புதன்கிழமை காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

article_1470815422-20.jpg

- See more at: http://www.tamilmirror.lk/179132/ப-ர-ட-டம-ஆரம-பம-#sthash.0BNWIkzZ.dpuf

Edited by நவீனன்

எதுக்கும் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு வாழும் வரை சந்தோசமாய் இருங்க. இது அனுராதபுரத்துக்கோ இல்லை மதவாச்சிக்கோ போவதை நீங்கள் பார்க்க வேண்டி வந்தால்!

  • தொடங்கியவர்
இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப்போராட்டம்
இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப்போராட்டம்
வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வயோதிபர் ஒருவர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.
 
வவுனியா தெற்கு பிரதேச சபையின் ஓமந்தை உப அலுவலகத்திற்கு முன்னால் தா.மகேஸ்வரன் என்ற 73 வயதான வயோதிபர் இவ் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
DSC03249-720x480.jpg
வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டுமென கடந்த 2010ஆம் ஆண்டு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென சுட்டிக்காட்டிய குறித்த வயோதிபர், அதன் அடிப்படையில் ஓமந்தையிலேயே குறித்த மத்திய நிலையம் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த முதியவருக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளdu;.

http://onlineuthayan.com/news/16137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.