Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மீள்குடியேற்ற செயலணி: கூட்டமைப்பின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு

Featured Replies

வடக்கு மீள்குடியேற்ற செயலணி: கூட்டமைப்பின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு
 
 
வடக்கு மீள்குடியேற்ற செயலணி: கூட்டமைப்பின் கோரிக்கை அரசால் நிராகரிப்பு
வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
 
சபையில் இன்று உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண மீள்குடியேற்ற செயலணி குறித்து கருத்துக்களை வெளியிட்டார்.
 
அந்த செயலணிக்குள் அங்கம் வகிக்கும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அண்மைக்காலமாக வடக்கு மக்களின் நம்பிக்கையை இழந்துவந்தவர் என்பதோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களில் ஒருவராகவே கூறப்பட்டுவந்தவர். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பினர் சார்பில் ஒருவரேனும் அந்தச் செயலணியில் இல்லாததினால் அதன் மீது மக்களது நம்பிக்கை வீழ்ந்துகொண்டிருப்பதால் வடமாகாண முதலமைச்சரை அச்செயலணிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சார்ள்ஸ் எம்.பி சபையில் முன்வைத்தார்.
.
அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களே இந்தச் செயலணியில் அங்கம் வகிக்க முடியும். தற்போது மூன்று அமைச்சர்கள் இதில் உள்ளனர். இவ்வாறான நிலையில் வடமாகாண முதலமைச்சரை எவ்வாறு இதில் சேர்ப்பது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.
 
இதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,மஹிந்த ராஜபக்ச செய்ததையே நீங்களும் செய்யுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.
 
இதேவேளை வடமாகாண மீள்குடியேற்ற செயலணி சர்ச்சை குறித்து இவ்வாறு வாதவிவாதம் இடம்பெற்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சபையில் இருந்தபோதிலும் எதுவித குறுக்கீடுகளும் செய்யவில்லை.

http://onlineuthayan.com/news/16111

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் தனியொரு சிங்களவன் தமிழீழத்தை இல்லாமல் செய்கிறான்..இங்கு எதிர்கட்சி ஆசனத்த்திலிருதுகொண்டு நித்திரை கொள்ளூது....

  • தொடங்கியவர்

மஹிந்தவின் மகன் என்று கூறியவரை எவ்வாறு நம்புவது?: சபையில் த.தே.கூ.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் மகிந்தவின் மகன் என தன்னை கூறிக்கொண்டிருந்தவரும், நீதிமன்றத்தை அச்சுறுத்தியவருமான அமைச்சர்   ரிசாத் பதியூதீன்  அங்கம் வகிக்கும்  வடமாகாணத்திற்கான மீள்குடியேற்றச்  செயலணியின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பி உள்ளது. risath-badurdeen-mahinda-TNA.jpg

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ்  நிர்மலநாதன்  வடமாகாண மீள்குடியேற்றச்  செயலணியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  வடமாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படாமைக்கான காரணம்  என்ன என கேள்வியெழுப்பினர். 

தொடர்ந்து வடமாகாண மக்கள் வடமாகாண சபையும், தம்மால் அதிகளவு  வாக்குகள் அளித்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளையுமே அதிகம் நம்பியிருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில்  அந்த மக்களின் சார்பில் ஒருவரையேனும்   அந்த செயலணியில் உள்வாங்காமல்   இருப்பதானது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.  இதில்  வெவ்வேறு உள்நோக்கம்  காணப்படுகின்றன என்ற ஐயப்பாடும் மக்கள் மத்தியில்  எமக்கு எழுகின்றது. 

மேலும்  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் தன்னை மஹிந்தவின் மகன் என கூறியவரும்  நீதிமன்றத்திற்கு கல்லெறிந்து அச்சுறுத்தல் விடுத்தவரும் தற்போது நிதிமோசடி தொடர்பான குற்றப்புலனாய்வு பிரிவில் வழக்கு  காணப்படும் அமைச்சருமான   ரிஷாட் பதியுதீன் இந்த செயலணியில் காணப்படுகின்றார். அவ்வாறான ஒருவர் அங்கம் வகிக்கும் செயலணி எவ்வாறு பக்கச்சார்பின்றி செயற்படும் என நம்பிக்கை கொள்ள  முடியும். ஆகவே வடமாகாணத்திற்கான மீள்குடியேற்ற செயலணியில் வடமாகாண முதலமைச்சரையும் உள்வாங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

http://www.virakesari.lk/article/10056

மீள் குடியேற்றச் செயலணி, சாள்ஸ் நிர்மலநாதனின் கோரிக்கையை நிராகரித்தது அரசாங்கம், சம்பந்தன் மௌனம்!

வடக்கு மாகாண மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது.

சபையில் உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வடக்கு மாகாண மீள்குடியேற்ற செயலணி குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அந்த செயலணிக்குள் அங்கம் வகிக்கும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அண்மைக்காலமாக வடக்கு மக்களின் நம்பிக்கையை இழந்துவந்தவர் என்பதால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பினர் சார்பில் ஒருவரேனும் அந்தச் செயலணியில் இல்லாததினால் அதன் மீது மக்களது நம்பிக்கை அற்றுப்போகின்றது. இதனால் வடமாகாண முதலமைச்சரை அச்செயலணிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் முன்வைத்தார்.

இதன்போது, உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களே இச்செயலணியில் அங்கம் வகிக்க முடியும் என்றும் தற்போது மூன்று அமைச்சர்கள் இதில் உள்ளதாகவும், இவ்வாறான நிலையில் வடமாகாண முதலமைச்சரை எவ்வாறு இந்த செயலணியில் இணைத்துக் கொள்வது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த சாள்ஸ் நிர்மலநாதன் மகிந்த ராஜபக்ஷ செய்ததையே நீங்களும் செய்கிறீர்கள் எனக் கூறிவிட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.

இவ்வாறு வடக்கு மாகாண மீள்குடியேற்ற செயலணி குறித்து அவையில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இதுபற்றி வாய்திறக்காது அமைதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

http://thuliyam.com/?p=37224

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.