Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா? (காணொளி)

Featured Replies

இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா? (காணொளி)

கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல தமிழ்த்தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல் விமர்சகர் நேரு குணரட்னம் அவர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஒதுக்கிய நிதி 31,120கோடி. இந்த நிதியானது ராஜபக்ஷ காலத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கிய நிதியைவிட 25 வீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?

மேலும் வடக்குக் கிழக்கு புனரமைப்புக்காக 350கோடி ஒதுக்கிய அரசாங்கம் மகாவலி அபிவிருத்திக்கு 6000கோடிரூபா ஒதுக்கியுள்ளதோடு வஜம்ப அபிவிருத்தி திட்ட வேலைக்காக மேலும் 2000கோடி ரூபா நிதியும் இவ்வாண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்களத் தலைவர்கள் தமது மக்களுக்காக பெருந்தொகையான நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொள்ளும்போது ஏன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் பெருமளவான நிதியை தமிழ்ப் பிரதேசங்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் வடக்கில் இராணுவப் பிரச்சன்னம் அதிகரித்துக்கொண்டே செல்வது தொடர்பாகவும் சுட்டிக்காட்டிய அவர் மேலும் பல கேள்விகளை தமிழ்த் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

http://thuliyam.com/?p=37699

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் உங்கு வரும்போது ஆலவட்டம் பிடிக்காமல் அவரிடமே உந்தக் கேள்விகளைக் கேளுங்கள். அவர் அதோ, இதோ என்று அடுக்குவார். கையைத்தட்டுங்கோ  அவரும் சந்தோஷப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Athavan CH said:

குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஒதுக்கிய நிதி 31,120கோடி. இந்த நிதியானது ராஜபக்ஷ காலத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கிய நிதியைவிட 25 வீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?

போர்க்காலத்தில் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்பதற்கு பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தமது நாட்டு ஆயுத உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. ஆகவே உயர் வட்டியில் நீண்டகால கடனில் உக்ரைன் மற்றும் சீனாவிடம் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு பெருமளவு ஆயுதங்களை வாங்கி போரில் வெற்றி கண்டது. இப்போது அந்த கடனும் வட்டியும் கட்ட பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி தேவைப் படுகிறது. 

இது தவிர, இன்று இலங்கை முதன்மையாக அமெரிக்க சார்பு அரசாக இருக்கிறது. இந்தியாவுடன் நட்பு நாடாக இருக்கிறது. சீனா முந்திய அரசுடன் நெருங்கி தனது நீண்டகால தேவைகளுக்காக பெருமளவில் முதலீடு செய்து இன்று அவற்றை இழந்து நிற்கிறது. சீன சார்பு கம்யூனிஸ்ட்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஊடாக இலங்கையில் பயங்கரவாதத்தை சீனா மீண்டும் முன்னெடுக்க முயற்சிக்கலாம்.  பயங்கரவாதத்தின் மூலம் ஆட்சியை  மாற்றுவதே சீனாவின் நோக்கமாக இருக்கும். யாழ் பல்கலைக்கழகத்தில் இனரீதியான கிளர்ச்சி, யாழ் புகையிரதத்துக்கு கல்லெறிந்து கொலை செய்தல் போன்றவை இவ்வாறான சம்பவங்கள் ஆகும். ஆகவே இலங்கை தன்னை பாதுகாத்துக்கொள்ள நிதி ஒதுக்கி உள்ளது.

6 hours ago, Athavan CH said:

மேலும் வடக்குக் கிழக்கு புனரமைப்புக்காக 350கோடி ஒதுக்கிய அரசாங்கம் மகாவலி அபிவிருத்திக்கு 6000கோடிரூபா ஒதுக்கியுள்ளதோடு வஜம்ப அபிவிருத்தி திட்ட வேலைக்காக மேலும் 2000கோடி ரூபா நிதியும் இவ்வாண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களிடம் பணம் பெருமளவில் புழங்குகிறது. இது வெளிநாட்டு பணம். புனர்வாழ்வு திட்டங்களுக்கு இந்த பணம் பயன்படாததற்கு பணத்தை அனுப்பும் நேரு தலைமையிலான கனேடிய தமிழரும் காரணமாகும். ஆகவே நேரு போன்றவர்கள் தமது மக்களை புனர்வாழ்வு திட்டங்கள தீட்டி அவற்றுக்கு பணம் அனுப்புமாறு வழிநடத்த வேண்டும்.

மகாவலி கிழக்குக்கு சென்று கடலில் கலக்கிறது. கிழக்கு மாகாண புனரமைப்பு மகாவலி திட்டத்தில் அடங்குகிறது. இப்போது வடக்குக்கும் மகாவலியை கொண்டு வரும் திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்த நிதி அதற்கும் பயன்பட உள்ளது.  மகாவலி திட்டம் இலங்கை முழுவதும் உள்ள மக்கள் பயனடையத்தக்க பாரிய திட்டமாகும். அதற்கு வெளிநாட்டு பிரஜைகளான தமிழரோ வேறு யாருமோ பணம் அனுப்ப போவதில்லை. இலங்கை அரசு தான் பணம் ஒதுக்க வேண்டி உள்ளது.

6 hours ago, Athavan CH said:

மேலும் வடக்கில் இராணுவப் பிரச்சன்னம் அதிகரித்துக்கொண்டே செல்வது தொடர்பாகவும் சுட்டிக்காட்டிய அவர் மேலும் பல கேள்விகளை தமிழ்த் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இராணுவ பிரசன்னம் அதிகரித்து செல்வது என்பது உண்மையல்ல. இராணுவ பிரசன்னம் குறையவில்லை என்பதே உண்மை. நேருவுக்கு கள நிலவரம் தெரியவில்லை போல இருக்கிறது. மகாவலி எங்கே ஓடுகிறது என்பதையாவது அவர் அறிந்து கொள்வது நல்லது.

 

 

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.